இது ஒரு இடைச்சொருகல், இன்று என் மின் அஞ்சலுக்கு வந்த இந்த காணொளி மனதை உலுக்கிவிட்டது.
ராஜிவ் காந்தி படுகொலை குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் தோழர் பேரறிவாளனின் தாய் பேட்டி.
21 வருட சிறைவாழ்க்கை. ஒரு வாழ்க்கையின் பாதிப்பகுதி. பாதிப்புகளை வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும்.
சமயம் இருக்கும் போது முழுமையாக கேட்டுப் பாருங்கள்.
21 வருட சிறைவாழ்க்கை. ஒரு வாழ்க்கையின் பாதிப்பகுதி. பாதிப்புகளை வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும்.
ReplyDeleteஎன் மனதை உலுக்கிவிட்டது...பகிர்விற்கு நன்றி...
ReplyDeleteதற்போதைய இலங்கை தொடர்பான என் கட்டுரையை வாசித்து உங்கள் கருத்தை சொல்லுங்களேன்...
http://reverienreality.blogspot.com/2011/07/blog-post_08.html
மிக மிகக் கொடுமை. ஜனநாயகம் , சட்டம் வெங்காயம் எல்லாம் நிரபராதிகளுக்கு அல்ல. பெரும்புள்ளிகள் தப்பிப்பதற்கு.
ReplyDeleteஎன்ன அநியாயம் இது.வாழ்க்கை முழுசா முடியுது சிறையிலேயே.அரசியல்ன்னா மனசுன்னு ஒண்ணு இருக்கவே இருக்காதா !
ReplyDelete’பேரறிவாளன் அவர்களின் உள்ளூர்க்காரர்களுக்கே அவரின் நியாயம் புரியவில்லை என்பது உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும்?
ReplyDeleteகாணொளி ஒரு மணித்தியாலம் என்பதால் பார்ப்பதை பின்போட்டிருக்கிறேன். இருந்தும் ராஜாராமன் (விந்தைமனிதன்) பேரறிவாளன் குறித்து ஓர் பதிவு (தொடர்) எழுதியிருக்கிறார் படித்தபோது கொஞ்சம் கலங்கித்தான் போனேன். அதிலயும் பாரத் மாதாஜி சோனியா காந்தியின் கருணை குறித்துப் பேசினால்...... வேண்டாம் விடுவம். ஆனால், பேரறிவாளன் குறித்து நான் படிக்கும் முதல் கட்டுரை இதுவல்ல.
ReplyDeleteதேர்தல், ஆட்சி ஜனநாயகத்தின் அடிப்படை கூறுகளில், அமைப்புகளில் ஏகப்பட்ட குறைபாடுகள் இருந்தால் இப்படித்தான் குற்றமே செய்யாமல் தண்டிக்கப்படுவார்கள். இதை அமெரிக்காவில் இருந்து வந்து ராஜாங்க செயலரும் இங்கே ஜனநாயகம் பூப்பூத்து, காயாய், கனியாய் தொங்குகிறது என்று புகழ்வார். அவருக்கு எங்கே தெரியப்போகிறது இந்தியாவின் பேரறிவாளன் போன்றோரை.
அம்மா தங்கள் நேர்காணல் மிக்க உருக்கமாக இருந்தது
ReplyDeleteநான்கு சுவர்களுக்குள் புதைந்து கிடந்த உண்மையை உலகிற்கு வெளிபடுத்திய தியாகு, நெடுமாறன்,வைகோ,மற்றும் தமிழ் ஆர்வளர்கள் வரிசையில்,குமதம் ஏகலைவன் காட்சி இணைய ஊடக வழியாக வெளிகொண்டு வந்ததற்கு நன்றி சொல்ல வேண்டும்.தாமதிக்காமல் இப்பிரச்சினையை உலகம் முழுக்க கொண்டு செல்ல வேண்டும்.மேலும் அம்மா தாங்கள் குறிப்பாக கவலை கொள்ளாமல் உடல் நிலை,ம்ற்றும் மன நிலையை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு நீடித்த நாள் வாழ்ந்தாக வேண்டிய அவசியத்தை புரிந்து கொள்ள வேண்டும். இப்படிக்கு
இன்னம்பூர் மனோகரன்
கண்ணீர் சித்திரம்,
ReplyDeleteஇத்தனை கொடுஞ்சுமையையும் தாங்கள் சுமந்து வாழ்கிறீர்கள் என்றால் தாங்கள் ஒரு பெரியாரியவாதியாய் இருப்பதினால் தான்.
ReplyDeleteஇன்னம்பூர் மனோகரன்