1830 ஆம் ஆண்டு
.
பாண்டிச்சேரி., பிரான்ஸ் நாட்டுக்கு
சொந்தமான பகுதியாக இருந்தது. அடிமைமுறை
ஒழிக்கப்பபடும் முன்பே பிரான்சு அரசு இந்தியர்களை தங்கள் நாடுகளுக்கு அழைத்துச் சென்று கொண்டு இருந்தது, ஒவ்வொரு வருடமும். பாண்டிச்சேரியிலிருந்து
ஏராளமானவர்கள் சென்று கொண்டேயிருந்தனர். பாண்டிச்சேரிக்கு அருகே இருந்த தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் இருந்தும் தரகர்கள்
மூலம் ஆள்திரட்டி அழைத்துச் சென்றனர். முதலில் பாண்டிச்சேரிக்கு அழைத்துச் சென்று அதன் பிறகு தாங்கள் விரும்பும் நாடுகளுக்கு அனுப்பிக்கொண்டிருந்தனர். பெரும்பாலும் முறையற்ற வழியில் தான் இது நடந்து கொண்டிருந்தது.
1839 ஆம் ஆண்டு இந்திய
அரசு பாண்டிச்சேரி வழியாக இந்தியர்கள் வெளியேறுவதை தடுக்க சட்டதிட்டங்கள் கொண்டு வந்த
போதிலும் நிறுத்த முடியவில்லை. வினாஸ் என்ற பிரஞ்சுக்காரன் முதன் முதலாக தென்
ஆற்காடு மாவட்டங்களின் உள்ள விவசாய கூலிகளை ஒன்று திரட்டி மொரிசீயஸ் நாட்டுக்கு
அனுப்பி வைக்க இந்திய அரசு ஈடுபட்ட தரகரையும் பிரஞ்சுகாரரையும் சட்டத்திற்கு
புறம்பான செயல் என்று சொல்லி சிறையில் தள்ளியது. பிரான்ஸ் நாட்டுக்கு அருகேயிருந்த பிரஞ்சுக் காலனியான ரீயூனியன்
தீவுக்கு சென்னை மாநிலத்தில் இருந்து தமிழர்கள் கொண்டு
செல்லப்பட்டனர்.
தொடக்கத்தில் நீக்ரோ அடிமைகள் பட்ட
கஷ்டஙகளைப் போல ரீயூனியன் தீவுக்குச் சென்ற படிப்பறிவற்ற தமிழர்கள் அவதிப்பட்டனர். ஆனால் 1861 ஆம் ஆண்டு பிரிட்டன் அரசாங்கம்
பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முறைப்படியாக தமிழர்கள் பிரான்ஸ
நாட்டின் ஆளுமையில் இருந்த ரீயூனியன், மார்டினிக், குவாடலுப் போன்ற நாடுகளுக்கு
செல்லத் துவங்கினர்.
ஆனால் பிரெஞ்சுகாரர்கள் விதிமுறைகளைப்
பற்றி அதிகமாக அலட்டிக் கொள்ளவில்லை. ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் தரகர்கள் மூலம் ஆள் திரட்டப்படும். மொத்தமாக ஒரு இடத்திற்கு அழைத்து வரப்படுவார்கள். கொண்டு வந்து சேர்த்த கூலியாட்களை மொத்தமாக ஒன்று
திரட்டி அவர்களைச் சுற்றி நான்கு புறமும் கயிற்றால் கட்டி விலங்குகளை மந்தை போல் தெருவில்
அழைத்துச் சென்று கப்பலில் ஏற்றினர்.
ரீயூனியன்
64 மைல்கள் நீளமும் இதில் பாதியளவு
அகலமுமாக நீள்வட்ட பரப்பில் உள்ள ஒரு தீவு.
ஆப்ரிக்கா கண்டத்தின் தென் கிழக்காக
மடகாஸ்கரிலிருந்து 640 கீமீ கிழக்கேயும், மொரீசியஸ்க்கு 104 கீமீ தெற்கேயும் உள்ள
தீவு. தான் ரீயூனியன்.
ஒரு எரிமலை வெடித்துச்
சிதறிய அமைப்பால் உருவானது இந்த தீவு. இத்தீவினை 1646 ஆம் ஆண்டு பிரெஞ்ச மாலுமிகள் கண்டுபிடித்து
பூர்பன் தீவு என் பெயரிட்டார். 1665 முதல் குடியேற்றங்களை தொடங்கிய பிரெஞ்சுகாரர்கள் ஆப்ரிக்க
நீக்ரோ அடிமைகளைக் கொண்டு வந்தனர். 1789
ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சிக்குப் பினனால் இத்தீவு ரீயூனியன் என்ற பெயர்
பெற்றது. 1810 இல் இதனை கைப்ப்ற்றிய பிரிட்டன் மீண்டும் 4 ஆண்டுகள் கழித்து
பிரான்ஸிடம் கொடுத்தது.
அன்று முதல்
இத்தீவு பிரான்சின் குடியேற்ற நாடாகவே விளங்குகிறது.
ரீயூனியனின் மைய்ப்பகுதி எரிமலை.
அதனைச் சுற்றியுள்ள கடற்கரையோரச் சமவெளியில்
தான் விவசாயம் செய்ய முடியும்.. செயின்ட் செடனிஸ் துறைமுகமே இத்தீவின் தலைநகர்.
அடிமை முறை ஒழிக்கப்பட்ட பின் உருவான கூலியாட்கள் தட்டுப்பாட்டினனைப் போக்குவதற்கு பாண்டிச்சேரியில் இருந்து இங்கே ஆட்கள் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டனர்.
1830 ஆம் ஆண்டு ஜோசப் அர்கண்டு என்ற
வணிகர் தமிழ்நாட்டில் இருந்து 130 கைவினைஞர்களை ரீயூனியர் தீவுக்கு கொண்டு போயிருந்தார். இங்குள்ள தட்ப
வெட்ப நிலைக்கு தமிழர்களே பொருத்தமாக இருந்தனர். ஆனால் இங்கு பண்ணையடிமை முறைகளை விட கேவலமாக இருக்க சென்ற தமிழர்களின் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இறந்து போயினர். 1882
முதல் இந்திய அரசு தமிழர்கள் ரீயூனியனுக்கு செல்வதை தடை போட்டது.
பிரெஞ்சு கயானா
தென் அமெக்கக் கண்டத்தின்
வடமேற்கில் பிரிட்டீஷ், டச்சு கயானாக்களக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. கேயேன்
என்றும் அழைக்கப்படும் இந்த குடியேற்ற நாட்டின் பெரும் பகுதி சதுப்புநிலமேயாகும்.
கடற்கரையோரமாக இருந்த பகுதிகள் மட்டும் விவசாயத் தொழில் நடைபெற்றது. தேவையான உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை
நிலவுயது. பிரேசில் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து
பெருங் குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டு இங்கே அனுப்பப்பட்டனர்.. இவ்வாறு வந்த 6000 பேரைப் பயன்படுத்தி பெரும்
பண்ணைகள் துவங்கப்ட்டன. இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்டவர்களுக்கு சரியான
வேலை இல்லாத காரணத்தால் ஆபத்து நிறைந்த தங்கச் சுரங்கங்களுக்கு
அனுப்பப்பட்டனர். சதுப்பு நில
பள்ளத்தாக்கில் முழங்கால் அளவு சேற்றில் நெடுந்தூரம் நடந்து சென்றே அச்சுரங்கங்களை
அடைய வேண்டும். நாள் முழுக்க சேற்று மண்ணை அள்ளி வந்து தங்கத்துகள்களை வடிகட்டிப் எடுப்பதே தமிழர்களின் முக்கிய பணியாகும்.
ஒப்பந்தக் கூலிகளாக கொண்டு செல்லப்பட்டவர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு
இல்லாத காரணத்தால் 1862 ஆம் ஆண்டு இந்திய அரசு இங்கே செல்வதையும் தடை செய்தது.
மத்திய அமெரிக்காவின் கரிபியன் கடலில்
அமைந்துள்ள மார்டினிக் ஒரு தீவாக இருந்தது. இதனருகில் குவாடலுப் தீவு உள்ளது.
1635
ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரர் வசம் வந்து பல முறை பிரட்டீஷார் ஆதிக்கத்திற்கு
உட்பட்டு இறுதியில் பிரெஞ்சுக்காரர் வசம் வந்தது.
1814 ஆம் அடிமைமுறை ரத்து செய்யப்பட்ட பின்னர் இத்தீவில் தமிழர்களே
ஒப்பந்தக்கூலிகளாக குடியேறினர். ரீயூனியன்
தீவுக்கு ஆள் பிடித்த பிரெஞ்சு குடிபெயர் முகவர் கேப்டன் பிளாங்க் என்பவே இங்கும்
ஆட்களை அனுப்பியவன். தலைக்கு 250
பிராங்குகள் தரகுத் தொகையை பெற்றுக்கொண்டு 4000 பேர்களை 6 ஆண்டுகளில் குடியேற்ச்
செய்தான். முதல் கூலிக்கப்பல் 1853 மே 6
ஆம் நாள் காரைக்காலில் இருந்து சென்றது.
இந்த கூலிக்கப்பல் 318 பேருடன் சென்றது. இங்கு பரவிய
காலரா நோயினால் 25 சதவிகித மக்கள் இறந்து போனதால் 1884 ஆம் ஆண்டோடு இதுவும் நிறுத்தப்பட்டது.
குவாடலூப். தீவில் 1876 ஆம் ஆண்டு முதல் குடியேற்றம் நடக்கத் தொடங்கியது. நிலப்பரப்பில் பாதிப் பகுதி உயரமான மலைத்
தொடர்கள் ஆக்ரமித்து இருந்தது. எரிமலைக்குழம்பு உறைந்து வேளாண்மைக்கு வளம்
சேர்க்கும்
இங்கேயிருந்த 95000 ஹெக்டர் நிலப்பரப்பில் கருப்பு காப்பி கோககோ, பருத்தி
போன்றவை சாகுபடி செய்யப்பட்டது. 1854 முதல் 1861 பிரிட்டிஷ் பிரான்சு ஒப்பந்தம் ஏற்பட்ட
பின்பு தமிழர்களே குடியேற்றப்பட்டனர். 1874
முதல் பாண்டிச்சேரி வழியாக தமிழர்கள் கொண்டு செல்லப்பட்டனர். பிறகு கல்கத்தாவிலிருந்தும்
ஒப்பந்தக்கூலிகளை கொண்டு வரப்பட்டனர்.
ஆப்ரிக்க கண்டத்தின் தென்கிழக்கில்
அமைந்துள்ளது மடகாஸ்கர் தீவு. பெரும் நிலப்பரப்பைக் கொண்டது. 1901 ஆம் ஆண்டு மாதம்
ரூபாய் 12 இலவச உடை உணவு தங்குமிடம் என்று ஒரு குடிபெயர்வு முகவர் ஏமாற்றி 735
பேர்களை முதல் முதலாக அனுப்பி வைத்தார். மடகாஸ்கருக்கு குடிபெயர அனுமதி இல்லாத
போதும் கூட.
சென்னை துறைமுகத்தில் இருந்து அஸ்ரப்
என்னும் கப்பல் வழியாக மடகாஸ்காரில் உள்ள தமத்தவே நகருக்கு அவர்கள்
அனுப்பப்பட்டனர். அங்கிருந்து தன்னுவரி என்று இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு
பாறைகளை உடைத்து இரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இரண்டு
ஆண்டுகள் பாடுபட்ட தமிழர்கள் ஊதியமின்றி சரியான வசதிகள் இன்றி 700 பேர்கள் இறந்து போனர்.
மீதியுள்ளர்வர்கள் அங்கிருந்து தப்பி மஞ்சுகா என்னும் இடத்தை அடைந்தனர்.
வழியெங்கும் பிச்சை எடுத்து அலைந்து திரிந்து கொண்டிருந்தவர்களுக்கு மீண்டும் கல்
உடைக்கும் பணியே கிடைத்தது.
அங்கிருந்து
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஜான்சிபார் பகுதிக்கு நாட்டுப்படகு மூலம் உயிரை கையில் பிடித்துக் கொண்டு சென்றடைந்தனர்.
அங்கிருந்த பிரிட்டீஷ் தூதுவர் துணை கொண்டு பம்பாய் வந்தடைந்தனர். அவர்களின் கண்ணீர் கதைகள் ஒவ்வொன்றும் கல்வெட்டு போலவே தமிழர்களின் அவல வாழ்க்கையை நமக்கு நினைவு படுத்தக்கூடியது.
இன்று காலம் மாறியுள்ளது. நவீன விஞ்ஞானம் எத்தனையோ மாறுதல்களை நமக்கு வழங்கியுள்ளது. ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்களின் முன்னேற்ற வாழ்வினைப் போலவே முட்டுச்சந்துக்குள் சிக்கிய தமிழினத்தின் எண்ணிக்கையம் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது.
மிக ஆராய்ச்சிகரமான கட்டுரைகள் ஜோதிஜி ! ஏதோ 1991 முதல்தான் உலக மயமாக்கல் ஆரம்பமானதாக பலர் நம்பிக்கொண்டு இருக்கிறோம். உலகமயமாக்கலின் தொடக்கமே இது போன்ற அடிமைகள்தான் என்பதை இந்த வரலாறு சொல்கிறது.
ReplyDeleteநம் நாட்டுக்குள்ளும் இருக்கும் பண்ணையடிமைகளும் பிற மாநிலங்களில் இருந்து (பஞ்சம் போன்ற சூழ்நிலைகளில்) வேலை தேடி வந்ததன் மூலம் கூட ஆரம்பித்து இருக்கலாம் என்பது என் சந்தேகம். கோலார் தங்க வயலில் இருக்கும் தமிழர்கள் , தமிழகத்தில் உள்ள கன்னட மொழி பேசும் தாழ்த்தப்பட்டவர்கள் போன்ற எடுத்துக்காட்டுகள் என் சந்தேகத்திற்குக் காரணம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
உங்கள் புத்தகங்கள் வெளிவர காத்துக்கொண்டு இருக்கிறோம் :)
தொடருங்கள் ...தொடர்கிறேன் .
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteஇதன்பின் உங்கள் அபார உழைப்பு தெரிகின்றது.
பாம்பின் கால் அறிந்த பாம்பின் இனிய பாராட்டுகள்.
அந்த சிறு தீவுகளில் குடியேற்றப்பட்டு அலைகழிக்கப்பட்ட தமிழர்களின் கதை படிக்கவே கக்ஷ்டமாக உள்ளதே.தொடருங்கள்.
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteதொடருங்கள்.
வேதனையாக இருக்கிறது.
வணக்கம் வருக டீச்சர். உங்கள் நியூசிலாந்து புத்தகத்தில் அந்த நாட்டு ஆதி மக்களைப் பற்றி படித்த ஞாபகம் வருகின்றது. சிரித்து விட்டேன்.
ReplyDeleteதனசேகர் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. மாநிலம், நாடு, என்னும் புலம் பெயர்ந்தவர்களுக்குப் பின்னால் இருந்தவைகள் இரண்டே இரண்டு.
ஒன்று வறுமை. மற்றொன்று ஏற்றத்தாழ்வு (ஜாதிப் பாகுபாடுகள்)
தொடரும் நண்பர்களுக்கு நன்றி.
அருமையான கட்டுரை... தொடருங்கள் ...தொடர்கிறேன்...
ReplyDeleteReunion was connected to tamils before this migration.Some chola king reached reunion when he started invading towards west after they captured east such as vietnam,thailand . When he reached reunion , they saw the volcanos and thought that as bad sign since we did not have any kind of that .. then he returned back to Tamilnadu.
ReplyDeleteதொடர்கிறேனுங்க,,
ReplyDeleteமீன் துள்ளியான்
ReplyDeleteவித்யாசமான தகவல். ஆச்சரியமா பின்னூட்டம் போட்டுட்டீங்க. இருங்க இந்த ஆராய்ச்சியை மீண்டும் ஒரு முறை தொடர்கின்றேன். அதுதான் என் கனவான தமிழர் தேசம். தொடக்கம் முதல் இன்று வரை.
தாராபுரத்தான்
காலை வேளையில் என் தளத்தில் தான் முழிக்கிறீங்க. நன்றிங்கோ.
http://www.chiefacoins.com/Database/Countries/Reunion.htm
ReplyDeleteWONDERFUL WORK. WE SHOULD KNOW ABOUT OUR ANCESTORS. REALLY WE APPRECIATE THIS WORK, WISHES TO CONTINUE THIS.
ReplyDeleteநன்றி பீட்டர் ஜான்.
ReplyDeleteஅருமையான தொடர்..
ReplyDeleteபல அரிய தகவல்களைத் தெரிந்துகொள்ளமுடிகிறது..
தொடருங்கள்..
முதியோர் தின சிறப்பு இடுகையைக் காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்..
ReplyDeletehttp://gunathamizh.blogspot.com/2011/10/blog-post.html