"ஞாயிற்றுக்கிழமைன்னா கூட கொஞ்சம் நேரம் தூங்கவாங்கன்னு பேரு. இன்றைக்கும் காலையில சீக்கிரம் எந்திரிக்கனுமா? ஏன் தான் இப்படி இருக்கீகளோ?"
இது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் வீட்டில் கேட்கும் சுப்ரபாதம். ஆனால் இன்றைய காலைப்பொழுதில் நம்ம காட்டுப்பயபுள்ள தெகா இந்த காணொளியை அனுப்பி உரையாட மற்ற வேலைகள் மறந்து ஒரு மணி நேரம் உள்ளத்தில் உள்ள அத்தனை உணர்ச்சிகளையும் பதம் பார்க்க வைத்து விட்டது. மகேந்திரன் எட்டப்பராசனுக்கு நன்றி..
"வைகோ ஈழம் குறித்து ஒரு ஆவணப் படம் இயக்கியுள்ளார். அது வருகின்ற தேர்தலுக்கு வெளியே வரும். ஆளுங்கட்சிக்கு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கும்" போன்ற செய்திகளை நான் தினசரிகளில் தொடர்ந்து படித்துக் கொண்டே வந்த விசயமாகும். மனதிற்குள் வியப்பாக் இருந்து. ஒருவேளை பிரபாகரனை சந்திக்க வைகோ சென்றாரே? என் வாழ்நாளில் முக்கிய தருணங்கள் என்று சந்தோஷப்பட்ட நிகழ்வாக இருக்குமோ என்று நினைத்து இருந்தேன். ஆனால் ஓரளவுக்கு சொல்லக்கூடிய அளவில் ஒரு காரியத்தை வைகோ செய்துள்ளார். ஈழத்தின் தொடக்கம் முதல் சம காலம் வரைக்கும் உள்ள விசயங்களை இந்த ஐந்து காணொளி மூலமாக விளக்கியுள்ளார். ஒவ்வொன்றும் ஏறக்குறைய 14 நிமிடங்கள் ஓடுகின்றது.
இடையில் இயக்குநர் பாரதிராஜா கூட ஈழம் குறித்து ஒரு படம் எடுப்பேன் என்று சொல்லி செய்திகளில் இடம் பிடித்துவிட்டு மறந்து போனார். மணிரத்னம் எப்போதும் போல அவர் பாணியில் சொல்லி விட்டு ஈழத்தைப் பற்றி மனதில் இருந்த கொஞ்ச விசயங்களையும் மறந்தும் போகும் அளவிற்கு திரைப்பட புரிந்துணர்வை உருவாக்கி அவரும் நகர்ந்துவிட்டார். இடையில் ஈழம் சார்ந்து வந்த பல படங்கள் சென்சாரில் மூச்சு வாங்க ஒவ்வொருவரும் யோசிக்க இன்று தமிழ்நாட்டில் படித்த தமிழர்களின் இளைஞர்களின் எண்ணங்களில் கூட ஈழ அவலங்கள் ஒரு செய்தியாகவே உள்ளது.
சென்ற தேர்தலில் "மக்கள் தொலைக்காட்சி" ஈழத்தை ஒரு ஆயுதமாகவே எடுத்து விடாது போராடிப் பார்த்தார்கள். இப்போது சீமான.
பினாயில் கூட இலவசமாக கிடைத்து விடாதா? என்று ஏக்கம் நிறைந்த தமிழ்நாட்டு தமிழர்களுக்கு இது போன்ற விசயங்கள் முக்கியமல்ல. இந்த காணொளியை நிச்சயம் தேர்தல் சமயத்தில் அனுமதிப்பது என்பது எதிர்பார்கக முடியாத ஒன்று. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இதைப் பாருங்கள்.
உண்மையிலேயே பிரபாகரனுக்கு ஒரு ஆன்டன் பாலசிங்கம் அமைந்தது போல வைகோவும் மற்றொரு குறிப்பிடத்தக்க ஆளுமைதான். நெடுமாறன் அய்யா கூட தனது பணியை இந்தியாவிற்குள் நிறுத்திக் கொண்டார். சர்வதேச சமூகத்திடம் ஈழ மக்களுக்காக வைகோ முன்னெடுத்துச் சென்ற பல விசயங்களை இதன் மூலம் தான் என்னால் உணர முடிந்தது.
ஆனால் தமிழ்நாட்டில் இவரைப் போன்றவர்கள் சென்று இருக்க வேண்டிய தூரம் இதுவல்ல. வருத்தமாக உள்ளது. வாழ்ந்து கெட்டவனின் அவல வாழ்க்கையைப் போல இவரின் இன்றைய அரசியல் வாழ்க்கை அமைந்துள்ளது. .
ஈழத்தைப் பற்றி முழுமையாக புரிய வேண்டுமென்றால் நிச்சயம் 100 மணி நேரம் ஓடக்கூடியதாய் இருந்தாலும் அது பாதி அளவுக்குக்கூட இருக்காது. காரணம் ஒவ்வொரு விசயத்திற்குப் பின்னாலும் உள்ள ஓராயிரம் அரசியல் மர்மங்கள் நிறைந்த விசயங்களை ஒரு குறுந்தகடுக்குள் கொண்டு வருவது அத்தனை எளிதா என்ன?
ஈழ வரலாறு குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்கள், தலையணை அளவு உள்ள புத்தகங்களை படிக்க வாய்ப்பில்லாதவர்களுக்கு இந்த காணொளி உதவியாய் இருக்கும். மூன்றாவது காணொளியில் சமகாலத்தில் நடந்த போர் அவலங்களை காணும் போது நாம் வாழ்வது நாகரிக சமூகத்தில் தானா? என்றொரு இயல்பான கேள்வி எழுவதை தவிர்க்கமுடியவில்லை. இதில் வைகோ ஒரு இடத்தில் சொல்லும் வாசகம் குறிப்பிட்டத்தக்கது.
" நான் முறையாக வரலாறு படித்தவன். உலகில் எவராலும் மறுக்க முடியாத மாவீரன் பிரபாகரன். எந்த நாட்டின் உதவியும் இல்லாமல், ஆதரவும் இல்லாமல் சர்வதேச இக்கட்டுக்களைத்தாண்டியும் தன் போராட்டத்தை முறைப்படி கொண்டு வந்து பல போர்த்தந்திரங்களை உருவாக்கி சர்வதேச சமூகத்திற்கு ஆச்சரியமளித்தவர்"
" இந்தியா பாகிஸ்தான் பகைநாடு. இருவரின் பங்களிப்பும் இறுதிக்கட்ட யுத்தத்தில் இருந்தது. இஸ்ரேல் ஈரான் நட்பு நாடல்ல. ஆனால் ஒருவர் விமானங்கள் கொடுக்க மற்றொருவர் குண்டுகள் அழிக்க அழிந்தது தமிழ் சமூகம். ரஷ்யா சீனா எதிரெதிர் முனைகள். ஆனால் இந்த துருவங்கள் மறக்க முடியாத அவலத்தை செய்து முடிக்க ஒன்று சேர்ந்தார்கள்.."
ஆனால் இந்த போர்க்குற்றவாளி ராஜபக்ஷேயை இன்று வெற்றித்திருமகன் என்ற உதாரண வரிசையில் இந்திய அரசாங்கம் உடுமலைப்பேட்டையில் உள்ள சைனிக் பள்ளிக்கூடம் வரைக்கும் கொண்டு வந்து சேர்த்துள்ளது. அப்ப தமிழ்நாட்டு அரசாங்கம்?
இயல்பாகவே அதிக உணர்ச்சியில் குரல் உயரும் வைகோவுக்கு இந்த காணொளியில் பல இடங்களில் குரல் நெகிழ்ச்சியில் தழுதழுக்கின்றது.
இராமேஸ்வரத்திலிருந்து அரை மணி நேரத்தில் சென்று விடக்கூடிய தொலைவில் இருக்கும் ஈழம் இன்று வரைக்கும் என்ன சாபத்தை பெற்று இருக்குதோ? கடற்கரையில் இருக்கும் "சாமி"க்கும் அருள் கொடுக்க நேரமில்லை. தமிழ்நாட்டில் இந்தியாவில் இருக்கும் "ஆமாம்சாமி"களுக்கும் இன்று வரைக்கும் மனமும் மாறுவதாகத் தெரியவில்லை..
இதில் வைகோ சொல்லாத விசயங்கள் பல உண்டு. மறைக்கப்பட்ட உண்மைகள் ஒரு நாள் வெளியே வரும்.
ஜோதிஜி, எதனை சொல்வது எதனை விடுவது என்ற வாக்கில் என் மன நிலை இப்பொழுது இருக்கிறது. என்னால் மூன்றாம் பகுதி பார்க்க முடியவில்லை. விம்மி வெடித்தே விட்டேன்!
ReplyDeleteயாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று காத்திருக்கும் போதுதான் உங்களைக் கண்டேன். என்ன வேல நீங்க பார்த்திட்டு இருந்தாலும், இதனை பார்க்க வேண்டுமென்றுதான் உடனே நேரங்கெட்ட நேரத்தில கூட உங்களுக்கு இணைப்பை கொடுத்தேன். சாரியெல்லாம் கேக்கப் போறதில்ல! ஒவ்வொரு தமிழ் பேசுற, இன்னமும் கொஞ்சமாவது மனசாட்சி இருக்குங்கிறவங்க, புள்ள குட்டிகளோட வாழ்ந்திட்டு இருக்கிற ஒவ்வொரு ஆளும் நல்லா கண்ண முழிச்சு நாம் வாழ்ந்திட்டு இருக்கிற இந்த சமகாலத்தில ‘அம்மா’னு சொல்லுற நம்ம சக பிள்ளைங்களுக்கு என்ன நடந்திருக்கின்னு தெரிஞ்சிக்கணும்.
ஆயிரம் சொல்லுங்க வைகோ மனசளவில நல்ல மனுசன்! ஈரம் நிறைய!!
வைகோ என்ற நல்ல மனிதனிக்கு தலைவணங்குகிறேன்.காணொலிகளை பார்க்கும் தைரியம் என்னிடம் இல்லை.
ReplyDeleteநானும் இதேபோல் தான் இணையத்தில் வை.கோ பற்றி சொல்லி சில இடங்களில் கிண்டலடிக்கப்பட்டிருக்கிறேன், தெகா.
ReplyDeleteவை.கோ தமிழ்நாட்டு தமிழர்களுக்கு எப்படியோ ஈழத்தமிழர்களுக்காக உண்மையாக உணர்வோடு உருகும் ஓர் அரசியல்வாதி.
அவருடைய ஆளுமைகள் ஏதோ "செஞ்சோற்றுக்கடன்" என்பது போல் தமிழக அரசியலில் ஆக்கப்பட்டுவிட்டது.
ஈழத்தின் இனப்படுகொலையில் காணொளிகளுக்கு பஞ்சமில்லை. நீதிக்குத்தான் தட்டுப்பாடு.
பதிவையும் படிக்கவில்லை. காணொளிகளையும் காணவில்லை. ஆனாலும் இப்பொழுது இதனை (இங்கே) வெளியிட்டிருக்க வேண்டுமா என்று எண்ணுகின்றேன். தேர்தலுக்கான வியூகமாக இந்தக் காணொளிகள் இருப்பின் முன்கூட்டி வெளியிட்டது தவறென்று எண்ணுகின்றேன்.
ReplyDeleteதெகா பின்னூட்டத்தை படித்தபின்பு காணொளிகளை பார்க்கும் திடம் இருப்பது போல் தெரியவில்லை.சிறிது நேரம் கழித்து வருகின்றேன்.
நன்றி தெகா.
ReplyDeleteரதி உங்களின் அற்புதமான ஆழ்ந்த புரிந்துணர்வை உருவாக்கிய விமர்சனம் என்னை ஆச்சரியப்படுத்தியது.
கும்மியாரே என்னுடைய கணக்குப்படி நிச்சயம் விரைவில் இந்திய அரசாங்கம் இந்த வலைபதிவுகளுக்கு ஒரு கடிவாளம் போடும் என்றே கருதுகின்றேன். இப்போது வந்துள்ள தமிழ்நாட்டு தேர்தலுக்கான அதிகாரி கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டுருக்கிறார். அவர் கணக்குப்படி மொத்த அதிகார வர்க்கத்தினரையும் கூண்டோடு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு வெகு தொலைவுக்கு மாற்றும் முயற்சியில் இருப்பதாக தகவல் வந்தது. காரணம் இந்த முறை பணம் அந்த அளவுக்கு புழங்கப் போகின்றது.
அதன் அடிப்படையில் இந்த ஊடகம் சார்ந்த விசயங்களையும் விட்டு வைக்க மாட்டார்கள் என்றே நினைக்கின்றேன். அதை கருத்தில் கொண்டே இப்போதே இதை வெளியிட்டு வைத்தேன்.
காணொலிகளை பார்க்கும் தைரியம் என்னிடம் இல்லை.
ReplyDeleteஉண்மைதான் நண்பா?
ஆனால் போரில் தங்கள் சொந்தங்களை அப்பா அம்மா சகோதர சகோதரிகளை இழந்தவர்களின் மனநிலை எப்படியிருக்கும். பள்ளிக்கூடத்தில் உள்ள பிஞ்சுகள் என்ன பாவம் செய்து இருக்கும்? பதுங்கு குழியில் நடுநடுங்கிக் கொண்டுருக்கும் அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?
நாம் எத்தனை புண்ணிய ஆத்மாக்கள்? சர்வ தேச சமூகத்தில் உள்ள அத்தனை தலைகளின் கண்களிலும் இன்று வரைக்கும் விரல் விட்டு ஆட்டிக் கொண்டுருக்கும் நம்ம துண்டு பார்ட்டி எப்பேர்பட்ட கில்லாடி பாத்தீகளா?
ஏற்கனவே இங்கிலாந்தில் நல்ல மருவாதை கிடைத்தது. கொடுத்தது. பார்க்கலாம் அமெரிக்கா என்ன மரியாதை கொடுக்கப் போகுதுன்னு?
காணொலிகளை பார்க்கும் தைரியம் என்னிடம் இல்லை
ReplyDeleteகாணொளி பார்க்கும் மனத்திடம் இப்போது இல்லை. என்ன செய்யலாம் இந்த கைய்யறு நிலை நீங்க?
ReplyDeleteசீமான், வைகோ போன்றவர்கள் ஓரணியில் திரண்டு (அ.தி.மு.க அணி அல்ல), இந்தத் தேர்தலை எதிர்கொண்டால் என்ன? குறைந்தபட்சம் நம் எதிர்ப்பை பதிவு செய்ய ஒரு இடம் கிடைக்கும்.
-----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன'2011)
வை.கோ தமிழ்நாட்டு தமிழர்களுக்கு எப்படியோ ஈழத்தமிழர்களுக்காக உண்மையாக உணர்வோடு உருகும் ஓர் அரசியல்வாதி.////
ReplyDeleteரதி சொன்னதையே நானும் சொல்கிறேன். வைகோவை தவிர வேறு யாரையும் நான் தமிழக அரசியலில் நேசிக்கவில்லை. அவரிடம் இருப்பது உண்மை. அதை உண்மையானவர்களால் தான உணர முடியும். மற்றவர்களால் அவரை கேலி தான் பண்ணமுடியும். புலிகள் இயக்கம் ஈழத்தில் இன்று ஒரு சதவிதமேனும் கூட உயிர்ப்புடன் இருந்து இருந்தால் கூட, இன்று தெற்கு சூடானால் கிடைத்துள்ள தமிழிழ அரசுக்கான ஆதரவால் நிறைய விஷயங்கள் நன்மையில் முடிந்திருக்கும். ஆனால்.
@ஜோதிஜி - உங்களின் இந்த பதிவை இங்கு பகிர்ந்துள்ளேன்! http://www.southdreamz.com/2011/01/eelam-inap-padukolai-director-vaiko.html
ReplyDeleteவணக்கமுங்கோ. இதெல்லாம் மெய்யில்லீங்கோ.
ReplyDeleteதமிழகமக்களை வன்முறைக்குத் தூண்டாதீங்கோ
ஜெயமோகன்ஜீயோட உலோகம் படியுங்கோ
கிழக்கும் வெளிக்கும்
வடக்கும் வெளிக்கும்
https://www.nhm.in/shop/978-81-8493-588-2.html
அல்லாரும் தேசியகீதம் பாடுங்கோ
ஜனகணமன லங்கா மாதா
நம் ஸ்ரீ பாரத லங்கா
நமோ நமோ
உத்தல பொத்தல ஜிங்கா
This comment has been removed by the author.
ReplyDeleteஆயிரம் சொல்லுங்க...
ReplyDeleteவைகோ மனசளவில நல்ல மனுசன்.
காலம் வெல்லாமல் கரைந்து போய் விட்டார்.
ஈழ பிரச்சனையை வைகோ ஒருபோதும் தன் அரசியல் லாபத்திற்கு பயன் படுத்திகொண்டதில்லை ..!
ReplyDeleteவைகோ தமிழக அரசியலில் மிகபெரிய அளவில் இன்னும் வெற்றி அடையாமல் இருப்பது வைகோ வின் துரதிஷ்டம் இல்லை . அது தமிழ் மக்களின் துரதிஷ்ட்டம்..!
ராம்ஜி நீங்க தான் கொடுத்த பின்னூட்டத்தை தேவையில்லை என்று நீக்கிட்டீங்களா? மின் அஞ்சலில் உள்ளதை மீண்டும் போடலாமா?
ReplyDeleteஇன்றைக்கு இன்னொரு இந்திய மீனவனும் கொல்லப்பட்டுவிட்டான். இத்தாலி பொம்பளை இந்தியாவை ஆண்டால் இதுதான் இனி நம் அனைவரின் கதியும்.
ReplyDeleteபகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.ஒவ்வொரு தோழரும் இந்த பதிவினை தம் வலைப்பூவில் பதிவு செய்யுங்கள்.தமிழ்மணம் முகப்பில் இந்தப் பதிவு தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.என்னுடைய வேண்டுகோள் இது.உங்களுக்குள் முடிவு செய்து கொள்ளுங்கள்.என்றைக்கோ வலைப்பூ பார்ப்பவர்களுக்கும் இது பார்க்கிற வகையில் எதாவது செய்ய வேண்டும்.அடுத்து இதில் வருகிற காணொளி அப்பட்டமான வன்முறைக் கட்சிகள் என்று யூடியுப் நீக்கும் வாய்ப்பு இருக்கிறது.நண்பர்கள் தொடர்ச்சியாக வேறு காணொளி தரவேற்றும் இணைய தளங்களில் பதிவு செய்து தங்கள் வலைப்போவில் இணைத்தல் பரவாயில்லை எனத் தோன்றுகிறது. இதைப் பார்த்து நாம் அழுவதும்,பின்பு மறந்து போவதுமாக இருக்கும் நிலை இனியும் தொடரக்கூடாது.என் தாழ்மையான வேண்டுகோள் இது தான்.நீங்கள் எந்தக் கட்சியை சார்ந்தவராகவும் இருக்கலாம்,எந்த மொழியாய் தாய்மொழியாகக் கொண்டவராகவும் இருக்கலாம்.சற்று நம்மை மனித நேயமுள்ளவர்களாக சுயநலம் என்ற ஒன்றை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு,சக மனிதரிடம் -அது எந்த மொழிக்காரராக இருப்பினும் சரி,நம் தரப்பு நியாயத்தை எடுத்துரைத்துப் புரியவைக்க வேண்டும்.தமிழராய் ஒன்றுபடுவதையும் விட மனிதராய் ஒன்றுபட வேண்டியது அவசியம்.இன்றைக்குத் தமிழனுக்கு நேர்ந்தது நாளை மலையாளிக்கோ தெலுங்கருக்கோ,கன்னடருக்கோ,ஏன் ஆங்கிலேயருக்கோ கூட ஏற்படலாம்.எனவே உரிமைப் போராட்டம் என்பது தமிழர் போராட்டமாக முடிந்து போவதில் எனக்கு வருத்தமே.மக்களைத் திரட்டுவோம்,விமர்சனங்கள்,குற்றச்சாட்டுகள் எதிரிகளை நோக்கி மட்டுமே இருக்கட்டும்.சரியான இலக்கு நோக்கியதாய் நம் பயணம் இருக்க வேண்டும்.விடுதலை அது மட்டுமே நம் இலக்கு.நன்றிகள்
ReplyDelete//ஆயிரம் சொல்லுங்க...
ReplyDeleteவைகோ மனசளவில நல்ல மனுசன்.
காலம் வெல்லாமல் கரைந்து போய் விட்டார்//
வழிமொழிகிறேன்.
நீண்ட புரிந்துணர்வை உருவாக்கிய மகேந்திரன் உங்களுக்கு நன்றிங்க.
ReplyDeleteநன்றி ராதாகிருஷ்ணன், செந்தில்.
உண்மைதான் தமிழ்அமுதன். குமார்.பால்பழனி,
தமிழ்உதயம் காலம் தீர்மானம் செய்துள்ள விசயங்கள் சில சமயம் நம்மால் புரிந்து கொள்ள முடியாது. புலம்பெயர்ந்தோர் உருவாக்கி தமிழீழத்தை பலரும் கேலியாக பார்த்தனர். இன்று அவர்களின் பார்வையில் கேள்விக்குறியும் வந்து போகின்றது. பார்க்கலாம் அடுத்த கட்ட நடவடிக்கையை.
தறுதலை உங்கள் கருத்துக்கு நன்றி.
இங்கு முந்தைய பின்னூட்டத்தில் நான் கூறியுள்ள கருத்து தவறானது. எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நண்பர்கள் மகேந்திர எட்டப்பராசன், தெகா மற்றும் ஜோதிஜி ஆகியோருக்கு நன்றிகள்.
ReplyDeleteதிடம் இல்லை என்று கருதி யாரும் இந்தக் காணொளிகளை பார்க்காமல் இருந்துவிடாதீர்கள். அனைவரும் அவசியம் காணவேண்டிய காணொளி இது. இதனை பார்த்து அழாமல் இருந்தால்தான் வெட்கப்படவேண்டும். ஈழ வரலாறு நாம் முன்பே அறிந்திருந்தாலும், அதன் கோரங்களோடும், மிக மிக முக்கிய சம்பவங்களோடும் தொகுக்கப்பட்டிருக்கும் முக்கிய ஆவணம் இது. நாம் அறிந்த அனைவரையும் அவசியம் காணச் சொல்லவேண்டியது இது.
நண்பர் மகேந்திரன் சொல்லியிருப்பதன் படி இதனை பாதுகாப்பதும், பரப்புவதும் நம் அனைவரின் கடமையாகின்றது.
இதனை பாதுகாத்து பரப்புவதோடு மட்டுமின்றி ஈழப்போராட்டத்தின் அடுத்த நகர்விற்கும் இது நம்மை ஊக்குவிக்கும். லண்டனில், நம் ஈழச்சொந்தங்கள் மஹிந்தவுக்குக் காட்டிய எதிர்ப்பை, அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் இன்னும் முனைப்ப்புடன் எடுத்துச் செல்லும் காலம் நெருங்கியுள்ளது. மஹிந்த அமெரிக்காவில் காலடி வைக்க முடியாதபடி அனைவரையும் ஒன்று திரட்டி போராட வேண்டும். அமெரிக்கப் போராட்டமும் வெற்றி பெற்றுவிட்டால், அடுத்து மஹிந்த இந்தியா, இலங்கை தவிர வேறு நாடுகளுக்குச் செல்லத் தயங்குவான். இந்தியாவில் இருக்கும் சொரணையற்ற தமிழர்களை விழித்தெழச் செய்யவும் இந்தப் போராட்டம் உதவட்டும்.
லண்டன் போராட்டத்தில் கிடைத்த வெற்றி, தெற்கு சூடானில் கிடைக்கும் மரியாதை போல் இன்னும் அடுத்தடுத்து நல்லவை நடந்தேறட்டும்.
------
திரு வைகோ மீதான தனிப்பட்ட விமர்சனங்களை இங்கு தவிர்ப்பது நல்லது என்று நினைக்கின்றேன். நண்பர் ராம்ஜி யாஹூ அவர்களுக்கு நன்றி.
வைகோ நன்றாக உணர்ச்சி ஏற்படுத்துறா போல இருக்கு...
ReplyDeleteஇதெல்லாம் பிரபாவின் சிற்றறிவினால் ஏற்பட்ட பேரழிவே..
50 'ல் கொன்றான், 70 'ல் கொன்றான் என்று வன்முறையை வன்முறையால்
வெல்லலாம் என்று பிரபாவின் வன்முறைகளை ஆதரித்தால் ...
ராஜபக்ஷே செய்ததும் சரிதானே..(அவனும் தனது நாட்டிற்கு வந்த சீரழிவை வன்முறை கொண்டு அடக்கினான்)
70 - 90 'ல் ராஜெபக்ஷே சீனிலேயே (காட்சியிலேயே) இல்லையே..
பிரபா ஓநாய்- ஓநாய் (ராஜீவை கொல்ல கூறப்பட்ட தமிழ் பெண்களின் கற்பழிப்பு கதைகள்- தமிழ்நாட்டு தமிழர்களை ஏமாற்ற) என்று தான் செய்த முட்டாள் தன்மான வேலைகளுக்கு படம் காட்டியபடியால் ..
இன்று உண்மையாகவே தமிழர்கள் குதறு படும் போதும் யாராலும் ஒன்றுமே செய்ய முடியவில்லை...
இந்த பிரச்னை 87 'லேயே முடிந்திருக்க வேண்டியது... ஒரு முட்டாளால் தமிழர்கள் அழிந்த்தது தான் மிச்சம்..
இது சரியாக தனது செல்ல பிராணியான குரங்கை காவலுக்கு வைத்த அரசனின் கதை தான்..
அந்த அரசனும் குரங்கால் கொல்ல பட்டது போல் இன்று தமிழரும் பிரபாவால் சீரழிந்த்தது தான் மிச்சம் ...
வைகோவும் ஒரு குரங்கு ஆகாவிட்டால் சரி...
@வெத்து வேட்டு
ReplyDeleteஎல்லோரும் சொரணையற்று, அவரவர் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருப்போம் என்று கூறுகின்றீர்களா? ஈழத்தில் துயருறும் தமிழர்களுக்கு எதுவும் செய்ய வேண்டாம் என்று கூறுகின்றீர்களா?
Stunning.
ReplyDeleteவார்த்தைகள் வரவில்லை.இதை காணக்கிடைக்க செய்த உங்களை வணங்குகிறேன்.
ReplyDeleteஇந்த "படம்" பிரபாவின் புகழ் பாடும் ஒரு தமிழீழ செய்தித்துறையின் படைப்பு (விளம்பரம்) தான்..
ReplyDeleteஅவமாக கொல்லப்பட்ட அப்பாவிகளை வைத்து தேடப்படும் விளம்பரம்...(பகுதி 5 - மிகவும் வன்மம்)
கடவுளே இன்னொரு சுனாமியை அனுப்பு இல்லையென்றால் ஈழத்தை குமரிக்கண்டத்தை கடலில் தாழ்த்த மாதிரி தாட்டு விடு...
இந்த வைகோ, தமிழ் உணர்வு, தமிழ் வீர மறவர் தொல்லை தாங்க முடியல்ல ..சாமீ
@வெத்து வேட்டு
ReplyDeleteஈழமே மூழ்கினாலும் பரவாயில்லை யாரும் இன உணர்வோடு இருக்கக்கூடாது என்னும் உங்கள் 'உயரிய' எண்ணம் பாராட்டத்தக்கது. கவலைப்படாதீர்கள், மஹிந்த கனடா வரும்போது எதிர்ப்புப் போராட்டத்துக்கு நீங்களெல்லாம் செல்ல வேண்டியதில்லை. இன உணர்வுள்ள தமிழர்கள் செய்துகொள்வார்கள். போராட்டத்துக்கு செல்லவேண்டியிருக்குமோஎன்று பயந்து ஒவ்வொரு இடமாகச் சென்று உங்கள் 'உயரிய' எண்ணத்தை வெளிப்படுத்துவதை நிறுத்துங்கள்.
கும்மி: இல்லை... எங்களுக்கு விடிவோ அல்லது ஒரு நிலையான சமமான வாழ்க்கை வேண்டும்..
ReplyDeleteஆனால் அது எப்போதும் பிரபாவினால் வந்திருக்காது...புலிகளின் காலம் முழுவதும் இலங்கையில் இருந்தவன் என்கிற முறையில் சொல்லுகிறேன்..
வைகோவோ..மற்றும் யால்ராக்களோ சொல்லுமளவுக்கு புலிகள் ஒன்றும் புனித பிறவிகள் இல்லை..
என்னை பொறுத்த வரையில் ராஜீவின் ஒப்பந்தத்தினால் தமிழருக்கு கிடைத்திருக்கும் நன்மையே விடிவை தந்திருக்கும்.. இந்த முட்டாள் பிரபா இலங்கையரசிடம் காசு வாங்கி.. இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்த இலங்கையை விடுவித்ததே தமிழர்களின் பெரிய சறுக்கல்...அதோடு இந்த நாய் கொலைகளை ஈவு இரக்கம் இல்லாமல் பரப்பியது தான் இன்றைய கேவலத்துக்கு காரணம்..
83 'ல் ஆவது இலங்கைக்கு ஒரு பயமாவது இருந்திருக்கும் எப்போது இந்தியா வருமென்று..ஆனால் இந்தியாவையும் பகையாக்கி.. முல்லிவாய்காளில் கேட்க நாதியற்று தமிழர்களை பலி கொடுத்தது தான் இந்த பன்றி செய்த வேலை...
இந்த பன்றியையும்..அவனது கொலை, அழிவு போன்ற பாதைகளை விடுத்து வேறு வழியில் எமக்கான விடிவை தேட வேண்டியது தான்...
@வெத்து வேட்டு
ReplyDeleteகொஞ்சம் கண்ணியமான வார்த்தைகளோடு உரையாடுவோமே!
இனி ஈழத்திற்கான போராட்டங்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே சாத்தியமாகும். நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கொள்கைகள், அபிமானங்கள் இருக்கலாம். அவற்றை தள்ளி வைத்து விட்டு, ஈழம் என்னும் ஒற்றைப் புள்ளியை நோக்கி பயணம் செய்வோமே. இப்பொழுது லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமும், தெற்கு சூடான் சுதந்திர விழாவில் பங்கேற்கும் அழைப்பும் நல்லதொரு மாற்றமாக நான் நினைக்கின்றேன். உங்கள் பார்வை என்ன?
எங்கு ஈழத்திற்கோ ..அல்லது தமிழர்களுக்கான போராட்டமோ ..அதில் நான் பங்குபற்றுவேன்...
ReplyDelete"தமிழன்"க்கு அடிவிழும் பொழுது எனக்கும் விழும்..தமிழன் உயரும்போது நானும் உயருவேன்..காரணம் நானும் தமிழன் தான்...
ஆனால் எனக்கு வி.புலிகளோ..அல்லது பிரபாவோ..இன்னும் மற்றோரண்ண குழுக்களோ சரியான தமிழ் தலைமையல்ல..
என்னை பொறுத்த வரை சிங்களஅரசோ, புலியோ, இதர குழுக்களோ எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்..எல்லாருமே ஒன்றுமே இயலாத அப்பாவிகளை தங்களின் அடிமைகள் ஆக்க துடிப்பவர்கள் தான்..
புலியில் நம்பிக்கை இருந்தது அதுவும் அவர்களின் பொது மக்களை தங்களின் அடிமைகள் போல் நடாத்தும் மனோபாவாத்துடன் முடிவுக்கு வந்தது விட்டது..
இப்போது அவர்களின் புகழ்பாடி ஏமாற்றுபவர்களை கண்டால் வரும் எரிச்சல் தான் இப்படி வெறுப்பாக உமிழ்கிறேன்..
நாடுகடந்த அரசு, இங்கு பேசப்படும் வாய் வீரம் எல்லாம் எமக்கு இப்போதைக்கு (எப்போதுமேயோ) உதவபோவதாக தெரியவில்லை..
எனக்கு தெரிந்த ஒருவன் நா.க அரசில் உள்ளான் ..அவனை எல்லாம் என்னால் மக்களுக்கு மனப்பூர்வமாக சேவை செய்யகூடிய்வனாக கணிக்க முடியாது...
ஆகவே தான்..எனக்கு தமிழீழம், பிரபா, கனவு, அது இது என்னும் பொது...இன்னும் எங்களை ஒரு மந்தைகளாக மேய்க்க திரிகிறார்களே என்னும் கோபம்...
@வெத்து வேட்டு
ReplyDeleteஉங்களுக்கு பிரபாகரன் மீதோ வைகோ மீதோ கோபம் வந்ததற்கு தனிப்பட்ட காரணங்கள் ஏதுமில்லை என்று கூறிவிட்டீர்கள். ஈழத்திற்கான சாத்தியங்கள் என நீங்கள் நினைத்த வழிகளுக்கு மாற்றமாக அவர்கள் இயங்கினார்கள்; அதனால் உங்களுக்கு கோபம் என்று கூறியுள்ளீர்கள். அப்படியே இருக்கட்டும்.
இனி முன்னெடுக்கும் நகர்வுகளில், எப்படி ஆரோக்கியமாக எடுத்துச் செல்வது என்று உங்கள் கருத்துகளை எடுத்துக் கூறி சீர்படுத்தலாம் அல்லவா? பழைய கோபங்களையே கொட்டிக்கொண்டிருப்பதால் பலனிருக்காது அல்லவா?
நா.க. அரசில் இருக்கும் ஒருவர் உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் நல்லவராக இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஈழத்திற்கான முன்னெடுப்பில் நல்ல நோக்கம் கொண்டவராக இருக்கலாம் அல்லவா? அபப்டியும் அவர் தவறானவர் என்று தெரிந்தால், அவரைப் பற்றிய தகவல்களை மற்ற உறுப்பினர்களுக்குத் தெரிவித்து, அடுத்த முறை அவர் இடம்பெறாமல் இன்னொருவர் இடம்பெறச்செய்யலாம்.
நம் அனைவருக்குமே, ஈழம் என்னும் தேசத்தின் மீது பாசமும் நேசமும் இருக்கின்றது. அதனை அடைவதற்கான வழிகளைக் கண்டறிவோம். நம் காலத்தில் இல்லாவிட்டாலும், நம் குழந்தைகள் காலத்திலாவது அது அமையட்டும்.
சர்வேதச சமூகம் நா.க. அரசை அங்கீகரிக்கத் தொடங்கியிருக்கின்றது. இந்தச் சூழலில் நமது ஆக்கபூர்வமான கருத்துகளை அவர்களுக்கு வழங்கி அவர்கள் செல்லும் பாதையை நாம் கட்டமைப்போம். புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஒருங்கிணைந்து ஒரே திசையில் பயணிக்கலாம்.
அடடா வெத்துவேட்டு அய்யா திரும்ப வெத்துவேட்டு வேஷம் கட்டிண்டு வந்துட்டேளா? பேஷ் பேஷ்
ReplyDeleteஅனைவரும் அவசியம் காணவேண்டிய காணொளி இது. இதனை பார்த்து அழாமல் இருந்தால்தான் வெட்கப்படவேண்டும். ஈழ வரலாறு நாம் முன்பே அறிந்திருந்தாலும், அதன் கோரங்களோடும், மிக மிக முக்கிய சம்பவங்களோடும் தொகுக்கப்பட்டிருக்கும் முக்கிய ஆவணம் இது. நாம் அறிந்த அனைவரையும் அவசியம் காணச் சொல்லவேண்டியது இது. //
ReplyDeleteகும்மி, உணர்ந்து கொண்டமை நன்று! இதன் அவசியமறிந்தே இந்த காணொளி இங்கே கொணரப்பட்டது. பார்க்க தைரியமில்லை, முடியவில்லை என்பவர்கள் கூட கஷ்டப்பட்டு பார்த்து வைத்து விட்டால், ஒரு மனிதனாக நம்முடைய வளர்ச்சியின் இரண்டாவது படியை எட்டியவர்களாகிவிடுவோம் என்று நம்புகிறேன்.
இங்கு நீங்க வெட்டு வேத்துடன் உரையாடுவதை வாசித்தேன். சரியான படி உங்களின் வேண்டுதலை அவரிடத்தில் வைக்கிறீர்கள்...
வி. புலிகளுக்கு முன்னாலே முப்பது வருடத்திற்கு மேலான அஹிம்சா வழி போராடியவர்களின் கதி என்னவாயிற்று? அவர்களுக்கான நீதி என்னவாக அமைந்தது? இந்த உலகில் ”வல்லான் வகுத்ததே வாய்க்கால்” எனும் நிலை வரும் பொழுது எது போன்ற போராட்டங்கள் எளியவனை தக்க வைத்துக் கொள்ளும்? சாதகபாதங்களை அலசி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துங்களேன் வெத்துவேட்டு.
எதுவும் சொல்ல வார்த்தைகள் இல்லை ஜோதிஜி.இழந்தோம் இழந்தோம் இழந்துகொண்டேயிருக்கிறோம்.தமிழனே இல்லாத தமிழீழ தேசமாக மாறிக்கொண்டிருக்கிறது.
ReplyDeleteகொடுமைகளைத் தட்டிக்கேட்க உணர்வுள்ள தமிழன் ஒருவன் நிச்சயம் இந்தக் காணொளிகளைப் பார்த்துக்கொண்டிருப்பான்.
இத்தனை கொடுமைகளை வேதனைகளைத் தாங்கிக்கொண்டு உயிரோடு பிணமாகத் திரியும் எங்களிடம் வந்து சந்தோஷமான பதிவுகளை எப்படி எதிர்பார்க்கிறீர்கள்.நடு நடுவில் கொஞ்சம் சிரிப்பதே கனவுபோல !
நன்றி.
ReplyDeleteநவீன நரபலிகள். நாய்ங்க நாசமாப் போவானுங்க.
ReplyDeleteகும்மி said..
ReplyDeleteநம் அனைவருக்குமே, ஈழம் என்னும் தேசத்தின் மீது பாசமும் நேசமும் இருக்கின்றது.
இலங்கையில் வெள்ளம் காரணமாக தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட போது நீங்கள் என்ன செய்தீர்கள்?தமிழகத்தை சேர்ந்த ஜாக்கி சேகரும் அவரை சேர்ந்தோருமே உதவினர். நீங்கள் உங்கள் அரசியலுக்கு இலங்கை தமிழர்களை பயன்படுத்துகிறீர்கள். ஈழம் என்னும் ஒற்றைப் புள்ளியை நோக்கி பயணம் செய்வோம் என்று இலங்கையில் உள்ள தமிழர்கள் உங்களை கேட்டார்களா? தமிழகத் தமிழரும் கனடா தமிழரும் ஆசைப்பட்டு அதை இலங்கை தமிழர்கள் ஆசையாக்காதீர்கள். இதே மாதிரி தான் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு இலங்கையில் நடக்கவே கூடாது என்று வெளிநாடுகளில் வசதியாக வாழும் தமிழர்களும், தமிழக தமிழரும் மாநாட்டுக்கு எதிராக மோசமான விசமப் பிரச்சாரம் செய்தீர்கள். ஆனால் இலங்கை தமிழர்கள் மாநாட்டை சிறப்பாக இலங்கையில் நடாத்தி முடித்தனர்.
வெத்துவேட்டு மஹிந்தாவிற்க்கு பிறந்த பிள்ளையோ? இப்போ புலிகள் இல்லை யாழ்ப்பாணத்தில் நடக்கும் வன்முறைகளுக்கு யார் காரணம்? வெத்துவேட்டு சும்மா யுத்தகாலத்தில் இலங்கையில் இருந்தேன் என உதார்விடவேண்டாம் நீ மானமுள்ள தமிழன் என்றால் தமிழனுக்கு நன்மை செய்பவனையும் எதிர்க்காமல் இரு.
ReplyDeleteவெத்து வேட்டு அது வெத்துவேட்டுத்தான். டக்ளஸ்கிட்ட பணம் வாங்கியிருப்பார்.வெறும் சத்தம் மட்டும்தாங்கோ.கத்தட்டும் விடுங்கப்பா.
ReplyDeleteஆமாப்பா வெள்ளம் வந்து தவிச்சப்ப இவரு அனுப்பின கப்பல் துணி மணிகளோட நீங்களும் அனுப்பினீங்களா? இப்போ இவரு முள் வேலிகுள்ளர சிக்கி இருக்கவங்கள கூட்டிட்டு போயி வீடு கட்டி, வெவசாயம் பண்ண நிலங்களை எல்லாம் திருப்பி வாங்கி கொடுக்கிற போரட்டத்தில கலந்துக்காம எங்கே போனீங்க?
ReplyDeleteஎன் தலைமையில சர்வ தேச தமிழ் வளர்ப்பு மாநாடு ரெண்டு கையிம் இல்லாமல் இருக்கவன்கிட்ட பேனா கொடுக்கிற புரட்சி விழா சிறப்பா நடந்திச்சு .
ஒன்னும் மட்டும் தெரியுது. கொடுக்கிற காசுக்கு கூடவே சேர்த்து சத்தம் விடுதுன்னு. இப்படி வாங்கி தின்னுட்டு பீ குடலை வளர்த்து செத்து தொலைய வேண்டியதுதான்.
@ baleno
ReplyDelete//இலங்கையில் வெள்ளம் காரணமாக தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட போது நீங்கள் என்ன செய்தீர்கள்?//
கேள்விக்கு நன்றி நண்பா. நான் செய்த முதல் செயலை இங்கு பாருங்கள்.
ஒரு ட்விட் அனுப்பியதோடு உங்கள் சமூகக் கடமை முடிந்ததா என்றும் கூட கேட்கலாம். தமிழகத்தில் நான் வேறு யாரையெல்லாம் தொடர்பு கொண்டேன்; இந்த அவலத்தை எடுத்துரைத்தேன் என்பதை பட்டியலிட விரும்பவில்லை.
நான் எந்த அமைப்பையோ, கட்சியையோச் சார்ந்தவன் அல்ல. ஆனால், ஈழத்தமிழர்களுக்கு என்னால் எந்த நேரத்திலெல்லாம், எந்த வகையிலெல்லாம் உதவ முடிகின்றதோ அப்பொழுதெல்லாம் உதவி வந்திருக்கின்றேன்.
ஒரு தகவலுக்காக மட்டும். நான் வெள்ளம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடத்தொடங்கியது ஜனவரி 12. ஜாக்கி சேகர் பதிவிட்டது ஜனவரி 15. ஜாக்கியின் பங்களிப்பை நாம் பெரிதும் பாராட்டுகின்றோம். நாங்களும் தொடர்ந்து பங்களித்தே வருகின்றோம்.
கும்மி, உதவி செய்த உங்களிடம் தெரியாமல் அப்படி கேட்டத்திற்க்காக வருந்துகிறேன். நன்றி.
ReplyDelete@baleno
ReplyDeleteநமக்குள் எதற்கு நண்பா வருத்தமெல்லாம். ஈழத்தமிழர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் அனைவரும் எண்ணுகின்றோம். இடையில் ஏற்படக்கூடிய சிறு வேறுபாடுகளை புறம் தள்ளி இணைந்து பயணிப்போம்.
ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரும் சுதந்திரகாற்றை சுவாசிக்க வேண்டும். இது புரிந்துகொண்ட தமிழர்களின் ஆவல்.
ReplyDeleteவெத்துவேட்டு தலைமையேற்று நடத்தி ஈழத்தமிழர்களின் சுதந்திரத்துக்கு உதவி செய்வார் என்றால் நாமும் அவருடன் கைப்கோர்ப்போம்.அது விடுதலை புலிகள் மட்டும் என்று கிடையாது.
ஈழத்தமிழர்களுக்காக உலகஅரங்கில் பேசக்கூடிய தகுதிபடைத்தவராக வை.கோ. உள்ளார். அவருடைய இந்த நிலைப்பாடு அரசியலையும் தாண்டி அவரை நேசிக்க வைக்கிறது.
மேலும் இப்பதிவு எழுத காரணமாய் அமைந்த தெகா மிக நேர்த்தியாக பதிவிட்ட அன்பின் ஜோதிஜி மிகுந்த பொறுப்புடன் பின்னூட்டத்தை கொண்டு சென்ற கும்மி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வாழ்த்துகள்...
நன்றி தவறு. தெளிவான புரிந்துணர்வு. எப்போதும் ரதி கேட்பார்கள்? இதிலும் உங்கள் சொந்தக்கதையை சொல்லவேண்டுமா? என்று. இயல்பாய் அவர்கள் கேட்டாலும் நானே பலமுறை யோசித்துக் கொள்வதுண்டு. தமிழ்நாட்டில் நாம் வாழும் இயல்பான சூழ்நிலையை இது போன்ற காணொளியை காண்பதற்கும் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மனோநிலையும் எப்படியிருக்கும் என்பதாகத்தான் இவற்றை கண்டு உணர்வதோடு அதை அப்படியே என் அனுபவ பகிர்வாகவே அரசியல் ஆன்மீகம் ஈழம் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். ஞாயிறு என்றால் தூங்க வேண்டும். ஓய்வு எடுக்க வேண்டும்? தொ.காட்சி பார்த்து குழந்தைகளுடன் மகிழ்வாய் இருக்க வேண்டும் என்று சராசரி எண்ணங்கள் உள்ளவர்களும், முகாமில் இருந்து கொண்டுருப்பவர்களையும் யோசித்துப் பார்க்கும் போது ஒன்று இப்போது நினைவுக்கு வருகின்றது.
ReplyDeleteஏற்கனவே தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் சாந்தி லெஷமணன் என்பவர் சொன்ன
"இவர்கள் இடத்தில் என்னைப் பொறுத்திப் பார்க்கும் போது என்னால் எந்த வேலையையும் பார்க்கமுடியவில்லை."
baleno said...
ReplyDeleteநன்றி நண்பா.... எப்போதும் போல என்னுடைய பதிவுகளை அற்புத விவாத தளத்திற்கு இட்டுச் செல்லும் கும்மியும், தெகாவும் போலவே நீங்களும் பல விசயங்களைச் சொல்லியுள்ளீர்கள்.
ஒரு கேள்விக்கு மட்டும் நீங்களாவது பதில் சொல்லுங்களேன்.
வலைபதிவில் ஈழம் சார்ந்த நண்பர்கள் எத்தனை பேர்கள் ஈழத்தில் இப்போது நடந்து கொண்டுருப்பதை எழுதிக் கொண்டுருக்கிறார்கள்.
ஈழத்தில் இருந்தால் உயிர் பயம் என்பதை ஏற்றுக் கொள்ளலாம். புலம் பெயர்ந்து இருப்பவர்களுக்கு என்ன பயம்? இன்னும் ஏராளமான கேள்விகள் எனக்குள் உண்டு. கேட்காமல் நகர்கின்றேன்.
நன்றி இரவீ.
இத்தனை கொடுமைகளை வேதனைகளைத் தாங்கிக்கொண்டு உயிரோடு பிணமாகத் திரியும் எங்களிடம் வந்து சந்தோஷமான பதிவுகளை எப்படி எதிர்பார்க்கிறீர்கள்.நடு நடுவில் கொஞ்சம் சிரிப்பதே கனவுபோல !
ஹேமா முடிந்தால் யூதர்களின் வரலாற்றை நீங்கள் அவஸ்யம் படித்தே ஆகவேண்டும். குறிப்பாக மார்க்ரெட் தாட்சர் பற்றி படித்துப் பாருங்களேன். நீங்கள் கொடுத்துள்ள வார்த்தைகளை விட ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள் என்பது போல உயிர்பயம் என்று தொடங்கி கடைசியில் புலம் பெயர்ந்து ஆச்சரியமாய் ............ இன்று நான் எழுதும் அளவிற்கு உயர்ந்த பெண்மணி.
ஒரு சிறிய விதை. அது எங்கே முட்டி எந்த மாதிரியான விளைவுகளை உருவாக்கும் என்பது தமிழர்களால் புரிந்து கொள்ள விரும்பாத ஒன்று. உங்கள் வலி எனக்குப் புரிந்தாலும் ஒவ்வொரு வலிக்குள்ளும் பல வழிகளை உருவாக்க முடியும் என்பதை உறுதியாக நம்புபவன் நான். காலம் மாறும். பலரின் கனவுகள் நிறைவேறும்.
ஒரு துர்மரணத்தின் தொடக்கத்தில் பலரின் வாழ்க்கைப் பாதையும் மாறும். என்னவென்று இப்போது கேட்காதீர்கள்?
ஆகவே தான்..எனக்கு தமிழீழம், பிரபா, கனவு, அது இது என்னும் பொது...இன்னும் எங்களை ஒரு மந்தைகளாக மேய்க்க திரிகிறார்களே என்னும் கோபம்...
ReplyDeleteஉங்களின் ஆதங்க வரிகளை நான் மனதில் வைத்துக் கொண்டேன். மனதில் உள்ளதை அப்படியே துப்பியது போல் பேசினாலும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அப்பட்டமாக வெளிப்படையாக பேசிய உங்களை பாராட்டுகின்றேன்.
எதையும் பார்க்கும் மனவலிமை எனக்கிலை ஜோதிஜி..
ReplyDeleteதமிழ் ஈழம் இது ஆரோக்யமான ஆக்கபூர்வமான உரையாடலாக இதுவரை எங்கும் நடக்கவில்லை.
ReplyDeleteசீசன்கால கச்சேரிகள் போல நிகழ்வுகளை வைத்து சலசலப்புகள் வந்து போகின்றன. அவையாவும் இரண்டே இரண்டு பிரிவுகளில் அடங்கும்.
1. பிரபகரன் பக்தர்கள் Vs பிராபாகரன் பிடிக்காதவர்கள்
2. தமிழ் இனம் Vs மற்றவர்கள்
இதைத் தாண்டி ஆக்கபூர்வமாகச் செய்ய யாரும் இல்லை . வைகோ உட்பட.
**
தமிழன் என்ற இன உணர்வு இல்லாதவரை , சாதியும், தனிநபர் துதியும் அல்லது வெறுப்பும் இருக்கும் வரை இது இப்படியேதான் இருக்கும்.
ஈழம் குறித்து தமிழகம் செய்ய முடிந்தது / செய்ய வேண்டியது இதுதான்.
தமிழகம் மாநிலமாக...
கரையோர எல்லைபுற மாநிலமான தமிழகத்திற்கு, அதை ஒட்டியுள்ள இலங்கை என்னும் நாட்டின் தொடர்பான வெளியுறவுக் கொள்கைகளில் முக்கியப் பங்கு உள்ளது. இலங்கை குறித்த இந்திய மத்திய அரசின் எந்த முடிவுகளும் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் எடுக்கப்படக்கூடாது. சிறப்புச் சட்டம் தேவை. சேது திட்டம் தொடங்கி அன்றாட மீனவர் பிரச்சனைவரை சொம்புதூக்கிகளாகவே தமிழகம் உள்ளது.
இதற்கு தமிழகத்தில் நல்ல அரசியல் தலைமை தேவை.
தமிழ் ஒரு இனமாக...
சாதி, மதம் தாண்டி தமிழன் ஒரு இனமாக் கூடி , மலையக மக்கள் தொடங்கி, மலேசியாத் தமிழர் தொட்டு , தமிழகத்தில் மலம் திண்ண வைக்கப்படும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் என்ன செய்யலாம் என்று ஒரு தீர்க்கமான அஜென்டா இருக்க வேண்டும்.
.
சிவாவின் பதிவில் நான் சொன்ன சில கருத்துகள் சில...
ReplyDeleteவாய்ச் சொல் வீரர்கள்
http://masivakumar.blogspot.com/2009/05/blog-post_21.html
..........பிரபா பெரிய தல , எனக்கு அவர்தான் தலை , கீரோ என்று கத்தும் காட்டு மிராண்டிகள், அரசியலில் வீரத்தைக் காட்டும் புண்ணாக்குகள், ஆக்க பூர்வமாக ஒன்றும் செய்வது இல்லை.
....ஈழக் கனவை அழித்தவர்களில் முதன்மையானவர்கள் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள். காலம்போன கடைசியில் 2009 ல் நடந்த உலகளாவிய போராடங்கள் ஏன் கடந்த 30 வருடமாக நடக்கவில்லை?
ஏதோ இவர்கள் வீட்டு வேலையாள் போல காசு கொடுத்தால் போதும் எல்லாம் அவர் பாத்துப்பார் என்று ஈழப்போரை புலிகளின் தலையில் மட்டும் கட்டிவிட்டு இவர்கள் உலக இலக்கியம் படிப்பது,படம் பார்ப்பது,விமர்சனம் எழுதுவது என்று இலக்கியச் சொம்படித்துக் கொண்டு இருந்தார்கள்.
.....பிரபாகரன் காட்டில் போர் புரிவது பிளான் A என்று இருந்தால் பிளான் B ஆக உலக அளவில் ஒரு அரசியல் அமைப்பை ஏற்படுத்தி அதை பெரும் மக்கள் இயக்கமாக இதுவரை மாற்ற யாரும் முயலவில்லை.
அகதியாக வந்து அந்த நிலையில் இருப்பவர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. அமெரிக்க மற்றும் கனடா குடியிரிமை வாங்கிய நிம்மதியாக வாழும் மக்கள், ஒரு பெரிய அரசியல் அமைப்பை இலங்கைக்கு வெளியே ஏன் உருவாக்க முயற்சிக்கவில்லை இந்த 30-40 ஆண்டுகளில் ?அப்படியும் அரசியல் களம் கண்டவர்கள் புலியை விமர்சித்தே வாழ வேண்டிய நிர்ப்பந்தம். என்ன கொடுமை?
....நெல்லிக்காய் மூட்டைபோல இஸ்லாமியத் தமிழன், மலையகத்தமிழன், யாழ்ப்பாணத்து தமிழன், கொழும்பு வாசி அப்புறம் தமிழகத் தமிழன் என்று பல நிலைகள்.
இதற்கு இடையில் சிக்கிக் கொண்டு இன்னுயிரை அர்ப்பணித்த போராளிகள்தான் பாவம். பலர் செய்ததைப்போல அமெரிக்கா, கனடா, அய்ரோப்பபா என்று வந்து செட்டில் ஆகி இருக்கலாம் அவர்களும்.
....அடுத்து தமிழகத் தமிழர்கள். சினிமா, கிரிக்கெட்டைத் தவிர எதற்கும் மசியாதவர்கள். மொழிப்போருக்குப் பிறகு தமிழகத்தில் பெரிய அலை என்று ஏதும் இல்லை. மொழிப்போரில் பங்கெடுத்தவர்கள் இப்போது ஏதும் செய்வது இல்லை. வயது அப்படி. மற்றவர்களுக்கு என்ன ஆயிற்று?
....பிங்க் ஜட்டி ஏற்படுத்திய ஒரு கலகத்தைக்கூட ஏற்படுத்த முடியவில்லை.சினிமா, கதை, பக்தி , விமர்சனம் என்று ஒருவித பிரியாணி கலவையாகவே இருக்க விரும்புகிறார்கள்.சென்னையில் பெண்கள் ஒரு குழுவாக உண்ணாவிரதம் இருந்த போது அதை யாரும் மதிக்கவில்லை. எத்தனைபேர் அவர்களுடன் சேர்ந்து குறைந்த பட்சம் ஆதரவைக் கொடுத்தார்கள்??
.....பிரபாகரனின் போர் உத்திகள் மற்றும் அரசியல் சார்ந்த அணுகுமுறைகளில் எனக்கு விமர்சனம் உண்டு. ஆனால், எடுத்துக் கொண்ட கொள்கைக்காக களத்தில் இருந்த அவர்கள், நாம் எல்லாரையும்விட சிறந்தவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
//baleno said...
ReplyDeleteஈழம் என்னும் ஒற்றைப் புள்ளியை நோக்கி பயணம் செய்வோம் என்று இலங்கையில் உள்ள தமிழர்கள் உங்களை கேட்டார்களா?//
நீங்கள் ஈழத்தில் மன்னிக்க இலங்கையில் இருக்கும் தமிழரா?
உங்கள் வலி உங்களுக்கு.
ஈழம் என்ற சொல்லின் தேவையும் புரிதலும்...
1.மலையகத் தமிழன்
2. யாழ்பாணத் தமிழன்
3.கொழும்புத் தமிழன்
4.இலங்கைவாழ் இஸ்லாமியத் தமிழன்
5.கனடாத் தமிழன்
6.மலேசியாத் தமிழன்
7.மொரிசியஸ் தமிழன்
8.மயிலாப்பூர் தமிழன்
9.சிங்கப்பூர் தமிழன்
10.உலகத் தமிழன்
11.தலித் தமிழன் ,அய்யர் தமிழன் அய்யங்கார் தமிழன்
....என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக உள்ளது.
என்னதான் பிரச்சனை அல்லது என்னதான் எதிர்பார்ப்பு என்று நீங்கள் சொன்னால்கூட நான் அல்லது மற்றவர்கள் செய்ய முடியுமா என்று தெரியாது.
ஆனால், குறைந்தபட்சம் உங்களைப் போன்றவர்களின் தேவை என்ன என்று தெளிவாகச் சொன்னால் என்னை போன்றவர்கள் இப்படியான உரையாடலில் விலகியாவது இருக்க உதவும்.
:-((
கல்வெட்டு
ReplyDeleteவராமல் இருந்து விடுவீர்களோ என்று நினைத்துக் கொண்டுருந்தேன் நன்றி தல.
எழுதும் போது சற்று கண்ணியமாக வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே பல சமயம் இந்த ஈழம் குறித்து என்னுடைய சுயமான குணாதிசியங்களை விட்டுக் கொடுத்து நாகரிகத்தை கடைபிடிக்கின்றேன். அத்தனை கோபம் ஆத்திரம் வேகம் போன்ற இயல்பான குணங்கள் மேலோங்குகின்றது. ஏறக்குறைய என் மனதில் உள்ள பலவற்றை நீங்கள் முடித்த விதம் எனக்கு உடன்பாடே...........
.பிரபாகரனின் போர் உத்திகள் மற்றும் அரசியல் சார்ந்த அணுகுமுறைகளில் எனக்கு விமர்சனம் உண்டு. ஆனால், எடுத்துக் கொண்ட கொள்கைக்காக களத்தில் இருந்த அவர்கள், நாம் எல்லாரையும்விட சிறந்தவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
....ஈழக் கனவை அழித்தவர்களில் முதன்மையானவர்கள் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள். காலம்போன கடைசியில் 2009 ல் நடந்த உலகளாவிய போராடங்கள் ஏன் கடந்த 30 வருடமாக நடக்கவில்லை?
ReplyDeleteஇது தவறு கல்வெட்டு. மற்றவர்களை விட பிரபாகரன் குறித்து உள்ளும் புறமும் ஒரு வருடமாக நான் பல புத்தகங்களின் வழியே பல பத்திரிக்கையாளர்களுடன் பேசி, ஆராய்ந்தவன் என்ற முறையில் என்னால் ஓரளவுக்கேனும் ஒரு முடிவுக்கு கொண்டு வரமுடிகின்றது. கவிஞர் காசி ஆனந்தன் ராஜீவ் காந்தியை கடைசியாக சந்திக்க முயற்சித்த போது, பேசி விட்டு வெளியே வந்த போது பிரபாகரன் கொடுத்த சாட்டையடி ஈழம் குறித்து ஆழத் தெரிந்தவர்களுக்கு தெரிந்த சமாச்சாரம்.
இப்போது உள்ள ருத்திரகுமாரன் கூட ரணில் காலத்தில் ஆன்டன் பாலசிங்கம் அவர்களோடு தாய்லாந்து தொடங்கி ஜெனிவா வரைக்கும் பங்கேற்றவர் தான்.
கருணா கைக்கூலி என்று சொல்வதற்கு நாம் பயப்படத் தேவையில்லை. ஆனால் மற்றொன்று கருணா ஒரு பேட்டியில் சொல்லியது போல "பிரபாகரன் எதனாலும் எவராலும் வளைக்க முடியாத ஒரு ஆளுமை". அது தான் அவர் பலமும் பலவீனமும்.
கல்வெட்டு, அன்பர் ”baleno” என்பவரின் பின்னூட்டத்தை வாசிக்கும் பொழுது எனக்கு புரிய வந்தது - ஏன் இத்தனை வருடங்களாக இந்த பிரச்சினை நீட்டித்துக் கொண்டிருக்கிறது என்பதே அது.
ReplyDeleteநீங்க பட்டியலிட்ட எண் 1- 11 வரைக்குமான பிளவுகளே இத்தனை சாவுகளுக்குமான மூல காரணம்! இதற்கிடையில் மனித உயிர்கள் பகடைக்காய்களாகிப் போனது... நல்ல கருத்தான மறுமொழிகள்.
மத்திய அரசின் எந்த முடிவுகளும் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் எடுக்கப்படக்கூடாது. சிறப்புச் சட்டம் தேவை.
ReplyDeleteபடித்தவுடன் சப்தம் போட்டு சிரித்துவிட்டேன். அட நீங்க வேற. மொத்த அதிகாரங்களும் எங்கே இருக்கின்றது. பிரதமரிடமா? சும்மாயிருங்க தல?
நாலைந்து அதிகாரிகள் அதிக பட்சம் பத்து நபர்களால் தீர்மானிக்கப்படுகின்றது. இது குறித்து இந்த ஈழம் குறித்து மட்டும் ......... எழுதி பேசி, சோர்வாக இருக்கிறது.
ஜோதிஜி,
ReplyDelete//நாலைந்து அதிகாரிகள் அதிக பட்சம் பத்து நபர்களால் தீர்மானிக்கப்படுகின்றது. இது குறித்து இந்த ஈழம் குறித்து மட்டும் ......... எழுதி பேசி, சோர்வாக இருக்கிறது.//
சமீபத்திய உதாரணம். சரி தவறு என்று பிரச்சனைக்குள் செல்லாமல் ஒரு எல்லைப்புற மாநிலம் அதன் நன்மை என்று நம்பும் ஒன்றிற்காக மாத்திய அரசின் முடிவுகளைச் சாவல்விட்டு கோர்டுக்கு அழைப்பது. அமெரிக்காவில் அரிசோனா மாநிலம் அதன் எல்லைப்புற ஊடுருவல் தடுப்பு என்ற பெயரில் இயற்றப்பட்ட சட்டங்கள்.
இந்தியா அதன் எல்லைப்புற நாடுகளோடு எடுக்கும் இராஜாங்க முடிவுகள், மாநிலங்களின் நலன் சார்ந்து இருக்க விரிவான பாரளுமன்ற விவாதங்கள் அவசியம். புண்ணாக்கு எம்பிகள் கட்சிக்காக மட்டும் இருக்குபோது இனத்திற்காக எப்படி ஒன்று சேர முடியும். தமிழக எம்பிகளில் எத்த்னைபேர் இந்திய இலங்க வெளியுறவுக் கொள்கைபற்றி பேசி இருப்பார்கள்?
எல்லாம் ஒரு ஆசைதான். ஒரு மாநில எம்பி என்பவர் எப்படி இருக்கவேண்டும் என்று கட்சிக்கும் தெரியாது, அவருக்கும் தெரியாது மக்களுக்கும் தெரியாது.
:-((((
ஒரு மாநில எம்பி என்பவர் எப்படி இருக்கவேண்டும் என்று கட்சிக்கும் தெரியாது, அவருக்கும் தெரியாது மக்களுக்கும் தெரியாது.
ReplyDeleteஅட ராசப்பா? ஆச்சரியம் கல்வெட்டு. இந்த இராமநாதபுரம் மாவட்ட தொடரில் இன்னும் பல பதிவுகள் தாண்டி ஒரு இடத்தில் எம்ஜிஆர் முதல் முறையாக ஆட்சியை பிடித்த போது காரைக்குடி தொகுதி எம் எல் ஏ பொ காளியப்பன் பற்றி நீங்க இப்ப சொன்னது போல் எழுத வேண்டும் என்று யோசித்து வைத்துருந்தேன்.
ம்ம்ம்.........
தமிழக எம்பிகளில் எத்த்னைபேர் இந்திய இலங்க வெளியுறவுக் கொள்கைபற்றி பேசி இருப்பார்கள்?
ReplyDeleteபாராளுமன்றத்திற்குள் ஒரு அற்புதமான நூலகம் உண்டு. அது அறிவுச் சுரங்கம். நம்ம ரித்திஷ் எல்லாம் அங்கே போவாரா? என்றுஅடிக்கடி யோசித்துக் கொள்வதுண்டு. ஏங்க நீங்க வேற?
விரல் விட்டு எண்ணி விடலாம் பாராளுமன்ற உறுப்பினர்களின் தகுதிகளை.
மொழி பிரச்சனை
விசயங்கள் புரியாத பிரச்சனை
மாநில தலைமை உத்திரவை தாண்ட முடியாத பிரச்சனை
லாபி
வட இந்தியன் தென் இந்தியன் அதிலும் மதராஸி
இத்தனையும் இவர்கள் தாண்டி எங்கே வைகோ போல முழங்க முடியும்.
ஒரு வகையில் சிங்கம் போல் கர்ஜித்த வைகோ ஆச்சரியமனிதரே? ஆனால் பலன் தான் ---???----
ஜோதிஜி,
ReplyDeleteஆளுமை குறித்த உங்களின் கருத்தில் மாறுபடுகிறேன்.
முதல்வர் கருணாநிதியும் , புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களும்கூட தவிர்க்க முடியாத ஆளுமைதான்.
ராஜபக்சேயும் ஆளுமைதான் (சிங்களவர்களுக்கு) ஹிட்லரும் ஒரு கூட்டத்திற்கு ஆளுமைதான்.
எனவே ஆளுமை என்ற இலக்கணம் சார்பு நிலை உடையது.
ஆளுமையால் யாருக்குப்பயன் என்பதுதான் சமூகத்திற்கான கேள்வி.
அப்படியான கேள்வியை நீங்கள் , எந்த ஆளுமையிடமும் கேட்கலாம். பிரபாகரன் உட்பட.
சுயம்பாக ஆர்ம்பித்த இயக்கம் ஒன்று இந்தியாவின் கைக்கூலிபோல மாறி பின்னால் இந்தியா முதுகில் குத்தியவுடன் பல இலக்குகளைத் தொட்டு இன்று இப்படி ஆகிவிட்டது.
ஒருவேளை வென்று இருந்தால் வரலாறு வேறுமாதிரியாக இருந்து இருக்கும். பழைய ஆளுமைகளில் மட்டும் நாம் தங்கிவிடாமல் புதிய செயல்திட்டம் வரைவது நோக்கமாக இருக்க வேண்டும்.
எனக்கு புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள்களின் செயல்பாட்டில் வருத்தம் உள்ளது. காலம்போன கடைசியில் 2009 ல் நடந்த உலகளாவிய போராடங்கள் ஏன் கடந்த 30 வருடமாக நடக்கவில்லை? என்று சிந்தியுங்கள். உங்களுக்கு விடை கிடைக்கலாம்.
ReplyDeleteஈழம் தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழனின் செயல்பாடுகளை , அதே போல் வேறு நாட்டில் வசிக்கும் இஸ்ரேல் யூதர்களின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டுப்பாருங்கள். ( நான் இஸ்ரேல் / பாலஸ்தீனப் பிரச்சனைக்குள் செல்ல விரும்பவில்லை. தான் நம்பும் ஒன்றுக்கு இஸ்ரேல் யூதர்கள் எப்படி வியூகம் அமைக்கிறார்கள் என்ற அளவில் மட்டுமே)
**
புத்தகங்கள் வழியே நீங்கள் பார்ப்பது ஒருவகைப் புரிதல். ஆனால் அன்றாடம் அவர்களின் வாழ்க்கையினூடே பார்ப்பது மற்ற ஒன்று.
புத்தகச் சந்தையில் அறிவாளிகள் புத்தகம் போடுகிறார்கள் விற்கிறார்கள் வாங்குகிறார்கள். எந்த வெளங்காவெட்டியாவது இது போன்ற பிரச்சனைகளைப் பேசியிருப்பார்களா?
//இந்த நாட்காட்டியில் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் படம் அச்சிடப்பட்டுள்ளது. அந்த படத்திற்கு தலைப்பாக ‘’எல்லாமே சாத்தியம்’’ என்று எழுதப்பட்டுள்ளது.//
http://maniyinpakkam.blogspot.com/2011/01/blog-post_13.html
புத்தகம் என்பது தொழில் எது விற்குமோ அதுவே புத்தகம். இன்றைய கம்ப்யூட்டர் சார்ந்த உலகில் , சமூகம் சார்ந்த கருத்தைப் பரப்ப நினைப்பவன், அடுத்தவனை காசு கொடுத்து வாங்கச் சொல்லி புத்தகம் போட மாட்டான். அப்படியே போட்டாலும் அது மக்களைச் எளிதில் சென்று அடையும் வண்ணம் மலிவு விலைப் பதிப்பாக, இலாப நோக்கர்று இருக்கும்.
எனக்கு ஈழப் பிரச்சனையும் வெயாபாரம் பார்க்கும் புத்தகங்களில் நம்பிக்கைதன்மை இல்லை. பெரும்பாலும் நேரடி அனுபவமாகவே இருக்கிறது எனது புரிதல்கள்.
**
.
ReplyDeleteதெகா,
லீனா தற்போது எடுத்துள்ளது ஒரு சினிமா செங்கடல். தற்போது அது சென்சார் போர்டால் மறுக்கப்பட்டுள்ளது.
அந்த சினிமாவை மக்கள் பார்வைக்கு கொண்டுவர
சினிமாக்காரர்களான பாரதிராஜா அல்லது சீமான் அல்லது விஜயகாந்த் அல்லது தங்களை இன உணர்வாளர்களாக் காட்டிக்கொள்ளும் சினிமா மக்கள் என்ன செயல்திட்டம் வைத்துள்ளார்கள்?
லீனாவின் ஈழம் குறித்த பார்வையும் மற்றவர்களின் பார்வையும் ஒன்றாக இல்லாவிட்டாலும் அவர் சொல்லவரும் கருத்தைப் பரப்பவாவது ஈழம் என்ற ஒற்றைக் குறிக்கோளில் நின்று செயல்திட்டம் வகுக்கவேண்டுமே? இவர்கள் ஏன் சிந்திப்பது இல்லை.
எனவே நான் சொல்வது, தனக்குச் சாதகமான வியாபாரம் இல்லாவிட்டால் இவர்கள் ஒரே கருத்தில் இணையமாட்டார்கள்.
தமிழன் என்ற ஒரு இனம் இல்லை. பல உட்பிரிவுகள் அவர்களுக்கான நலனுக்காக மட்டுமே இயங்குகின்றன.
.
நண்பர் ஜோதிஜி, வலைபதிவில் எழுதும் ஈழத்தை சேர்ந்தோர் மிகவும் குறைந்த எண்ணிக்கை கொண்டவர்கள் என்றே அறிகிறேன். அதிலும் ஈழத்தில் இப்போது நடந்து கொண்டுருப்பதை எழுதுபவர்கள் என்றால் எனக்கு தெரிந்து தமிழ்நதி, வேல்சிலிருந்து அருஸ் இவர்கள் இருவரும் புலிகளின் பிரசார பிரிவு தலைவர்கள் மாதிரி என்றே சொல்லலாம். இராயாகரன் மார்க்ஸிய கண்ணோட்டத்துடனேயே எல்லாவற்றையும் பார்ப்பவர். நடுநிலையாக எழுத கூடியவர்கள் விபரம் தெரிந்த ஈழத்தவர்கள் எழுதுவதில்லை தான். அதற்க்கு காரணம் புலிகள் தங்களை விமர்சித்த புத்திஜீவிகளை ஈழத்தில் கொலை செய்தது தான்.
ReplyDelete//ஈழத்தில் இருந்தால் உயிர் பயம் என்பதை ஏற்றுக் கொள்ளலாம். புலம் பெயர்ந்து இருப்பவர்களுக்கு என்ன பயம்? //
நீங்கள் சொன்னது உண்மை. புலத்தில் எந்த வித பயம் கிடையாது. நேர்மையான எழுத்தாளர்கள் தமிழ் துரோகிகள் என்று புலி ஆதரவாளர்களிடம் இருந்து அவதூறு கிடைக்கும் என்பதிற்க்காக தயங்குகிறார்கள் என்று நினைக்கிறேன்.
ஈழ கவிஞர் ஒருவரின் கவிதையில் என்னை கவர்ந்த வரி.
துரோகி எனத் தீர்த்து
முன் ஒரு நாள் சுட்ட வெடி
சுட்டவனைச் சுட்டது
சுடக் கண்டவனைச் சுட்டது
சுடுமாறு ஆணை
இட்டவனைச் சுட்டது
நன்றி.
_ _ _
கல்வெட்டு; நான் ஈழத்தில் இல்லை. எனது சகோதரனும் ,உறவுகளும் ஈழத்தில் தான் உள்ளனர். உரையாடலில் இருந்து நீங்கள் விலக வேண்டும் என்று நான் விரும்பவேயில்லை. நீங்கள் தந்த இணைப்பிற்க்கு சென்றேன்.
http://masivakumar.blogspot.com/2009/05/blog-post_21.html
அங்கே நீங்கள் சொன்ன கருத்தே எனது கருத்தும்.
//எது தேவையோ அதை. யாருக்கு எது தேவை என்பதை அவர்களே முடிவு செய்யவேண்டும். தமிழ்நாட்டினாக எனக்கு பல கோணங்கள் இருக்கலாம். ஆனால் ஈழத்தவன் என்ன செய்யவேண்டும் என்று அங்கே இரத்தமும் சதையுமாய் இருப்பவனே சொல்லமுடியும்.
நோகாமல் நொங்கு தின்பது போல இணையத்தில் பல அறிவுரைகளை வழங்க முடியும். ஆனால் அவை எல்லாம் ஒரு மண்ணாங்கட்டிக்கும் பயன்படாது. //
இப்போது தான் உங்கள் மற்ற விமர்சனங்களைப் பார்த்தேன் கல்வெட்டு.
ReplyDeleteஎனக்கு ஈழப் பிரச்சனையும் வெயாபாரம் பார்க்கும் புத்தகங்களில் நம்பிக்கைதன்மை இல்லை. பெரும்பாலும் நேரடி அனுபவமாகவே இருக்கிறது எனது புரிதல்கள்.
முடிந்தவரைக்கும் இதிலேயே பகிரிந்து கொண்டால் ரொம்பவே சந்தோஷப்படுவேன்.
நிஜம் இதுதான்.....
ReplyDeleteபிரபாகரன் ஆயுதங்களை முற்றிலும் போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தாலும் ஒன்றும் ஏற்பட்டு இருக்காது.
யாசர் அராபத் எவ்வளவோ பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். எல்லா நாட்டு தலைவர்களிடமும் தொடர்பில் இருந்தார். அவர் காலம் உள்ள மட்டும் , ஏன் இன்று வரையும் பாலஸ்தீனம் அதற்கான அங்கீகாரத்தைப் பெறவில்லை.இன்னமும் ஒரு ஆபத்தான் நிலையில்தான் இருக்கிறது.
இஸ்ரேலுக்கு இருக்கும் வலுவான அமெரிக்க அய்ரோப்பிய ஆதரவு அதைக் காக்கிறது.
***
ஒருவேளை இந்தியா வரிந்துகட்டிக்கொண்டு ஈழத்தை ஆதரித்து இருந்தால் மாற்றம் ஏறபட்டிருக்க வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் இந்தியாவில் மனித நோக்குள்ள நல்ல அரசியல் தலைவர்கள் இல்லை. ஐ.நாவில் இலங்கையின் தீர்மானத்தை ஆதரித்ததில் இருந்து இந்தியாவின் நிலைமை தெளிவாகிறது.
தமிழக அரசியல்தலைமை சொல்ல வேண்டியதே இல்லை.
****
கியூபா,சைனா போன்ற நாடுகள் இலங்கையை ஆதரிக்கும்போது அமெரிக்கா இதன் எதிர் அணி என்பதால் அமெரிக்கா நினைத்தால் முடியும். இதிலும் சிக்கல் இருக்கிறது.
அமெரிக்கா ஒரு காலத்தில் பின்லேடனை வளர்த்தது போல அதன் ஈழ உதவிகள் அமையாமல் , இஸ்ரேலைக் காப்பதுபோல ஈழத்திற்கும் உதவினால் நன்று. அதுதவிர வேறு வழிகள் புலப்படவில்லை இப்போதைக்கு. ஆனால் அப்படி நட்க்க ஒரு ஸ்ட்ராங்க் அஜென்டா வேண்டும். யார் உண்டாக்குவது ????
கல்வெட்டு இந்த விமர்சனத்தை இங்கு போட்டுருக்கலாமே?
நோகாமல் நொங்கு தின்பது போல இணையத்தில் பல அறிவுரைகளை வழங்க முடியும். ஆனால் அவை எல்லாம் ஒரு மண்ணாங்கட்டிக்கும் பயன்படாது. /
ReplyDeleteஎன்ன இப்ப்டி சொல்லீட்டிங்க.
கியூபாவில் உள்ள உள் நடப்பு விவகாரங்களை தனது பெண்மணியைப் பற்றி எழுதி கியூபா விவகாரங்களை வெளி உலகத்திற்கு தெரிவித்த பெண்மணி பற்றி நீங்கள் அறிந்தது இல்லையா? இந்த பெண்மணியை கியூபா வாழ்க்கையின் ஓரத்திற்கே விரட்ட அமெரிக்கா அரசாங்கம் ரத்தினக்கம்பளம் கொடுத்து வரவேற்று வேறு நாட்டில் உட்கார்ந்தபடி அந்த பெண்மணி ஆட்டம் காட்டிய செயலை உணர்ந்து இருக்கும் வாய்ப்பு கிடைத்தால் படித்துப் பாருங்க. ஒன்றும் நடக்காது என்று நினைத்து இருந்தால் ஏன் கோத்தபய ராஜபக்ஷே தன்னுடைய முதல் வேலையாக தமிழ்நெட் க்கு பூட்டு போட்டது? தமிழ்நெட் வலைதளத்தை நடத்திக் கொண்டுருந்த தமிழரை ஏன் கொன்றார்கள்??????
ஜோதிஜி,
ReplyDeleteஇணையத்தால் ஒன்றும் முடியாது என்றால், நாம் உரையாடுவதே வீண். :-)))
நான் சொல்ல நினைத்தது...
ஆக்கபூர்வமான செயல்கள் நடைபெற வேண்டும். சரியான இலக்கைகைக் கொண்ட, இடைவிடாத ,தொய்வில்லாத கருத்துக்களை பரப்ப வேண்டும். சீசன் கச்சேரிகல்போளா ஏதாவது ஒரு செயலுக்கு எதிர்வினையாக பொங்கி எழுந்துவிட்டு மறந்துவிடக்கூடாது.
ஆக்கபூர்வமான திட்டமிட்ட செயல்கள் சரியான இலக்குடன் மக்களுடன் மக்களுக்காக நடத்தப்படவேண்டும்.
இங்கு புலிகளுக்கு பந்தம் பிடிப்பவர்கள் என்னை போராட்டம் நடத்த சொல்லுகிறார்கள்.. இது அவர்களுக்கான பதில்
ReplyDeleteநான் முட்டாள் தனமாக ஒன்றை தொடங்கி (பிரபாவை போல்) இருப்பதையும் கெடுக்க மாட்டேன்..
Steven R. Ratner is a member of the three person U.N. panel for human rights issues related to the Sri Lankan conflict. He is a professor at University of Michigan Law School and his profile is at: http://web.law.umich.edu/_facultybiopage/facultybiopagenew.asp?ID=300
ReplyDeleteHis profile shows he is a very reasonable person and done good work in the past. His email is in the profile. I written to him with a plead and the data I have, hoping it could help him on his probe and his panel report to U.N. I request others, who have valuable data - gathered through web, scanned news paper articles, audio interviews of people from war zone(with subscript) to send to him. And please try not to send emotional emails, rather send as much as information, with credible source that he can make use of.
Though the U.N report is not gona bring well fair to elem tamils, such a report would apeal broader set of countries, medias. And such a report could help war criminals to be brought to justice. So, please if you have information with source, SEND IT OVER.
போன்ற சிங்களவனுக்கு கூட்டிக் கொடுப்பவர்களினால் தான் எம்மினம் அழிந்து போனது
ReplyDeleteவெத்துவேட்டு போகிடமெல்லாம் மலம் கழிப்பது போல் கழித்துக்கொண்டிருக்கின்றார்
இவர்களை அனுமதிப்பவர்கள் உண்மையில் மலசல கூடம் நடாத்தலாம்
மக்களில் அக்கறை என்னும் போர்வையில் தமிழின எதிர்ப்பை காட்டிக்கொண்டிருப்பவர்கள் மாற்றுக்கருத்து என்று சொல்லிச் சொல்லியே மலம் கழித்துக்கொண்டிருக்கின்றார்கள்
ஈனப்பிறவிகள்
இந்த யூரியுப் கணக்கு உங்களுக்கு உரியது என்றால் இறுதுக் காணொளி மிகவும் அருவருப்பாக இருக்கின்றது
ReplyDeleteபெண்களின் நிர்வாணப்படங்களை எப்படி வைகோ உருமறைப்புச் செய்யாமல் அனுமதித்தார் இது என்னுடையது மட்டுமல்ல பலரது விசனம் கூட
முடிந்தால் அதை உருமறைப்புச் செய்து வெளியிடுங்கள்
http://www.youtube.com/watch?v=z33AVl4wnMU
இங்கு நாம் உருமறைப்புச் செய்து வெளியிட்டிருக்கின்றோம்
நன்றி
Steven R. Ratner, is a member of "three person U.N. Panel U.N. panel on human rights issues in Sri Lankan conflict ". He is also a professor at University of Michigan Law School, his profile is at:
ReplyDeletehttp://web.law.umich.edu/_facultybiopage/facultybiopagenew.asp?ID=300
He seems to be a reasonable person and done good work on similar issues in past. His email id is in his profile. I have written to with a plead and the data I have, that could help on his work on the human rights issue investigation. I request anyone with a valuable data - web, scanned news paper article, interview with people from war zone(with english transcript) - that could help on his work, please write to him with the information you have and the sources. Please try not write emotional, credible data with sources are need of the hour. Prof.Steven's report is going to be part of the U.N panel report.
The very fear of Sri Lankan govt on this matter shows in it's refusal for this panel's visit to Sri Lanka. So, if we have data, let's pass it on to this panel and make them powerful.
Though U.N. report is not gona bring well fair to elem tamils, it will get attention of more countries and medias. It will be a major report, can help to bring the war criminals to justice.
Thanks.
Steven R. Ratner, is a member of "three person U.N. Panel U.N. panel on human rights issues in Sri Lankan conflict ". He is also a professor at University of Michigan Law School, his profile is at:
ReplyDeletehttp://web.law.umich.edu/_facultybiopage/facultybiopagenew.asp?ID=300
He seems to be a reasonable person and done good work on similar issues in past. His email id is in his profile. I have writtern to with a plead and the data I have, that could help on his work on the human rights issue investigation. I reqeust anyone with a valuable data - web, scanned news papper article, interview with people from war zone(with english transcript) - that could help on his work, please write to him with the information you have and the sources. Please try not write emotional, credible data with sources are need of the hour. Prof.Steven's report is going to be part of the U.N panel report.
The very fear of Sri Lankan govt on this matter shows in it's refusal for this panel's visit to Sri Lanka. So, if we have data, let's pass it on to this panel and make them powerful.
Though U.N. report is not gona bring well fair to elem tamils, it will get attention of more countries and medias. It will be a major report, can help to bring the war criminals to justice.
Thanks.
Thank you for the info டண்டணக்கா!
ReplyDeleteDoes any one knows where to get the new book that documented elem war crime pictures released on 9-jan-2011.
ReplyDeleteBook Title: Enna Seyalaam Itharkaga
Author: Prabakaran
I saw this video here on the book:
http://www.youtube.com/watch?v=Om_dLolZ450&feature=related
Appreciated if anyone can guide me on publisher info and where to get.
Thanks.
LET US BE UNITED. LET THE CRY AND BLOOD OF TAMIL BROTHEREN BE SEED FOR NEW NATION.
ReplyDeleteGot the details about the book:
ReplyDeletehttp://www.yarl.com/forum3/index.php?showtopic=80048
http://srilankagenocidealbum.com/
Also, on the video:
http://www.youtube.com/watch?v=4j52PAGoQ8I
//Does any one knows where to get the new book that documented elem war crime pictures released on 9-jan-2011.
ReplyDeleteBook Title: Enna Seyalaam Itharkaga
Author: Prabakaran//
Let me be a helping hand on your query.
Would you please drop me a line to rajanatcbe@gmail.com
thiru jothiji part 3 வேண்டும் .....
ReplyDeleteஜோதி....3ம் பாகம் வேண்டும் அல்லது முழு DVD கிடைக்கும் இடம் பற்றிய தகவல் தேவை...வைகோ அவர்களின் குறுதட்டுடன்... திருச்சி வேலுசாமியின் ராஜீவ் காந்தி கொலைவழக்கு - ஜெயின் கமிஷன் சாட்சியம் பற்றிய நேர்காணலையுனம் இணைத்து..ஒரு குறுதட்டை இலவச பிரதியாக மக்களிடம் சேர்க்க ஒரு குழுவாக என் நண்பர்களுடன் ஒரு முயற்சியை மேற்க்கொண்டுள்ளோம்.
ReplyDeleteகெட்டவன் said...
ReplyDeletetexlords@gmail.com
He needs to release this in English.
ReplyDelete@அனாமிகா துவாரகன்
ReplyDeleteஇதற்கு அடுத்து இன்னொரு குறுந்தகடும் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கடுத்து ஆங்கிலத்தில் ஒரு குறுந்தகடும் வெளியிடப்பட்டுள்ளது.
ஆங்கிலக் குறுந்தகடு டெல்லியில் பத்திரிகையாளர்களுக்கும், எம்.பி.க்களுக்கும் போட்டுக் காட்டப்பட்டது. அங்கிருந்த பலரும் அழுதுகொண்டே பார்த்தனர்.