தொடக்கம்
முதல் பகுதி
இரண்டாவது பகுதி
மின்சாரம் -- இனி பயன்படுத்த அல்ல. புரிந்துகொள்ள மட்டும்
இந்தியாவிற்குள் 1991 ஆம் ஆண்டு உள்ளே வந்த தாரளமயமாக்கல் என்ற பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைக்குப் பிறகு உருவானது தான் 'தனியார் மின் உற்பத்தியாளர்' (INDEPENDENT POWER PRODUCER - IPP ) என்ற புதிய பூபாள ராகம் உருவானது.
ராகத்தை உருவாக்கியவர்கள் உருவாக்கியதோடு விட்டு விட்டார்கள். உருவான மாற்றத்தில் இப்போது மக்கள் தாங்கள் பயன்படுத்த முடியாத மின்சாரம் குறித்து வழிந்தோடும் வியர்வையை துடைக்க முடியாமல் கசகசப்பில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். .
இந்தியாவில் மாநில மற்றும் மத்திய அரசாங்கம் என்று இரண்டு இருப்பதைப் போல இந்த இரண்டு அரசாங்கத்திற்கு அப்பாற்பட்டு பல அரசாங்கங்கள் வெகுஜன மக்களுக்கு தெரியாமல் இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றது.
அவை அமைப்பு என்ற பெயரில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இவைகள் மக்களுடன் நேரிடையான தொடர்பில் இருப்பவை அல்ல. ஆனால் மக்களின் 'நல்வாழ்வுக்கு' என்று உருவாக்கப்பட்டவை. இப்போது மின்சாரம் என்ற துறையைப்பற்றி நாம் பார்த்துக் கொண்டு வருவதால் இதில் உள்ள ஒரு அமைப்பைப் பற்றி நாம் பேசியாக வேண்டும்.
இந்தியாவில் மக்களுக்குத் தேவையான பல அவசியமான பொருட்கள் பொதுப்பட்டியலில் இருக்கும். மின்சாரம், குடிநீர், பலவிதமான தானிய வகைகள், உணவு சம்மந்தப்பட்டது என்று பட்டியலின் நீளம் அதிகம்.
கீழே உள்ள சுட்டிகளின் மூலம் இது சம்மந்தப்ட்ட தேடல் இருப்பவர்கள் படித்துக் கொள்ளலாம்.
இது போன்ற விசயங்களில் அரசாங்கம் கொள்கை ரீதியாக அத்தனை சீக்கிரம் முடிவு எடுத்து விட முடியாது. ஆனால் இந்தியாவை ஆண்டு கொண்டுருப்பது நம்மைப் பொறுத்தவரையிலும் பிரதமர். ஆனால் நம்முடைய பிரதமரை ஆட் வைத்துக் கொண்டுருப்பது பெரிய நிறுவனங்களின் லாபி அமைப்புகள். இது இந்தியாவில் மட்டுமல்ல. உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டின் அரசாங்கத்தையும் பல்வேறு நிறுவனங்கள் தான் தாங்கள் நினைத்தபடி ஆட வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு சாதகமான ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும். ஆனால் மக்களிடம் எதிர்ப்பு வந்தால் என்ன ஆகும்?
ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு சாதகமான ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும். ஆனால் மக்களிடம் எதிர்ப்பு வந்தால் என்ன ஆகும்?
இதன் காரணமாகத்தான் தனிப்பட்ட அமைப்புகள் உருவாக்கப்படுகின்றது. மாநில அரசாங்கம் என்பது ஒரு அமைப்பு. அது தன்னிச்சையாக செயல்படும் பட்சத்தில் மத்திய அரசாங்கத்திற்கு மதிப்பு இருக்காது. லாகனை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியத்தில் தான் நம்முடைய மத்திய அரசாங்கம் இருக்கிறது.
மத்தியில் கூட்டாட்சி. மாநிலத்தில் சுயாட்சி போன்ற பழைய கோஷங்களை இப்போது நம் நினைவில் கொண்டு வரவேண்டும்.
மத்தியில் கூட்டாட்சி. மாநிலத்தில் சுயாட்சி போன்ற பழைய கோஷங்களை இப்போது நம் நினைவில் கொண்டு வரவேண்டும்.
அதற்கு இந்தியா என்பது பல இனங்கள், பல மொழிகள், பல நம்பிக்கைகள் சேர்ந்த 'வேற்றுமையில் ஒற்றுமை' என்பது போன்ற கருத்தாழமுள்ள பல பாடங்களை பள்ளிக்கூடங்களில் படித்து வந்துருப்போம். நாமும் அதையே நம்புவோம். உண்மைகள் அது எப்போதும் போல அது தனியாகவே ஒரு ஓரமாக இருந்து விட்டு போகட்டும். .
இன்னும் சற்று புரியும்படி சொல்லப்போனால் தற்போது ஏறிக் கொண்டுருக்கும் பெட்ரோல் விலைக்கு 'நாங்கள் காரணம் அல்ல. அது சுயாட்சி பெற்ற எண்ணெய் நிறுவன செயல்பாடுகளின் அடிப்படையில் அமையப் பெற்றது. அவர்களின் அதிகாரத்தில் நாங்கள் நுழைய முடியாது' என் நிதி அமைச்சர்கள் சொல்வதை படித்து இருப்போம் தானே?
அதைப் போலவே மின்சாரத்திற்கென்று ஒரு அமைப்பு இருக்கின்றது.
அதற்குப் பெயர் 'மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.'
இதற்கு மற்றொரு பெயர் நிழல் அரசு. இதை கட்டுப்படுத்த மாநில அரசாங்கத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை. இது அமெரிக்காவின் நிர்வாக அமைப்பிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது., எவருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.
இவர்களின் தாக்கம் ஒவ்வொரு துறையிலும் எதிரொலிக்கும். இவர்கள் கட்டளையை நிறைவேற்றியே ஆக வேண்டும். ஆனால் பின்விளைவுகளுக்கு இந்த அமைப்பு பொறுப்பேற்காது. அத்துடன் பகுதி நீதி பரிபாலன (QUASI JUDICIARY) . அதிகாரமும் இவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
ஏறக்குறைய நம்முடைய ஜனநாயக நாட்டில் இதுவொரு சர்வாதிகார அமைப்பாகும். ஆனால் மக்களை விட தனியார் காட்டில் தான் மழை பெய்து கொண்டிருக்கிறது என்பதை வைத்து நீங்களே யூகித்துக் கொள்ள வேண்டும்.
மாநில அரசாங்கத்திற்கு அப்பாற்பட்டு செயல்படும் அமைப்பு.

இதில் மற்றொரு வேடிக்கை என்னவென்றால் மின்சாரம் என்பது பொது பட்டியலில் உள்ளது. மத்திய மாநில அரசாங்கம் இரண்டும் சேர்ந்து முடிவு செய்யப்பட வேண்டிய ஒரு துறையாகும்.
ஆனால் தாரளமயமாக்கல் கொள்கை இந்தியாவின் உள்ள வந்த பிறகு மத்திய அரசாங்கத்தால் மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உருவாக்கிய பிறகு மாநில அரசாங்கம் எதுவும் இதில் தலையிட முடியாத நிலை உருவானது.
ஆனால் தாரளமயமாக்கல் கொள்கை இந்தியாவின் உள்ள வந்த பிறகு மத்திய அரசாங்கத்தால் மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உருவாக்கிய பிறகு மாநில அரசாங்கம் எதுவும் இதில் தலையிட முடியாத நிலை உருவானது.
இந்த ஒழுங்கு முறை ஆணையங்களே புதிய மின் உற்பத்தி நிலையங்களுக்கு உரிமம் வழங்குவது, மற்றும் மின் கட்டணத்தைத் தீர்மானிப்பது ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.
மாநில மின் வாரியங்கள் தம்மை மறு சீரமைத்துக் கொள்ள வேண்டும். இதன்படி சில மாநிலங்களின் மின் வாரியங்கள் மின் உற்பத்தி, மின் கடத்தல் மற்றும் திறந்த வழி பயன்பாடு என்பதை கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் மின் வழங்கலில் மறு சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாக வேண்டும். பாதுகாப்பான சிக்கனமான மின் வலையங்களை தேசிய மற்றும் பிராந்திய அளவில் உருவாக்கப்பட வேண்டும்.

இதனை சாத்தியப்படுத்தவே பாராளுமன்றம் 2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தினை இயற்றியது.
இதுவே தனியார்களை ஊக்குவித்து உள்ளே கொண்டுவர ஏற்பாடுகளை செய்தது. தனியார்கள் உள்ளே வந்தால் மின் நிலையங்கள் சிறப்பாக பராமரிப்பு செய்யப்படும், மின்சாரம் வீணாகாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு விதமாக மின்சார தேவை இருப்பதால் தெளிவான மின் வணிக சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்தும் என்று நம்பியது.

திட்டம் எல்லாம் சரி தான்.
ஆனால் நடைமுறையில் நடந்தது என்ன தெரியுமா?
ஆனால் நடைமுறையில் நடந்தது என்ன தெரியுமா?
1991 ஆம் ஆண்டு தாராளமயமாக்கல் கொள்கை உள்ளே வந்ததும் முதல் முறையாக 1994 செப்டம்பரில் ஓரிசா மாநில அரசும் உலக வங்கியும் கையெழுத்திட்டன. அப்போது ஒரிசா மாநில மின் வாரியம் இந்திய மாநிலங்களிலேயே அந்த அளவுக்கு சீக்காளியாக இருந்தது.
எப்போதும் போல புத்திசாலி நிபுணர்கள் குழு என்று ஒன்று தனியாக அமைக்கப்பட்டது. இதற்காக இங்கிலாந்தில் இருந்து பொது நிர்வாகம் மற்றும் சட்ட நிர்வாக ஆலோசகர்களும், அமெரிக்காவில் இருந்து பொருளாதார நிர்வாக ஆலோசகர்களும், கனடாவில் உள்ள பொறியியல் நிர்வாக ஆலோசகர்களும் இறக்குமதி செய்யப்பட்டார்கள்.
இதற்காக சுமார் 300 கோடி ரூபாய் (6.3 கோடி அமெரிக்க டாலர்கள்) செலவானது.
இதற்காக சுமார் 300 கோடி ரூபாய் (6.3 கோடி அமெரிக்க டாலர்கள்) செலவானது.
இந்த செலவுக்கான நிதியை உலக வங்கி போன்ற பல்வேறு சர்வதேச நிதி நிறுவனங்கள் ஒரிசா மின் வாரியத்திற்குக் கடனாக அளித்தன.
1995 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரிசா மாநிலத்தின் மின் கடத்தல் நிறுவனமான GRID CORPORATION OF ORISSA - GRIDCO) க்கு மறுசீரமைப்புக்காக கொடுக்கப்பட்ட சுமார் 1700 கோடி ரூபாய்க்கான ( 35 கோடி அமெரிக்க டாலர்கள்) கடனானது ஒரிசா மின் வாரியத்தை கடுமையான கடன் சுமையில் தள்ளியது.
கடைசியாக என்ன நடந்தது? அது தான் இங்கே முக்கியம்.
அப்போது இருந்த உலக வங்கித் தலைவர் ( former world bank president James wolfensohn ) சொன்ன வாசகம்.
"ஒரிசா அனுபவத்தை வெற்றிகரமானது என்று கூறிவிட முடியாது. இதன் மூலம் பல புதிய அனுபவ பாடங்களை நாங்கள் கற்றுக் கொண்டோம்" என்றார்.
கிராமத்தில் வழக்கத்தில் உள்ள ஒரு பழமொழி "ஊரான் விட்டு நெய்யே.. என் பொண்டாட்டி கையே" போன்றவை உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.
கிராமத்தில் வழக்கத்தில் உள்ள ஒரு பழமொழி "ஊரான் விட்டு நெய்யே.. என் பொண்டாட்டி கையே" போன்றவை உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.
ஒரிசா மக்களின் பொதுப்பணத்தை எடுத்து கற்றுக் கொண்டவர்கள் தான் இந்த இறக்குமதி செய்யப்படும் நிபுணர்கள்.
மினவாரிங்களின் கடன் சுமை என்பது அதில் உள்ள நிர்வாக சீர்கேடு என்பது ஒரு புறம் இருந்தாலும் முழுக்க முழுக்க அது தனிப்பட்ட நபர்களின் லாபங்களுக்காகவே அமைப்புகள் மூலம் ஒவ்வொரு கொள்கையும் உருவாக்கப்படுகின்றது. அதையே சரி என்று சொல்லவும், அதைத்தான் கடைபிடித்தே ஆக வேண்டும் என்ற கொள்கையும் உருவாக்கப்பட்டுக் கொண்டுருக்கிறது என்பது தான் உண்மை.
காரணம் நாம் அனுபவித்துக் கொண்டு இருக்கும் ஜனநாயகத்தில் உள்ள தவறுகள் மெதுவாக காலப்போக்கில் நீக்கப்படும். அதுவரைக்கும் நாம் அமைதியாக வாழ பழகிக் கொள்ள வேண்டும்.
காரணம் நாம் அனுபவித்துக் கொண்டு இருக்கும் ஜனநாயகத்தில் உள்ள தவறுகள் மெதுவாக காலப்போக்கில் நீக்கப்படும். அதுவரைக்கும் நாம் அமைதியாக வாழ பழகிக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்தால் ஷாக் அடிக்கும்...................
சுட்டிகள்
புதிதாக பல தகவல்களை அளித்தமைக்கு நன்றி...
ReplyDeleteசேவை தொடரட்டும்...
இன்னும் ஷாக் அடிப்பதற்கான காரணங்கள் இருக்கிற மாதிரிதான் தெரிகிறது.ஒருவர் கடன் கொடுத்தால் கால தவணைக்குள்ளே கடன் வட்டியோடு திரும்ப வருவதைதான் கொடுத்தவர் விரும்புவார்.உலக வங்கி விசயமே வேற.உலக வங்கி கடன் பற்றி இன்னும் கொஞ்சம் ஆராய்ந்து பதிவு போடுங்கள்.நன்றி.
ReplyDeletehttp://www.valaiyugam.com/2012/02/blog-post_27.html
Deleteஷாக் அடிச்சுக்கிட்டே இருக்கே!!!!
ReplyDeleteஇனியுமா ஷாக் அடிக்கணும்.....!!
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
"நாம் அனுபவித்துக் கொண்டு இருக்கும் ஜனநாயகத்தில் உள்ள தவறுகள் மெதுவாக காலப்போக்கில் நீக்கப்படும்."
ReplyDeleteதவறுகள் நீக்கப்பட்ட ஜனநாயகம் சர்வாதிகாரமாகவோ அல்லது காலணியமாகவோதான் இருக்கும்போல் தெரிகிறதே.
"அதுவரைக்கும் நாம் அமைதியாக வாழ பழகிக் கொள்ள வேண்டும்."
அதன்பின் நம்மால் வாழமுடியாமலும் போகலாம்.
very true
Deleteஅருமை
ReplyDeleteji .. itahum paarunga
ReplyDeletehttp://www.valaiyugam.com/2012/02/blog-post_27.html
விளக்கங்களுக்கு நன்றி... தொடர்கிறேன்...
ReplyDelete