ஒரு
மதத்தில் இருந்து மற்றொரு மதத்திற்கு மாறுதல் என்பது எனக்கு ஆச்சரியமாக
தெரியவில்லை. அது அவரவர் மகிழ்ச்சி அல்லது விருப்பம் என்பதாக எடுத்துக் கொள்ள
முடிகின்றது. ஆனால் வேறொரு மதத்திற்கு மாற்றும்
போது என்னவெல்லாம் சொல்லி மாற்றுகின்றார்கள் என்பது தான் கொடுமையாக கொடூரமாக
தெரிகின்றது.
தீவிரவாதத்திற்கு மூளைச்சலவை செய்து உருவாக்குகிறார்கள் என்பதைப்
போலத் தான் தற்போது தமிழ்நாட்டிலும் நடந்து கொண்டுருக்கின்றது. இங்கே தற்போது நடந்து
கொண்டுருக்கும் மதமாற்றங்கள் ஒரு முடிவில்லா குழப்பத்திற்கே கொண்டு
சென்று விடுமோ? என்று தோன்றுகின்றது. இன்று அதிக அளவில் கிறிஸ்துவ மதத்திற்கு
மாற்றிக் கொண்டுருக்கிறார்கள். கடைசி புகலிடம் என்பதாக மக்களும் நம்புகிறார்கள்.
ஒவ்வொரு
நகர்புறத்திலும் நடந்து கொண்டுருந்த மதமாற்ற நிகழ்ச்சிகள் இன்று புறநகர்
பகுதிகளுக்கு சென்றுவிட்டது. காரணம்
உருவாகும் பிரச்சனைகள் அதிக அளவில் இருப்பதால் ஆட்சியாளர்களும் இந்த கூத்துக்களை
கண்டு கொள்ள விரும்புவதில்லை. மதத்தை தொட்டால்
மட்டுமல்ல பேசினாலே ஷாக் அடிக்கும் விசயமல்லவா? அதற்கு மேலும் கேட்டாலும் இருக்கவே
இருக்கு தனிநபர் சுதந்திரம் என்று வாயை அடைத்து விடுவார்கள்.
ஆனால் மதம் மாறும்
பெரும்பான்மையோர் அததனை பேர்களும் பொருளாதார ரீதியில் விளிம்புநிலை மனிதர்களாகவே
இருக்கிறார்கள். இவர்களுக்கு
கொடுக்கப்படும் வாக்குறுதிகள், வழங்கப்படும் உதவிகள் தான் இந்த மதமாற்றத்தை விரைவு
படுத்துகின்றது. தங்களின் அத்தனை பிரச்சனைகளும் கர்த்தர் காத்தருள்வார் என்று
செல்பவர்களின் பிரச்சனைகள் தீர்ந்து விடுகின்றதா?
இந்து
மதத்தில் இருக்கும் சாதீயத்தால் நாங்கள் மதம் மாறுகின்றோம் என்று கடநத இரண்டு
நூற்றாண்டுகளாக இஸ்லாம், கிறிஸ்துவம் வளர்ந்தது.
ஒரு ஊரே மாறும் போது அதன் தாக்கம் என்பது வேறு. ஒரு தனிப்பட்ட மனிதர்கள் அதுவும் வாழ்வில் நல்ல
நிலையில் இருப்பவர்கள் மாறும் போது உருவாகும் பிரச்சனைகள் என்பது வேறு. சுற்றிலும் உள்ள உறவுகளால்
தனிமைப்படுத்தப்பட்டு, எதிர்ப்புகளை மீறி காதலித்து கரை சேர முடியாதவர்களைப் போல
பலரின் வாழ்க்கையும் அல்லாடிப் போய்விடுகின்றது.
திருப்பூர்,
கோவை, மாவட்டங்க்ளில் கடந்த நாலைந்து வருடங்களாக இருந்த இது போன்ற நிகழ்வுகள்
இப்போது அதிகம் இல்லை. காரணம்
மதமாற்றிகளின் முக்கிய குறிக்கோளான பொருளாதாரம் சார்ந்த பங்களிப்புகள் இங்கே அந்த
அளவுக்கு செல்லுபடியாவதில்லை.
கிடைத்த வரை
லாபம் என்பதாக மாற்றியவர்களை வைத்துக் கொண்டு கூட்டத்தினரை சேர்த்துக்
கொண்டுருக்கிறார்கள். சேர்ந்தவர்களிடம்
வசூலிக்கும் தொகையை வைத்துக் கொண்டு இப்போது வழிபாட்டு தலங்களை உருவாக்குவதில்
கவனம் செலுத்துகிறார்கள். வெளிநாட்டில்
இருந்து வரும் நிதி ஒருபக்கம்.
வசூலிக்கும் நிதி மறுபக்கம். ஒரே
கல்லில் இரண்டு மாங்காய். இதற்கு மேலும்
வசூலிக்கும் பொறுப்பில் இருப்பவர்களுக்கு அந்த மதத்தில் கிடைக்கும் அங்கீகாரம்
என்பது கடைசியில் அரசியல் தரகராக மாறும் அளவுக்கு கொண்டு போய் சேர்க்கின்றது. அப்படிச் சென்றவர்கள் தான் இன்றைய மதமார்களும்,
குருமார்களும், சாமியார்களும்.
திருச்சி
சமயபுரம் டோல்கேட்டில் உள்ள தனிநபர்கள் தொடங்கிய ஒரு சிறிய ஜெபகூடம் இரண்டு
ஆண்டுகளில் மூன்று கோடி செலவு செய்து கட்டும் அளவுக்கு பிரம்மாண்ட அளவுக்கு
வளர்ந்துள்ளது. சுற்றியுள்ள பொட்டல்காடுகளை மிக குறைந்த அளவுக்கு வாங்கி, கிறிஸ்வ
மதத்திற்கு மாறுபவர்களுக்கு ஐந்து செண்ட் நிலம் இலவசம் என்ற கொள்கை இன்று அந்த
பகுதி முழுவதையும் கிறிஸ்துவ பூமியாக மாற உதவியுள்ளது. வந்து குவிந்து கொண்டுருக்கும் வெளிநாட்டு
நிதியென்பது உள்ளூரில் வெறியை உருவாக்க காரணமாக
அமைந்து விடுகின்றது.
மொத்தத்தில் மனிதர்களை தன்னிலை மறக்கும் அளவுக்கு விபரீத
பாதையில் கொண்டு போய்க் கொண்டுருக்கின்றது. நாங்கள்
மதவெறியர்கள் அல்ல என்று நாடகமாடும் அரசியல்வியாதிகளின் உதவியோடு ஒவ்வொரு ஊரிலும்
இன்று மத ஓநாய்கள் வளர்ந்து கொண்டுருக்கின்றது.
உள்
மன ஆதங்கம், ஆதரவற்ற நிலைமை, எதிர்பார்த்த விசயங்கள் நடக்காத
போது
உண்டான வெறுமை என்று ஒவ்வொன்றாக ஆழ்மனதில் பதிந்து அன்றாட வாழ்க்கையில் சபலத்துடன்
வாழ்ந்து கொண்டுருப்பவர்கள் தான் அதிக அளவுக்கு மதம் மாறுகின்றார்கள். நம்பிய
சாமிகள் என்னை காக்க வரவில்லை.
நம்பிக்கையளித்து எங்களை வாழ்விக்க வந்தவர்கள் தான் எங்களுக்கு உறுதுணையாக
இருக்கிறார்கள் என்பதே இன்று மதம் மாறிக் கொண்டுருக்கும் அத்தனை பேர்களின்
வாக்குமூலமாக இருக்கிறது.
இதில் உண்மைகள் இருந்தாலும் மதம் மாறினாலும் அதில் உள்ள
உள்பிரிவுகளும், ஏற்றத்தாழ்வுகளும் இருப்பதை எவரும் பெரிதாக எடுத்துக்
கொள்வதில்லை. எங்களை
ஒதுக்கினார்கள் என்று சொல்லியவர்கள் அத்தனை பேர்களும் வேறொரு ரூபத்தில்
ஒதுக்கப்பட்டவர்களாகத்தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.
இந்து
மதத்தில் உள்ள சாதிகளை ஒழித்து விட்டால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்து விடும்
என்பவர்களிடம் மற்ற மதத்தில் உள்ள பிரிவுகளை எப்படி போக்குவது என்றால் பதில்
இருக்காது. காரணம் இங்கே மதம் ஒரு பெரிய பிரச்சனை இல்லை. தன்னிலை உணர விரும்பாத
கூட்டம் தான் இப்போது அதிகமாகிக் கொண்டுருக்கிறது. அரசியலுக்கும், மதத்திற்கும்
முக்கியத் தேவையே சுயநினைவு இருக்கக்கூடாது.
சுயமாக யோசித்தால் கேள்விகள் வரும்.
கேள்வி என்றால் அதற்கு பதில் ஒன்று தேவையாய் இருக்கும். பொய், உண்மை என்பதை எளிதாக கண்டு கொள்ள
முடியும்.
தொடக்கம் முதலே இதை நம்பு. இதை மட்டுமே நம்பு என்று சொல்லிக் கொடுத்து
விடுவதால் எவராலும் மாற்றுப் பாதையை யோசிக்கக்கூட முடிவதில்லை.
மதங்கள் காட்டிய பாதைகள் அப்படியே தான் இருக்கிறது.
இடையில் வந்தவர்கள் உருவாக்கிய கொள்கைகள் தான் இன்று உலகத்தை வழிநடத்திக் கொண்டுருக்கிறது.
மதங்கள்
இருக்கின்ற வரைக்கும் பிரச்சனைகளுக்கு பஞ்சம் இருக்காது.
இதுவொரு மாற்று ஏற்பாடு.
ஒன்றை மறக்க மற்றொன்று. அதை மறக்க இன்னோன்று. குறிப்பாக மைனாரிட்டி ஓட்டு வாங்க
நினைக்கும் ஒவ்வொரு அரசியல்வியாதிகளுக்கும் சந்தோஷமாகவே இருக்கும். மதத்திற்கு ஒரு தலைவன். அதில் உள்ள உட்பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும்
ஒவ்வொரு விதமான தலைவர்கள். இறுதியாக
மோதவிட்டு அழகு பார்க்கும் போது தேர்தல் காலம் நெருங்கி விட்டது என்று
அர்த்தம். இன்று இந்தியா முழுக்க இந்த மத
கலவரத்தின் தொடக்கங்கள் அங்கங்கே தோன்றிக் கொண்டேயிருக்கிறது. பாதிக்கப்படுவது தனி நபர்கள் மட்டுமே.
உறவுகளை இழந்து, தனது அடையாளங்களை மறந்து, தன்
மொழியை வெறுத்து இறுதியில் எது தனது பாதை என்பதை உணராமல் யாருடைய ஆதாயத்திற்காக
நாம் இறந்தோம் என்பதை அறியாமலே இறந்து போனாலும் இந்த மதம் உலகில் கடைசி மனிதன்
இருக்கும் வரைக்கும் அழியப் போவதில்லை.
மாவட்ட
ஆட்சியாளர் பொறுப்பில் இருந்தவர் கூட இது போன்ற கூட்டத்திற்கு ஊர் ஊராக செல்லத்
துவங்கும் போது கற்ற கல்விக்கும் மனிதனின் உணர்ச்சிக்கும் சம்மந்தம் இல்லை என்று
தான் நினைக்கத் தோன்றுகின்றது.
மனிதர்களின்
வக்கிரமான உணர்ச்சிகளை மட்டும் தூண்டுவதற்கு இங்கே சிலர் இருக்கிறார்கள். ஆனால் தூண்டில் புழுவாகவே பலரும் மாறிக்
கொண்டுருக்கிறார்கள். ஓட்டுக்காக உங்கள் உரிமைகளைப் பற்றி பேசிக் கொண்டு
வருபவர்களை நன்றாக உற்று கவனித்துப் பாருங்கள். அவர்களின் தனிப்பட்ட சொந்த வாழ்க்கையில்
அவர்களின் குடும்பங்கள் அனுபவிக்கும் அத்தனை வசதிகளும் உங்களின் சுய உரிமைகளை
இழந்ததானால் வந்தது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
அருமையான கட்டரை. உங்கள் ஆதங்கத்தை சரியாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் (அடுத்த 50 ஆண்டுகளில்) கிறிஸ்தவர்கள் சுமார் 25 சதவீதம் என்ற நிலையை அடைந்து விடும்.
ReplyDeleteஎன்னைப் பொருத்த வரையில் நான் பிறக்கும் போது என் இரத்த வகை என்னவோ அதுவே நான் இறக்கும் போதும் இருக்கும் இது மாறாதது மட்டுமல்ல மாற்றவும் முடியாதது. அதுமட்டுமல்ல என் தாயையும் என் தந்தையையும் மாற்றவும் முடியாதல்லவா, இது போலத்தான் என் மதமும் என்பதே என் கொள்கை. என் கொள்கையை பின்பற்றுபவர்கள் கண்டிப்பாக மதம் மாற மாட்டார்கள்.
நல்ல கட்டுரை
ReplyDeleteமதமாற்றம் சில மேஜிக்,சித்து வேலைகளிலும் நடக்கின்றது,நானே சென்று பார்த்து வயிறு வலிக்க சிரித்தேன்..!என்னை துரத்தி விட்டார்கள்..!ஹஹா!
ஆமாம் குரான் வாங்கினீர்களே படிச்சிட்டிங்களா..? இது வரைக்கும் நீங்க பெயர் மாற்றவில்லை அதுவரைக்கும் மகிழ்ச்சி!!!!
:)
மதம்மாற்ற செய்ய மொள்ளமாரித்தனம்.
ReplyDeleteஎன் அத்தை அவர் கணவர் இறந்த சோகத்தில் இருந்த போது அவரின் பக்கத்து வீட்டுக்காரர்களினால் மதம் மாற்றம் அடைந்தார்கள்.அவரின் மகனும் மதம் மாறி விட்டான். மூளை சலவை.
ReplyDeleteகாலில் செறுப்பு போட்டு வரக்கூடாது, கோவிலுக்குள் வரக்கூடாது, தேர் இழுக்கூடாது, பொது கிணற்றில் குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது, இறந்தவரில் சடலத்தை வேறுபக்கம் எடுத்துச் செல்லவேண்டும் என்றெல்லாம் துன்பப்பட்ட, சொந்த மக்களாலேயே துன்புறுத்தப்பட்ட மக்களுக்கு முழு சுதந்திரம் அளிக்க வந்தவர்கள்தான் இவர்கள்.
ReplyDeleteதவறு யார் மீது என்று சுயபரிசோதனை செய்துவிட்டு அதை களைந்துவிட்டுத்தான் அவர்களை நோக்கி குற்றம்சாட்ட முடியும்.
ஜோதிஜி,
ReplyDeleteநீங்கள் இந்துத்துவா ஆகிவிட்டீர்கள் எனது கடும் கண்டனங்கள்,
இப்படிக்கு ஒரு நடுநிலை வியாதி வவ்வால்.
இப்படிலாம் பேசினால் தான் நானும் பிராபல்யப்பதிவர் ஆக முடியும், இங்கே நாத்திகம் என்பது இந்த்துவா வை சாடுவது ,இஸ்லாம், கிருத்துவ மூடப்பழக்கங்களை ஆதரிப்பது என ஆகிப்போசு ,நிறைய பேரு இதுக்குன்னே பதிவில கிளம்பி இருக்காங்க :-))
---------
//என்று நாடகமாடும் அரசியல்வியாதிகளின் உதவியோடு ஒவ்வொரு ஊரிலும் இன்று மத ஓநாய்கள் வளர்ந்து கொண்டுருக்கின்றது.//
பதிவிலும் அப்படியான அரசியல்வியாதிகள் ஓநாய்களை வளர்த்து வருகின்றன :-))
--------------
மதம் மாறுவது அவரவர் விருப்பம் ஆனால் மாறிய பிறகு சமத்துவம் ,சகோதரத்துவம் கிடைக்குதா? அதான் கேள்வியே.
-------
//மாவட்ட ஆட்சியாளர் பொறுப்பில் இருந்தவர் கூட இது போன்ற கூட்டத்திற்கு ஊர் ஊராக செல்லத் துவங்கும் போது கற்ற கல்விக்கும் மனிதனின் உணர்ச்சிக்கும் சம்மந்தம் இல்லை என்று தான் நினைக்கத் தோன்றுகின்றது.//
என் நண்பர் சங்கரும் அவர் மனைவி உமாவும் ஊருல இருந்து வராங்கலாம் போய் அழைத்து வரணும் வர்ரட்டா :-))
nalla pathivu
ReplyDelete//மதங்கள் காட்டிய பாதைகள் அப்படியே தான் இருக்கிறது. இடையில் வந்தவர்கள் உருவாக்கிய கொள்கைகள் தான் இன்று உலகத்தை வழிநடத்திக் கொண்டுருக்கிறது.//
ReplyDelete//மதங்கள் இருக்கின்ற வரைக்கும்
பிரச்சனைகளுக்கு பஞ்சம் இருக்காது//
I THINK NOT TROUBLE IN RELEGIOUS.
எந்த மதம் மாறினாலும், மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும்... தனி மனித ஒழுக்கம் வளர வேண்டும்...
ReplyDeleteவணக்கம் சகோ,
ReplyDeleteநல்ல பதிவு. மத மாற்றம் என்பது மேலோட்டமாக பார்த்தால் அவர்களுக்கு பிடித்த மதத்திற்கு மாறுகிறார் என்பது போல் தோன்றும்.ஆனால் எப்படி ஒரு மதத்தில் பிறந்த ஒருவருக்கு இன்னொரு மதம் பிடிக்கிறது,அதுவும் குறைந்த காலத்தில் என்பதே நம் கேள்வி.
ஒரு மதத்தில் பிறந்து வளரும் பெரும்பானமையோர் அது ஏதோ கடமைக்கு ,மத சடங்கு சம்பிரதாயங்களை செய்து விட்டு வாழ்க்கை போராட்டத்தில் ஓடிக் கொண்டே இருப்பவர்கள்.
திடீர் என்று இன்னொரு மதம் பிடிக்கும் எனில் காரணம் சமூக சூழல்,பொருளாதார காரணங்கள் மட்டுமே.
இதில் கிறித்தவ மதமே மத மாற்றத்தில் முன்னிலை வகிக்கிறது. கிறித்தவம் செல்லும் நாடுகளில் அதன் பண்பாட்டை சுவீகாரம் செய்வதுதான்முழுமுதல் காரணம். இபோதுள்ள பல பெந்தோ கொஸ்த் சபைகளில் இந்து பெயரையே வைத்துக் கொள்ளலாம்.சட்டபூர்வமாக மதம் மாறாமல் இட ஒதுக்கீடு அனுபவிக்கலாம். இன்னும் பணம்,வேலை,வீடு போன்ற்வையும் கூட வழங்கப் படுவதால் " இழப்பதற்கு ஒன்றுமில்லை கிடைத்த வரை இலாபம்" என மதம் மாறுகின்றார்.ஆகவேதான் கிறித்தவத்திலும் சாதி வித்தியாசம்,ஒடுக்குமுறை இருந்தாலும் மத மாற்றம் நடக்கிறது.விளிம்பு நிலை மனிதர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வெளிநாடுகளில் வசூல் நடக்கிறது." இந்தியா இயேசுவுக்கே" என்பதே தாரக மந்திரம்.
***
விளிம்பு நிலை மனிதர்களுக்கு இந்த முறை என்றால்,மத்திய தர,உயர் வர்க்க மனிதர்களுக்கு வேறுவிதமாக வாழ்வின் முன்னேற்றம் ஜெபத்தின் மூலம் வரும், பிறர் உங்களுக்கு சூன்யம் வைத்ததை கடவுள் வெளிப்படுத்தினார்,உங்களின் நலன் பாதுகாக்கப் படுகிறது என மாதம் ஒரு தொகை வசூல் செய்கிறார்கள்.பல் பிரபங்கள் இந்த வலையில் விழுகிறார். எ.கா திரு உமாசங்கர் இ.ஆ.ப
இதனைத் தவிர்ப்பது எப்படி என்பது பெரும் சிக்கலே!!!
நன்றி
மிக அருமையான கட்டுரை.
ReplyDeleteதமிழ் பதிவுகளில் இப்படி ஒரு பதிவு முதல் முறையாக ஜோதி ஜி. இதை எழுதியதற்கு எனது பாராட்டுகள்..
ReplyDeleteபொருளாதார சூழ்நிலைதான் இன்று மத மாற்றத்திற்கு முக்கிய காரணம். விளிம்பு நிலை மக்கள் மட்டுமல்ல, வாழ்ந்து கெட்டவர்கள்(ஏவிஎம் ராஜன்,விஷாலி கண்ணதாசன்,ஜூனியர் பாலையா...))
//மதங்கள் இருக்கின்ற வரைக்கும் பிரச்சனைகளுக்கு பஞ்சம் இருக்காது. //
ReplyDelete//இந்து மதத்தில் இருக்கும் சாதீயத்தால் நாங்கள் மதம் மாறுகின்றோம் என்று கடநத இரண்டு நூற்றாண்டுகளாக இஸ்லாம், கிறிஸ்துவம் வளர்ந்தது. //
சிறப்பான வரிகள்.
// மாவட்ட ஆட்சியாளர் பொறுப்பில் இருந்தவர் கூட இது போன்ற கூட்டத்திற்கு ஊர் ஊராக செல்லத் துவங்கும் போது கற்ற கல்விக்கும் மனிதனின் உணர்ச்சிக்கும் சம்மந்தம் இல்லை என்று தான் நினைக்கத் தோன்றுகின்றது.
//
என்னுடன் படித்த சிலரைக் கண்டு நான் இப்படி நினைத்ததுண்டு.
உமாசங்கர் உளறியது போலவே என்னுடன் படித்த ஒரு புத்திசாலியான நணபன், ஐஐடியில் பிஎச்டி படித்தவன் தினகரன் குருப் போனில் நமக்காக ஜெபிப்பத்தால் பலிக்கும், சர்சில் வியாதிகள் தீரும் எனவெல்லாம் நம்பினான். படிப்பததற்கும் மேலாக மிகவும் கிரிட்டிகலாக யோசிப்பவன் இவற்றை ஆய்ந்தறியாது பேசுவது வியக்கவைத்தது. பகுத்தறிவு மற்றும் மதநம்பிக்கை இவற்றையின் மூளையின் வேறுவேறு டிபார்ட்மென்டுகள் கவனிக்கிறதே என்னவோ!
ReplyDeleteகிருத்தவ மதபிரசங்கிகள் காவியுடையெல்லாம் போட்டு சீன் காட்டினாலும் முன்பெல்லாம் பள்ளி மருத்துவமனை என நல்ல விடயங்களிலும் ஈடுபட்டுவந்தனர். இந்தியாவில் கல்வி பரவ இவர்களும் முக்கிய காரணமாக இருந்தார்கள். இப்போதெல்லாம் தனிப்பட்ட நபர்களுக்கு பணம் கொடுப்பதோடு நிறுத்திவிடுகின்றனர்.
மேலும் புதிய மதம்மாறிகள் கடும்போக்காளர்களாக இருக்கிறார்கள். மற்ற மத்தினரை ஏதோ சாத்தானின் பிள்ளைகள் போல் பார்க்கிறவர்கள் அவர்கள். இன்னும் சிலர் குடும்பத்தில் யாராவது நோயுற்றால் ஆஸ்பத்தரிக்கு அழைத்து செல்லாமல் சர்சுக்கு போய் சீரியஸாகும் வரை ஜெபித்துவிட்டு ஒன்றும் நடக்காததால் பின்பு மருத்துவமனைக்கு போய் மருந்துவர்களை கடுப்பாக்குகிறார்களாம்!
**** ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்திற்கு மாறுதல் என்பது எனக்கு ஆச்சரியமாக தெரியவில்லை. அது அவரவர் மகிழ்ச்சி அல்லது விருப்பம் என்பதாக எடுத்துக் கொள்ள முடிகின்றது.***
ReplyDeleteஇப்படித்தான் எல்லாரும் சொல்லி ஆரம்பிக்கிறாங்க. அப்புறம் ஒரு "ஆனால்" வரும்!!:))))
***ஆனால் வேறொரு மதத்திற்கு மாற்றும் போது என்னவெல்லாம் சொல்லி மாற்றுகின்றார்கள் என்பது தான் கொடுமையாக கொடூரமாக தெரிகின்றது. ***
என்னைப் பொருத்தவரையில் மதம் என்பது அர்த்தமற்ற ஒன்று. கடவுளே இல்லை அப்புறம் என்ன மதமாவது மண்ணாங்கட்டியாவது?
ReplyDeleteஇஸ்லாமியரும், கிருத்தவர்களும் வெளிப்படையா தன் மதப்பற்றை காட்டுறாங்க.
இந்துக்களில்தான் பலவகை!!!
உயர்சாதி இந்துக்கள் மற்றும் பார்ப்பணர்கள் இந்து மதத்தை பத்தி ரொம்பவே கவலைப்படுறாங்க.
அப்புறம் நம்ம கடவுள் நம்பிக்கை இல்லை, நான் ஆண்மீகவாதி அது இதுனு இந்துக்கள்ல நெறையாப்பேரு சொல்லிக்கிட்டு இருக்காங்க. இவங்க பேசுறதெல்லாம் பொதுநலம், கடவுள் இல்லை என்பதுபோலவும் பேசுவாங்க.
"ஆனால்"
வெளீப்படையாக பதப்பற்றுடன் அலையும் இஸ்லாமியர்கள் மற்றும் கிருத்தவர்களை இவர்களால் "சகிச்சுக்க முடியாது". இவங்க ஆண்மீகம், கடவுள் நம்பிக்கையின்மை எல்லாமே வேடம். இதுக்கு வெளிப்படையா தன்மதம் பெருச்னு சொல்ற பார்ப்பனர்கள், இஸ்லாமியர், கிருத்தவர்கள் எவ்வளவோ மேல்!
எனக்கெல்லாம் 1 கோடி தந்து நீ இந்த மதத்துக்கு மாறுனா நான் உடனே மாறிடுவேன். பேப்பர்ல மட்டும்தான் நான் அந்த மதத்தை சேர்ந்தவன். மனதளவில் மதமோ, கடவுளோ எனக்கு அர்த்தமில்லாதது. இல்லாத கடவுளை அடைய, இந்த மதத்துக்கு நீ வந்தால் உனக்கு ஒரு கோடினு சொன்னால், நான் தாவிடுவேன். :) அப்படி யாராவது திருப்பூர் பக்கம் வந்தா சொல்லுங்க. நான் available!! :))
//இந்துக்களில்தான் பலவகை!!!
Deleteஉயர்சாதி இந்துக்கள் மற்றும் பார்ப்பணர்கள் இந்து மதத்தை பத்தி ரொம்பவே கவலைப்படுறாங்க.//
கிறிஸ்துவ மதத்திலும் மேல் சதி கிழ் சதி உண்டு, தனித்தனி கிறுத்துவ அலையங்கள் உண்டு. திருமணத்தின் பொது சதி பார்ப்பதுண்டு...
இஸ்லாமியர்களிலும் அதே தான், உயர் சாதி இஸ்லாமியர்கள் மதம் மாறிய தாழ்ந்த சதி இஸ்லாமியர்களை திட்டுவதை கேட்டிருக்கிறேன்...
http://www.youtube.com/watch?v=C7uNds7fmCE&list=PL787B271F3B9C450C
http://www.youtube.com/watch?v=dhKxNfQOSTU
Delete100% true true
ReplyDelete
ReplyDeleteஎல்.கே
நம்ம மேலே ஒரு முடிவோட தான் இருப்பீங்க போலிருக்கே.விசாலி பற்றி கொஞ்சம் தெரியும் ஆதலால் அவருக்கு கர்த்தராவது நல்ல படிப்பினைகள் தரட்டும்.
ஷங்கர்
அவங்களை நிறுத்தச் சொல். நாங்களும் நிறுத்துறோம்ங்ற மாதிரி இருக்கே. நீங்க சொல்றதும் சரிதான். ஆனா அங்கே போனாலும் இந்த பிரிவினைகள் நின்றபாடில்லையே. என்ன நீங்க சொன்ன மாதிரி இங்கே உள்ள அளவுக்கு வெளிப்படையாக தெரியல. அம்புட்டுத்தான்.
சார்வாகன்
இபோதுள்ள பல பெந்தோ கொஸ்த் சபைகளில் இந்து பெயரையே வைத்துக் கொள்ளலாம்.சட்டபூர்வமாக மதம் மாறாமல் இட ஒதுக்கீடு அனுபவிக்கலாம். இன்னும் பணம்,வேலை,வீடு போன்ற்வையும் கூட வழங்கப் படுவதால் " இழப்பதற்கு ஒன்றுமில்லை கிடைத்த வரை இலாபம்" என மதம் மாறுகின்றார்.
இது தான் உண்மையான நிலவரம். நன்றி சார்வாகன்.
குட்டிப்பிசாசு
பேரே வித்யாச இருக்கே. ரொம்ப பயமுறுத்துவீங்களோ?
…என்னுடன் படித்த சிலரைக் கண்டு நான் இப்படி நினைத்ததுண்டு.
படிக்கும் போது ஒரு நண்பன் மாணவர்கள் தங்கும் விடுதியில் சென்று இது போன்று ஜெபம் செய்கின்றேன் என்று சொல்லஅவனை படாதபாடு படுத்தி எடுத்தி விட்டார்கள். உங்கள் வரிகளைக் கண்டு எனக்கும் ஆட்டோகிராப் படம் போல உள்ளே ஓடுது.
முத்து.
அப்பட்டமாக சொல்லிவிட்டீங்க. பழமைவாதிகள் என்று முத்திரை குத்தினாலும் கூட மனதில் உள்ள கருத்தை எழுதியமைக்கு நன்றி.
சுரேஷ்
உங்க கருத்தை மாப்பு சுரேஷ் கூப்பிட்டு சொன்ன போது சிரித்து மாள முடியல. குரான் கைக்கு வரலை. அவங்கள கூட்டம் நடத்த விடாம மற்றொரு முஸ்லீம் அமைப்பு திருப்பூரை விட்டே விரட்டிவிட்டாங்க. டவுண்ஹால் முழுக்க அன்றைக்கு ஒரே பெரிய பஞ்சாயத்து. நமக்கு உமர் இருக்காரு. டவுட்னா டக்ன்னு ஒரு கால்.
Bibleunmaikal said...
படித்தேன் நண்பரே.
வெளீப்படையாக பதப்பற்றுடன் அலையும் இஸ்லாமியர்கள் மற்றும் கிருத்தவர்களை இவர்களால் "சகிச்சுக்க முடியாது". இவங்க ஆண்மீகம், கடவுள் நம்பிக்கையின்மை எல்லாமே வேடம். இதுக்கு வெளிப்படையா தன்மதம் பெருச்னு சொல்ற பார்ப்பனர்கள், இஸ்லாமியர், கிருத்தவர்கள் எவ்வளவோ மேல்!
ReplyDeleteவருண் என்றால் வெளிப்படையானவர் என்று சுரேஷ் சொன்னது சரிதான் போல. அந்நியன் போல வேடமிட்டு சம்பாரித்துக் கொண்டுருக்கும் பலரையும் நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கேன்.
வாங்க திருப்பூருக்கு. ஒரு கோடிக்கு கொஞ்சம் குறைவா இருக்காம். சேர்ந்ததும் சொல்லி அனுப்புறேன்.
நண்டு...... வாங்க. வருணுக்கு உங்க உதவி தேவையாம்.
எந்த மதம் மாறினாலும், மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும்... தனி மனித ஒழுக்கம் வளர வேண்டும்...
தனபாலன் இட்லிவடையில் உங்களுக்கு எழுதியிருந்தாரே படித்தீர்களா? தனி மனித ஒழுக்கமா? வடிவேலுக்கு ஜாமீன் வாங்க போன கதை தான்.
ரவி சேவியர்
நீங்க சொல்ல வருவது எனக்கு புரிகின்றது. மதங்களில் பிரச்சனையில்லை. மனிதர்களிடம் தான் பிரச்சனை. சரிதானே?
நீங்கள் இந்துத்துவா ஆகிவிட்டீர்கள் எனது கடும் கண்டனங்கள்,
ReplyDeleteநீங்க சொன்ன பிறகு தான் எனக்கு புரியுது வவ்வால்.
திமுக பற்றி எழுதினால் அதிமுக
அதிமுக பற்றி எழுதினால் திமுக
இந்துவைப் பற்றி எழுதினால் இந்துத்துவா
மைனாரிட்டிகளைப் பற்றி எழுதினால் அரசியல்வியாதி
மொத்தத்தில் உலகம் உருண்டை என்பது இது தானோ?
அருமையாகக் கூறினீர்கள். இதற்கு அரசியல் கட்சிக் குருடர்கள் என்று கூறலாமா?
Deleteநிறக் குறுடர்களுக்கு சில நிறங்கள் மட்டுமே தெரியும் அது போல.
வாங்க குணா..
ReplyDeleteஅமுதா நீங்க சொன்ன மாதிரி தமிழ்நாட்டில் ஒவ்வொரு இடத்திலும் ஓராயிரம் கதைகள் இருக்கிறது. இந்த கட்டுரையை வெளியிடும் நேரத்தில் கூட காதுக்கு சில தகவல்களை நண்பர்கள் அழைத்துச் சொன்னார்கள்.
முடிவே இல்லாத பய(ம்)ணம் இது.
மிக அருமையான கட்டுரை.
ReplyDeleteஎனது தளத்தில்
http://varikudhirai.blogspot.com/2012/08/they-planted-tea-on-hills.html
மலைகளைத் தகர்த்துப் பயிர் செய்த தமிழர்கள்....
ஜோதிஜி, நல்ல பதிவு. `முறையற்ற மதப்பிரச்சாரம்` என்று நானும் ஒரு பதிவு போட்டேன். கிட்ட்தட்ட எல்லா மதங்களிலும் குறை இருக்கிறது. ஆனால் வார்த்தை ஜாலங்களினால் இவர்கள் அதை மறைக்கிறார்கள்.
ReplyDeleteஅந்த காலக்கட்ட்த்தில் மக்களை நல்வழிப்படுத்த சில மனிதர்கள் தோன்றினார்கள். தங்களுக்கென்று ஒரு கொள்கையை வகுத்தார்கள். அப்போது ஆட்சியை பிடிப்பதோ கட்சி நடத்துவதோ சாத்தியமில்லாததால், இதுதான் ஒரே வழி.
இவர்கள் தங்களுக்கென்று ஒரு பிராண்டை உருவாக்க, இப்போது கருப்பு சிவப்பு அல்லது அதில் நடுவில் ஒரு கோடு என கொடி இருப்பதை போல், இந்த ஆன்மீகத் தலைவர்கள் தலைமுடியை வைத்துகொண்டு (சிலர் மழித்துகொண்டு) அதில் ஏகப்பட்ட டிசைன்களை (சேஷ்டைகள்) செய்தார்கள்.
இவர்கள் செய்ய முயற்சித்தது / சொன்னது அந்த காலக்கட்டத்தில் வரவேற்கப்படவேண்டிய சீர்த்திருத்தமாக இருந்திருக்கலாம். விஞ்சான வளர்ச்சி வந்தபிறகு, இன்று அவற்றில் சில நமக்கு அபத்தமாக தெரியும். இன்றைய தேவை அவற்றில் உள்ள குறைகளை களைவதுதான்.
இதில் கிறிஸ்துவம் முந்திகொண்டது. உலகை கொள்ளை அடித்த பணம் கிறிஸ்தவர்களின் வாழ்கைதரத்தையும் அறிவு வளர்ச்சியையும் விரைவு படுத்தியது. இது இயற்கையின் பரிணாம வளர்ச்சி. இன்று அவர்கள் பக்குவப்பட்டிருக்கிறார்கள் என்றால் அது கடந்த சில நூற்றாண்டுகளின் விஞ்சான மாற்றத்தினால் வந்தது. நிச்சயம் பைபிளால் வந்தது கிடையாது. ஒருவேளை பைபிளால் வந்திருந்தால் கறுப்பர் இனக்கொடுமை என்ற விஷயத்தையே நாம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம்.
இந்தியாவிலும் பல குறைகள் உண்டு. ஆனால் அதை விரைவாக களையும் அளவுக்கு நமக்கு வாய்ப்பும் இல்லை. பணமும் இல்லை.இது வரலாறு. எல்லோருக்கும் தெரியும். ஆனால் கீழ்மட்ட மக்களுக்கு யார் சொல்வது?
மதமாற்றத்தை இரண்டு காரணங்களுக்காக ஆதரிக்கலாம். ஒரு மதத்தை புரிந்து கொண்டு அதற்கு மாறுவது. அல்லது இருக்கும் மதத்தின் மீது உள்ள வெறுப்பால் மாறுவது.
பட்டதாரிகள் மாறினால், அதில் காரணம் எதுவாக இருந்தாலும், அது அவர்களின் விருப்பம் என விட்டுவிடலாம். மற்றவர்களை பொறுத்தவரையில் மதம் மாற அரசின் அனுமதி தேவை என்ற கட்டுப்பாடு தேவை.
ஜோதிஜி!சமுதாயத்தை உற்று நோக்குகிறீர்கள்.
ReplyDelete@வவ்வால்!ஆடு புல்லைத் தின்பதுமில்லாமல் நேரத்திற்கு தகுந்த மாதிரி கனைக்கவும் செய்கிறதே:)
ராச நடராசர்,
ReplyDeleteபுலி புல்லைத்தின்னாது :-))
ஆனால் ஆட்டின் மீது கரிசனம் காட்டுறாரே கசாப்புக்கடைக்காரர் :-))
அன்பின் திரு .ஜோதிஜி அவர்களே வணக்கம் , நானும் உங்கள் ஊரை சேர்ந்தவன்தான் . சில காலம் திருப்பூரிலும் வேலை செய்திருக்கிறேன் . இப்போ புலம் பெயர்ந்து சிங்கப்பூரில் . யெ மு சந்து என்றெல்லாம் எழுதுகிறீர்களே நீங்கள் புதுவயலா?.
ReplyDelete@வவ்வால்,
ReplyDelete//இப்படிலாம் பேசினால் தான் நானும் பிராபல்யப்பதிவர் ஆக முடியும், இங்கே நாத்திகம் என்பது இந்த்துவா வை சாடுவது ,இஸ்லாம், கிருத்துவ மூடப்பழக்கங்களை ஆதரிப்பது என ஆகிப்போசு ,நிறைய பேரு இதுக்குன்னே பதிவில கிளம்பி இருக்காங்க :-))//
நீங்க பெரிய தீர்க்கதரிசி! :)) எப்படி இதெல்லாம்! வரப்போகும் பின்னூட்டத்திற்கு முன்கூட்டியே பதிலைச் சொல்லிவிட்டீர்களே! பலே! பலே!
குட்டிப்பிசாசு,
ReplyDeleteஹி ...ஹி வருவாங்கன்னு கெவுளி கூவுச்சு அதான் :-))
இதை விட ஒரு தீர்க்க தரிசனமா இந்துத்வானு சொல்வாங்க என்று சொன்னேன் ,ஆனால் மார்க்கப்பந்துக்கள் காணோம்,வந்திருந்தா ஒரு 20 கிலோ அக்சார் செம் காவி பெயிண்ட் எடுத்து வந்து நல்லா அடிச்சிட்டு போயிருப்பாங்க :-))(அதுக்கு பேரு வாஸ்த்து பெயிண்டாம்)
தீர்க்கதரிசின்னா எதாவது மதத்தை கண்டுப்பிடிக்கணுமாம் ,சகோ.சார்வாகன் சொல்வார், இப்போ நான் எங்கே போய் மதம் கண்டுப்பிடிக்க ,பக்கத்தில பாலைவனமும் இல்லை ,குகையும் இல்லையே :-))
எதேனும் ஐடியா இருந்தால் கொடுக்கவும், சார்வாகனிடம் கொடுத்து அடைப்புக்குறிக்குள் போட்டு மார்க்க புத்தகம் தயாரித்துவிடலாம் :-))
வவ்வால்,
ReplyDelete//வந்திருந்தா ஒரு 20 கிலோ அக்சார் செம் காவி பெயிண்ட் எடுத்து வந்து நல்லா அடிச்சிட்டு போயிருப்பாங்க :-))//
ஏற்கனவே பெயிண்ட் அடிச்சாச்சு. நீங்க பார்க்கலயா? அய்யோ! அய்யோ!
//எதேனும் ஐடியா இருந்தால் கொடுக்கவும், சார்வாகனிடம் கொடுத்து அடைப்புக்குறிக்குள் போட்டு மார்க்க புத்தகம் தயாரித்துவிடலாம் :-))//
மதம் தொடங்க தீர்க்கதரிசனம் மட்டும் போதாது. இன்னும் சில தகுதிகள் தேவை. அது உங்களுக்கு சுத்தமாக இல்லை என நினைக்கிறேன். வேண்டுமென்றால், நம்ம மஞ்சதுண்டுக்கு தூதராக வாய்ப்பிருக்கு.
நண்பர்கள் இருவருக்கும்.....
ReplyDeleteஇத்துடன் உங்கள் விவாதத்தை முடித்துக் கொள்ளுங்க. அடுத்த பதிவிற்கு செல்வோம். உங்கள் இருவருக்கும் நன்றி.
சரண் துரை மின்அஞ்சல் சோதிக்கவும்.
சிவா உங்கள் நீண்ட விமர்சனத்திற்கு நன்றி. உங்கள் பதிவுகளில் ஆழ்ந்த அனுபவம் பற்றி பலமுறை யோசித்துள்ளேன். அதுவே விமர்சனத்திலும் தெரிகின்றது. நன்றி.
ஜோதிஜி நல்லப் பதிவு, மற்றவங்களுக்கு பிடிக்குமா, தன்னைப் பற்றி என்ன நினைப்பாங்க என்கிற எண்ணங்களைக் கடந்து இதை எழுதி இருக்கிங்க, பாராட்டுகள், பதிவுலகத்தில் இதெல்லாம் நமக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்பு.
ReplyDeleteகண்ணன்
ReplyDeleteநமக்கான அடையாளங்களை எந்த நிலையிலும் நாம் விட்டுக் கொடுக்கக்கூடாது. மற்றவர்கள் பார்வையில் எப்படி வேண்டுமானாலும் தெரியலாம். அது குறித்து கவலையில்லை. மதங்களை, கடவுளை, நம்பிக்கைகளை தாண்டி வெளியே வந்து விட்டேன். இரண்டு வருடமாகத் தான் வாழ்க்கை அமைதியாக போய்க் கொண்டுருக்கிறது. ஆனால் கேள்விப்படும் சம்பவங்கள் அத்தனையும் மேலே சொன்ன மாதிரி கொடூரமாக தெரிகின்றது.
ReplyDeleteநன்றி ஜோதிஜி.
மதங்கள் உருவானது - மனிதரை நல்வழிப்படுத்தவே.
ஆனால் மத மாற்றங்கள் நிகழ்வது -
சிலரின் அறியாமை காரணமாகவும்,
சிலரின் நியாயமில்லாத ஆசைகள் காரணமாகவும்,
சிலரின் சுயநலம் காரணமாகவும்,
சிலரின் பொருளீட்டும் தொழிலாக அது ஆகி விட்டதாலும்.
- சட்டம் போட்டு இதைத் தடுக்க முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை.
பொதுவாக -
சமூகத்தின் தாழ்நிலையில் இருப்பவர்களிடையே -
கல்வி மற்றும் பொருளாதார
முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாலும்,
மதம் குறித்த மக்களின் சிந்தனையை நேர்மையான
விதத்தில் விசாலப்படுத்துவதன் மூலமுமே -
மக்களை (ஏ)மாற்றத்திலிருந்து,
விடுவிக்க முடியும் -
என்பது என் கருத்து.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
நன்றிங்க.
Deleteஒரு பெரிய பைபிளை இலவசமாக கொடுத்துவிட்டு மதம் மாற்றியவர்கள் இருக்கிறார்கள்.
ReplyDelete400 ரூபா மதிப்புள்ளதை இலவசமா கொடுத்தாங்க (இயேசு)கோயில்ல,... என்று வெள்ளேந்திய சொல்லும் இவர்கள், இயேசுவை தாண்டி எதையுமே யோசிப்பதில்லை.. பார்க்கவே மன வேதனையாக உள்ளது. சாதியை தாண்டி நண்பர்கள் இருக்கிறார்கள், ஒரு மன நெருடலும் இல்லை.
அனால் கிருத்துவ நண்பர்களிடம் மட்டும் எப்போதும் ஒரு இடைவெளி வைத்துக் கொள்வதுண்டு .... பயமாக இருக்கிறது
நம்மை (இயேசு)கோயிலுக்கு அழைக்கும் அவர்கள் நமக்காக ஜெபிக்கும் அவர்களை இந்து கோவிலுக்கு ஒரு பண்டிகை இசை நிகழ்ச்சி திருமணம் என்று அழைத்துப் பாருங்களே... வரவே மாட்டார்கள்..
நமக்காக ஜெபிக்கும் அவர்களை இந்து கோவிலுக்கு ஒரு பண்டிகை இசை நிகழ்ச்சி திருமணம் என்று அழைத்துப் பாருங்களே... வரவே மாட்டார்கள்..
Deleteஉண்மையும்கூட.
//ஜோதிஜி திருப்பூர்September 4, 2012 at 8:36 AM
ReplyDeleteகண்ணன்
நமக்கான அடையாளங்களை எந்த நிலையிலும் நாம் விட்டுக் கொடுக்கக்கூடாது. மற்றவர்கள் பார்வையில் எப்படி வேண்டுமானாலும் தெரியலாம். அது குறித்து கவலையில்லை. மதங்களை, கடவுளை, நம்பிக்கைகளை தாண்டி வெளியே வந்து விட்டேன். இரண்டு வருடமாகத் தான் வாழ்க்கை அமைதியாக போய்க் கொண்டுருக்கிறது. ஆனால் கேள்விப்படும் சம்பவங்கள் அத்தனையும் மேலே சொன்ன மாதிரி கொடூரமாக தெரிகின்றது.//
இதுக்கு என்ன அர்த்தம் ஜோதிஜி?
...தாண்டி வெளியே வந்துவிட்டேன்...இரண்டு வருடமாகத் தான் வாழ்க்கை அமைதியாக... என்றால் நீங்கள் "ஏதோ" ஒன்றிலிருந்து பிடித்தோ பிடிக்காமலோ மாறிவிட்டீர்கள். நல்ல "ட்ரை க்ளீன்ங்க்" நடத்தறவர் உங்களை சந்தித்தால் நீங்களும் மூளைச் சலவை செய்யப்படலாம். பாத்து சூதானமா இருங்க!
நக்கலூ................
Deleteவாழ்க்கை முழுக்க அனுபவங்கள் தான். சிலசமயம் ஒன்றில் தீவிரமாக இயங்கி அது குறித்தே யோசித்து அதன் பின்னே சென்று திடீரென்று ஞானோதயம் பெறுவதும்.............. இங்கே பலருக்கும் நடந்து கொண்டேயிருப்பது தான்.
ஆனால் பலர் சாதி குறித்து மதம் சார்ந்து அந்த எல்லையைத்தாண்டி வாய்ப்பிருந்தும் வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டு இருக்கின்றேன்.
ட்ரை கிளினிங் என்பதும் உண்மை தான். மனசை அவவ்வோது சுத்தம் செய்துப் பாருங்கள். உங்களுக்குகே புதிய அனுபவங்கள் கிடைக்கும்.
இன்றைய சூழலுக்கு தேவையான, அவசியமான பதிவு.
ReplyDeleteமுக்கியமாய் இந்த பதிவின் இறுதி பாராவில் இருப்பதை உணர்ந்தாலே பல சமூக பிரச்சனைகள் தீர்ந்துவிடும் !
நன்றி
சாமானியன்