அஸ்திவாரம்

Friday, January 28, 2011

திட்டமிடல் கொஞ்சம்... திருட்டுத்தனம் அதிகம்

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வந்தது நாடு பிடிக்க அல்ல. அவர்கள் வணிக நோக்கத்திற்காகவே மட்டுமே உள்ளே வந்தனர்.  ஆனால் அவர்களின் எண்ணத்தை மாற்றியதும் நம்மவரே. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். சாதகமான சூழ்நிலை உருவானது.ஆங்கிலேயர்கள் தங்களை ஆட்சியாளர்களாக மாற்றிக் கொண்டனர்.. 

1600 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சூரத் துறைமுகத்தில் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒரு அடையாளத்தோடு உள்ளே வந்தவர்கள் தான்..  1757 ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வுக்குப் பிறகு தான் பாதை மாறியது. அதன்பிறகே ஆங்கிலேயர்களுக்கு இந்த நாடு பிடிக்கும் ஆசையும் உருவானது.  கிழக்கிந்திய நிறுவனத்தின் மூன்றாவது தலைமுறையினர் இந்தியாவில் வாழ்ந்து கொண்டுருந்த போது தான் பந்தக்கால் நட்டு மனித நரபலி கொடுத்து தங்களின் புனிதப்பணிகளைத் தொடங்கினர். அதன்பிறகே ஆங்கிலேயர்கள் அகண்ட பாரத நிலப்பரப்பை தங்கள் ஆளுமைக்குள் கொண்டு வந்தனர்.  அது வரைக்கும் முழுக்க முழுக்க வியாபாரம் என்ற ஒரே நோக்கத்தில் தான் வாழ்ந்து கொண்டுருந்தனர்.

ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த இங்கிலாந்தில் வாழ்ந்து கொண்டுருந்த வணிகர்களுக்கு இந்தியா குறித்து ஏராளமான கனவுகள் இருந்தது. அது உண்மையா? பொய்யா? என்பதை விட அதை நம்பித்தான் இந்தியா வந்தார்கள். இந்திய கடற்கரைகளில், மலையடிவாரங்களில் பெரிய அளவிலான நவரத்தினங்கள் இருக்கிறது..  பாமர மக்களுக்கு அது குறித்து ஒன்றும் தெரியாத காரணத்தினால் அங்கங்கே இறைந்து கிடக்கின்றது என்பது போன்ற பல கதைகள் தான் ஆங்கிலேயர்களை இங்கே கொண்டு வந்து சேர்த்தது. இதற்கு மேலும் மற்றவர்களிடம் வாங்கி விற்பதை விட நேரிடையான வர்த்தக நடவடிக்கைகளிலும் இறங்கித் ஆக வேண்டும் என்று அவர்களின் எண்ணங்கள் இந்தியாவிற்கு வர காரணமாக இருந்தது.

கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாளராக முதன் முதலாக இந்தியாவிற்குள் உள்ளே வந்த காப்டன் வில்லியம் ஹாக்கின்ஸ் மன்னர் ஜஹாங்கிரை ஆக்ரா அரண்மனையில் போய் சந்தித்த போது மயங்கி விழாத குறையாக நின்றார். தான் காண்பது கனவா? என்பது போல திகைத்து நின்றார். ஜஹாங்கீர் அரண்மனையில் கண்ட காட்சிகள், ஆடம்பரங்களைப் பார்த்து தன்னை கிள்ளிப் பார்த்துருக்கக்கூடும். சுருங்கச் சொன்னால் கிரேட் பிரிட்டன் என்று சொல்லப்படும் இங்கிலாந்து நாட்டின் அரசியை வலிமை வாய்ந்த மன்னர் ஜஹாங்கீருடன் ஒப்பிட்டால் ஒரு சிற்றரசி என்ற நிலைக்குத் தான் கொண்டுவரமுடியும்.  

பம்பாய்க்கு வடக்கே உள்ள பகுதிகளில் கிழக்கிந்திய கம்பெனிக்கு பண்டகசாலைகள் கட்டிக்கொள்ளவும், வியாபாரம் செய்து கொள்ளவும் மன்னர் அனுமதி வழங்க மிகக் குறுகிய காலத்திற்குள் கிழக்கிந்திய நிறுவனம் முன்னங்கால் பாய்ச்சலில் முன்னேறத் தொடங்கியது.  இவர்கள் ஜெயித்த கதைக்கு மற்றொரு காரணமும் உண்டு. இதற்கு முன்னால் இந்தியாவுடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்த ஸ்பானிஸ், பிரான்ஸ் மற்றும் பல மேலைநாட்டு வியாபாரிகள் தாங்கள் செய்து வந்து வியாபாரத்துடன வேறு சில காரியங்களையும் செய்து வந்தனர்.   நாகரிகமில்லாத மக்களை மிரட்டுவது, மதம் மாற்றுவது, வாங்கும் பொருட்களுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றுவது, அழைத்துச் சென்று வேறு பகுதிகளில் கொண்டு போய் விட்டு விடுவது போன்ற எந்த தில்லாலங்கடி வேலைகளை கிழக்கிந்திய நிறுவனம் செய்யவில்லை என்பதை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.

உழைப்பு, வியாபாரம்.... பணம்......லாபம்......... லாபம்.... என்று போய்க் கொண்டுருந்த பாதை கிழக்கிந்திய நிறுவனத்திற்கு குறுகிய காலத்திற்குள் 200 சதவிகித லாபத்தை தரத் தொடங்கியது.  மாதத்திற்கு இரண்டு கப்பல்களில் அனுப்பும் அளவிற்கு (மிளகு, வாசனைத்திரவியங்கள்....) வெகு விரைவாக தடம் பிடித்து முன்னேறத் தொடங்கினர்.


அப்போது இந்தியாவை ஆண்டு கொண்டுருந்த ஏராளமான மன்னர்கள், நவாபுகள், சுல்தான்கள், சிற்றரசர்கள் போன்ற அத்தனை பேர்களும் வெள்ளையர்கள் எந்த பகுதிக்குச் சென்றாலும் இரத்தினக்கம்பளம் வரவேற்காத குறையாக அன்போடு உபசரிக்க அதுவே இவர்களுக்கு லாபத்தையும் அட்டகாச வாழ்க்கை வசதிகளையும் தரத் தொடங்கியது. அப்போது தான் அடுத்த கட்ட நகர்வுக்கு நகரத் தொடங்கினர்.  பம்பாயில் தொடங்கியவர்கள் அடுத்தடுத்து கல்கத்தா,சென்னை,கேரளா போன்ற இந்தியாவின் சகல பகுதிகளுக்கும் தங்கள் நிர்வாகத்தை கொண்டு செலுத்த ஆரம்பித்தனர். கிழக்கிந்திய நிறுவனம் வளர வளர ஒவ்வொரு காலகட்டத்திலும் பணிபுரிய உள்ளே வரும் ஆங்கிலேயர்களின் எண்ணிக்கையும் அதிகமாகத் தொடங்கியது.வந்தவர்களின் அடுத்த தலைமுறைகளும் உள்ளே வர ஒரு சங்கிலி இயல்பாகவே உருவாகத் தொடங்கியது. இவர்களுக்கு போட்டியாளர்களாக இருந்த மற்ற நாட்டு வணிகர்களை விட ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் எல்லாவிதங்களிலும் மேலோங்கியிருந்தது.

கிழக்கிந்திய நிறுவனத்தின் மூன்றாவது தலைமுறையினர் இந்தியாவில் எப்போதும் போல தங்களின் வியாபாரத்தில் மட்டும் குறியாய் இருக்க பகவான் தன்னுடைய திருவிளையாடலைத் தொடங்கினார்.  

இந்தியாவிற்குள் வாழ்ந்து கொண்டுருந்த மன்னர்கள், நவாபுகள், சுல்தான்கள் போன்றவர்களிடம் எப்போதும் ஏதோவொரு வகையில் சிறுசிறு சச்சரவுகள் இருப்பது வாடிக்கையாகவே இருந்தது. இவனுக்கு அவனை பிடிக்காது. அவனுக்கு இவனை பிடிக்காது.இது போன்ற சமயங்களில் தான் ஆங்கிலேயர்கள் நாட்டாமையாக உள்ளே புகத் தொடங்கினர். நன்றாக கவனித்துக் கொள்ளவும். அப்போதைய சூழ்நிலையில் கூட ஆங்கிலேயர்கள் தானாக மூக்கை நுழைக்கவில்லை.. சூழ்நிலைதான அவர்களை உள்ளே கொண்டு போய் நிறுத்தியது. காரணம் தங்களின் வணிக நிறுவனத்தின் பாதுகாப்புக்காக ஆங்கிலேயர்கள் அந்தந்த பகுதிகளில் சிறிய அளவில் பாதுகாப்பு படையினரை வைத்திருந்தனர்.

உள்ளே இருப்பவர்களுக்கிடையே நடக்கும் சண்டைகளில் யார் பக்கம் ஆங்கிலேயர்கள் சாய்கிறார்களோ அவ்ர்களே ஜெயிக்கும் நிலை உருவாக வேறென்ன வேண்டும்?.  வெள்ளையர்களுக்கு ராஜமரியாதை தான். ஆங்கிலேயர்கள் ஆதரவு கொடுத்த மன்னர்கள், சுல்தான்கள் அன்பளிப்பாக கொடுத்த நிலப்பகுதி சிறிது சிறிதாக அதிகமாகிக் கொண்டுவர ஆங்கிலேர்களின் ஆதிக்கத்திற்குள் வரும் நிலப்பரப்பின் அளவும் அதிகமாகிக் கொண்டுந்தது. 

இப்படித்தான் இந்திய துணைக்கண்டத்தில் பல பகுதிகள் ஆங்கிலேர்களின் கைக்கு வந்தது. இந்த பகுதிகளில் நடக்கும் பல சண்டைகளில் இவர்களே முடிவெடுத்து சம்மந்தப்பட்ட கிளர்ச்சியாளர்களை அடக்கும் வரை முன்னேறிக் கொண்டுருந்தார்கள். சம்மந்தப்பட்ட மன்னர்களுக்கு பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும். இவர்களுக்கு இதன் பலனாக கைமேல் கூலி. அப்போது தான் ஆங்கிலேயர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர்.  யோசிக்கத் துவங்கினர்.

"உள்ளேயிருப்பவர்கள் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள். எப்போதும் ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு சண்டை நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அனுசரித்துப் போகவும் தயாராய் இல்லை. நம்மை நம்பத் தயாராக இருக்கிறார்கள்"  என்பதை உணர்ந்த கிழக்கிந்திய நிறுவனம் முதன் முறையாக தங்கள் அதிகாரத்தில் உள்ள பகுதிகளுக்கு கவர்னர் போன்ற பதவியை உருவாக்கி இங்கிலாந்தில் இருந்து தகுதி வாய்ந்த வெள்ளையர்களை இறக்குமதி செய்ய இயல்பாகவே கட்டமைப்பு உருவாகத் தொடங்கியது. அப்புறமென்ன? ஆட்டம் பாட்டாம் கொண்டாட்டம் தான்.

அதிகார சுகமென்பது உலகில் அத்தனையும் விட மேலானது.

கிழக்கிந்திய நிறுவனம் இந்தியாவின் உள்ளே நுழைந்து 150 ஆண்டுகள் முடிவடைந்த போது 1757 ஜுன் மாதம் 27 ஆம் நாள் ராபர்ட் கிளைவ் என்ற பிரிட்டிஷ் ஜெனரல் தலைமையில் கொட்டும் மழையில் நனைந்து கொண்டு ஒரு கோரத்தாண்டவத்தை நடத்திக் காட்டினான். 900 முறைப்படி பயிற்சி பெற்ற பிரிட்டிஷ் படைவீரர்களுடன், 2000 இந்திய சிப்பாயக்ளும் சேர்ந்து வங்காளத்தில் பிளாசி என்ற இடத்தில் தங்கள் விஸ்தரிப்புக்கு இடைவிடாது தொல்லை கொடுத்துக் கொண்டுருந்த ஒரு நவாபு படையை அடியோடு அழித்து நிர்மூலமாக்கினான்..

இந்தவொரு வெற்றியே ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியை இந்தியா முழுக்க கொண்டு வரமுடியும் என்ற நம்பிக்கை விதையை விதைத்தது. இந்தியாவில் ஒவ்வொரு பகுதியாக வந்து கொண்டுருந்தவர்கள் இதன் தொடர்ச்சியாகத்தான் பக்கத்தில் உள்ள ஈழத்திற்குள்ளும் கால் வைத்து அங்கேயும் வெற்றிக் கொடியை நாட்டினார்கள். இவர்கள் ஆளுமைக்குள் இருந்த நாம் பார்கக வேண்டிய இராமநாதபுரம் என்றொரு மாவட்ட நிர்வாகத்தை ஆங்கிலேயர்கள் உருவாக்கிய ஆண்டு 1910.

மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் இன்றைய திருநெல்வேலி மாவட்டம் கூட இந்த இராமநாதபுரம் மாவட்டத்தின் எல்லைக்குள் தான் தொடக்கத்தில் இருந்தது..

1757 முதல் தொடங்கிய இவர்களின் புனிதப்பணியை முடித்து வைக்க நம் தலைவர்களுக்கு 1947 வரைக்கும் உழைக்க வேண்டியதாகி விட்டது. 

பின்குறிப்பு..(.அல்லது ) காலம் செய்த கோலம்...


லண்டன் கிழக்கிந்திய கம்பெனியை லண்டனில் வசிக்கும் இந்தியத் தொழிலதிபர் சஞ்சீவ் மேத்தா வாங்கியுள்ளார்.
ஒருகாலத்தில் உலக அளவில் கொடிகட்டிப் பறந்த கிழக்கிந்திய கம்பெனி, இப்போது லண்டனில் சிறிய அளவில் செயல்பட்டு வருகிறது. இதனை 2005-ம் ஆண்டிலேயே வாங்கியுள்ள சஞ்சீவ் மேத்தா, இப்போது கிழக்கிந்திய கம்பெனியின் பெயரில் மீண்டும் புதிதாக  வணிகத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளது: நான் மும்பையைச் சேர்ந்தவன். 20 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டனுக்கு வந்துவிட்டேன். 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த அனைவரால் அறியப்பட்ட கிழக்கிந்திய கம்பெனியை வாங்கி நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தியர் ஒருவரே இப்போது கிழக்கிந்திய கம்பெனியின் உரிமையாளர் என்பது சிறப்பான விஷயம். இந்தப் பெயரில் தொழிலை பெரிய அளவில் நடத்தவுள்ளேன் என்றார் அவர்.
கிழக்கிந்திய கம்பெனி 1600-ல் தொடங்கப்பட்டது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வணிகம் மேற்கொண்ட அந்த நிறுவனம், பிற்காலத்தில் அந்தநாடுகளையே அடிமைப்படுத்தியது. தனக்கென்று தனி ராணுவம், பணம் என பிற நாடுகளில் ஆதிக்கம் செலுத்தியது. 1874-ல் இந்த நிறுவனம் பிரிட்டனின் அரசுடமை ஆக்கப்பட்டது. ( நன்றி NKL 4U )

19 comments:

  1. அண்ணே .. பக்காவான லே அவுட்.. சரியான படங்கள்.. நல்ல மொழி பெயர்ப்பு.. நல்ல சிந்தனைகள்..

    ReplyDelete
  2. நம்மால் நாம் கெட்டோம்

    ReplyDelete
  3. எளிதில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் அருமையான பதிவு.

    இனிய பாராட்டுகள்.

    ReplyDelete
  4. உண்மை. நூற்றுக்கு நூறு உண்மை. வெள்ளையர்களை விரட்டி விட்டு கொள்ளையர்களை ஆட்சி பீடத்தில் அமர வைத்திருக்கிறோம். காந்திஜியின் இந்திய சுயராஜ்ஜியம் என்னும் நூலைப் படித்தால் ஆங்கிலேயர்கள் நம்மை அடிமை கொள்ளவில்லை. நாம் தான் அவர்களுக்கு போட்டிபோட்டுக் கொண்டு காட்டி கொடுத்து நம்மை நாமே அடிமையாக்கிக் கொண்டோம் என்பதை காணலாம்.

    ReplyDelete
  5. Ashvinji said...

    உண்மை. நூற்றுக்கு நூறு உண்மை. வெள்ளையர்களை விரட்டி விட்டு கொள்ளையர்களை ஆட்சி பீடத்தில் அமர வைத்திருக்கிறோம். காந்திஜியின் இந்திய சுயராஜ்ஜியம் என்னும் நூலைப் படித்தால் ஆங்கிலேயர்கள் நம்மை அடிமை கொள்ளவில்லை. நாம் தான் அவர்களுக்கு போட்டிபோட்டுக் கொண்டு காட்டி கொடுத்து நம்மை நாமே அடிமையாக்கிக் கொண்டோம் என்பதை காணலாம்.


    ..... I was going to say similar thing....This comment got it right. :-)

    ReplyDelete
  6. ஜஹாங்கீர் காலத்தில் தொடங்கியது இது. போர்த்துக்கீசியர்களுக்கும் பிரிட்டிஷர்சுக்கும் இடையேயான மோதல், பிரிட்டிஷாரை பலப்படுத்தியது. ஆட்சி அமைக்கும் ஆசையையும் தந்தது.

    ReplyDelete
  7. நல்ல சிந்தனைகள்.அருமையான பதிவு.

    ReplyDelete
  8. ஒரு நல்ல சிறுகதையின் உத்தி என்ன சொல்ல வருகிறோமோ அதனை வெளிப்படையாகச் சொல்லாமல் அதற்கான சிந்தனையை மட்டும் தூண்டிவிட்டுச் செல்வதாக இருக்கவேண்டும் என்பார்கள். உங்கள் கட்டுரையும் அதைத்தான் செய்கிறது.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. அமுதவன் யோசிக்க வைத்த விமர்சனம். நன்றி.

    வருக ஆயிஷா. சித்ரா

    பின்னோக்கி நலமா? வெகுநாளைக்குப்பிறகு?

    நன்றி டீச்சர். இன்னும் மேலே மேலே வந்துவிடுவேன்..............

    உருத்திரா கருத்தான விமர்சனம்.

    செந்தில் வருகைபதிவா?

    அஷ்வின்ஜி உங்கள் விமர்சனத்தை விட குறிப்பிட்ட புத்தகத்திற்கு நன்றி.

    ReplyDelete
  10. ஜோதிஜி,

    ஏனோ தெரியவில்லை 'Black Diamond' திரைப்படம் பார்த்தது ஞாபகம் வந்தது.

    மொத்தத்தில் வந்தார்கள், வளங்களை சுரண்டினார்கள், சென்றார்கள் மன்னா!!

    அப்போ சுதந்திரத்தை பறித்து சுரண்டினார்கள். இப்போ சுதந்திரம் கொடுத்து சுரண்டுவார்கள், உ-ம்- தெற்கு சூடான்.

    ReplyDelete
  11. கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாளராக முதன் முதலாக இந்தியாவிற்குள் உள்ளே வந்த காப்டன் வில்லியம் ஹாக்கின்ஸ் மன்னர் ஜஹாங்கிரை ஆக்ரா அரண்மனையில் போய் சந்தித்த போது மயங்கி விழாத குறையாக நின்றார்.
    /////////////////////////
    அந்த சந்திப்பின் பிறகு மன்னர் மது மயக்கத்தில் மயங்கியபடியே இருந்தார் என்று கேள்வி. மன்னருக்கு ஊத்தி கொடுத்துத்தான் வியாபார ஒப்பந்தமே போடப்பட்டது. சாராய வியாபாரத்தால் சாம்ராஜ்யத்தை பிடிக்க முடியும் என்று நிருபித்தவர்கள் ஆங்கிலேயர்கள். தொடரட்டும் நண்பரே!...

    ReplyDelete
  12. நல்ல கட்டுரைஜி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. தமிழன்பன் இந்த மன்னர் மட்டுமல்ல பொதுவாக பெரும்பாலானவர்கள் எல்லோருமே போததை வஸ்து பிரியர்களாகத்தான் இருந்தார்கள். உங்களுக்கு மட்டும் ஒரு துணுக்குச் செய்தி. மன்னர் கேப்டனுக்கு கொடுத்த பரிசு தனது அந்தப்புரத்தில் இருந்த ஆர்மீனிய அழகி.

    நன்றி சங்கரி தராபுரத்தான் அய்யா இப்ப நீங்க எழுதுவதை விட படிப்பதில் தான் அதிகம் கவனம் செலுத்துறீங்க..

    ReplyDelete
  14. சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

    தமிழன் ஒரு இளிச்சவாயன். ‍ ஜடம்.>

    ..

    ReplyDelete
  15. திரும்பத் திரும்ப படித்தேன்
    அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய
    நல்ல பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. எளிமை...எளிமை..என்னுள் புகுந்து வரலாறாய் பதிந்தது.

    ReplyDelete
  17. நல்லா போய்க்கிட்டு இருக்குண்ணே....!

    ReplyDelete
  18. in 1910, Ramanathapuram was formed by clubbing portions from Madurai and Tirunelveli district. This district was named Ramanathapuram. During the British period this district was called "Ramnad".

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.