அஸ்திவாரம்

Tuesday, August 31, 2010

புரட்சித்தலைவர்




                                                                 நல்ல கருத்து
                                                              சமூக சிந்தனை
                                                              தார்மீக கோபம்
                                                              ஒன்று சேர்த்து
                                                     எழுதியதில் பரமதிருப்தி.

                                                          எழுத உதவிய புத்தகம்
                                                                 கசங்கிகிடந்தது.

                                                                             அட.............
                                                                            தேடிய 
                                                                பொருத்தமான படங்கள்
                                                                 கூகுளில் சிரித்தது.

                                                                               எழுதி 
                                                                     வெட்டி ஒட்டி 
                                                                            மாற்றி.
                                                                          கோர்த்து 
                                                            பொருத்தியாகிவிட்டது.

                                                                    இடுகையை
                                                        திரட்டியில் சேர்த்துவிட்டு
                                                                    எழுத மறந்த 
                                                                 வார்த்தையை 
                                                      மறுபடியும் உள்நுழைந்து
                                                       மறக்காமல் எழுதினேன்.

                                                         அம்மா தாயே மகராஜா
                                                                    மறக்காதீங்க

                                                             ஓட்டுப் போடுங்க.....
                                                             ஓட்டுப் போடுங்க...

35 comments:

  1. என்னமோ கவிதை எலுதுறிங்க!
    இந்த மர மண்டைக்கு ஒன்னும் புரியல.

    ReplyDelete
  2. ஹாஹாஹா .. ஓட்டு வேட்டையில் ஜோதிஜி நீங்களுமா,,??

    ReplyDelete
  3. சரவணக்குமார் சொன்னபோது கூட என்க்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. கவிதாயினி தேனம்மை இதன் உள் அர்த்தம் உங்களுக்குமா புரியவில்லை?????????????

    ReplyDelete
  4. எனக்கு புரிகிறது jaike.... அல்லது இந்த மாதிரி நிறைய என்ற வலைபதிவர்கள் ஓட்டுப் போடுங்க ஓட்டுப் போடுங்க என்று கூவுகிறார்கள்

    ReplyDelete
  5. ஒரு ஜென் கதை.

    விலைமதிப்பில்லாத வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு ஜாடி மாஸ்டரிடம் இருந்தது. அதனை உடையாமல் பாதுகாப்பதில் மிகுந்த கவனம் செலுத்தியவர். ஏதோ ஒரு கணத்தில் ஞானம் வர டொப் பென்று கீழே போட்டு உடைத்துவிட்டு நிம்மதியாய் உறங்கப் போனாராம்.











































































































    அவரோட மறுபிறவி அமெரிக்கால இருக்கார். நான் சேரலாம்னு இருக்கேன். அப்ப நீங்க?? :)

    ReplyDelete
  6. ஷங்கர் உங்க விமர்சன பார்த்துட்டு எங்கடா பொட்டிய காணோம்ன்னு தேடிக்கிட்டு பயந்துட்டேன். கீழே வந்தா ? அநியாயத்திற்கு அந்த துறவி உங்கள கெடுத்து வச்சது தெரிந்தது.

    அப்புறம் ஒரு சுபயோக சுப தினத்தில் அந்த ஆசிர்வாதம் வாங்க நானும் உங்களோட வர்றேன். என்னவொன்று அந்த துறவி இப்ப உ.த கும்மிக்கிட்டு இருக்கார். எப்பவும பீசி பீசியோ பீசி..........

    ReplyDelete
  7. சார்..எப்படி சார்...நிஜமா எப்படி இப்படி..சான்ஸ்சே இல்ல..என்னமா சிறுகதை எழுதுறீங்க..வாவ்

    ReplyDelete
  8. ஏதும் தவறா சொல்லிட்டேனா?

    ReplyDelete
  9. ஐயோ,,,,,,,,, என்ன இப்டி சொல்லீட்டீக,,,,,

    கொழந்த நக்கல் நாட்டுக்குத் தேவை..........

    ReplyDelete
  10. //கொழந்த said...
    சார்..எப்படி சார்...நிஜமா எப்படி இப்படி..சான்ஸ்சே இல்ல..என்னமா சிறுகதை எழுதுறீங்க..வாவ்//

    மிக்க நன்றிங்க கொழந்த சார். :)

    ReplyDelete
  11. கொழந்த

    இப்பத்தான் உ த போய் ஒரு கதக்களி ஆடிட்டு வந்துருக்கார். நீங்க அவரு போய் கௌப்பி விட்டுக்கிட்டு..........

    ReplyDelete
  12. எழுதி
    வெட்டி ஒட்டி
    மாற்றி.
    கோர்த்து
    பொருத்தியாகிவிட்டது.
    //

    எல்லாம் முடித்து ஓட்டு வேட்டையிலும் இறங்கியாச்சா!

    ReplyDelete
  13. அட! எனக்கென்றே சிறிய பதிவு எழுதினீர்களா?

    ReplyDelete
  14. என்ன சார் கடந்த இரண்டு பதிவுகளாக சிறிது தடம் மாறுகிறது!!!!

    நன்றி சார்...

    ReplyDelete
  15. தாமஸ் ரூபன் உங்கள் அக்கறைக்கு நன்றி. நீங்கள் வருத்தப்பட்டாலும் உண்மையைச் சொல்ல வேண்டும். கட்டுரைக்களைப் போலவே இந்த கவிதை வடிவங்களும் எனக்குப் பிடிக்கும். இப்போது உள்ள கட்டுரை வடிவங்கள் எனக்கு வந்து சேர கடந்த 14 மாதங்கள் உழைத்துள்ளேன். அது போலவே இதற்கும் இப்போது ஆரம்பித்துள்ளேன். சில விசயங்களில் உள்ள ஆதங்கத்தை பகிர்ந்து கொள்ள இந்த கவிதை வடிவங்கள் சிறந்தது. கட்டுரை என்றால் நீட்டி முழக்க வேண்டும். அதுவே வீணான விவாதத்திற்கு கொண்டு போய் விட்டு விடும்.

    ReplyDelete
  16. மருத்துவரே அவசரமாய் வந்து அவசரமாய் முடிவு எடுத்து விட்டீர்கள். வாங்க அடுத்த முறை அரை மணி நேரம் உட்கார வைத்து விடுகின்றேன். காத்து இருப்பவங்க கண்ணால் உங்களை எரிக்கப் போறாங்க(?)

    ReplyDelete
  17. ஜோதிஜி, உங்கள் ஆதங்கம் புரிகிறது; விட்டுத்தள்ளுங்கள். "எழுத மறந்த வார்த்தையை..." Pseudo" இதுவா? உங்கள் தளத்திற்கு ஆரோக்கியமாக ஏதாவது படிக்க வந்தால் இப்படி ஏமாற்றக்கூடாது.

    ReplyDelete
  18. என்ன பன்னீங்க என்பதே ஒரு பதிவா?

    ReplyDelete
  19. வாங்க ரதி. துளசி கோபால் எழுதிய நியூசிலாந்து புத்தகம் கிடைத்தால் ஒரு முறை படித்துப் பாருங்கள். ஈழம் என்ற நாட்டைப் பற்றி எத்தனை புத்தகங்கள் படித்து இருப்பேனோ?

    ஆனால் துளசி கோபாமல் கொடுத்துள்ள விபரங்கள் தீராத ஆச்சரியமாய் இருக்கிறது. ஈழத்துக்கு பிறகு நான் படித்தே ஒரே நாடு நியூசிலாந்து தான்.

    இந்த அளவிற்கு பொது சமூக உரிமைகள் மனிதர்களை மதிக்கக்கூடிய அரசமைப்பா என்பதே ஆச்சரியமாய் இருக்கிறது.

    விமர்சனத்தை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்று எழுத அமர்ந்தேன். ஆனால் இந்த புத்தக தலைப்பு பலருக்கும் போய்ச் சேரவேண்டும் என்பதற்காக வேறு சில விசயங்களையும் எழுதிப் பார்க்கின்றேன்.

    அன்பரன் என்னை கொன்று போட்டு விட்டீர்கள்(?)

    ReplyDelete
  20. //எழுத மறந்த வார்த்தையை மறுபடியும் உள்நுழைந்து மறக்காமல் எழுதினேன். அம்மா தாயே மகராஜா மறக்காதீங்க
    ஓட்டுப் போடுங்க..... ஓட்டுப் போடுங்க...//

    இதுக்குப் பேருதான் புரட்சித் தலைவரோ..?
    அது சரி.

    ReplyDelete
  21. New Zealand என்ற நாட்டின் மனித மாண்புகள், விழுமியங்களோடு கூடிய அரசநியமங்கள் இலங்கை, இந்தியா போன்ற நாட்டில் பிறந்த எங்களுக்கு ஏக்கம் கலந்த ஆச்சர்யத்தை தருவதில் ஒன்றும் வியப்பில்லை என்று தான் தோன்றுகிறது. நீங்கள் சிபாரிசு செய்யும் அப்புத்தகம் கனடாவில் கிடைத்தால் நிச்சயம் படிக்கிறேன், பகிர்ந்துகொள்கிறேன்.

    ReplyDelete
  22. என்னா ஒரு அட்டூழியம்....புரட்சித்தலைவர்ன்னு தலைப்புப் போட்டு இப்பிடி ஒரு க(வி)தை !

    கொஞ்சம் கொஞ்சம் எழுத வாற கவிதையும் உங்க
    க(வி)தை பாத்து இனி வராது.நான் இனிக் கவிதை எழுதல ஜோதிஜி !

    ReplyDelete
  23. அப்பாடா.. ஹேமா இனிமே எழுதலைன்னு சொல்லிட்டாங்க.

    இப்படியே இன்னும் ஒரு 10 கவிதை எழுதுங்க ஜோதிஜி. நம்ம பலாவையும், இராமசாமியையும் நிறுத்த வச்சிடலாம்.

    I have a dream....., a dream that a free world without பலா கவிதை.

    ReplyDelete
  24. உ.த அண்ணனை கும்மிகிட்டு இருந்ததில்.. இந்த ஏரியா மிஸ்ஸாகிடுச்சி.

    ஆனாலும் எழவு...

    //உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.//

    இந்தக் கொசுக்கள் இருக்கற வரைக்கும்... பதிவுலக சாக்கடையை சுத்தம் பண்ண முடியாது போலயிருக்கே??

    பாலா.. சீக்கிரம்.. இதுக்கு ஒரு கவிதை எழுதுடா..!!

    ReplyDelete
  25. //இந்தக் கொசுக்கள் இருக்கற வரைக்கும்... பதிவுலக சாக்கடையை சுத்தம் பண்ண முடியாது போலயிருக்கே??
    //

    இதுக்குத்தான் கூகிள்ல புதுசா ஒரு ஆப்ஷன் வந்திருக்கே. ஸ்பாம் கமெண்ட் எல்லாம் வராம செய்ய..!

    ReplyDelete
  26. பாலா.. சீக்கிரம்.. இதுக்கு ஒரு கவிதை எழுதுடா..!!

    ம் ஸ்டார்ட் ம்யூசிக்...க்.......க்........க்காகாக

    இந்தக் கொசுக்கள் இருக்கற வரைக்கும்... பதிவுலக சாக்கடையை சுத்தம் பண்ண முடியாது போலயிருக்கே??

    பன்னிக்குட்டிங்க இருக்கிற இடத்ல சுத்தமாவது பத்தமாவது? ம்ஹும் வாய்ப்பு இல்ல ஜீ. நாம வாய பொத்திக்கிட்டு இருந்துட வேண்டியது தான்.

    அப்பாடா.. ஹேமா இனிமே எழுதலைன்னு சொல்லிட்டாங்க.

    ஹேமா இப்ப உங்களுக்கு திருப்தி தானே?

    குமாரும் நீங்களும் என்ன திட்டினீங்களோ காலையில மொத்தமா புடுங்கிடுச்சு....... ஆனாலும் விடமாட்டேன் ஹேமா

    தல பத்து எழுதச் சொல்லியிருக்காக........... 9 வரும் போது ஷங்கர் இராமசாமி அண்ணனுங்க என்ன சொல்றாங்கன்னு பார்த்து தான் கள்ளிக்காட்டு இதிகாசமா இல்ல வேறு எதுவுமான்னு முடிவு செய்யோனும்

    ReplyDelete
  27. //I have a dream....., a dream that a free world without பலா கவிதை.//

    //பாலா.. சீக்கிரம்.. இதுக்கு ஒரு கவிதை எழுதுடா..!!//

    கண்ட இடத்துல ’கால’ விடறீங்களே நாயமா? தர்மமா? அடுக்குமா?

    ReplyDelete
  28. New Zealand என்ற நாட்டின் மனித மாண்புகள், விழுமியங்களோடு கூடிய அரசநியமங்கள் இலங்கை, இந்தியா போன்ற நாட்டில் பிறந்த எங்களுக்கு ஏக்கம் கலந்த ஆச்சர்யத்தை தருவதில் ஒன்றும் வியப்பில்லை என்று தான் தோன்றுகிறது. நீங்கள் சிபாரிசு செய்யும் அப்புத்தகம் கனடாவில் கிடைத்தால் நிச்சயம் படிக்கிறேன், பகிர்ந்துகொள்கிறேன்.

    பாலா ரதியின் தமிழ் வார்த்தைகளை பார்த்தீர்களா?
    அரச நியமங்கள் இது போன்ற வார்த்தைகளை நீங்கள் கேட்டாவது இருக்கீங்களா? கிட்ட வந்து கேட்டா தமிழ் ஒலிக வாலுக ன்னு என்னோட செண்டைக்கு வந்து நீப்பீக

    நன்றி ரதி.

    ReplyDelete
  29. I have a dream....., a dream that a free world without பலா கவிதை.


    எத்தன நாளா இந்த கொல வெறி?

    ReplyDelete
  30. //இது போன்ற வார்த்தைகளை நீங்கள் கேட்டாவது இருக்கீங்களா?//

    ஜோ, மாட்டினீங்க. இதுக்கோசரமே ஒரு பதிவு வரும்.




    ஹும்ம் FX 00 வெச்ச எடத்துலேயே இருந்துடுமோ??

    ReplyDelete
  31. ஜோ, மாட்டினீங்க. இதுக்கோசரமே ஒரு பதிவு வரும்.


    துறவி கொடுத்தா சிஷ்யர்கள் வாங்கிக் கொள்ளத்தானே வேண்டும் ஷங்கர். இப்ப ஆழ்ந்த நித்திரையில் இருப்பார். பார்க்கலாம்


    ஹும்ம் FX 00 வெச்ச எடத்துலேயே இருந்துடுமோ??

    நியாயமான ஆதங்கம்

    ReplyDelete
  32. //ஹும்ம் FX 00 வெச்ச எடத்துலேயே இருந்துடுமோ?//

    அபாண்டமான குற்றச்சாட்டு. நான் பதிவுலகை விட்டு

    ஒரு வாரம்.., நோ
    ஒரு நாள்..., நோ
    ஒரு மணி நேரம் விலகி இருக்கப் போகிறேன். இது உறுதி.

    ReplyDelete
  33. http://manthagini.blogspot.com

    pls check and let me know if it needs any modification

    ReplyDelete
  34. ஒரு மணி நேரம் விலகி இருக்கப் போகிறேன். இது உறுதி.


    Bala Tamil software Hohgaya.

    Pls concentrate(?)

    ReplyDelete
  35. //
    ஜோதிஜி said...
    ஒரு மணி நேரம் விலகி இருக்கப் போகிறேன். இது உறுதி.
    //
    ஒரு மணி நேரத்துக்கு மேல ஆச்சி... இன்னும் ஆள காணும்???

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.