தொடக்கத்தில் பிரிட்டனில் வளர்ந்து கொண்டிருந்த தொழில்
நிறுவனங்களுக்கு நாளுக்கு நாள் சவால் அதிகரித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு தொழிற்சாலைகளின் உழைப்புத் தேவைfகளை ஈடு செய்வதற்காக பணிபுரிந்து கொண்டிருந்தவர்களின் ஒப்பந்தக் கூலி முறை பொருத்தமாக அமையவில்லை. பிரிட்டன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த காலணியாதிக்க
நாடுகளின் பொருளாதாரத்தின் புதிய தேவைகளை ஈடு செய்யவும் முடியவில்லை.
அது மட்டுமன்றி 17 ஆம் நூற்றாண்டில் இருந்த ஒப்பந்தக் கூலிமுறையை விட அடிமை முறை கூடுதலான இலாபந்தருவதாக இருந்தது.
இதன் காரணமாகவே அடிமைகளை வைத்து வேலை வாங்குவதில் தீவிரமாக இருந்தனர். அடிமைகளை பல்வேறு நாடுகளில் இருந்து தருவிக்கவும் இதுவே முக்கிய காரணமாகவும் இருந்தது

அமெரிக்காவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிரிட்டனுக்கு அமெரிக்க பூர்வ
குடிகளைவிட ஆப்பிரிக்க மக்களை அவர்களின் குழந்தைககளை அடிமையாக்கிக் கொள்வதும், அவர்களை ஒடுக்குவதும் பல வகையில் உதவியாக இருந்தது. ஒரு அடிமையை வைத்திருப்பவரின் சொத்து
குறிப்பிட்ட காலத்திற்குள் தாங்கள் வைத்திருக்கும்
அடிமைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒவ்வொருவரின் சொத்தும் பல மடங்கு ஊதிப்
பெருக்கத் தொடங்கியது.
அடிமைகளுக்கு ஒரு நேர உணவைத் தவிர வேறொன்றும்
கொடுக்கத்தேவையில்லை. அமெரிக்கர்கள் தாங்களின் அடிமைகளுக்கு உணவாக அரிசிச்சோறும்,
அரிசிப் பொறியும் கொடுத்தார்கள். இது தாழ்த்தப்பட்டவர்களுக்குண்டான உணவாக
கருதப்பட்டது.
இதற்கும் அளவு உண்டு.
குறிப்பிட்ட நேரம் உண்டு. குதிரைகளுக்கு உணவாக கொடுக்கப்படும் கொள்ளுவை உண்டு
வாழ்ந்தவர்களும் உண்டு. ஆனால் அடிமைகளின் உழைப்புக்கென்று குறிப்பிட்ட நேரம் எதுவுமில்லாமல்
முழுமையாக உறிஞ்சப்பட்டனர். ஏறக்குறைய ஆணோ,பெண்ணோ பாலினப் பாகுபாடில்லாமல் வேலை வாங்கினர். ஒவ்வொரு
அடிமைக்கும் தினந்தோறும் நாலு மணிநேரம் ஓய்வு கிடைத்தால் ஆச்சரியம்.
ஒரு நாள் மட்டுமல்ல. வருடம் முழுக்க இப்படித்தான் அடிமையாய் இருப்பர்கள் உழைத்தே ஆக வேண்டும். வெள்ளையர்கள் வைத்திருந்த வயல் முதல் தொழிற்சாலைகள் வரைக்கும் அத்தனை இடங்களில் அடிமைகள் நீக்கமற நிறைந்துருக்க தனிப்பட்ட நபர்களின் பொருளாதார வளர்ச்சி எண்ணிப் பார்க்கமுடியாத அளவிற்கு மேலேறத் தொடங்கியது.

அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸ் போலவே ஒவ்வொரு
நாட்டிலும் பலரும் புதிய நாடுகள் தேடி புறப்பட ஆரம்பித்தனர். சிலர் சாகசப் பயணத்தை விரும்பி தங்கள் பயணத்தை தொடங்கினர்.
பலர் நிலவியல் ஆய்வாளராக இருக்க மற்ற பக்கம் உள்ள நாடுகளை கண்டறிந்து வர ஆவலுடன் புறப்பட்டுச் செல்லத் துவங்கினர். இது போன்று பயணம் செய்ய விரும்புவர்களுக்கு அந்தந்த நாட்டு மன்னர்கள் முதல் தொழில் அதிபர்கள் வரைக்குமான பலரிடமிருந்து பொருளுதவி கிடைக்க ஆரம்பித்தது. ஒரு வகையில் பார்க்கப்போனால் இந்த கடல்வழியாக பயணித்து பல நாடுகளை கண்டு கொண்ட கொலம்பஸ் போன்று பின்னால் வந்த ஒவ்வொருவர்களின் மூலமே பல நாடுகள் வெளிச்சத்திற்கு வந்தது. இதன் காரணமாகவே அந்த நாடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களின் வாழ்க்கைத்தரமும் இருட்டுக்குள் முழ்கத் தொடங்கியது.
புதிய நாடுகளை கண்டுபிடித்தவர்கள் அந்த நாட்டில் உள்ள முக்கிய செல்வவளங்களை தங்கள் நாட்டுக்கு தெரிவிப்பார்கள். அப்புறமென்ன? தாரை தப்பட்டை முழக்கம் ஒலிக்க தேவையில்லாமல் உள்ளே நுழைந்து தும்சம் தான். ஒவ்வொரு நாடுகளும் பல நாடுகளை அடிமைப்படுத்த அங்கிருந்த கனிம வளம் தான் முக்கிய காரணியாக இருந்தது. இத்துடன் இலவச இணைப்பாக அங்கு வாழ்ந்த மக்களை அடிமைப்படுத்தி தங்கள் நாட்டுக்கு கடத்தத் தொடங்கினர்.

இந்த வரிசையில் வந்தவர்கள்
தான் பேக்கர் மற்றும் கிளாப்பர்டன் என்ற இரண்டு கடல்வழி ஆய்வாளர்கள். இவர்கள் தான் 17 ஆம் நூற்றாண்டில் முதல்
முறையாக ஆப்ரிக்கா கண்டதிற்குள் நுழைந்தவர்கள்.
இவர்கள் ஆப்பிரிக்காவின் உள்ளே சென்றபோது அப்போது
பிரபலமாகிக் கொண்டிருந்த துப்பாக்கி மற்றும் போர்க் கருவிகளையும் கொண்டு சென்றனர். ஆப்ரிக்கா காட்டுக்குள் வீசிக் கொண்டிருந்த காற்றில் இரத்த வாடையும் சேர்ந்து வரத்
தொடங்கியது. தங்களை எதிர்த்த கூட்டத்தை சுட்டு கொன்று கொண்டே முன்னேற 1788 முதல்
1790 வரைக்கும் ஏறக்குறைய இரண்டு லட்சம் கருப்பின மக்கள் கொல்லப்பட்டனர்..
ஹென்றி மார்ட்டன் ஸ்டான்லி.
இங்கிலாந்தில் பிறந்தவர்.
நிலவியல் ஆய்வாளர். இவர் தான் 1879
முதல் 1884 வரைக்கும் ஆப்ரிக்கா பகுதியில் சுற்றியலைந்து உள்ளே இருந்த புதையல்களை வெளியுலகத்திற்கு முதன் முறையாக அறிவித்தவர். பிறந்த மண் பாசத்திற்ககாக இங்கிலாந்திடம்
தெரிவிக்க பிரிட்டீஷ் மன்னர்கள் இவர் கூற்றை அசட்டையாக ஒதுக்கித்தள்ளி விட மனம்
தளராத விக்ரமாதித்தனாய் மான்செஸ்டர் தொழில் அதிபர்களிடமும் பேசிப் பார்த்தார்.
"காங்கோவுக்கு அந்தப்பக்கம் நான்கு கோடி மக்கள்
இருக்கிறார்கள். அங்கே முத்தும் பவழமும் இருக்கிறது. உழைக்க
வழியில்லாமல், படிப்பறிவு இல்லாமல் இருக்கும் அவர்களை நாம் பயன்படுத்திக்
கொள்ளமுடியும்" என்றார். செவிடன் காதில்
ஊதிய சங்காக இருக்க கடைசியாக பெல்ஜியம் மன்னரான லியோபால்ட்விடம் இந்த தகவலை கொண்டு
போய்ச் சேர்த்தார்.
1835 ஆம் ஆண்டு பெல்ஜியம் மன்னர் லியோபால்ட் ஆப்ரிக்கா
முழுவதையும் கைப்பற்ற வேண்டும் என்று முடிவு செய்து ஐரோப்பாவில் உள்ள அத்தனை
நிலவியல் ஆய்வாளர்கள் மற்றும் கடல்வழி ஆராய்ச்சியாளர்களையும் ஒன்று கூட்டி மாநாடு
ஒன்றைக் கூட்டினார். அதன் பெயர் இண்டர்நேஷனல் கான்பரன்ஸ் ஆஃப் ஜியோகிராபர்ஸ்.
இந்த
மாநாட்டின் முடிவின் படி ஒருவருக்கொருவர் சண்டையிடாமல் ஆப்ரிக்காவில் உள்ள வளங்களை
பகிர்ந்து எடுத்துக் கொள்வது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுவே இந்த
மாநாட்டின் முக்கிய தீர்மானமாகவும் இருந்தது. மாநாடு என்றால் சண்டை சச்சரவு
இல்லாமல் முடிந்தால் நன்றாகவா இருக்கும்?
காங்கோ நாடு யாருக்குச் சொந்தம் என்பதில்
போர்ச்சுக்கல்லுக்கும், பெல்ஜியத்திற்கும் சண்டை உருவாக இறுதியாக காங்கோ பெல்ஜிய
மன்னர் லியோபால்ட்டுக்குச் சொந்தமாகி காங்கோ பெல்ஜியத்தின் காலணி நாடாக மாறியது.
உலகில் இரண்டாவது பெரிய நிலப்பரப்பைக் கொண்டது ஆப்பிரிக்கா என்ற தேசம். அத்துடன் இயற்கை வளத்திற்கு பஞ்சமில்லாத ஆப்ரிக்க நாடுகளை
தங்கள் பிடியில் கொண்டு வர ஒவ்வொரு ஐரோப்பிய தேசங்களும் போட்டி போட்டுக் கொண்டு
ஆப்பிரிக்காவை நோக்கிச் சென்றனர்.
அங்குள்ள கனிமவளங்களை தங்கள் நாடுகளுக்கு
கொண்டுவரத் தொடங்கிய போதே தங்களுக்கு உழைக்கவென்று கருப்பின மககளை அடிமையாக்கி கடத்தத் தொடங்கினர்.
இரத்தமும் சதையுமாய் உள்ள இந்த மனிதர்களை பேசும் கருவி என்றைழக்கப்ட்டனர்.
விலங்கினங்களுக்குக் கூட கிடைத்திடும் சுதந்திரம் கூட இல்லாத கொடுமைகள் அத்தனையும்
இந்த அடிமைகள் வரலாறு சொல்லிக் கொண்டே செல்கிறது. தொடக்கத்தில் நாடு பிடிக்கும் ஆசைகள் இருந்த நாடுகளை தன்னுடைய
கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த நாட்டாமை ஆறாம் போப்
ஆண்டவராக இருந்தார். இவரின் பெயர் அலெக்சாண்டர்.
இவரின் எந்த தீர்ப்பும் கிறிஸ்துவத்தில்
இருந்த கத்தோலிக்கத்தை பின்பற்றும் நாடுகளுக்கு குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கே
சாதமாக இருந்தது. இவரின் தீர்ப்புகளும்
வித்யாசமாகவே இருந்தது. உலக நாடுகளின்
வரைபடங்களை விரித்து வைத்துக் கொண்டு குறுக்கு நெடுக்காக கோடு கிழித்து தான்
விரும்பி நாடுகளுக்கு அவனுக்கு இநதப்பக்கம், உனக்கு இந்த பக்கம் என்று வாரி
வழங்கிக் கொண்டிருந்தார். இவர் ஆட்டையில்
சேர்த்துக் கொள்ளாத இரண்டு நாடுகள் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா..
ஆனால் போப் ஆண்டவரின் இந்த பாரபட்ச தீர்ப்பு வேறொரு விளைவை உருவாக்கியது. இந்த மதப் பிரச்சனையே பிரிட்டனுக்கும், அமெரிக்காவுக்கும் பெரும்
இடைஞ்சலாக இருக்க கிறிஸ்துவ மதத்தில் மற்றொரு கிளை நதி பிரிவான பிராட்டஸ்டன்ட்
உருவானது.
கடல்வழி ஆதிக்கத்தில் முன்னணியில்
இருந்த பிரிட்டனும், அமெரிக்காவும் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் வலிய நுழையத் தொடங்கினர்.
இவர்கள் உள்ளே நுழைய ஏற்கனவே உண்டு கொழித்திருந்த போர்ச்சுக்கல், ஸ்பெயின், பெல்ஜிய நாடுகளுக்குகிடையே குடுமிபிடி சண்டைகளும் உருவாகத் தொடங்கியது.
இவர்கள் உள்ளே நுழைய ஏற்கனவே உண்டு கொழித்திருந்த போர்ச்சுக்கல், ஸ்பெயின், பெல்ஜிய நாடுகளுக்குகிடையே குடுமிபிடி சண்டைகளும் உருவாகத் தொடங்கியது.
தொடக்கத்தில் போப் ஆண்டவரின் பஞ்சாயத்து தீர்ப்பின்படி ஆப்ரிக்காவின் செல்வ வளங்களை ஸ்பெயின்,
பெல்ஜியம், போர்ச்சுக்கல் நாட்டுக்கு முழுமையாக வழங்க, தாங்கள் கண்டுபிடித்த
நாடுகளில் உள்ள வளங்களை சூறையாடிக் கொண்டிருந்த நாடுகளுக்குள் சண்டை வரத்
தொடங்கியது. 19 ஆம் நூற்றாண்ன்
தொடக்கத்தில் பிரான்சும் இந்த போட்டா போட்டியில் இறங்க நாடுகளுக்கிடையே அடிதடியும்
தொடங்கியது.
ஐரோப்பியர்கள் ஆப்பிரிக்காவின் ஒவ்வொரு பகுதிக்ளுக்குள்ளும் நுழைந்து ரணகளத்தை உருவாக்கிக் கொண்டிருந்தனர். ஐரோப்பியர்கள் நவீன ஆயுதங்கள் கொண்டு போரிட்ட போதிலும் கூட
ஆப்ரிக்கர்களின் வில், அம்பு தைரியமாக எதிர்த்து நின்றது. இதையே அன்று ஆப்பிரிக்காவை வெள்ளையர்களின்
சமாதி (ஒயிட் க்ரேவ்) என்று சொல்லும்
அளவிற்கு கருப்பின மக்கள் வெள்ளையர்களை துவசம் செய்தனர். ஆனால் 1840 ஆம் ஆண்டு
ஆப்ரிக்காவின் புகழ் பெற்ற ஸாம்பெசி நதிகளை பார்வையிடச் சென்ற கடல்வழி ஆய்வாளர்
லிவிங்ஸ்டோன் எங்கு பார்த்தாலும் கருப்பு பிணங்களை பார்த்து இது கருப்பு
மக்களுக்கு வெள்ளையர்கள் கட்டிய ப்ளாக் க்ரேவ் என்றார்.
இதைத்தான் ஒரு ஸ்பானியக் கவிஞன் இவ்வாறு சொன்னான்.
‘அமெரிக்காவில் விடுதலை சிலையாக இருக்கிறது.’
தொடரும்............
தொடரும்............
நல்ல பதிவு.
ReplyDeleteவேதனையாக இருக்கிறது.
தொடர்ந்து எழுதுங்கள்.
மனிதக்குலம் பெருமைப்பட்டு சொல்ல வரலாற்றில் ஒரு இடம் கூட இல்லை.
ReplyDeleteவணக்கம் சகோ,
ReplyDelete/இந்த மாநாட்டின் முடிவின் படி ஒருவருக்கொருவர் சண்டையிடாமல் ஆப்ரிக்காவில் உள்ள வளங்களை பகிர்ந்து எடுத்துக் கொள்வது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது./
கொடுமை.அந்நியர்களின் உழைப்பு சுரண்டல்களை சாமான்ய மக்கள் தங்கள் பாடல்களில் பதிவு செய்ததை பாருங்கள்!!!!!!!!!!
எங்கள் பகுதி நாட்டுப் பாடல் ஒன்று
"ஊரான் ஊரான் தோட்டத்தில்
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்காய்
காசுக்கு இரணரு விற்க சொல்லி
கடிதம் போட்டானாம் வெள்ளக்காரன்"
இன்னமும் இயற்கை பிற நாட்டின் வளங்க்ளை கொள்ளையடிப்பது வேறு வகையில் நடக்கிறது.
நன்றி
தொடருங்கள் ...
ReplyDeleteஅட,போட்டி போட்டு கருப்பின,நாடுகளை சுரண்டியிருக்கிறார்களா?
ReplyDeleteதொடருங்கள்...தொடர்கிறேன்...
ReplyDeleteவிரிவான குறிப்புகளுடன் நீங்கள் தரும் தொடர் பதிவு - தகவல் களஞ்சியமும் கூட. வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமையான வரலாற்று உண்மைகள்.தொடரவும்.
ReplyDeleteவரலாற்றில் மறைக்கப்பட்ட / புதைக்கப் பட்ட தகவல்களை அருமையாக கொடுத்துள்ளீர்கள். வாழ்த்துகள்.
ReplyDelete