இந்த முறை தேர்தலில் தொடக்கம் முதல் இரண்டு பேர்களை கவனித்துக் கொண்டே வருகின்றேன். ஒன்று சீமான். மற்றொருவர் விஜயகாந்த.
சீமானைப் பொறுத்தவரையில் அவரின் உண்மையான நிலைப்பாடு இந்த முறை தேர்தலில் பங்கெடுப்பது இல்லை. அடுத்து வரும் தேர்தலுக்கு (2016)முன்னோட்டமாக இன உணவாளர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். குறிப்பாக காங்கிரஸ் கட்சியை முடிந்த வரைக்கும் முடித்துக் கட்டுவதில் குறியாக இருக்கிறார். சீமான் பேசும் கூட்டங்களில் இளையதலைமுறையினர் ஆர்வமாக பங்கெடுத்துக் கொள்கின்றனர். முக்கியமாக படித்தவர்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது.
சீமான் மனதிற்குள் போட்டுள்ள கணக்கை விட இந்த தேர்தல் முடிவுதற்குள் கிங்கர ராஜாக்கள் என்ன மாதிரியான கணக்கை வைத்துள்ளார்களோ?
காரணம் புதுக்கோட்டையில் முதல் களப்புலியை காவு வாங்கி தங்களது புனிதப்பணியை தொடங்கியுள்ளனர். இதற்குள் உள்குத்து அதிகமாக இருந்தாலும் முழுமையாக எந்த ஊடகமும் இதைக் குறித்து ஆராயாமல் சற்று மேம்போக்காகவே போய்விட்டது. இன்னும் எத்தனை பேர்களை பலி பீடத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறார்களோ? சென்னையில் இயக்குநர் பாரதிராஜா அலுவலகத்தை யார் தலைமையில் சூறையாடினார்கள் என்று அணைவருக்கும் தெரிந்து போதிலும் அத்தனை பேர்களும் அமைதி காத்தனர். காரணம் கடந்த தேர்தலில் ப. சிதம்பரம், இளங்கோவன் போன்றவர்களை மண்ணைக் கவ்வியதற்கு முக்கிய காரணம் ஈழம் என்ற ஒரு சொல்லும் அதன் ஆதரவாளர்களுமே காரணமாக இருந்தனர்.
ஆனால் ப. சிதம்பரம் அழிச்சு கிழிச்சு கெஞ்சி கூத்தாடி கழைக்கூத்தாடி போலவே ஆளை விட்டால் போதுமடா சாமின்னு ஓட்டமாய் பின்வாசல் வழியே மேலே போய் உட்கார்ந்து விட்டார். இப்போது காங்கிரஸ் மக்கள் கொஞ்சம் உசாராகவே இருக்கின்றனர். ஈழம் என்று சொல்லிக்கொண்டு வெற்றி வாய்ப்பை தட்டிப் பறிப்பவர்கள் எவராயினும் அவர்களுக்கு உரிய பாடம் புகட்டப்படும் என்பதை உணர்த்திக் காட்ட எதற்கும் தயாராகவே உள்ளனர். மீறி உணர்த்திக் காட்டிவர்களுக்கு முடிந்த வரைக்கும் அவ்வப்போது ஒவ்வொரு கணக்கும் தீர்த்துக் கொண்டே வரப்படுகின்றது.
செயலில் இறங்கிய இளங்கன்றுவின் வேகம் இன்று வாசன் கோஷ்டியை விட மேலேறி உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்துள்ளது. உடன்பிறப்பு, ரத்தத்தின் ரத்தம் தொண்டர்களுக்கு நான் எந்த வகையில் சளைத்தவன் அல்ல என்று இளங்கன்றுவின் வேகத்தை உள்துறை கூட மனதில் உள்ளே வைத்து ரசித்து இருக்கக்கூடும். காரணம் இது அரசியல். இப்போது தவறவிட்டால் எப்போதும் தவறாய் போய் முடிந்து விடும்.
ஆனால் இந்த 2011 தேர்தல் என்பது தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சுயபரிசோதனை என்பதை விட உண்மையிலே ஈழம் இனப்படுகொலை என்பது தமிழ்நாட்டில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது? என்பதை உணர்த்தக் கூடும். இதை வைத்து தான் சீமான் களத்தில் இறங்கியிருக்கிறார். முடிந்த கதையை எத்தனை நாளைக்கு பேசிக் கொண்டு இருக்கப்போகிறாய்? என்று தமிழ்நாட்டு வாக்காளர்கள் கேட்கப்போகிறார்களா? அல்லது சீமானின் கர்ஜனை எந்த அளவிற்கு தாக்கத்தை உருவாக்கும்? என்று தெரியவில்லை. பெரும்பாலும் இந்த தேர்தல் முடிவை வைத்து சீமான் செல்வாக்கானவரா இல்லை செல்லக்காசா? என்று முடிவு தெரிந்து விடும்.
விஜயகாந்த்.
நான் தான் முதலமைச்சர்!!!! என்று தைரியமாக கூவியதற்கே முதலில் பாராட்டுரை வழங்க வேண்டும். பெரும்பாலும் தேமுதிக என்ற கட்சி தொடங்கிய பிறகு தான் விஜயகாந்த் அரசியல் குறித்து கொஞ்சமாவது படித்து கேட்டு இருக்கக்கூடும். பண்ட்ருட்டி ராமச்சந்திரன் மனம் மாறாமல் இன்னமும் விஜயகாந்த பக்கத்தில் இருப்பதால் கொஞ்சம் அனுபவ பாடங்களும் கிடைத்து இருக்கக்கூடும். ஒரு பக்கம் மனைவி பிரேமலதா மற்றொரு புறம் மச்சினன் சுதிஷ் பின்பக்கம் பண்ட்ருட்டி முன்பக்கம் எப்போது அவர் சொல்லிக் கொண்டு இருப்பது அந்த ஆண்டவன்.
விஜயகாந்த மேடையில் பேச்சும் தெளிவாக இல்லை. கோர்வையாகவும் சொல்லத் தெரியவில்லை. மொத்தத்தில் நிதானமும் இல்லை. ஆனால் தொடக்கம் முதல் இந்த தில்லுதுர வைத்திருந்த நம்பிக்கை இன்று வீணாகிப் போய்விடவில்லை. பட்டையைக்கிளப்பி போய்க் கொண்டு இன்று அதிமுக வில் 41 சீட்டு பெற்றுள்ளார். பாவம் வைகோ, கம்யூனிஸ்ட்கள்.
விஜயகாந்தின் பழைய படங்களைப் பார்த்தால் அந்த வெண்திரையில் விஜயகாந்த சிரித்தால் அந்த பற்கள் மட்டும் கொஞ்சம் வெள்ளையாக தெரியும். நடிகர் விஜய் அப்பா எஸ்.ஏ.சி க்கும் நண்பர் இப்றாகிம் ராவுத்தருக்கும் தான் விஜயகாந்த் காலம் முழுக்க நன்றி சொல்ல வேண்டும். கதாநாயகனுக்கு உரிய எந்த அங்கலட்சணமும் இல்லாமல், இன்று வரையிலும் தமிழ் உச்சரிப்பு கூட சரியாக பேச முடியாமல், தொப்புளில் பம்பரம் விட்டு கலைச்சேவை செய்து இன்று நாட்டுக்கு சேவை செய்ய வந்து இருக்கும் இவரின் சேவையை யார் உணர்ந்தார்களோ இல்லையோ விருத்தாச்சலம் தலித் மக்கள் கொடுத்த ஆதரவு மகத்தானது.
பாசமுள்ள மகன் கட்சிக்கு சொந்தக்காரன ராமதர்ஸ் கோட்டைக்குள் நுழைந்து பிடறியை உலுக்கியதோடு பீடு நடை போட்டு சட்டமன்றம் வரைக்கும் சென்றது வரைக்கும் முழுக்க முழுக்க அவரின் தனிப்பட்ட அசாத்தியமான தைரியமே. வைகோ போல் குறுக்கும் நெடுக்கும் நடைபயணம் இல்லை. திருமா போல வீர வசனம் இல்லை. மற்ற அரசியல் தலைவர்கள் போல களப்பணிகள் இலலை. மொத்தத்தில் பெரிதான கஷ்டங்களை சந்திக்காமல் நானே ராஜா நானே மந்திரியாய் முழு நேர அரசியல் தலைவராய் பரிணமித்துள்ளார். இன்று கேப்டன் தொலைக்காட்சியில் இவர் புகழ் எட்டுத்திக்கும் பறந்து கொண்டுருக்கிறது.
கலையுலகம் முதல் இன்றைய அரசியல் உலகம் வரைக்கும் அத்தனையிலும் தான் கொண்ட நம்பிக்கையை விஜயகாந்த் இன்று வரைக்கும் மாற்றிக் கொள்ளவேயில்லை. இந்த நம்பிக்கை தான் இன்றைய அதிர்ஷ்ட திசையின் ஆரம்பம்?
டெல்லியில் இருந்து வந்த பாரதிய ஜனதா கட்சி நபர்களையே வாசலில் காக்க வைத்த போயஸ்தோட்டம் இன்று வேறு வழியே இல்லாமல் விஜயகாந்தை வெத்தலை பாக்கு வைக்காத குறையாக வரவேற்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது.. குறிப்பாக பா.ம.கா வை கலைஞர் உள்ளே இழுத்தது காங்கிரஸ்க்கு எரிச்சலாக இருந்து இருக்குமே தவிர விஜயகாந்த்திற்கு மற்றொரு அதிர்ஷ்ட வாய்ப்பு. மீதி இருக்கும் ஒரே வாய்ப்பு தேமுதிக மட்டுமே என்கிற நிலை வந்த போது அதிமுக வேறு என்ன செய்ய முடியும்?
தொடக்கம் முதல் விஜயகாந்த் கடைபிடித்த அமைதி ரொம்பவே ஆச்சரியமானது. எதிலும் பிடிகொடுக்கவில்லை. எந்த வாய்ப்புகளையும் தவற விட தயாராய் இல்லை. டெல்லிக்கு படையெடுத்தது முதல் காங்கிரஸ் ஒரு பக்கம், மற்றொரு புறம் தனது அக்கா விஜயலெட்சுமி மூலம் அழகிரி ஒரு பக்கம் என்று உருவாக அரசியல் சந்தையில் தேமுதிக முக்கியமானதாக போய்விட்டது.
விஜயகாந்த் அரசியல் வாழ்வில் இத்தனை பெரிய அதிர்ஷ்டக் காற்று அடிக்கும் என்று அவரே நினைத்து இருக்கமாட்டார்.
' நான் ஆண்டவனுடன் மற்றும் மக்களுடன் கூட கூட்டணி வைப்பேன் ' என்று சொன்னவர் இன்று அதிமுகவுடன் வந்து சேர்ந்துள்ளார். விஜயகாந்த் வைத்திருக்கும் பத்து சதவிகித ஓட்டுகள் இந்த முறை அதிமுகவுக்கோ உதவுகின்றதோ இல்லையோ நிச்சயம் தன்னுடைய அரசியல் ஸ்திரத்தன்மையை மேம்படுத்திக் கொள்ள இந்த தேர்தல் தேமுதிகவுக்கு உதவும். போயஸ் தோட்டத்தில் கனகம்பீரமாக உள்ளே நுழைந்த நபர் இவராகத்தான் இருப்பார்.
இவர் தொடக்கம் முதல் சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு வாக்குறுதி வித்யாசமானது. "நான் ஆட்சிக்கு வந்தால் ரேசன் பொருட்கள் அத்தனையும் ஒவ்வொருவரின் வீட்டுக்கே வந்து சேரும். இதைப் போலவே பல ஐடியாக்கள் வைத்துள்ளேன். இப்போது அதை வெளியே சொன்னால் திமுக காப்பி அடித்து விடும்" என்று வேறு பயமுறுத்தி வைத்துள்ளார். ஏற்கனவே இதைப்போலவே பா.மா.க, விடுதலை சிறுத்தைகள். தனிப்பட்ட முறையில் பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர். இன்று அத்தனையும் காற்றில் அலைகின்றது. இவரின் ஐடியாக்களை இவர் முதலமைச்சராக ஆகும் போது இவருக்கு கீழே இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் எப்படி புரிந்து கொள்ளப் போகின்றார்களோ?
காங்கிரஸை வழிக்கு கொண்டு வர திடீர் ஞானோதயம் பெற்ற கலைஞர் எப்படி ராமதாஸை திமுக கூட்டணிக்கு கொண்டு வந்துள்ளாரோ அதைப் போலவே இந்த முறையும் ஓட்டு பிரிந்து போய் திமுக ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக பலமடங்கு கீழிறங்கி நம்ம கேப்டன் அதகளத்தை கடைவாயில் அடக்கிக் கொண்டு போயஸ் தோட்டம் புன்னகை சிந்தியுள்ளது.
இன்னும் 90 நாட்களில் அதிமுக ஜெயித்து வரும் பட்சத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கும் திரைக்கதையில் உருவாகப்போகும் முடிச்சுகள் அவிழத் தொடங்கும். என்னையே அலைக்கழித்தாயா? என்று யோசிக்கத் துவங்கும் போது இயக்குநர் மகேந்திரனின் உதிரிப்பூக்கள் போல தேமுதிக வின் உண்மையான பலம் பலவீனம் அப்போது நமக்குத் தெரியும்..
இன்றைய விஜயகாந்தின் அதிர்ஷ்டத்தை விட அன்று உருவாகப்போகும் துரதிஷ்டத்தை எப்படி சமாளிப்பார் என்பதில் தான் விஜயகாந்தின் அரசியல் எதிர்காலம் இருக்கிறது. தமிழ்நாட்டு வாக்காளர்களைப் பற்றி அத்தனை எளிதாக கணித்து விட முடியாது. கடைசி நிமிடம் வரைக்கும் சாவடித்து விடக்கூடியவர்கள்.
சொல்லமுடியாது. ஒரு வேளை நடைபெறப் போகும் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில்??
கேப்டன் காட்டில் அடைமழையல்ல. மழைக்குள் கேப்டன்.
நல்லா அலசியிருக்கிங்க
ReplyDelete(பண) மழைக்குள் கேப்டன்
ReplyDeleteசுட சுட பதிவா .... அதிமுகவுக்கும் ...விஜயகாந்துக்கும் பெரிய சண்டையாம் ... காங்கிரெஸ் நிற்கும் அறுபது ( அல்லது அறுபத்து மூனா???!!! ) ..தொகுதிகளில் , யாருக்கு கிடைக்கும் என்று. எது எப்படியோ, இந்த அறுபத்து மூன்று தொகுதியும் நிச்சய வெற்றி தான். திமுக காங்கிரஸ்சுக்கு ஓட்டு போடாது , தமிழ் மக்களும் ஓட்டு போட மாட்டார்கள், காங்க்றேச்ஸ்ல ஒட்டு போடறதுக்கு ஆள் இல்ல ... இந்த அறுபத்தி மூன்றும் நிச்சயமாய் ... எதிர்த்து போட்டியிடும் கட்சிக்கு தான்
ReplyDeleteஜோதிஜி...ஓட்டு உங்களுக்கு மட்டும் !
ReplyDeleteகொமுக காரணமாக அதிமகவுக்கு பாதிப்பு வருமா? திமுகவுக்கு ஆதரவு கிடைக்குமா? கொமுக-க்கு எந்த அளவு வாக்கி வங்கி உள்ளது என்று தெரியாத வேலையில்(வாக்கு வங்கியை தீர்மானிக்க 1 தேர்தல் பத்தாது என்பது என் கருத்து) 7 தொகுதி கொடுத்து திமுக தவறிழைத்து விட்டதா?
ReplyDeleteஅரசியல் புரிந்தவர் என்பதாலும் நீங்க அந்த பகுதியில் இருப்பதால் இந்தக்கேள்வி. (இடுகைக்கும் என் கேள்விக்கும் தொடர்பில்லை என்று பதிலளிக்காமல் விட்டுவிடாதிங்க :-) )
ReplyDelete//ராமதர்ஸ் கோட்டைக்குள் நுழைந்து பிடறியை உலுக்கியதோடு பீடு நடை போட்டு சட்டமன்றம் வரைக்கும் சென்றது வரைக்கும் முழுக்க முழுக்க அவரின் தனிப்பட்ட அசாத்தியமான தைரியமே. வைகோ போல் குறுக்கும் நெடுக்கும் நடைபயணம் இல்லை. திருமா போல வீர வசனம் இல்லை. மற்ற அரசியல் தலைவர்கள் போல களப்பணிகள் இலலை. மொத்தத்தில் பெரிதான கஷ்டங்களை சந்திக்காமல் நானே ராஜா நானே மந்திரியாய் முழு நேர அரசியல் தலைவராய் பரிணமித்துள்ளார். இன்று கேப்டன் தொலைக்காட்சியில் இவர் புகழ் எட்டுத்திக்கும் பறந்து கொண்டுருக்கிறது//
ReplyDeleteவிசயகாந்துன்னு சொல்றதுக்கு பதிலா ராமதாசுன்னு சொல்லிட்டிங்களா?
உங்கள் பதிவுகள் மிக நடுநிலையுடன் எழுதப்படுபவை : ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் emotions overtake rationale. : அது ஈழம்.
ReplyDeleteஈழம் காரணமாக காங்கிரசு வாக்கு எதுவும் பெறாது என்ற தொனியில் உங்கள் பதிவு.
பொது தேர்தலில் ஒரு வாக்காளன் அளிக்கும் வாக்கு பல காரணிகளை உள்ளடக்கியது. மின்சார வெட்டு முதல் குடிசை ஒழிப்பு திட்டங்கள் , நூற்று எட்டு ஆம்புலன்சே சேவை, இலவச டி வி , ஊழல்கள், குடும்ப செழிப்பு, என்று ஒரு பக்கமும் சென்ற ஆட்சியில் சில நன்மைகள், பல கெடுதல்கள், கொட நாடு ஒய்வு, உடன் பிறவா சகோதரி திரைக்குப்பின் அரசாட்சி, என்று ஒவ்வொரு கட்சியின் பலப்பல சாதக பாதகங்களையும் ஒன்றாகப் பார்த்து தனக்கு முதன்மையாகத் தோன்றும் காரணத்துக்காக எக்ஸ் கட்சிக்கோ ஒய் கட்சிக்கோ வாக்கு இட வேண்டிய தேர்தல் முறை நமது. இதில் ஈழம் மிக முக்கிய காரணமாகப் பார்க்கப்பட்டு அதனால் காங்கிரசு வாக்கு பெறாது என்பது சரியா?
பாராளுமன்றத் தேர்தலில் கூட சிவகங்கையில் கடைசி நேரத்தில் தான் பின் வழியாக ப.சி என்று தெரிந்தாலும், பல இடங்களில் காங்கிரசுக்கு வாக்குகள் விழுந்தன அல்லவா?
இது என் மனதில் உறுத்திக்கொண்டிருக்கும் எண்ணம். உங்கள் கருத்துக்களை எதிர்த்து எழுத வேண்டும் என்று எழுதியது அல்ல.
குறும்பன் சரியாத்தானே எழுதியிருக்கேன். விருத்தாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் ஜெயித்து வந்ததை தான் அப்படி எழுதியுள்ளேன். கேப்டன் தொலைக்காட்சி ராமதாஸ் புகழைப் பரப்புமா?
ReplyDeleteகொங்கு முன்னேற்ற் கட்சியைப் பற்றி அவரவர் ஒரு கற்பனையை வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு வகையில் கலைஞர் இந்த முறை தவறு செய்து விட்டார்.
கவுண்டர்களைப் பொறுத்தவரையில் ஜாதி பார்த்து ஓட்டுப் போடுவது குறைவு. அப்படி போட்டு இருந்தால் போன தடவையே இவர்கள் ஜெயித்து வந்து இருக்க வேண்டும். பெஸ்ட் ராமசாமி ஒரு பக்கம், ஈஸ்வரன் (பலே பலே கில்லாடி தில்லாலங்டிங்கடி நபரும் கூட) ஒரு பக்கம். ஆடிட்டர் ஒரு பக்கம். இதில் இருந்து பிரிந்தவர்கள் குத்தப்போகும் உள் குத்து வேறு தனியாக உள்ளது. சென்ற முறை ஓட்டை பிரித்தார்கள். இந்த முறை அந்த அளவுக்கு கூட பிரிப்பார்களா என்பது சந்தேகமே?
நல்ல பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
விஞ்ஞானி
ReplyDeleteஉங்கள் அக்கறைக்கு நன்றி.
நீங்கள் சொல்லி உள்ளதில் இரண்டு முரண்நகை உள்ளது. என்னுடைய பார்வையில் தமிழ்நாட்டில் ஈழம் தாக்கம் மிக மிக குறைவு. காரணம் அதை எடுத்துச் செல்பவர்கள் பொதுநலமாய் கொண்டு செல்பவர்கள் எவரும் இல்லை. தங்களின் அரசியல் கணக்குகளுக்கு ஓநாய் போல ஊளையிடுபவர்கள் தான் அதிகம். ஒரு பக்கம் அப்பட்டமான சுயநல தலைவர்கள். மறுபக்கம் தங்கள் இருப்புக்காக ஈழத்தை வைத்து பகடை விளையாட்டு காட்டுபவர்கள். ஆனால் இந்த முறை சீமான் கொஞ்சம் தெளிவாக இருப்பது போல் தெரிகின்றது. அவரால் ஈழம் வைத்து என்ன மாறுதல்களை உருவாக்க முடியும் என்பது குறித்து ஐயமே. அவர் எடுத்து வைக்கும் ஆதார பேச்சுகள், இந்தியாவில் தமிழ்நாட்டில் நடக்கும் விசயங்களை மக்களிடம் எடுத்து வைத்து அத்துடன் ஈழத்தை தமிழ்நாட்டு வாக்காளர்களிடம் எப்படி எடுத்துச் செல்லப்போகிறார் என்பதை வைத்தே அதன் தாக்கத்தை நாம் உணர முடியும். வெறுமே ஈழத்தை வைத்து பிரச்சாரம் செய்யும்பட்சத்தில் வைகோ பேச்சை கேட்பது போல் சுவராஸ்யத்திற்காக கேட்டு விட்டு மக்கள் நகர்ந்து போய்விடுவார்கள். ஆனால் நிச்சயம் காங்கிரஸ் மக்கள் சீமானைப் பார்த்து பயப்படுவது உண்மை. காரணம் சீமான் பின்னால் இளையர்கள் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது என்பதும் எதார்த்தம். குழப்ப நிலையில் இருக்கும் குறிப்பிட்ட சத விகித வாக்குகளை இந்த இளையர் கூட்டம் மாற்றினாலே போதும் தானே? காங்கிரஸ் எந்த காலத்தில் பெருவாரியான வாக்கு வித்யாசத்தில் தமிழ்நாட்டில் ஜெயித்து உள்ளது.?????
சுந்தர் கொஞ்சம் அவசரமாய் எழுதி இருப்பீங்க போலிருக்கு. எனக்கு புரிந்தது. உங்கள் வாக்கு பலிக்கட்டும்.
ReplyDeleteகேப்டன் அதிர்ஷ்டசாலிதான். மக்கள் தான் துரதிர்ஷ்டசாலிகள்
ReplyDeleteநல்லா அலசியிருக்கிங்க
ReplyDeleteகடைசி நிமிடத்தில் சீமான் அதிமுகவில் சங்கமமாகி விடுவார். அது ஒரு சீக்ரெட் பிளான். இப்போது சொன்னால் சர்ச்சை வரும் என்பதால் அடக்கி வாசிக்கப்படுகிறது என்பது என் கணிப்பு.
ReplyDeleteஅம்மாக்கு குருதிசை ஆரம்பிக்க போகுது. விஜயகாந்திற்கு என்ன திசை என்று தெரியவில்லை. அமாவாசை அன்று மீட்டிங்.திமுக காரர்களும் அமாவாசையன்று மனு செய்துள்ளனர். ஆனால், கறி சோறு சாப்பிட்டு உள்ளனர். ஜாதகம் உண்மையெனில் அம்மாதான், விஜயகாந்த் தான்.
ReplyDeleteவிஜயகாந்த் அதிர்ஷ்டக்காரா இல்லையா... கலைஞருக்கு பிந்தைய அரசியல் உலகில் - விஜயகாந்தா... ஜெயலலிதாவா எனும் நிலை கூட வரலாம்.
ReplyDeleteவிஜயகாந்தின் திட்டமிடலுக்கு கிடைத்த வெற்றி இது
ReplyDeleteநல்ல அலசல் ஜி..திமுக'வுக்கு கிடைத்த பலியாடு கொமுக..வேறொன்றும் சொல்வதற்கில்லை
ReplyDelete(உங்களுக்காக ஒரு கவிதை பாருங்கள்)
ஜெயலலிதா, விஜயகாந்த் இருவருக்குமே இது பிடிக்காத கூட்டணிதான். அதிமுக மெஜாரிட்டி பெற்றால், விஜயகாந்தை அம்மா புறக்கணிக்கவும் அவரின் வளர்ச்சியை தடுக்கவும்தான் பார்ப்பார் என்பது உண்மைதான். இருந்தாலும் அதிக எண்ணிக்கையில் எம் எல் ஏக்கள் என்பது கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோக விஜயகாந்துக்கு உதவியாய் இருக்கும்.
ReplyDeleteமாற்றம் வந்தால் நல்லது தான் . மாறுதல் அவசியம்.
ReplyDeleteஎலி பெருச்சாளி ஆகிவிட்டால் நாம் இருக்கும் இடம் இருக்குமா என்பது சந்தேகம்தான்.
”என்னுடைய பார்வையில் தமிழ்நாட்டில் ஈழம் தாக்கம் மிக மிக குறைவு. காரணம் அதை எடுத்துச் செல்பவர்கள் பொதுநலமாய் கொண்டு செல்பவர்கள் எவரும் இல்லை. தங்களின் அரசியல் கணக்குகளுக்கு ஓநாய் போல ஊளையிடுபவர்கள் தான் அதிகம். ஒரு பக்கம் அப்பட்டமான சுயநல தலைவர்கள். மறுபக்கம் தங்கள் இருப்புக்காக ஈழத்தை வைத்து பகடை விளையாட்டு காட்டுபவர்கள்.”
வழிமொழிகிறேன் தங்கள் கருத்தை..
வாழ்த்துகள் அன்பின் ஜோதிஜி.
//கேப்டன் காட்டில் அடைமழையல்ல. மழைக்குள் கேப்டன்.//
ReplyDeleteஅலசலின் முத்தாய்ப்பு அருமை!
:)))))))கேப்புட்டன் தெய்வத்தோட கூட்டணின்னு சொன்னதெல்லாம் இதயதெய்வம் பொர்ச்சித் தலேவிய தான் போல :))))
ReplyDeleteஇன்னும் என்னன்ன கொடுமை எல்லாம் பார்க்கனும்னு இருக்கோ :-))))
ReplyDeleteஇந்த பதிவுக்கு எதுக்கு மைனஸ் ஓட்டு போட்டுருக்காங்கன்னு தெரியலியே???
ReplyDeleteபார்க்க http://www.jaffnatoday.com/?p=6348
ReplyDeleteகேப்டன் மனைவியும், மச்சானும் தேர்தலில் நிற்கப் போவதாக செய்திகள் வருகிறது..
ReplyDeleteஅப்ப பத்தோடு பதினொன்னுதான்..
கேட்டியளா கேட்டியளா சங்கதிய - திமுக - காங்கிரஸ் கூட்டணி பிச்சிகிச்சாம். இனிமே என்ன திருவிழா ரொம்ப அழகா கலைகட்டியிருக்கு...
ReplyDeleteமஞ்சக் கண்ணன் கேப்புட்டனுக்கு (ஆமா, இவரு எந்த கப்பலு, ஏரோபிளேனூஊ ஓட்டியிருக்கார்) நேரமய்யா...
//கேப்டன் காட்டில் அடைமழையல்ல. மழைக்குள் கேப்டன்.//
ReplyDeleteகேப்டன் காட்டில் அடைமழையல்ல,
சுனாமியிலும் வெளுக்காத கருப்பு MGR கேப்டன் !
நீங்க தவறாக எழுதவில்லை, முதல் முறை படித்ததும் தவறாக பொருள் கொண்டது நான் தான். ராமதாசின் கோட்டைக்குள் நுழைந்து பிடறியை... என்று ன் சேர்த்து இருந்தீர்கள் என்றால் முதல் முறையே புரிந்திருக்கும்.
ReplyDeleteநீங்க குறும்பன் அல்ல. விரும்பன் தான். ஆமாம். இனி சற்று கவனம் செலுத்துகிறேன்.
ReplyDeleteஆகாய மனிதன் எப்டிங்க இப்படியெல்லாம்? போச்சு நீங்க கொடுத்த இந்த வாசகத்தை எவராவது திருடி விடப் போகிறார்கள். உரிமை வாங்கி வைத்துக் கொள்ளுங்க.
தெகா சோனியா முதல் பதிவு எழுதிய 24 மணி நேரத்தில் என் வாக்கு பலித்து விட்டது பாத்தீயளா? கலைஞரைப் பற்றி நான் உங்களிடம் எப்போது சொல்லிக் கொண்டிருப்பது இது தான். மனிதர் இறப்பு வரைக்கும் பலருக்கும் பிரச்சனை தான்.
இல்லை செந்தில். இதை வேறு விதமாக யோசித்துப் பார்க்கலாம். ஆமாப்பா... நர்ன் இப்படித்தான் என்று தொடக்கம் முதலே தன்னை வெளிப்படையாக விஜயகாந்த் காட்டிக் கொள்வது பாராட்டத்தக்கது தானே?
இரவு வானம் சுரேஷ். மைனஸ் ஓட்டு என்றால் எப்போது தாக்கம் அதிகம் என்று அர்த்தம்.
விந்தை மனிதன். என்னத்த நீங்க நக்கல் விட்டாலும் கில்லி மாதிரி கடைசி வரைக்கும் ஒவ்வொருவர் கண்ணிலும் விரல் விடடு ஆட்டு விட்ட விசயகாந்த் ஆச்சரிய மனிதரே. புரட்சி பொர்ச்சி நல்லாத்தானே இருக்கு. அம்மாவாசை அன்று காலை முதல் இரவு வரைக்கும் ஊடக மக்கள் வட திண்டாடிப் போய்விட்டார்களாம். நடக்குமா? வருவாரா? எப்போது? என்று அங்கங்கங்கே காத்து இருந்தார்களாம்.
வருக சென்னை பித்தன், ஹேமா, வினோத், திருநாவுக்கரசு, சதிஷ்குமார், விக்கி உலகம், செந்தில்குமார்.
ReplyDeleteதவறு
ReplyDeleteகடந்த ஆறு மாதத்தில் உயர்ந்த பெட்ரோல் விலையைப் பார்த்து எவருக்கும் கோபம் வரவில்லை. கடந்த ஒரு வருடமாக தமிழ்நாட்டில் நிலவும் மின் வெட்டு காரணமாக உருவாகிக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் கூட பொது மக்களை யோசிக்க வைக்கவில்லை. இதை விட ஆட்சியாளர்களுக்கு வேறென்ன வேண்டும்.
அரசியல் தலைகள் இவ்வாறு சொல்வார்கள்.
நமக்கு வாய்த்த அடிமைகள் திறமைசாலிகள்.
சிவா நீங்க சொன்னது முற்றிலும் சரியே. பொருந்தா காதல் போல விரும்பாத கூட்டணி. உள் ஒன்று புறம் ஒன்று. முடிவு விரைவில்.எம் எல் ஏ விலை பொறுத்து எல்லாமே மாறும்.
ReplyDeleteதமிழ் உதயம்.
நினைக்க ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் டெல்லி லாபிக்கு விஜயகாந்த் க்கு சரியான நபர்கள் அமைய வேண்டும். பார்க்கலாம்.
அமுதா கிருஷ்ணன்
உங்கள் நம்பிக்கைக்கு வாழ்த்துகள். இது போன்ற ஆயிரக்கணக்கான நம்பிக்கைகள் கொண்ட ஜெயலலிதாவை ஏதாவது காப்பாற்றியதா?
தொடங்கி வைத்தமைக்கு நன்றி தங்கராஜ.
ReplyDeleteரவி உங்கள் விமர்சனத்தை பார்த்து இதையே தலைப்பாக வைத்து இருக்கலாமோ என்று தோன்றியது.
ராமலிங்கம்
பீதியை கௌப்பாதீங்க..........
விஜயகாந்தின் பழைய படங்களைப் பார்த்தால் அந்த வெண்திரையில் விஜயகாந்த சிரித்தால் அந்த பற்கள் மட்டும் கொஞ்சம் வெள்ளையாக தெரியும். நடிகர் விஜய் அப்பா எஸ்.ஏ.சி க்கும் நண்பர் இப்றாகிம் ராவுத்தருக்கும் தான் விஜயகாந்த் காலம் முழுக்க நன்றி சொல்ல வேண்டும். கதாநாயகனுக்கு உரிய எந்த அங்கலட்சணமும் இல்லாமல், இன்று வரையிலும் தமிழ் உச்சரிப்பு கூட சரியாக பேச முடியாமல், தொப்புளில் பம்பரம் விட்டு கலைச்சேவை செய்து இன்று நாட்டுக்கு சேவை செய்ய வந்து இருக்கும் இவரின் சேவையை யார் உணர்ந்தார்களோ இல்லையோ விருத்தாச்சலம் தலித் மக்கள் கொடுத்த ஆதரவு மகத்தானது.
ReplyDelete///////////////
.
.
ஆமாய்ய அப்போ கொசு தனுஷை விட விஜயகாந்த் எவ்வளவோ பரவாயில்ல!அப்புறம் ரஜினி பெரிய அழகனா?சொல்லு பாப்போம்.!!!கேப்டன் பிரபாகரன் படமெல்லாம் இவுரு நல்லாத்தான் இருப்பாரு.பழைய படத்துல கமல் கூட பள்ளி மாரிதான் இருப்பான்.அதையும் சொல்லேன்.அப்புறம் கோர்வையா பேசுறது கருணாநிதி ஊற ஏமாத்துனான்.அண்ணா பெரியார் கம்முனார்ரிகள் ஹிந்து மதத்த மட்டும் எதிர்த்த So called நாத்திகர்கள்.அவனுங்கலஎல்லாம் விட இவுரு பரவாயில்ல .நீ சாத்து
விரிவான அலசல். இன்னும் கூர்மைப் படுத்தலாமே!
ReplyDeleteகேப்டன் பற்றி இதோ ஒரு பதிவு.
"கேப்டன் கேடட் ஆன கதை!"
http://hooraan.blogspot.com/2011/03/blog-post_06.html
சபாஷ் ...... ஆனால் சில நேரங்களில் அனுபவம்,அடக்குமுறையை விட சாமர்த்தியம் ஜெயிக்கும் என்பார்கள் ....அவ்விதத்தில் கேப்டன் வலம் வருவார் என்றே தோன்றுகிறது அவருடைய அரசியல் பாணி என்னவென்று தெரியாமல் இருந்தாலும் அவருக்குள் ஒரு மிருகம் விழித்துக்கொண்டே இருக்கிறது என்பதை அவரின் பேச்சில் தெரிகிறது
ReplyDelete\
எதுவாகினும் மக்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு கொள்ளை ,அராஜகம் இல்லா ஆட்சி அமைந்தால் நல்லதே .......
(அரசியலுக்கு நிறம், கலை ,லச்சணம் தேவையில்லை ஜோதி ஜி அவர்களே)
http://buildappu.blogspot.com
ReplyDeleteRaja
ReplyDeleteஎன்ன ரொம்ப போவப்பட்டு விட்டீங்க போலிருக்கே. நான் மேம்போக்கா சொன்னதுக்கே இத்தனை சங்கடப்பட்டா இவரு இன்னமும் எத்தனையோ விமர்சனங்களை தாண்டி மேலே வர வேண்டுமே? அப்புறம் அனானி ரூபத்தில் வராமல் பெயர் ஒன்று கொடுத்தமைக்கு நன்றிங்க.
படித்தேன் ஊரான். நன்றி.
மக்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு கொள்ளை ,அராஜகம் இல்லா ஆட்சி அமைந்தால் நல்லதே ....... சுந்தர் நம்பிக்கை தான் வாழ்க்கை. பார்க்கலாம்.
தேர்தல் முடிந்து அடங்கியிருக்கும் இந்த நேரத்தில் உங்கள் கண்ணோட்டத்தை அறிய ஆவல்.
ReplyDelete