அஸ்திவாரம்

Thursday, September 30, 2010

ஏணிப்படிகளின் தொடக்கம்

முத்து முருகேசன் தன்னுடைய பத்திரிக்கை வாழ்க்கையை தொடங்கிய ஆண்டு 1973, கலைஞரின் தமிழ்முரசு  பத்திரிக்கையில் ரிப்போர்டர் வேலை.

கலைஞரின் கையெழுத்துப் பற்றி தெரியாதவர் எவருமே இருக்கமாட்டார்கள்.  அடித்தல் திருத்தல் இருக்காது.  வினோதமான நெளி போல வளைந்து போய்க் கொண்டுருக்கும்.

வாக்கியங்கள் வார்த்தைகள் மாறும் போது அதை சமய சந்தர்ப்பத்திற்கேற்ற அப்படியே கோர்ப்பதில் வல்லவர். அடித்தல் திருத்தல் இன்றி அப்படியே கோர்த்து முடித்து விடுவார். இந்த இடத்தில் இப்படி மாறி  வர வேண்டுமே என்று எவராலும் எண்ணத் தோன்றாது. அவரைப் போலவே இவரின் கையெழுத்தும் எத்தனை பக்கங்கள் தொடச்சியாக எழுதிக் கொண்டே இருந்தாலும் கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டிய கல்வெட்டு போலவே இருக்கும். இன்று வரைக்கும் சேகரித்த அத்தனை தாள்களையும் பொக்கிஷம் போலவே பாதுகாத்துக் கொண்டுருக்கிறார்.

அப்போது மதுரையில் அதிகம் விற்பனையாகிக் கொண்டுருந்த பத்திரிக்கைகள் தினந்தந்தி, தினமணி. அந்த 3000 பிரதிகளை இவரின் தனிப்பட்ட சமூக கட்டுரைகள் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டு மேடேறி ஓட ஆரம்பித்தது.  இவருடைய மற்ற ஆராய்ச்சிகள் எப்போதும் போல ஓடிக் கொண்டே இருந்தது. இப்போது இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே பல தரப்பட்ட மக்களின் பிரச்சனைகள், காரண காரியங்கள், பிரபலங்களின் அந்தரங்கம் முதல் அநாகரிகம் வரைக்கும் கோடு கிழித்துப் பார்க்க பழக ஒவ்வொன்றாக புரிபட ஆரம்பித்தது.

முமு எவருடனும் அதிகம் பேசுவதில்லை.  எவர் குறித்தும் மற்றவர்களிடம் உரையாடுவதும் இல்லை.  செய்திகள் சேகரிக்கச் செல்லும் போது அடித்தட்டு மக்களிடம் முதலில் பேச்சை ஆரம்பித்து கடைசியில் தான் பொதுக்கூட்ட மேடைக்கு செல்லக்கூடியவர். குறிப்பிட்ட தலைவர்கள் இவரிடம் மக்களின் நாடி எப்படி உள்ளது என்று கேட்டதெல்லாம் உண்டு. இதைப் போலவே தனக்குத் தெரிந்து ஒருவரின் அந்தரங்களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்வதே இல்லை.  கோடு கிழித்துக் கொண்டு ஒரே மாதிரியான வாழ்க்கை. இன்று வரைக்கும் அப்படித்தான்.

இவருடைய நிர்ப்பந்தம் தாங்க முடியாமல் அலுவலகத்திற்கு செல்வதற்கு முன் வீட்டுக்குள் இருக்கும் சாமி படங்களை பார்த்து கையை உயர தூக்கி சப்தமாக " அப்பா பாத்துக்கப்பா.............." என்று சொல்லிவிட்டு ஒரே ஓட்டமாக நகர்ந்து போய் விடுவதுண்டு. ஆனால் விட மாட்டார். பாடம் எடுக்க ஆரம்பித்து விடுவார். அவருடைய வாழ்வில் அதிகபட்சமாக பேசிய ஒரே நபர் நானாகத்தான் இருப்பேன்.  சிந்திப்பது, எழுதுவது கொஞ்சம் யாரும் கேள்வி கேட்காமல் இருந்தால் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை டீ குடித்துக் கொண்டேயிருப்பது.  இது தான் முக்கியப் பிரச்சனையே.

இந்திரா காந்தி கொண்டு வந்த மிசா சட்டம் கலைஞரின் தமிழ்முரசு பத்திரிக்கையை மூட வைக்க மறுபடியும் இவரின் வாழ்க்கை முட்டுச் சந்தில் போய் நின்றது.

மறுபடியும் இன்றைய உரத்துறை அமைச்சருக்காகவே (?) மதுரையில் (1980) முரசொலி ஆரம்பிக்க கலைஞர் முதலில் தேடிய ஆள் எங்கே முமுகடந்த கால அத்தனை அனுபவங்களையும் மொத்தமாக தீவிர கட்டுரைகளாக எழுதித் தள்ள முரசொலி முன்னேறத் தொடங்கியது.  விதி சும்மா விடுமாஇவர் எந்த இடத்திற்கும் நேரிடையாகவே சென்று செய்திகள் சேகரிக்கும் பழக்கம் உள்ளவர்.  இன்றைய " இன்வெஸ்டிகேடிவ் ஜெர்னலிசம்" என்பதை அன்றே ஆரம்பித்தவர்.

ஒரு அரசு போக்குவரத்து நிறுவன ஊழல் சம்மந்தமான விசயத்தில் தலையிட்டு சேகரித்த செய்திகள் மிகுந்த களேபரத்தை உருவாகத் தொடங்கியது. அசைக்க முடியாத ஆதாரங்கள் அத்தனையும் இவரின் கைகளுக்கு வந்து விட அதுவே கட்டுரையாக மாறி பிரிண்டர் வரைக்கும் வந்து விட்டது. அஞ்சா நெஞ்சன் அதை வெளியிட வேண்டாம் என்று சொல்ல உருவான பனிப்போரில் இவர் தலை உருளத் தொடங்கியது. 

இவரிடம் இரண்டு கொள்கைகள் எப்போதுமே உண்டு.  எழுதிய கட்டுரைகளில் திருத்தம் செய்யக்கூடாது.  எக்காரணம் கொண்டும் அந்த கட்டுரைகள் பதிப்புக்கு போகாமல் இருக்கக்கூடாது. மிகப் பெரிய ஆச்சரியம் கலைஞர் அவர்கள் இவரின் எழுத்துக்கு கொடுத்த மகத்தான அங்கீகாரம்.  கலைஞர் டெல்லியில் இருந்தாலும் காலையில் அவர் கேட்பது முமு கட்டுரை என்னாச்சு?

காரணம் கலைஞருக்குப் பிறகு பெயர் போட்டு வரும் அளவிற்கு இவரின் கட்டுரைகள் அப்போது பிரசித்தம்.

அஞ்சா நெஞ்சன் அவர்களுடன் உருவான் மனக்கசப்பில் வெளியேறி விட்டார்.  வெளியேறும் போது மற்றொன்றையும் செய்து விட்டே வெளியே வந்தார்.  என்ன நடந்தது? ஏன் நடந்தது? போன்ற பின்னால் உள்ள விவகாரங்களை கடிதமாக கலைஞருக்கு எழுதி அனுப்பி விட்டு வீட்டுக்கு வந்து விட கலைஞர் செய்த உடனடி காரியம் மதுரை முரசொலியை ஒரு மே தினத்தில் மூடவைத்தது.  

கண்டிப்பு, கறார், உண்மை, உழைப்பு, அசாத்தியமான திறமை போன்ற அத்தனையும் ஒரு மனிதருக்கு இருந்தால் இந்த உலகம் எப்படி வாழவைக்கும்? எப்படி தூற்றும்? என்ன மாதிரியான விமர்சனங்கள் வரும்? போன்ற கேள்விகளுக்கு எனக்கு தெரிந்த நபர் முத்து முருகேசன். 

நான் பார்க்காமல் படித்த வாயிலாக உணர்ந்த தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். 

இவர்கள் இருவருமே இரண்டு துருவங்கள். 

இந்த இரண்டு துருவங்கள் ஒரு நாள் சந்தித்தது..

18 comments:

  1. உண்மைகள் கசக்கும்....

    ReplyDelete
  2. நான் பார்க்காமல் படித்த வாயிலாக உணர்ந்த தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்.

    இவர்கள் இருவருமே இரண்டு துருவங்கள்.

    இந்த இரண்டு துருவங்கள் ஒரு நாள் சந்தித்தது..//
    மிக ஸ்வாரஸ்யம்..ஆவலுடன் காத்திருக்கிறேன்..

    ReplyDelete
  3. ஜி நல்ல பகிர்வுங்க... நல்ல மனிதர்.. படித்து முடித்ததும் அவர்மேல் ஒரு தனி மரியாதை உண்டாகிறது. நல்லதுக்கு ஏதுங்க காலம்...

    ReplyDelete
  4. மீண்டும் உணர்வோடு உறவாடும் ஒரு கட்டுரை. அடுத்து நடந்தது என்ன? ஆவலாக இருக்கிறேன்!

    ReplyDelete
  5. இதன் தொடர்ச்சிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  6. முடிச்சுக்களை மேலும் மேலும் போட்டுக் கொண்டே போகிறீர்களே! ஒவ்வொன்றாக அவிழ்ப்பதற்குள் நட்சத்திர வாரமே முடிந்துவிடுமே?!

    ReplyDelete
  7. இரண்டு துருவங்கள் என்கிறீர்கள்.
    சந்தித்தும் இருக்கிறார்கள்.
    ஆர்வம் கூடுகிறது ஜோதிஜி !

    ReplyDelete
  8. வணக்கம் ஜி

    இப்படி குதிரையை அடித்து ஓட்டினால் எங்களால் எப்படி ஓடிவர முடியும்......

    என்னைப்போல் ஒன்னும் தெரியாத பிள்ளைகளுக்காக முத்து முருகேசன் ..... தெரிந்து கொள்கின்றோம்.

    ReplyDelete
  9. இந்த இரண்டு துருவங்கள் ஒரு நாள் சந்தித்தது.


    திருப்பூரில் மனோகரன் என்பவர் நீராவி நிறுவனம் (ஸ்டீம்)வைத்திருந்தார்.அங்கு வைகோ வந்திருந்தபோது நடந்த பேச்சு வாக்கில் இதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.

    ஆனால் உங்கள் வாயிலாக அறிய ஆவல்.

    ReplyDelete
  10. கலைஞர்ன்னா முரசொலிதான்!

    ReplyDelete
  11. இரண்டு துருவங்களின் சந்திப்பின் நிகழ்வுகள் ஆர்வத்தை தூண்டுகிறது, ஜோதிஜி..........பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  12. நல்ல பகிர்வு...

    //இந்த இரண்டு துருவங்கள் ஒரு நாள் சந்தித்தது..//

    தெரிந்து கொள்ள ஆவல்!

    ReplyDelete
  13. //கண்டிப்பு, கறார், உண்மை, உழைப்பு, அசாத்தியமான திறமை போன்ற அத்தனையும் ஒரு மனிதருக்கு இருந்தால் இந்த உலகம் எப்படி வாழவைக்கும்?//

    நல்ல ஏணிப்படி? தொடருங்க... தெரிஞ்சிக்கிறோம்.

    ReplyDelete
  14. தொடர் வாசிப்புக்கு நன்றி தெகா.....

    வாங்க ரவி.

    வருக சிப்பிக்குள் முத்து. தொடர்ந்து பயணித்துக் கொண்டுருக்கும் உங்களுக்கும் ராஜ நடராஜனுக்கும் நன்றிங்க.

    ஹேமா மற்றும் ராசா

    இந்த தலைப்பு இந்த இடத்தில் வந்து இருக்கக்கூடாது. விபரம் கடைசி இடுகையில்....

    தவறு, சதிஷ்குமார், எஸ்கே,பாலாசி, நந்தா விடாமல் என்னை விரட்டிக் கொண்டு வருகிறீர்கள்.
    நன்றி.

    ReplyDelete
  15. மிக அருமையான பதிவு

    http://denimmohan.blogspot.com/

    ReplyDelete
  16. இந்த முமுவைப் பற்றி இவ்வளவு நாள் தெரியாமல் இருந்திருக்கிறேன். உலகம் சுழல இவர் வாழ்ந்துகொண்டே இருக்கவேண்டும்.

    ReplyDelete
  17. பாகம் 2 எப்போது?

    ReplyDelete
  18. nice one......waiting for next part...

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.