முதல் பகுதி
இரண்டாவது பகுதி
மூன்றாவது பகுதி
நான்காவது பகுதி
ஐந்தாவது பகுதி
தமிழ்நாட்டில் 1996 - 98 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திறகுப் பிறகு ஆறு தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுடன், அவர்களுக்கு மட்டுமே எல்லா வகையிலும் உள்ள சாதகமான மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களை அரசு செய்து கொண்டது.
இந்த ஆறு நிறுவனங்களில் ஐந்து நிறுவனங்கள் முதலீட்டினை செய்து மின் உற்பத்தி செய்வதற்கான வேலையைத் தொடங்கின.
ஆறாவது நிறுவனமான வீடியோகான், மின்வாரியத்திற்கு சொந்தமான வட சென்னை அனல் மின் நிலையத்திற்கு அருகிலேயே தன் மின் நிலையத்தை தமிழ்நாடு அரசு உதவியுடன் நிறுவத் திட்டமிட்டது. ஆனால் 2000 ஆம் ஆண்டு வரை இந்த நிறுவனம் எந்தப் பணியையும் துவங்கவில்லை.
இவர்களின் மின் கட்டணம் பற்றி அறிந்து கொண்ட தமிழ்நாடு மின்வாரியம் பணி தொடங்காமலேயே இருந்த வீடியோகான் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. ஒப்பந்தம் ரத்து ஆனதால் வீடியோகான் தனக்கு ஏற்பட் நஷ்டத்தை ஈடு செய்யக் கோரி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றியும் பெற்றது.
ஒப்பந்தம் செய்த பாவத்திற்காக 150 கோடி ரூபாயை மின்வாரியம் நஷ்ட ஈடாக வழங்கவேண்டி வந்தது. இந்த வழக்கில் மின் உற்பத்திக்கு என்று எவ்வித நடவடிக்கையும் எடுக்காத வீடியோக்கானுக்காக வாதாடி மின்வாரியத்திடமிருந்து 150 கோடி ரூபாயை பெற்றுத் தந்தவர் இன்றைய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் .
மற்ற ஐந்து தனியார் நிறுவனங்களும் 1999 முதல் டிசம்பர் 2002க்குள் தத்தம் உற்பத்தியைத் துவங்கின.
1. ஜி.எம்.ஆர். வாசவி (பின்னாளில் ஜி.எம்.ஆர் பவர் கார்ப்ரேஷன்) 15 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம்
உரிமையாளர் ஜி.எம். ராவ். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்.
2. எஸ்.டி.சி.எம்.எஸ். நெய்வேலி. 45 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம்
ABU DHABI NATIONAL ENERGY COMPANY (TAGA) அபுதாபி .
3. சாமல்பட்டி பவர் கார்ப்பரேஷன். சாம்பல்பட்டி. தர்மபுரி மாவட்டம்.
15 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம்..
உரிமையாளர் -- அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் சி.பிரதாப் ரெட்டி குடும்பம் (54 சதவிகிதம்) ஜப்பானைச் சேர்ந்த றிஷிணிநி நிறுவனம் (20 சதவிகிதம்) மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மாருபேணி கார்ப்பரேஷன் (26 சதவிகிதம்)
4. மதுரை பவர் கார்ப்பரேஷன் . சமயநல்லுர், மதுரை மாவட்டம், 15 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம்.. உரிமையாளர் ஷப்பூர்ஜி பல்லோன்ஜி. மும்மைபயில் இருந்து செயல்படும் பார்சி முதலாளிக்குச் சொந்தமான நிறுவனம். டாட்டா குழுமத்தில் மேலதிகமான பங்குகளைக் கொண்டுள்ளது.
5. பிள்ளைப் பெருமாநல்லூர் அல்லது பி.பி.என். 30 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம்.. சமயநல்லூர் பவர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் உரிமையாளர் ஷிவ்ராம் ரெட்டி ஆந்திர மாநிலத்தவர். சென்னை சத்யம் திரையரங்கை நடத்தும் நிறுவனம்.
இந்த நிறுவனங்களில் இந்த தொழிலில் ஈடுபட்ட எவருக்கும் இந்த துறையில் எந்த அனுபவமும் இல்லை என்பது இங்கே குறிப்பிட வேண்டும். இது தொடர்பான துறைகளில் இதற்கு முன்னால் ஈடுபட்டதும் இல்லை.
இந்த மின் உற்பத்தி நிறுவனங்களில் பங்குதாரராக வந்த அனைத்து அமெரிக்க ஐரோப்பிய நிறுவனங்களும் திட்டங்கள் தொடங்கப்பட்ட 10 ஆண்டுகளில் பெரும் லாபத்தை அனுபவித்து விட்டு இறுதியில் சக இந்திய பங்குதாரர்களிடம் கூடுதல் லாபத்திற்குத் தம் பங்குகளை விற்று விட்டு சென்று விட்டன.
இந்த ஐந்து நிறுவனங்களும் தங்களின் கட்டுமானச் செலவிற்குகாக நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்ற கடன்களைக் கிட்டத்தட்ட அடைத்துவிட்டிருக்கின்றன. இவற்றின் இந்திய முதலாளிகள் யாவரும் இன்று மிகப் பெரிய வணிக மின் நிலையங்களையும் இன்ன பிறகு தொழில்களையும் பெரிய அளவில் நடத்தும் முதலாளிகளாக உருவெடுத்துள்ளனர்.
குறிப்பாக ஜீ.எம்.ராவ் அவர்களின் நிறுவனமானது இன்று சுமார் 120 நிறுவனங்களுக்கு சொந்தகாரராக மாறியுள்ளது. விமான நிலையங்களின் கட்டுமானம், பெட்ரோல் கிணறுக்ளுக்கான ஆய்வு, மிகப்பெரிய மின் நிலையங்களின் கட்டுமானம்,நெடுஞ்சாலைகள் அமைத்தல், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைத்தல் ஆகிய துறைகளில் அது இந்தியாவின் முன்னணி நிறுவனங்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது.
மின்சாரத் துறை தனியார்மயமாக்கப்பட்ட காலகட்டத்தில் முதல் அத்தியாயம் 2005 வாக்கில் முடிவுக்கு வந்தது என்று கூறலாம்.
இந்த காலகட்டத்தின் போது மிகுந்த ஆர்வத்துடன் இந்தியாவுக்குள் நுழைந்த மேலைநாட்டு மின்சார உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவின் அரசியல் கட்டமைப்பினால் ஏற்படும் நெருக்கடிகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் இந்த காலகட்டத்தின் இறுதியில் வெளியேற்த் தொடங்கியிருந்தன.
ஆனால் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் ஈட்டுகின்ற கொள்ளை லாபத்தைக் கண்ட இந்திய மற்றும் அந்நிய நிதி நிறுவனங்கள் இந்தத் துறையில் ஈடுபட்ட உள்ளூர் அரசியல் அமைப்புகளைக் கையாளத் தெரிந்த உள்ளூர் முதலாளிகளைப் பெருமளவில் ஊக்குவிக்கத் தொடங்கின. இதுவே இந்தத் துறையில் ஈடுபட்டுள்ள உள்ளூர் முதலாளிகள் 2005 தொடங்கி இன்று வரை உள்ள இரண்டாம் காலக்ட்டத்ல் பிரம்மாண்டமாக வளர்த்திருப்பதாறகான காரணமாகும்.
இதில் நாம் பேச வேண்டிய சில விசயங்கள் உள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் எப்போதும் சுமார் 40 சதவிகிதம் காலியிடப் பணிகளை வைத்துக் கொண்டு எந்த சூழலிலும் தொழில் அமைதிக்குப் பங்கம் நேரா வண்ணம் பணியாற்றி வருகின்றார்கள். அதே போல மின்சாரத்தை பயன்படுத்தும் எவரும் கடன் வைப்பதில்லை. மாதம் தோறும் முறைப்படி கட்டி விடுகின்றார்கள். இன்னமும் சொல்லப்போனால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதாலும் மின்வாரியம் நஷ்டப்படவில்லை.
புது மின் உற்பத்தி நிலையங்கள் துவங்க முதலீட்டு நிதியில்லை எனக்கூறி தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் துவங்க ஊக்கத் தரப்பட்டது. தனியார் மின் உற்பத்தியாளர்களின் வணிகப் போட்டி மின் விலையை குறைக்கும் என்றும் கூறப்பட்டது.
எனவே மின்வாரியம் தன் சுய உற்பத்தியை அதிகரிக்கவில்லை.
உள்ளே நுழைந்த தனியார் நிறுவனங்களும் உறுதியளித்தபடி போதுமான அளவு மின் உற்பத்தி செய்ய முன்வரவில்லை. இவை இன்றைய கடும் மின் தட்டுப்பாட்டிற்கு காரணமாகிப் போனது. 10 சதவிகிதம் மின்சாரத்தை மட்டுமே உற்பத்தி செய்த தனியார்கள், மின்வாரியத்தின் 52 விழுக்காடு வருவாயை விழுங்கிட வேடிக்கை பார்த்தே மின் வாரியத்தை ரூ 53.000 கோடி நஷ்டத்திற்கு முக்கிய காரணமாகி விட்டது.
மின் உற்பத்தியையும், விற்பனையையும் கண்காணித்த மின்வாரியம், பயினீட்டாளர், உற்பத்தியாளர் என அனைவரையும் சட்டப்படி ஒழுங்குபடுத்தும் அதிகாரம் கொண்ட அமைப்பின் செயல்பாடுகளின் மூலம் தனியார் உற்பத்தியாளர்கள் கொள்ளை லாபம் ஈட்டினர். அக்கொள்கை லாபமே மின்வாரியத்தின் பெரும் நஷ்டத்திற்கு காரணமாகியது..
நஷ்டத்தின் ஒரு பகுதியை ஈடுகட்ட தற்போது ரூ 7,874 கோடி மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. நஷ்டத்தின் பெரும்பகுதி இனி ஈடுகட்ட வேண்டியும் உள்ளது.
மேலே பார்த்த மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் போலவே தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ள ஒரு பிரபலமும் ஒரு தனியார் மின் உறப்த்தி நிறுவனத்திற்கு தனது வாதத்திறமையால் செய்யாத வேலைக்கு கூலி வாங்கிக் கொடுத்த கதையை அடுத்து பார்க்கலாம்.
தனியார் மின் நிறுவனங்கள் என்று சொல்லிக் கொண்டு இங்கே உள்ளே வந்தவர்கள் எவருக்கும் இந்த துறையில் முன் அனுபவம் ஏதும் இல்லை என்பதை நன்றாக நினைவில் வைத்திருக்க வேண்டும். ஆனாலும் தைரியமாக உள்ளே வந்தார்கள். உள்ளே நுழைந்ததும் அவர்களின் விருப்பப்படி சட்டங்கள் வளைந்தது. பல சமயம் வளைக்கப்பட்டது.
புதிய பொருளாதாரக் கொள்கை என்று மத்திய அரசாங்கத்தை குற்றம் சாட்ட முடியுமோ அந்த அளவுக்கு தமிழ்நாட்டிடை அந்தந்த சமயத்தில் ஆண்ட மாநில அரசாங்கமும் தங்களது சுயலாபத்துக்காக பலவற்றையும் செய்து கொடுத்தது. இன்று தமிழ்நாட்டை மின் மிகை மாநிலமாக மாற்றுவோம் என்று சூளுரைக்கவும் செய்கின்றது.
விபரம் தெரியாமல் வாழும் மக்களை விட அத்தனை விபரங்களும் உண்மை நிலவரங்களையும் தெரிந்த ஊடகங்கள் இன்று வரையிலும் அமைதி காப்பது தான் நமது ஜனநாயக நாட்டின் அலங்கோலத்தின் உச்சகட்டம்.
ஒவ்வொரு தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களும் உருவாக்கப்பட்ட சட்டங்கள் துணையுடன் தங்களுக்கு சாதகமாக ஒவ்வொன்றையும் மாற்றிக் கொண்டு ஜெயித்த கதையையும் நாம் பார்க்க வேண்டும்.
புதிய பொருளாதாரக் கொள்கை என்று மத்திய அரசாங்கத்தை குற்றம் சாட்ட முடியுமோ அந்த அளவுக்கு தமிழ்நாட்டிடை அந்தந்த சமயத்தில் ஆண்ட மாநில அரசாங்கமும் தங்களது சுயலாபத்துக்காக பலவற்றையும் செய்து கொடுத்தது. இன்று தமிழ்நாட்டை மின் மிகை மாநிலமாக மாற்றுவோம் என்று சூளுரைக்கவும் செய்கின்றது.
விபரம் தெரியாமல் வாழும் மக்களை விட அத்தனை விபரங்களும் உண்மை நிலவரங்களையும் தெரிந்த ஊடகங்கள் இன்று வரையிலும் அமைதி காப்பது தான் நமது ஜனநாயக நாட்டின் அலங்கோலத்தின் உச்சகட்டம்.
ஒவ்வொரு தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களும் உருவாக்கப்பட்ட சட்டங்கள் துணையுடன் தங்களுக்கு சாதகமாக ஒவ்வொன்றையும் மாற்றிக் கொண்டு ஜெயித்த கதையையும் நாம் பார்க்க வேண்டும்.
தொடர்ந்தால் ஷாக் அடிக்கும்.........................
மிகவும் சுவாரஸ்யமான நல்ல பல தகவல்கள்
ReplyDeleteமிக்க நன்றி.
ஹூம்! கொடுமையாக இருக்கு.
ReplyDeleteஇப்ப புரியுது...8 மாதத்துக்கு முன்னாடி மும்முனை இணைப்புக்கு வேண்டுகோள் கொடுத்து அதற்குண்டான பணத்தை கட்டியும் இன்று வரை ஒன்றும் நடக்காதது ஏன் என்று.
மும்முனை இணைப்பு எந்த உபயோகம் என்று கூறுங்கள் எந்த பகுதி என கூறுங்கள்
Deleteஜோதிஜி,
ReplyDeleteஇப்போ தான் மெயின் மேட்டருக்குள்ளவே வரிங்க :-))
இதை தான் சுருக்கமாக எனது பதிவிலும் சொன்னேன், மேலும் பிள்ளை பெருமால்நல்லூர் திட்டமும் அப்போலோ காரங்களுதுன்னு படிச்சேனே. அவர்கள் மின் உற்பத்தி செய்யாமலே காசு வாங்கிட்டு இருக்காங்க :-))
திட்டம் ஆரம்பிக்கும் போதே ஒரு யூனிட் என்ன விலைக்கு வாங்குவோம்,அதுவும் குறைந்த பட்சம் இத்தனை யூனிட் வாங்குவோம்னு எல்லாம் மாநில அரசு தான் ஒப்பந்தம் போடுது.அதுவும் மஞ்சத்துண்டு காலத்தில் ஒரு யூனிட் 17.50 காசு என்றெல்லாம் ஒப்பந்தம் போட்டிருக்கார். அதை வைத்தே வழக்கு தொடுத்து காசு வாங்கிடுறாங்க.
எனவே மத்திய அரசு பொருளாதார சுதந்திர கொள்கை வகுத்தது என குறைப்பட்டுக்க முடியாது ,எல்லாம் கூட்டுக்களவாணிகள் தான்.
நிலக்கரி சுரங்கம் கூடவா வெட்ட முடியாதுன்னு தனியாருக்கு நிலக்கரியை வெட்ட தாரை வார்த்து கொடுப்பார்கள்,மேலும் அப்படி கொடுத்துவிட்டு ஒரு டன் இவ்வளவுக்கு வாங்கிக்கிறோம்னு ஒரு ஒப்பந்தம் வேற :-))
என்.எல்சி ஐ தனியார் மயமாக்க மன்னுமோகன் அரசு அதி ஆர்வமாக இருக்கு பல கட்சிகளும் இந்த விஷயத்தில் எதிர்ப்பதால் விட்டு வச்சு இருக்காங்க, மஞ்சத்துண்டை கொள்கை முடிவில் எல்லாம் நம்பவே முடியாத, மத்திய அரசுக்கு ஒரு சாதகம் செய்தால் பிரதிபலன் என்னனு கேட்டு வாங்கிட்டு பேச்சுக்கு எதிர்ப்பை காட்டுவார்.
என்ரானை தவிர நேரடியா வெளிநாட்டு மின்னுற்பத்தியாளர்கள் வந்து ஓடியதாக தெரியவில்லை, எல்லாம் ஒரு இந்திய கூட்டாளியை வைத்துக்கொண்டு நல்லா லாபம் பார்ப்பதாகவே தெரிகிறது.
வவ்வால் உங்கள் முந்தைய பின்னூட்டம் என்னை ரொம்பவே வேலை வாங்க வைத்து விட்டது. அடுத்தடுத்து அந்த பலன் தெரியும். மேலும் இதில் உள்ள மாநில, மத்திய அரசியல் கட்சிகள் குறித்து நான் அதிகம் எழுதப் போவதில்லை. அது களத்தின் தன்மையை மாற்றி விடும். வடுவூர் குமார் போல உள்ளவர்களுக்கு உண்மை நிலவரம் தெரிய இதில் உள்ள இதற்கு பின்னால் உள்ள ரகசிய நிகழ்வுகளை எழுதி வைத்தாலே போதுமானது.
ReplyDeleteஇன்று எல்லாமே வெட்ட வெளிச்சமாகி விட்டது. ரணங்களை தடவிக் கொண்டே வலிகளை மறக்கும் தமிழினத்தில் எது சொன்னாலும் எப்படிச் சொன்னாலும் அது இயல்பாகவே தெரியும். கட்சி ஓட்டுகளைத் தாண்டி நமது தமிழ்நாடு/இந்தியா வெளியே வர இன்னும் பல வருடங்கள் ஆகும். அதுவரைக்கும் நாம் எது சொல்லியும் எந்த மாற்றமும் வந்துவிடப் போவதும் இல்லை.
ReplyDeleteஅன்புள்ள ஜோதிஜி,
உங்கள் கட்டுரயை படிக்க படிக்க வருத்தம் மற்றும் இந்த நிலையை மாற்ற வழிகள் என்ன என்று மனம் தேடுகிறது.
செந்தில்
மிகவும் அருமையாக இன்றைய மின்தட்டுப் பாட்டிற்கு உலகமயமாக்கி நம் அரசியல் தலைகளும் பேரு முதலாளிகளும் காரணம் என்பதை பொட்டில் அடிப்பது போல் விளக்கியுள்ளிர்கள் . கட்டாயம் உங்கள் முயற்சிக்கு [பலன் கிடைக்கும். நம்பிக்கை தான் நமக்கு ஆய்தம்
ReplyDeleteவைரமணி
பின்னுட்டம் இட எவ்வளவோ முர்சித்தும் முடியாததால்
இம்மின்னஞ்சல்
நன்றி தொடரட்டும் உங்கள் பணி