எங்கள் ஊரில் கறிக்கடை பாய் என்றால் அனைவருக்கும் தெரியும். அவர்களின் முதல் இரண்டு மகன்களின்
ஒருவர் திமுகவிலும் மற்றொருவர் அதிமுகவிலும் இருந்தனர். விசுவாசிகள் என்பதை விட வெறித்தனமானவர்கள். இரண்டு கட்சிகள் நடந்தும் ஒவ்வொரு
கூட்டத்திலும் இவர்கள் தான் மேடை போடுவது முதல் கூட்டம் முடிந்து செய்ய வேண்டிய காரியங்கள்
வரைக்கும் இருப்பதை பார்த்துள்ளேன். இதுவே நாளாக அண்ணன் தம்பிகளுக்கிடையே தீரா
பகையை உருவாக்கி வெட்டு குத்து என்கிற வரைக்கும் போய் நின்றது.
கறிக்கடை பாய்க்கு அடுத்தடுத்து பிறந்த
குழந்தைகள் அனைத்துமே ஏதோவொரு வகையில் ஊனமாக இருக்க இவர்களுக்காக அவர் தினந்தோறும்
காவல் நிலையம் வரைக்கும் சென்று அவர் தொழிலும் முடிவுக்கு வந்து குடும்பமே
நடுத்தெருவுக்கு வந்து நின்றது. கடைத் தெருக்களில் அண்ணன் தம்பிகள் திடீரென்று
ஆவேசமாய் ஏதோவொரு காரணத்தை மனதில் வைத்துக் கொண்டு கட்டிப்புரண்டு சண்டை போட்டுக் கொள்வதை பல முறை பார்த்துள்ளேன்.
இன்று இவர்கள் இருவருமே உயிரோடு இல்லை. அந்த
குடும்பத்தில் முக்கால்வாசி பேர்களும் உயிரோடில்லை. ஊரில் நான் பார்த்த எந்த திமுக
அதிமுக தொடக்க கால விசுவாசிகள், ஆதரவாளர்கள், கொள்கை பிடிப்பாளர்கள் எவருமே இல்லை. காங்கிரஸ் என்ற கட்சியே தற்போது ஊரில் இல்லை.
தற்போது எனக்கு இரண்டு வருடம் பின்னால் படித்தவன் திமுகவின் ஒன்றியச் செயலாளராக இருப்பதாகச்
சொன்னார்கள். அவன் அப்பா பள்ளியில் விளையாட்டு வாத்தியராக இருந்தார். அதே போல
அதிமுகவில் என் தம்பியுடன் படித்தவன் ஏதோவொரு முக்கிய பொறுப்பில் இருப்பதாகச்
சொன்னார்கள். இருவருக்கும் இரண்டு
வருடங்களில் கார் வசதி வந்து விட்டது. தற்போது மக்களுக்கு சேவை செய்து
கொண்டிருக்கின்றார்கள். பழைய மக்கள் பழங்கஞ்சி ஆகிப் போனார்கள்.
திமுகவில் உங்கள் வாழ்க்கையில் பார்த்த பழைய
நபர்கள் எவராவது உயர்ந்த பதவிக்கு வந்து அதுவும் நிலைத்து நின்று பார்த்து
இருக்குறீர்களா?
1989 வரைக்கும் கலைஞரின் கட்டுப்பாட்டில் இருந்த திமுகவின் தன்மை அவரின் குடும்ப உறுப்பினர்கள் திமுக வை கையாளத் தொடங்கிய
பின்பு முற்றிலும் மாறி புதிய முகமாக மாறிவிட்டது. ஆனாலும் இன்றும் பழைய
விசுவாசிகளிடம் கலைஞர் குறித்து பேசிப்பாருங்கள்.
உங்கள் காதில் ரத்தம் வரும்படி அறைந்து விடுவார்கள்.
+++++++
இவரும் ஒரு இஸ்லாமியர் தான். அந்த ஏற்றுமதி
நிறுவனத்தில் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களை தான் வைத்திருக்கும் பெரிய வேனில் கொண்டு
போய் விடுவது தான் முக்கிய வேலை. ஒப்பந்த
அடிப்படையில் அந்த நிறுவனத்தில் இந்த வேலையை செய்து கொண்டிருந்தார். மற்ற
நேரங்களில் வெளியே பல வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார். முக்கிய பதவியில்
இருந்த என் மேல் அவருக்கு அளவு கடந்த மரியாதை. ஒரு தடவை அவரின் எம்.ஜி.ஆர்.
பைத்தியத்தை மற்றவர்கள் என்னிடம் சொன்ன போது அவரை சீண்டிப்பார்க்க வேண்டும் என்று
தோன்றியது.
ஒரு தடவை நிறுவனத்திற்கு வெளியே அவருடன் பொதுவாக பேசிக் கொண்டிருந்த
போது உரையாடலுக்குசு சம்மந்தம் இல்லாது அவரிடம் கலைஞரைப் பற்றி, அவரின் பெருமையைப் பற்றி, அவரின்
திறமையைப் பற்றி என்று அவர் கேட்காமலேயே பேசிக் கொண்டே அவர் முகத்தை பார்த்துக்
கொண்டேயிருந்தேன். மெதுவாக அவர் முகம் மாறிக் கொண்டிருந்தது. சற்று நேரத்தில் ஆனால் இந்த எம்.ஜி.ஆர் வந்து ..... என்று இழுத்து விட்டு நான்
நிறுத்தக்கூட இல்லை.
அப்படியே முகம் சிவந்து, அவரின் முக்கு துடிக்க ஆரம்பித்தது.
சற்று நேரத்தில் அவர் கைகால் உதறும் அளவுக்கு போய் "சார் இப்ப நான் உங்களை அடித்தால்
நாளைக்கு நான் இந்த வேலையில் இருக்க முடியாது என்று எனக்குத் தெரியும். ஆனாலும் உங்கள் மேல் வைத்துள்ள மரியாதையின்
காரணமாகத்தான் இந்நேரம் வரைக்கும் பொறுமையாக இருந்தேன். இனி தயவு செய்து கலைஞரைப் பற்றி மட்டும்
என்னிடம் பேசாதீங்க" என்று அடுத்து மூச்சு விடாமல் அவர் கலைஞரைப் பற்றி பேசிய
வார்த்தைகள் அத்தனையும் எழுத முடியாது.
ஆனால் அவரின் எம்.ஜி.ஆர் என்ற விசுவாசத்தை விட அவரின் பக்தியாகத் தான் பார்த்தேன். அவர் வண்டியில் மிகப் பெரிய எம்.ஜி.ஆர் படத்தை கண்ணாடி அருகே மாட்டி வைத்திருப்பார். இப்போதும்
தொடர்பில் இருக்கின்றார். அவர் வண்டியை
விற்று விட்டார். வாரத்தில் இன்று மூன்று நாட்கள் கருமத்தம்பட்டியில் கிடைக்கும்
வேலையை செய்து கொண்டிருக்கின்றார். ஆனால்
அவர் எம்.ஜி.ஆர். மீது வைத்துள்ள பக்தி அல்லது பாசம் இன்று வரையிலும் மாறவில்லை. .
எம்.ஜி.ஆர் முதன் முதலாக அதிமுக என்ற கட்சி தொடங்கி திண்டுக்கல்
பாராளுமன்ற தொகுதியை கைப்பற்றிய வெற்றி வேட்பாளர் மாயத் தேவர் முதல் இன்றைய அதிமுகவில் உள்ள ஓபிஎஸ் வரைக்கும் எந்த
எளிய மனிதர்களும் அதிமுகவில் உயர்ந்த இடத்திற்கு வந்து விடலாம். எம்.ஜி.ஆருக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவரின் வாழ்க்கை அதற்குப் பிறகு ராஜவாழ்க்கை தான். ஆனால் உண்மையான விசுவாசியாக எல்லையைத் தாண்டாதவராக இருக்க வேண்டும்.
இன்றைய அதிமுகவில் ஒருவர் அடிமையாக இருக்க
சம்மதம் என்றால் வளர்ச்சியில் எந்த குறையும் இருக்காது. படிப்பு, பட்டம், பணம்,
செல்வாக்கு எதுவும் தேவையில்லை. தாயம் விழ வேண்டும். நேரம்
வந்தால் ஏணியில் ஏறிவிடலாம். கட்சியும் ஏற்றிவிடும்.
++++++
திமுக என்பது எப்போதுமே ஒரு வழிப்பாதை தான். இன்றைய திமுக என்பது
ஜெக்ரட்சகன் போன்றவர்களுக்குத் தான் வளர்ச்சியை வாழ்க்கையை தந்து
கொண்டிருக்கிறது. நடிகை குஷ்பு போன்றவர்கள் மூலம் திராவிட வரலாற்றை தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.
மிச்சம் மீதி
இருப்பவர்கள் குடும்பத்தில் உள்ள ஏதோவொரு கிளையில் தொற்றிக்
கொண்டவர்களாக இருக்க வேண்டும். தொற்றியிருந்தாலும்
சாக்கு மூட்டையில் பணம் வைத்திருக்க வேண்டும். கட்சியில் இருந்து சம்பாரித்தவர்களைக் காட்டிலும் தன சொத்துக்களை விற்று ஒதுங்கிப் போனவர்கள் தான் அதிகம். ஆனாலும் இன்று வரையிலும் கலைஞர் மேல் பாசத்திற்கு அப்பாலும் அவரை மரியாதையுடன் பார்பபவர்கள், உண்மையான தொண்டர்கள் அநேகம் பேர்கள் இருப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
+++++++++
ஊரில் சகலகலாவல்லவன் படம்
ஓடிக கொண்டிருந்தது. தினந்தோறும் திருவிழா
கூட்டம் போல ஆட்கள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஏழு நாட்களும் தொடர்ந்து நண்பர்களுடன்
வீட்டுககுத் தெரியாமல் எப்படியே பார்த்துக் கொண்டே வந்தேன். எப்போதும் போல திரை
அரங்கத்திற்குள் காகிதங்களை கிழித்து திரைக்கு முன்னால் வீசியெறிந்து, கத்திக்
கொண்டு, விசில் அடித்து கும்மாளமிட்டு இருக்கின்றேன், அப்போது படம் பார்க்க கட்டண
சீட்டின் விலை எழுபது பைசா.
கூட்டத்திற்குள் நின்று வாங்க முடியாத கட்டண சீட்டுககாக
சீக்கிரமே போய் நின்று முட்டி மோதி அந்த சின்ன இரும்பு கூண்டுக்குள் கை விட்டு
கையை கிழித்துக் கொண்டு வந்தாலும் மனம் வீரன் என்றே சொல்லியது. இன்று வரையிலும்
கமல் குறித்த ஆயிரெத்தெட்டு விமர்சனங்கள் இருந்தாலும் அவர் படம் என்றால்
திரையரங்கம் சென்றே பார்க்க வேண்டும் என்று தோன்றுகின்றது. சமீபத்தில் நான் படித்த ஹாலிவுட் பாலாவின்
விஸ்வரூபம் பற்றி படித்த கட்டுரை கமல் மேல் உள்ள தீரா ஆச்சரியத்தை இன்னமும் அதிகமாக்கி உள்ளது. ஆனால் வெறித்தனம் என்றும் வரவேயில்லை.
வீட்டில் இருப்பவர் அக்மார்க் ரஜினி ரசிகர். சீண்டி விட்டு வேடிக்கை பார்ப்பதுண்டு. பொங்கி தீர்த்து
விடுவார். வந்து விழும் வார்த்தைகளில்
கமல் குறித்த மேற்படி சமாச்சாரங்கள் தான் வசவுகளாக வந்து விழும். நானும்
சிரித்துக் கொண்டு மேலும் மேலும் தூண்டி விட்டுக் கொண்டேயிருக்க முடியாத
பட்சத்தில் அடிக்க ஓடிவருவார். தப்பி வெளியே ஓடி விடுவதுண்டு. குழந்தைகள் வந்து
பஞ்சாயத்தை நடத்துவார்கள்.
ஆனாலும் இன்று வரையிலும் பழைய கமல்படங்களை
பார்ப்பதை விட தொலைக்காட்சியில் வருகின்ற பாட்ஷா, அண்ணாமலை போன்ற ரஜினியின் பழைய
படங்களைத்தான் பார்க்க விரும்புகின்றேன். குழந்தைகளுடன் தைரியமாக உட்கார்ந்து
பார்க்கலாம். இன்னமும் ரஜினி படங்களை ரசித்து பார்க்கின்றேன்.
எனக்கு வலையுலகில் நன்றாக அறிமுகமான
சிங்கப்பூர் கிரியும், என் அருகே இருக்கும் தம்பி இரவு வானம் சுரேஷ் ம் தீவிர
ரஜினி ரசிகர்கள்.
சுரேஷ் வீட்டுக்கு வரும் போது எப்போதும் ரஜினி குறித்து பேசி சற்று கிள்ளி
விளையாடுவதுண்டு. அவரும் மாரியாதையுடன் பொங்குவார். கிரியின் விமர்சனங்களிலும் ஒரு
நாகரிகம் இருக்கும். ஆனால் இந்த 12.12
என்ற தேதி வந்த போது எனக்கு பெரிதான் எந்த மாறுதலும் தோன்றவில்லை.
ஒவ்வொரு
ஞாயிற்றுக் கிழமையும் மூத்தவளை கராத்தே வகுப்பில் அதிகாலையில் விட்டு விட்டு
திரும்பி வரும் போது எப்போதும் வாங்கும் புத்தகக்கடையில் அந்த வாரம் முழுக்க வந்த
வார இதழ்களை வாங்கி வருவதுண்டு. சற்று நேரம் அங்கேயிருந்து அங்கே உள்ள
புத்தகங்கள், சுவரொட்டிகள், அருகே உள்ள பேக்கரியில் உள்ள ஆட்களின் பேச்சுகள் என்று
கவனித்து வருவதுண்டு.
அந்த கடையில் மாட்டி வைத்திருந்த ரஜினி படம் புத்தகத்தில் ரூ 120 என்று போட்டு
இருந்தது. நான் அவசரப்பட்டு என்னடா ஒரு
ரூபாய் இருபது காசுக்கு புத்தகம் போடுகின்றார்களா? அதுவும் குமுதத்தில்
போடுகின்றார்களா? என்று அவரிடம் கேட்க குமுறித் தீர்த்து விட்டார். என்ன சார் நீங்களுமா? என்றார்.
நான் குழப்பத்துடன் என்ன ஆச்சு? என்றேன்.
புலம்பித் தீர்த்து விட்டார்.
"குமுதத்தில் இருந்து நூற்றி இருபது ரூபாய்க்கு
இந்த முறை ரஜினியின் பிறந்த நாளுக்கு சிறப்பு மலர் வெளியிட்டுள்ளார்கள். அந்த
புததகம் வருவதற்குள் என்னை வந்து படாய் படுத்தி எடுத்து விட்டார்கள். புத்தகம் வந்தே ஒரு மணி நேரத்தில் அனைத்தும் விற்று விட்டது. இன்னமும் என்னைப் போட்டு கொன்று எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்" என்றார்கள்.
"வந்து விட்டதா? வந்து
விட்டதா என்று கேட்டு படாய் படுத்தியவர்கள் நூற்றுக்கணக்கான பேர்கள்" என்றார்.
எனக்கு வியப்பாக இருந்தது. இன்னமும் கூட இந்த வெறித்தனம் இருக்கின்றதா என்று ஆச்சரியமாக இருந்தது.
ஒரு வேளை விடலைகளாக இருப்பார்களோ என்று
யோசித்துக் கொண்டு கேட்டேன்.
"அடபோங்க சார். 40 வயது ஆட்களும் இதில் அடங்குவர்" என்றார்.
"திருப்பூருக்குள் இந்த முறை இந்த
புத்தகம் 6000 வந்தது. ஆனால் அடுத்த நாள் புத்தகம் இல்லை.
இன்னமும் வந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
எனக்கு ஒரு புத்தகம் விற்றால் கூட லாபம் தான் என்றாலும் விக்கிற
விலைவாசியில் இவர்கள் இந்த புத்தகத்திற்கு 120 ரூபாய் கொடுத்து வாங்குற கொடுமை
தான் என்னை யோசிக்க வைத்துக் கொண்டே இருக்கு" என்றார்.
தமிழர்களின் வரலாற்றில் எம்.ஜி.ஆர், ரஜினி
என்ற இந்த மூன்று எழுத்துக்கள் உருவாக்கிய தாக்கம் என்பதை நினைத்தே பார்க்க
முடியவில்லை. அதிர்ஷ்டத்தை மூன்று விதமாக சொல்கின்றார்கள். யோகம், ராஜயோகம்,வீபரீத
ராஜயோகம் என்கிறார்கள்.
இந்த மூன்றுக்கு பிறகும் வேறொரு வார்த்தையை சேர்க்க
வேண்டும். இறந்த பிறகும் அவர்கள் இன்னமும் இறக்கவில்லை என்று ஒவ்வொருவரும்
நம்புவதை அறியாமை என்று சொல்வதா? இல்லை அதுவும் அவர்கள் வாங்கி வந்த வரம் என்ற
கணக்கில் சேர்ப்பதா என்று தெரியவில்லை. கலைஞரும் கமலும் இதே போல வேறொரு
கோட்டில் நிற்கின்றார்கள்.
ரஜினியின் கடந்த 36 வருட திரைப்பட
வாழ்க்கையில் அவரைப் போல கஷ்டப்பட்டவர்களும் இல்லை. நம்ப முடியாத அளவுக்க
வளர்ந்தவர்களும் இல்லை. தேவையற்ற அத்தனை பழக்கங்களின் முடிவு என்பது தற்போது அவர்
மீண்டு வர காரணமாக இருந்த சிங்கபபூர் மருத்துவமனை தான் பாடம் தந்துள்ளது. தற்போது தான் "இளைஞர்களே புகைபிடிக்காதீர்" என்று சொல்லியுள்ளார்.
ரஜினி பேசினால்,
இருமினால், தும்மினால், படுத்தால், நடந்தால் என்று அவரை வைத்து கல்லா கட்டும்
பத்திரிக்கைக்காரர்கள் ஒரு பக்கம். அவரைப் பார்த்து பம்மும் அரசியல்வாதிகள்
மறுபகக்ம்.
பத்திரிக்கைகள் தான் அவரை வளர்த்தது. அதே பத்திரிக்கைகள் தான் அவரை
வைத்து இன்று சம்பாரிக்கவும் செய்கின்றது.
ஆனால் அவர் சம்பாரித்த இத்தனை கோடிகளை விட
உலகம் முழுக்க அவர் சம்பாரித்த கோடிக்கணக்கான இதயங்களுக்கு எந்த வகையில் எம்.ஜீ.ஆர்
போல கைமாறு செய்யப் போகின்றாரோ? எம்.ஜி.ஆரைக் கூட பாமரமக்கள் தான் தெய்வமாக கருதினார்கள். ஆனால் ரஜினியோ அதையும் தூக்கி சாப்பிட்டு விட்டார். படித்தவர், படிக்காதவர், உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் என்று அத்தனை இதயங்களையும் கொள்ளை கொண்டு இருக்கின்றார்.
அவர் அடிக்கடி சொல்லும் சூழ்நிலை தான்
முக்கியம்.
ஆனாலும் அவர் குடும்பத்தை மீறி
கடைசி வரைக்கும் அவரால் எதுவும் செய்துவிட முடியாது என்பது தான் நிதர்சனம். காரணம்
ரஜினி என்ற மூன்றெழுத்து பிமப்ம் மட்டும் தான் ரசிகர்களுக்கு சொந்தம். அவரின் உருவம் தரும் வருமானம் அனைத்தும் அவர் குடும்பத்திற்குத் தான் சொந்தம். இதுவும் ரஜினி பார்வையில் காலத்தை மீறி நாம்
ஒன்று செய்து விட முடியாது என்பதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். .
//எம்.ஜி.ஆர், ரஜினி என்ற இந்த மூன்று எழுத்துக்கள் உருவாக்கிய தாக்கம் ,..//
ReplyDeleteமூணாவது ஆளை இதில் சேர்க்கவில்லையே ..ஏன்?
யாருங்க அந்த மூன்றாவது ஆள்?
ReplyDeleteவிஜய் ...!
Deleteஅந்த தம்பியே இன்னும் இதை உணரவில்லை? அதற்குள் தருமி அவர்கள் உணர்ந்து விட்டாரா?
Deleteஅன்றிலிருந்து இன்று வரை தமிழ் சினிமா உலகத்தில் மூன்று எழுத்து நாயகர்களே அதிகம் இருக்கிறார்கள்...
ReplyDeleteM.G.R - சிவாஜி
ரஜினி - கமல்
விஜய் - அஜித்
ஆர்யா, சூர்யா, விஷால், தனுஷ், சிம்பு
இப்டி சொல்லிக்கிட்டே போகலாம்...
மூன்று எழுத்தில் என் மூச்சு இருக்கும். முடிந்தபின்னாலும் பேச்சு இருக்கும் என்பது இது தானோ? நன்றி ரவீந்திரன்.
Deleteசினிமாவை சினிமாவாகவே பார்க்க வைத்த நடிகர் என்பதில் மாற்று கருத்து இல்லை.
ReplyDeleteநல்ல விமர்சனம். இந்த விமர்சனத்தை வைத்தே ஒரு பதிவே எழுதலாம் என்று தோன்றுகின்றது. ஏறக்குறைய நம் தமிழர்கள் இன்று வரைக்கும் ஒரு வித மயக்கத்திலேயே இருப்பதும், திரையில் இருந்தே தங்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்க காரணமாக இருப்பதும் இதனால்தானோ என்று நினைக்கத் தோன்றுகின்றது. நன்றி அஜீஸ்.
Deleteவீட்டில் இருப்பவர் அக்மார்க் ரஜினி ரசிகர். சீண்டி விட்டு வேடிக்கை பார்ப்பதுண்டு. பொங்கி தீர்த்து விடுவார். வந்து விழும் வார்த்தைகளில் கமல் குறித்த மேற்படி சமாச்சாரங்கள் தான் வசவுகளாக வந்து விழும். நானும் சிரித்துக் கொண்டு மேலும் மேலும் தூண்டி விட்டுக் கொண்டேயிருக்க முடியாத பட்சத்தில் அடிக்க ஓடிவருவார். தப்பி வெளியே ஓடி விடுவதுண்டு. குழந்தைகள் வந்து பஞ்சாயத்தை நடத்துவார்கள்.
ReplyDeleteசுவாரஸ்யமான பகிர்வுகள்...
தூண்டிவிட்டால் துடித்து விடுவார்.
Deleteஜோதிஜி விரிவாக எதிர்பார்த்தேன்..
ReplyDeleteஅட போங்க கிரி. ஒரு புத்திசாலி கூகுள் ப்ளஸ் ல் விமர்சித்துள்ளார். பாருங்க. சிரித்து விடுவீங்க.
Delete///1989 வரைக்கும் கலைஞரின் கட்டுப்பாட்டில் இருந்த திமுகவின் தன்மை அவரின் குடும்ப உறுப்பினர்கள் திமுக வை கையாளத் தொடங்கிய பின்பு முற்றிலும் மாறி புதிய முகமாக மாறிவிட்டது. ஆனாலும் இன்றும் பழைய விசுவாசிகளிடம் கலைஞர் குறித்து பேசிப்பாருங்கள். உங்கள் காதில் ரத்தம் வரும்படி அறைந்து விடுவார்கள். ///
ReplyDeleteமிக மிக உண்மை...
எனக்கு பழைய கலைஞரை மிக பிடிக்கும் அவரின் வேகம் விவேகம் அப்போது மிக அதிகம் ஆனால் இப்போது அது இல்லை அவரிடம். அவரிடம் இருந்த விவேகம் இப்போது குடும்பத்தினர் முன்னாள் ஒன்றுமில்லாமல் போய்விட்டது
குடும்ப அரசியல் என்பது ஒன்றாக கலந்து விட்டது. எல்லா கட்சியிலும்.
Deleteமறைக்கப்பட்ட உண்மைகள் தொடருக்குப்பின் இந்த பதிவின் முதல் பாதி ஆழ்ந்த யோசனைகளை ஏற்படுத்தியது.
ReplyDeleteதமிழ்மகனின் 'வெட்டுப்புலி' நாவலில் ஒரு MGR ரசிகையின் வாழ்வை போகிறபோக்கில் சொல்லியிப்பார் அது என்னை மிகவும் கவர்ந்தது. மேலும் தன் சொந்த வாழ்வின் அக்கறையும் பற்றுதலும் இல்லாதவர்களுக்குத்தான் தனிமனித போற்றுதலும், ஆராதித்தலும் கைகூடுகிறதாய் நான் நம்புகிறேன். தீவிர ரசிகர்கள் பலரும் மிக உயர்ந்த இடத்தை அடைந்துவிடவில்லை என்பதே இதற்கு சாட்சி.
ஏற்கனவே ஒருவர் இந்த புத்தகத்தைப் பற்றி சொல்லியுள்ளார். நன்றி அகலிகன்
Deleteஎங்க தாத்தா எங்க அப்பா இருவருமே அதிதீவிர திமுக வெறியர்கள். இருவருமே எந்த பதவியையும் எதிர்பார்த்து கட்சி வேலை செய்யவில்லை.எங்கள் தாத்தா அண்ணாவிற்காக
ReplyDeleteசெய்தற் என் அப்பா கலைஞருக்காக செய்தார். ஒருகட்டத்தில் குடும்பம் சின்னபின்னம் ஆனதற்கு காரணமும் இந்த அரசியல் ஈடுபாடுதான்.
நன்றி ஜோதிஜி
ராஜா
நான் கேள்விப்பட்ட வகையில் பல இடங்களில் இந்த அரசியல் தான் உறவில் பகையை உருவாக்கி சாகும் வரைக்கும் சேர முடியாமலும் வைத்துள்ளது.
Deleteசிலரின் செயல்கள் ஆச்சர்யத்தைக் கொடுக்கும். அப்படி செயற்கரிய செயல்கள் செய்தவர்களை பாராட்டிவிட்டு, அவர்களைப் போல நல்லவற்றை(அல்லது வெற்றியை அடைய ) எப்படி நம் வாழ்வில் கடைபிடிக்கலாம் என்று சிந்த்தித்து வாழ்பவன் பகுத்தறிவாளன்.
ReplyDeleteசினிமா ஒரு தொழில். வாங்கிய டிக்கெட்டின் காசுக்கான மதிப்பு படம் பார்த்து முடிந்தவுடன் அழிந்துவிடும் அந்த டிக்கட்டும் குப்பையாகும்.
அதுபோல நாயக பிம்பங்கள் திரையுடன் முடிந்துவிடும். அதை நம்பி "எனக்கும் ஏதேனும் செய்" என்று கேட்பது அல்லது எண்ணுவது மடமை.
***
இரசினியின் இரசிக வேகனில் இப்படி அல்லக்கையாக இரசினி பெருசா கமல் பெருசா என்று வெட்டி வாதங்களில் காலங்களை கழித்தவர்களில் நானும் ஒருவன். ஆனால், டயப்பருடன் இருந்த குழந்தைகள் எப்படி மாறி வளர்கிறார்களோ அப்படி மன வளர்ச்சி பெற்று , இப்படியான இரசிக வேகனில் இருந்து வெளியேறி விட்டேன்.
40 வயது ஆகியும் இன்னும் அதே எண்ணங்களில் வாழ்பவர்களை என்ன சொல்வது??
****
1. மதப்புத்தகங்களில் தவறே இல்லை என்று நம்புபவர்கள்,
2. தன்னைப்போல ஒரே கட்சியில் ஒரே கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, தலைமை என்ற பதவியை வகிப்பவர் தன்னைப்போல ஒரு மனிதர் என்று எண்ணாமல் ஆராதிக்கும் அலவிற்கு அடிமையாய் மாறியவர்கள்,
3.சினிமா நாயகன், கதை புத்தகம் எழுதியவர்கள், என்று ஏதேனும் ஒரு நாயக உருவத்திற்கு மண்டகப்படி வைத்து அதைப் பேசுவது அல்லது ஆராதிப்பது என்பதையே ஒரு கடமையாகச் செய்பவர்கள்...
என்னளவில்....இவர்கள் சுவராசியமானவர்கள் ஆனால் சுயமிழந்தவர்கள் அல்லது மேற்சொன்ன அடையாளங்கள் இல்லாமல் சுய அடையாளத்தில் இருக்கப் பயந்தவர்கள். இவர்கள் ... அடுத்தவன் ஏற்படுத்திய அல்லது அடுத்தவனைக்கொண்டு தனக்கான இருத்தலை தக்க வைத்துக்கொள்பவர்கள்.
****
இதை படித்து முடித்தவுடன் என்ன எழுதுவதென்றே தெரியல கல்வெட்டு
Delete//40 வயது ஆகியும் இன்னும் அதே எண்ணங்களில் வாழ்பவர்களை என்ன சொல்வது??
Delete//
ஹி...ஹி கல்வெட்டு ,கல்லை தூக்கி மண்டையில போட்டுட்டாரே :-))
ஜோதிஜி, வழக்கமா உங்க பதிவில் அதிகம் மேலோங்கி தென்படும் அலைப்பாய்ச்சலுடனே இப்பதிவையும் எழுதி இருக்கீங்க, அதைத்தான் நான் புடிச்சு கேட்பது வழக்கம், நீங்களும் சிணுங்கிறது வழக்கம்.
ஒரு நடிகர் கொடுத்த காசுக்கு ,நடிக்கிறார், காசு கொடுத்து பார்ப்பதற்கு நல்லா பொழுது போகுது, அரசியலுக்கு வரேன்னு சொல்வதும், வரமாட்டேன்னு சொல்வதும், எந்த வகையில் ரசிகர்க்கு நஷ்டம், அப்போ அரசியலுக்கு வந்தால் ரசிகர்கள் எல்லாம் கோடிக்கணக்கில சம்பாதிக்கலாம்னு சொல்ல வறிங்களா?
அரசியலுக்கு ,வந்து ஆட்சியைப்பிடித்தாலும் ரசிகர்மன்ற தேவைகளுக்காக நாட்டை ஆளமுடியுமா? அப்படி எதிர்ப்பார்ப்பதே தவறு இல்லையா?
ஜாதிக்கட்சித்தலைவர் ஆட்சிக்கு வந்தா,அந்த ஜாதி ஆட்களுக்கு வாழ்வு என சொல்வதற்கும்,இதற்கும் என்ன வேறுபாடு?
நீங்க நிறைய அனுபவம் வாய்ந்தவர்,ஆனால் பெரும்பாலும் அடிப்படையாக சிலவற்றை புரிந்துக்கொள்வதேயில்லை.
விஜயகாந்த் ,நடிச்சார்,அரசியலுக்கு வந்தார், ரசிகர்கள் வாழ்வு பெற்றார்களா?,இல்லை மக்கள் பலன் அடைந்தார்களா?
அவர் உருவம்,பிம்பம் ,சம்பாத்தியம் யாருக்கு சொந்தம்?
அவர் பொறியியல் கல்லூரியில் யாரா இருந்தாலும் டொனேஷன் வாங்கிடுவார் :-))
எனவே உருவம்,பிம்பம்,சம்பாத்தியம் எல்லாம் குடும்பத்துக்கு தான்.
எம்ஜிஆர் தனது வருமானத்தில் மக்களுக்கும் கொஞ்சம் கொடுத்தார் அதுக்காக எல்லாம் மக்களுக்கே போய் சேர்ந்துடுச்சா, டிரஸ்ட் எனப்பெயரில் இருந்தாலும் பெரும்பாலான சொத்துக்கள் உறவினர்கள் கைவசமே.
அதே போல ரஜினியும் கொஞ்சம் தரும காரியத்துக்கு செலவழிக்கவே செய்கிறார்.
ஈழத்தமிழர் என வாய்கிழியப்பேசும் அரசியல்வாதிகள் கூட இங்கே அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு ஒன்றும் செய்வதில்லை, பல ஆண்டுகளுக்கு முன்னரே ராமேஷ்வரம் அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு சரியான சமையல் பாத்திரம் கூட இல்லை என கேள்விப்பட்டு ,அனைத்து குடும்பத்துக்கும் அடிப்படையான பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார்.
நீங்க எல்லாம் என்ன எதிர்ப்பார்க்கிறிங்க என்றால் ஆண்டு தோறும் கோடிக்கணக்கில் கொடுக்கனும் என்றா? அது யாருக்கும் சாத்தியமில்லை, அவசியமும் இல்லையே.
அவரோடு அறிமுகம் ஆனவர்கள், ஆரம்பத்தில் உதவியவர்களுக்கு எல்லாம் மறக்காமல் உதவிக்கொண்டு தான் இருக்கிறார். அனைவருக்கும் அள்ளிக்கொடுக்க என்ன கட்டாயம்.
எஸ்.பி.முத்துராமன் ,இனிமேல் இயக்கப்போவதில்லை என சொன்னதால், அவருக்கு கால்ஷீட் கொடுத்து ,சொந்தமாக படம் தயாரிச்சு செட்டில் ஆக வழி செய்தார், அப்படம் பாண்டியன்.
வீ.கே.ராமசாமி, இன்னும் சிலர் இத்தனை ஆண்டுகளுக்கு பின்னும் பெருசா பணமில்லாமல் இருப்பதை பார்த்து ,அருணாச்சலம் படத்தின் பங்குதாரர்கள் என முதலீடே இல்லாம் சேர்த்துக்கொண்டு ,லாபத்தினை பிரித்தும் கொடுத்தார்.
ஏதோ அவர்ப்பங்குக்கு செய்துக்கொண்டு தான் உள்ளார், அதிகம் எதிர்ப்பார்த்து கிடைக்காமல் ஏமாற தேவையில்லையே.
ஒரு நடிகராக மட்டும் பார்க்காமல், அவரே நாட்டைக்காப்பத்தனும், அது செய்யவில்லை என்றால் அவர் சரியில்லைனு எல்லாம் ஏன் எதிர்ப்பார்க்கனும், அவசியம் என்ன?
ஒரு நடிகராக தயாரிப்பாளருக்கு நட்டம் வராமலும்,காசு கொடுத்து பார்ப்பவனுக்கு பொழுது போக்கும் கொடுத்தால் போதும்,அதுக்கு மேல எதிர்ப்பார்ப்பது தேவையில்லாதது.
உரிமை இருப்பவர்களிடம் தானே நாம் சிணுங்க சிந்த முடியும்.
Deleteஇந்த பதிவுக்கு அந்த கடைக்காரர் கொடுத்த தாக்கம் தான் முக்கியம். மற்றபடி இதில் நான் எதுவும் பெரிசா சொல்ல வரல.
கல்வெட்டு போட்டதை கணக்கா போட்டு எடுத்து கலாய்த்தமைக்கு என் கடுமையான கண்டனம். வயதால் நாங்களும் யூத்து யூத்து யூத்து. இப்பக்கூட குழந்தைகளோட யூ டேர்ன் அடித்து விளையாடுறோமாக்கும். புரிஞ்சா சரி.
எனக்கு தெரிந்தவர் தீவிர அதிமுக, அவர் அதிமுகவில் இருந்து எதையும் சம்பாதிக்கவில்லை. கட்சிக்காக சொந்த காசை செலவழிப்பவர். கட்சி ஜா, ஜென்னு பிரிந்த போது ஜெ பக்கம் நின்றார். பழைய ஆட்கள் ஜா பக்கம் நின்றார்கள். அதனால் கட்சி ஜெ பக்கம் வந்த பிறகு கட்சியில் இவருக்கு செல்வாக்கு அதிகமாகிவிட்டது. கட்சி தோற்கும் நிலையில் உள்ள போது தேர்தலில் நிற்க இடம் கிடைக்கும். தோற்றுவிடுவார் :)) அதனாலயே அவருக்கு அதிமுக காரர்களிடம் செல்வாக்கு. அவர் மறைத்துவிட்டார் அதுபோலவே அவர் பையனும் கட்சிக்காக உழைப்பவர் (இருக்கற காசை கட்சிக்காக செலவழித்து ஒழித்துவிட்டார் என்ற கோபம் உண்டு) ஆனால் அப்பா அளவுக்கு ஏமாளி இல்லை. இப்ப பையன் சட்டமன்ற உறுப்பினர்.
ReplyDeleteதிமுகவில் தீவிரமாக இருந்தவர் கட்சியால் சம்பாதிக்கவில்லை. அதால் நட்டப்பட்டு அழிந்தது தான் மிச்சம். (பல பேர் தெரியும்) இவர்கள் எல்லாம் புது ஆட்கள் இல்லை என்பது சொல்லதேவையில்லை :(.
இரஜினி படத்தை குடும்பத்தோட பார்க்கலாம். கமல் படத்தை குழந்தைகளோடு பார்ப்பது நமக்கு சங்கடத்தை உருவாக்கும் :). நான் இரஜினி ரசிகனாக இருந்தவன் இப்போ யாருக்கும் இல்லை (evolved) :))
சடட மன்ற உறுப்பினர் பெயரை சொல்லக்கூடாதோ?
DeleteJust for the record
ReplyDeleteJust because we are able to watch with children that doesn't mean it is a movie worth of watching. Same way if movie is meant for matured audience that doesn't mean a bad movie.
We have a rating system in place. If anyone is taking their kids to A rated movies they are stupid.
If Kamal & Co is getting false certificate U cert instead of A just to get more money / more audience then we need to blame the sensor system.
The so called "family can see" type Rajini movies do contain double meaning words and mukkal munakal which is in appropriate for kids (in one movie his character will make all the funny sound with vadivelu's wife character in closed cloth while steaming )
நீங்க சொல்லும் படம் சந்திரமுகி
Delete****ஆனால் அவர் சம்பாரித்த இத்தனை கோடிகளை விட உலகம் முழுக்க அவர் சம்பாரித்த கோடிக்கணக்கான இதயங்களுக்கு எந்த வகையில் எம்.ஜீ.ஆர் போல கைமாறு செய்யப் போகின்றாரோ? எம்.ஜி.ஆரைக் கூட பாமரமக்கள் தான் தெய்வமாக கருதினார்கள்.***
ReplyDeleteஎம் ஜி ஆர் என்ன கைமாறு செய்தார்னு சொல்றீங்க. அதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால் நானும் தெரிஞ்சுக்குவேன்.
எம் ஜி ஆர் ஒழிச்சு திரையுலகில் ஒண்ணுமில்லாமல்ப் போனவர்கள் அதிகம். "ஒரு நல்ல மனுஷன்" எப்படி அப்படியெல்லாம், தன்னைவிட வலிமையில்லதவர்களை செய்வார்னு எனக்கு விளங்கவில்லை???
***ஆனால் ரஜினியோ அதையும் தூக்கி சாப்பிட்டு விட்டார். ***
ரஜினியைப் பார்த்து அவர்கள் ரசித்தால்/மதித்தான்/வணங்கினால் அவங்க ரஜினியை சாப்பிட்டதாத்தான் ஆகும்? :) ஏதோ ரஜினி வலைவீசிப் பிடிச்சு அவங்கள சாப்பிட்டதா சொல்றமாரி இருக்கு, நீங்க சொல்றது! :)))
***படித்தவர், படிக்காதவர், உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் என்று அத்தனை இதயங்களையும் கொள்ளை கொண்டு இருக்கின்றார்.***
எம் ஜி ஆர் ரசிகர்களிலும் படித்தவர்கள் ஏகப்பட்டபேர் இருந்தாங்க. சிவாஜி- எம்ஜியார், ரஜினி-கமல் எல்ல்லாமே 50/50 தான். ரசிகர்களில் படித்தவர்கள் என்றாலும் படிக்காதவர்கள் என்றாலும். இருவருக்குமே 50/50. படிப்புக்கும் ரசனைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை!
என்ன படித்த எம் ஜி ஆர் ரசிகர்கள் வெளிப்படையாக/தைரியமாக தான் எம் ஜி ஆர் ரசிகர்கள்னு சொல்லாமல் இருந்து இருக்கலாம்! ரஜினி ரசிகர்கள் அப்படி இல்லாமல் இருக்கலாம்
----------
என்னவோ போங்க..எப்படியாவது ஒரு சிலருக்கு ரஜினியை கவுத்தணும்..
கமலை வச்சு (சிறந்த கலைஞன் தமிழ்னன்னு சொல்லி) இல்லைனா எம் ஜி ஆரை வச்சு (அவர் நல்லவர், அள்ளி அள்ளிக்கொடுத்தே bankrupt ஆகிட்டாருனு சொல்லி). இல்லைனா இப்போ பாரதியார் பொறந்தநாளைச் சொல்லி..:))))
எனக்கு சிரிரிப்பு சிரிப்பாத்தான் வருது! :)))
அய்யோ வருண் டென்ஷன் ஆயிட்டீங்க போலிருக்கே.
Deleteஜோதிஜி,
ReplyDelete//திமுகவில் உங்கள் வாழ்க்கையில் பார்த்த பழைய நபர்கள் எவராவது உயர்ந்த பதவிக்கு வந்து அதுவும் நிலைத்து நின்று பார்த்து இருக்குறீர்களா? //
இந்தக்கேள்வியே தப்பு, திமுகவில் பழைய ஆட்களும், அவர்கள் வாரிசுகளுமே மேலே வந்து,நிலைத்து நிற்கிறார்கள்.
வெகு சில பழம்பெருச்சாளிகள் வேண்டுமானால் பிடிப்பு இல்லாமல் போயிருக்கலாம்.
வீரபாண்டி ஆறுமுகம்- வீரபாண்டி.ராஜா,
எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி= எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்,
டீ.ஆர்-பாலு-டி.ஆர்.பி.ராஜா,
என்.கே.பி.பெரியசாமி- என்.கேபி.பி.ராஜா,
இவர்கள் எல்லாம் நன்கு அறிந்த பழைய திமுக,மற்றும்,வாரிசுகள், இப்படியாக ஒவ்வொரு தொகுதிக்கும் பழைய ஆட்களின் வாரிசுகள் ,அரசியலில் இருக்கிறார்கள்.
எனவே திமுகவில் புதுசா சேர்ந்து தான் முன்னுக்கு வரமுடியாது.
நீங்கள் சொல்லும் நபர்கள் எனக்கு 23 வயதிற்கு மேல் அதுவும் நன்றாக 30 வயதிற்கு மேல் தான் அறிமுகமானார்கள். ஆனால் திருப்பூருக்குள்ளும், எங்கள் மாவட்டத்திலும் நான் பார்த்த எந்த பழைய தலைகளும் தற்போது இல்லை. தற்போது நான் பார்த்துக் கொண்டிருப்பது மாறி வந்த தலைகள்.
Deleteஜோதிஜி சார் நல்லாதான் எழுதறீங்க. யார் யார் எப்படியோ ஆனால் எந்த விஷயத்தையும் நீங்கள் பேசினாலும், எழுதினாலும் மந்திரத்துக்கு கட்டுப்பட்ட மாதிரி சுண்டியிழுக்குதே.
ReplyDeleteஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை. பூவில் உள்ள வாசத்தை மிருகத்தில் எதிர்பார்க்க முடியுமா. அதுமாதிரி தான் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமைகள், தனித்தன்மைகள், குணாதிசியங்கள். இறைவன் படைப்பில் உள்ள விந்தை அது.
விந்தைகள் தான் பல சமயம் விபரீதத்தை உருவாக்குகின்றது மணி.
Deleteஅண்ணே வணக்கம்ணே !
ReplyDeleteரஜினிங்கறவரு ஒரு ஆக்டரு. அவரு ஆக்டு குடுக்காரு. சனம் காசு கொடுத்து பார்க்குது. அந்த நபருக்கு 63 வயசு ஆயிருச்சுன்னா அது அவரோட தனிப்பட்ட சமாசாரம். இதுல எதுக்கு இத்தனை அலப்பறை புரியலை.
அப்படி கூட அவரு பிறவி நடிகராவோ - நடிகர் திலகமாவோ இருந்தாலும் பரவால்லை. அந்த கருமமும் கிடையாது.சரி ஒழியட்டும் எம்.ஜி.ஆரை போல ஏழை பாழைன்னா மனமிரங்கற வள்ளலான்னா அதுவும் கடியாது.
அன்னாரின் ரசிகர்கள் அலப்பறை பண்ணா அதுல ஒரு அருத்தம் இருக்குது. பராம்பரியம், பனை வெல்லம்னு அலட்டிக்கிற ஆனந்த விகடன்ல ரஜினி 63ன்னுட்டு பிட்டுபடம் ஓட்டியிருக்காய்ங்க.
நாட்ல எத்தனையோ பிரச்சினை பத்தி எரியுது. அதையெல்லாம் விட்டுப்போட்டு ஏறக்குறைய ஒரு கோமாளியான ரஜினி புராணத்தை போட்டு பக்கங்களை நிரப்பிர்யிருக்காய்ங்க.
அதை பார்த்ததுமே(படிச்சதுமே இல்லை) கடுப்பாயிதான் இந்த பதிவை போடறேன். அவிக அதை போடாம இருந்திருந்தா நாம இதை போடாம இருந்திருப்பம். இந்த பதிவுல மொக்கை போடாம ரஜினி மேல கடுப்பாக நமக்குள்ள காரணங்களை பாய்ண்ட் டு பாய்ண்ட் பட்டியலிடப்போறேன்.
முன் குறிப்பு:
நமக்கும் ரஜினிக்கு வரப்பு,வாய்க்கா தகராறு எதுவும் கிடையாதுங்கோ. இன்னம் சொல்லப்போனா மிஸ்டர் பாரத் பார்க்கிற வரை நாம பக்கா ரஜினி ரசிகன்.
1.தமிழ் தமிழ்னு ஜல்லியடிச்சுக்கிட்டு இன்னமும் ஒழுங்கா தமிழ் பேச கத்துக்காதது.
2.பெங்களூர் போனா ராஜ்குமார் -ஹைதராபாத் வந்தா என்.டி.ஆர்,நாகேஸ்வர் ராவ் -தமிழ் நாட்ல இருந்தா எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு ஜல் ஜக் போடறது.
3.தனக்கும் மத்தவுகளுக்கும் என்ன வித்யாசம்? தன்னை ஏன் மக்கள் அங்கீகரிச்சாய்ங்க? ங்கற விசயத்தையே ரோசிக்காம அந்தகால எம்.ஜி.ஆருக்கு நகலா மாறினது.
பழைய ஒரிஜினல் ரஜினிக்கு உதாரணம்: ராணுவ வீரன் படத்துல ரயில் கொள்ளை காட்சி , நகலா மாறின ரஜினிக்கு உதாரணம்: படையப்பால பாம்பு சீன் .கடேசில வடிவேலுவை கூட இம்மிட்டேட் பண்ற ரேஞ்சுக்கு வந்துட்டது .
4.எம்.ஜி.ஆர் கிட்டயே மோதறதா சீன் போட்டுட்டு கடேசில கலைஞர்,ஜெ வுக்கு கூட ஜல் ஜக் போட்டது.
5.தன்னை ஹீரோவாக்கின சின்ன தயாரிப்பாளர்களை டீல்ல விட்டுட்டு அவிகளுக்கெல்லாம்
அஞ்சு பத்து தருமம் பண்ணி அவமானப்படுத்தினது.
6.பாலச்சந்தர் துரோணர் அர்ஜுனனுக்கு சைடு கொடுத்த கணக்கா கமலுக்கு சைடு கொடுக்கிறது தெரிஞ்சும் கால்ஷீட் தானம் பண்ணி ரசிகர்களை ஏமாத்தினது ( அமீர்ஜான் டைரக்சன்ல கூட படம் வந்ததுங்கோ)
7.தன்னை வளர்த்த சேரி சனங்க, பிற்படுத்தப்பட்டவுக,மைனாரிட்டிங்களுக்கெல்லாம் அல்வா கொடுத்து அய்யராத்து பிள்ளையா காட்டிக்கிட்டது. அத்வானிக்கெல்லாம் ஜல்ஜக் போட்டது.
8.கும்பகோணம் பள்ளி தீவிபத்து சமயம் அறிவிச்ச தொகைய இன்னம் செட்டில் பண்ணாரா இல்லியான்னு ஆருனா தகவல் கொடுங்கப்பு
9.தன் ஆத்து கண்ணாலத்துக்கு ரசிகர்களுக்கு டின்னர் கொடுக்கிறேன்னு அல்வா கொடுத்துக்கிட்டிருக்கிறது.
10.ஆர்.எம் வீரப்பன், மூப்பனார், அடைக்கலராஜ்னுட்டு ஒவ்வொரு காலகட்டத்துக்கு ஒவ்வொரு பவர் சென்டருக்கு தன்னை நெருக்கமா காட்டிக்கிறது.சொந்த காரியங்களை (மட்டும்) சாதிச்சுக்கறது.
11.சொந்த காரணங்களால கடுப்பாகி (போயஸ் கார்டன் பகுதியில் பாதுகாப்பு பேரால் இவர் காரை செக் பண்ணாய்ங்களாம்) அதை மறைச்சு - ஒதகாத பேர் வைக்கிற சமாசாரத்தையும் -மணிரத்தினம் வீட்ல பெட் ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தையும் பப்ளிக் இஷ்யூ போலவாக்கி ஸ்டேட்மென்ட் கொடுக்க - காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையா ஜெ அரசு விழ - அதை தன்சாதனையா நினைச்சு அன்பு மணி அண்ட் கோ கிட்டே மோதினது.
ReplyDeleteதமாசு என்னடான்னா இவர் ஓட்டுப்போடாதிங்கன்னு சொன்ன பா.ம.க தான் செயிச்சது.
12.தனக்கு லைஃப் கொடுத்த சினிமாவுக்கு எதியாச்சும் செய்யனும்ங்கற எண்ணம் மட்டும் கிடையாது. இதுவரைக்கும் ஒரு ஷார்ட் ஃபிலிம் கூட ஸ்பான்சர் பண்ணது கிடையாது. எத்தனையோ "நெல்ல" படம் வந்திருக்கு. அதுல ஒன்னுத்தலயும் அய்யாவோட பங்களிப்பு கிடையாது.
13.இவர் முகராசிக்கு -இவரோட பயாக்ரஃபில மொத மொதலா திருப்பதி தேவஸ்தான போர்டு உறுப்பினர் பதவி கொடுத்த என்.டி.ஆருக்கு சந்திரபாபு ஆப்படிச்சப்போ லச்சுமி பார்வதி துஷ்ட சக்தி.அவரை விட்டுட்டு வந்தா தலைவர் பதவி கொடுங்க. அதுவரை தலைவர் பதவியை காலியா வைங்கன்னு "அருள் வாக்கு".
சந்திரபாபு தலீவர் பதவியை கபளீகரம் செய்த பிறவும் கிர்க்க மர்க்காங்கலை.
14.ரஜினி நடிச்ச ரங்கா படத்துல கராத்தே மணிக்கும்,ரஜினிக்கும் ஒரு சீன்.
மணி: ஏம்பா இப்படி சிகரட்டா ஊதி தள்ளி இஷ்டத்துக்கு தண்ணி போடறியே உடம்பு என்னத்துக்காகும்?
ரஜினி: தோ பார் குரூ.. ( ரஜினி ஸ்டைலுங்கோ) ஒங்களே மாதிரி 60 .....70 வயசுல்லாம் வாழனும்னு எனக்கு ஆசையில்லே..என் இஷ்டப்படி வாழ்ந்து 40 அல்லது 45 வயசுல போயிருவன்
இப்படிப்பட்ட சீன்ஸ் ஆயிரம் இருக்கு. இந்த சீன்ஸால இன்ஃப்ளுயன்ஸ் ஆகி தண்ணி போட ஆரம்பிச்சவுகள்ள எத்தீனி பேரு குடி நோயாளி ஆயிட்டாய்ங்களோ தெரியாது. நம்ம ரேஞ்சுக்கு நாம செயின் ஸ்மோக்கர்.
ஆனால் தலீவரு மட்டும் யோகி ஆயிட்டாரு. இதுவரைக்கும் சிகரட் பிடிக்காதிங்கப்பா, தண்ணி போடாதிங்கப்பான்னு ஒரு அட்வைஸு கூட விட்டதில்லை. கவுர்மென்டே டாஸ்மாக் திறந்து நாறடிச்சப்போவும் மூச்
15 படையப்பா:
ரஜினி வயசு புள்ளைங்க நடிகைகளோட போஸ்டர் மேல படுத்து சுய இன்பம் அனுபவிச்ச கதையா படையப்பா எடுத்தாரு. இவரோட அடி மனசுல ஜெயா அம்மாவை என்னெல்லாம் செய்யனும்னு நினைச்சாரோ அதையெல்லாம் ரம்யா கிருஷ்ணனை வச்சு செய்து நிறைவேத்திக்கிட்டாரு.இதெல்லாம் அவலை நினைச்சு உரலை இடிச்ச கதை.
16.இவருக்கு டூப்ளிக்கேட்டா வந்த நடிகர் விஜய்காந்த். இவரோட கால்ஷீட் கிடைக்காத தயாரிப்பாளர்கள்தான் விஜய்காந்த்தை வச்சு படம் எடுத்துட்டிருந்தாய்ங்க. அந்தாளு அரசியல்ல நுழையறதென்னா .. அவரோட ரசிகர்ங்க அட்லீஸ்ட் உள்ளாட்சி, நகராட்சின்னு நுழைஞ்சு அரசியல் அதிகாரத்தை கைப்பத்தறதென்ன.. வரப்போற தேர்தல்ல வி.காந்தோட கட்சி டிசைடிங் ஃபேக்டரா இருக்கிறதென்னா..
ReplyDeleteரஜினியோட ரசிகர்கள் மட்டும் கண்டவன் கிட்ட செருப்படி வாங்கிக்கிட்டு முகத்தை எங்கயோ வச்சிக்கிட்டு வளைய வர்ரதென்ன.. இவர் மட்டும் செருப்பாலடிச்சவன் செருப்பையெல்லாம் துடைச்சி விட்டு மகளோட கண்ணாலத்துக்கு அழைப்பு வைப்பாரு. ரசிகனுக்கு மட்டும் ஆப்பு வைப்பாரு.
17.ரஜினி வீட்டு கண்ணாலத்துக்கு சமையல் காண்ட்ராக்டரா வேலை பார்த்த அறுசுவை மன்னர் நடராஜனோட மகன் குமாரின் வார்த்தைகளிலேயே :
"ரஜினி சார் ஒரு ஐட்டத்தோட திருப்தி அடைஞ்சுட்டார்.ஆனா லதா மேடம் அப்படி இல்லே..........................................................அதே சமயம் பராம்பரிய சுவையையும் விட்டுக்கொடுத்துர கூடாது ( பராம்பரியம்னா என்ன பார்ப்பன பராம்பரியம் தான் அடுத்த வரியை பாருங்க ..புரியும்) கல்யாணத்துக்கு முந்தின நாள் அக்கார வடிசல் ,தயிர் வடை, சாத்தமதுனு அய்யங்கார் வகை சமையல் வகைகளும் அவசியம் இருக்கனும்னு சொன்னார்"
18.அவரு குழந்தையாம் . அல்லாரும் அலங்காரம் பண்ணி சேல் பண்ராய்ங்களாம். #பிணத்தை கூட பிறர் தான் அலங்கரிச்சு கொண்டு போறாய்ங்க. பேச்சா இதெல்லாம்.
19.காவிரி பிரச்சினனையில காவிரிய பத்தி பேச பயந்துக்கிட்டு நதிகளை இணைக்ககனும்னு "அர்ஜி"கொடுத்துட்டு நதிகளை இணைக்க ஒரு கோடி ரூவா கொடுக்கிறேன்னு அறிவிச்சது.இதையாச்சும் "அவுத்தா" நெல்லாருக்கும். நாலு ஏரிகளையாவது தூர்வாற உபயோகப்படும்.
20. பெண்கள் மேடை ஏறி ஆடக்கூடதுன்னு சொன்ன ரஜினி தன் மகளின் அரங்கேற்றத்துக்கு ஆஜர் ( அப்பாறம் பார்த்தா சொல்றதத்தான் செய்வேன் -செய்றதத்தான் சொல்வேன்னு பஞ்ச் வேற)
21.ரஜினி 25 ங்கற பேர்ல 25 ரூவா டீ ஷர்ட்டை 250 ரூவாய்க்கு வித்து காசாக்கினது. ( ஆஷ்ரம் ஸ்கூலுக்கு நிதி சேர்த்தாய்ங்களாம்)
22.காவிரி மேட்டர்ல தனிக்கச்சேரி பண்ணது -மேடையில கூட இருந்த விஜய்குமார் ஆருன்னு அல்லாருக்கும் தெரியும் -மேடையில ஒலிச்ச மியூசிக் அய்யாவோட டேஸ்டை காட்டிருச்சு. இவரை ரசிக்கிறவன் மட்டும் "அங்கயே" நிக்கோனம். இவரு மட்டும் உசந்த ரசனையோட இருப்பாரு.
23.மகளோட மிஸ்மேனேஜ்மென்டால அவிக ப்ராஜக்டுக்கு கடன் கொடுத்தவுகல்லாம் தலையில துண்டு போட்டுக்கிற நிலைமை வந்து கொடுத்த காசை திருப்பி கேட்டா அவிக மேலயே ஸ்டேஷன்ல கேஸ் கொடுக்கிறது.ஏரியாவுல உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் தீபாவளிக்கு ட்ரஸ் வாங்கி கொடுத்தாராம்ல.
24.அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு கொடுத்து மண்டபம் கொடுக்கிறது. அன்னா ஹசாரே ஊழலை எதிர்த்தாரு. ஆனால் நம்மாளு ஊழலின் மறு உருவமா இருக்கிறா கலைஞருக்கும் -முதல்வருக்கும் சொம்படிக்கிறாரு. என்னா ஒரு முரண்பாடு பாருங்க.
முரண்பாடுகளின் மொத்த உருவமான ரஜினிகாந்தை இப்படியெல்லாம் தூக்கி பிடிச்சா ஏற்கெனவே நாசமான தலைமுறைகளை போலவே அடுத்த தலைமுறையும் நாசமாத்தான் போகும். டேக் கேர்.
by S Murugesan
URL: http://anubavajothidam.com/recog-rajini/
வினோத் நீங்க தான் எழுதியது என்று ஆச்சரியப்பட்டு போனேன்.
Deleteஆமாண்டா இதே வெண்ண வெட்டி வியாக்கியானத்த ஏன் மத்த நடிகன்கிட்ட பேச மட்டும் கூசுது உங்களுக்கு? சொந்த ஊரு பாசம் கண்ண மறைக்குதோ? திறமைய மதிக்க தெரியாத கம்னாட்டி பசங்கதாண்டா வெந்தது வேகாதது பத்தி பேசறது, டேய் வினோத்து அப்படியே பொத்திட்டு போயிரு மறுக்கா உன்ன எங்கியாச்சும் பார்த்தேன் செத்தடா
Deleteஏனிந்த கொலவெறி?
Deleteநல்ல கட்டுரை...
ReplyDeleteவருக குமார்
DeleteTrue, I have seen so many old ardent DMK supporters who has not been recognized but still they keep continuing to support without any expectation & one thing to be noted that they are all well informative & know the past DMK history (Don't consider recent DMK cadres). Still I like old Karunanidhi's Tamil Orator ship and gift of the gab attitude.
ReplyDeleteAS far as, I have seen AIADMK cadres, they are not having that much political history knowledge and could not render any stage speech. Somehow common people supporting AIADMK not because of affection with Jaya but aversion with Karunanidhi.
Rajini, still wondering what makes people to like him and His most of the films are time pass & hard to watch after sometime. But Kamal films are like Library research book which can watch at any time. Even our Next Generation can watch Kamal movies and he always tries new aspirations and almost kick starter of implementing new technologies in Tamil cinema. I think he earns and spend all money only with Cinema.
நீங்க வேற நம்ம வவ்வால் கூட ரஜினி ரசிகர் என்பதே இந்த பதிவுக்கு பிறகு தான் எனக்கு தெரிந்து. நம்ம கல்வெட்டு ஒரு ப்ளஸ் விடற அளவுக்கு கமல் தாக்கம் இருந்ததை பார்க்க முடிந்தது. நன்றி கிரி.
Deleteஅருமையான பதிவு.
ReplyDeleteநன்றி திரு ஜோதிஜி.
இதெல்லாம் உண்மையானு தெரிஞ்சிக்கனும்னா ரஜினி க்கு போய் விளக்கு pudidaa தெரிஞ்சிக்கலாம்.
ReplyDeletevenkayangala