அஸ்திவாரம்

Thursday, January 21, 2010

விடுதலைப்புலிகள் சகோதர யுத்தங்கள் (2)

உலக நாடுகளில் இன்று வரை பலவீனமான , அரச கட்டுப்பாடு இல்லாத, அராஜகமான, தார்மீக பொறுப்பு என்றால் என்னவென்றே அறியாத, அர்பணிப்பு உணர்வு இல்லாத ஒரே இராணுவம் என்றால் இலங்கைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இருப்பதாக தெரியவில்லை.  இன்றைய நவீன விஞ்ஞான வளர்ச்சி கூட அவர்களை எந்த விதத்திலும் மாற்றம் அடையச் செய்யவில்லை.  முடவன் போல் எவரையோ ஒருவரைச் சார்ந்து சவாரி ஏறி நாங்களும் இராணுவம் வைத்திருக்கிறோம்? என்ற மாயையை காட்டிக்கொண்டு வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.  ஒரே காரணம் ஆட்சியாளர்கள்.  ஒரு வகையில் இராணுவம் என்பது அடியாள் பட்டாளம் அல்லது கூலிப்படை.  குத்து என்றால் கொன்று விட வேண்டும்.  போர் என்றால் கீழ்த்தரமான செயல்களை செய்து நாங்களும் எங்கள் பங்களிப்பை வாங்குகின்ற சம்பளத்திற்கு செய்து விட்டோம் என்ற மூன்றாந்தர இராணுவ சேவையாளர்கள் கொண்ட நாடு இலங்கை.  இது கற்பனை அல்ல.  மொத்த அவர்களின் இராணுவ தாக்குதல்களையும் பார்த்து வந்து இருந்தால், படித்துப் பார்த்தால் புரியும்?

பின்னால் வரப்போகின்ற பல உக்கிரமான பிரபாகரன் கொடுத்த தாக்குதல்களை கண்டு அஞ்சி பல இராணுவ வீரர்கள் பணிக்காலம் முடிவதற்குள் ஓட்டம் பிடித்ததும், அவர்களைத் தேடிக்கண்டு பிடித்து கொண்டு வந்ததும், கட்டாய ராணுவ சேவை என்று இளைஞர்களை அழிச்சாட்டியம் செய்ததும் என்றும் இன்று வரையிலும் இந்த நிலைமை மாறவில்லை.  இதுவே எந்த அளவிற்கு சென்றது என்றால் ஏழு மாதங்களுக்கு முன் நடந்த முள்ளிவாய்க்கால் கோரத்தில் பங்கெடுத்த இராணுவ வீரர்களுக்கு வெறியூட்டும் பொருட்டு பல போதைப் பொருட்களை உண்ணவைத்து களத்தில் இறக்கியதும் நடந்த கொடுமை நடந்தது.  அதனால் தான் இந்த நூற்றாண்டின் இணையற்ற கோரங்களை நிகழ்த்த முடிந்தது.

இன்றைய பொதுவேட்பாளர் சரத்பொன்சேகா கூட புலிகளின் கோட்டையில் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்தவர் தான்.  நாலு பேர்கள் ஒன்றாக சேர்ந்த கூட்டத்தைப் பார்த்ததும் ஆய் ஊய் என்று ரவுசு விடும் போக்கிரிகள் போல் தான் உயர்பதவி அதிகாரிகளும் அவர்களுடைய அதிகாரங்களும்.  அதுவே தொடக்கத்தில் பிரிந்து நின்று செயல்பட்டுக் கொண்டுருந்த மொத்த போராளிக்குழுக்களும் இராணுவ எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தாலும் பதிவின் தொடக்கத்தில் பார்த்த தமிழர்களுக்கென்று இருக்கும் தனித்துவமான ஒற்றுமையின்மை காரணமாக தங்களையும் உணரவில்லை.  தாங்கள் செல்ல வேண்டிய பாதையின் அருமையையும் உணரத் தயாராய் இல்லை என்பதே உண்மை.
ஏன் பிரபாகரன் மற்றவர்களை அழித்தார்?
ஆள் கடத்தி பணம் பறிப்பது, மக்களை பயமுறுத்தி வைப்பது, தங்களுடைய இடங்களில் மற்ற போராளிக்குழுக்களின் ஆதிக்கத்தை வளர விடாமல் தடுப்பது,தமிழ்நாட்டில் வைத்து செயல்பட்டுக்கொண்டுருந்த Corporate அலுவலகமும், புலம் பெயர்ந்தோரிடமிருந்து வரும் நிதி ஆதாரங்களை வைத்துக்கொண்டு தாங்கள் வாழ்ந்த ராஜவாழ்க்கை, என்று இன்னும் பல கீழ்த்தரமான வேலைகள் என்று போராடும் பாதைக்கும், பயணிக்கும் பாதைக்கும் சம்மந்தம் இல்லாமல் இருக்க இதற்கிடையில் தன்னுடைய ஆளுமையை நிலை நாட்ட வேண்டிய அவஸ்யமும், தன்னுடைய தனி ஈழம் என்ற கனவு இவர்களால் சிதைந்து வெறும் கற்பனையாக போய்விடுமோ என்ற அச்சமும் முதலும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

டெலோ என்ற இயக்கத்தை தூர்வாறி முடித்ததும் அடுத்த எச்சரிக்கை EPRLF, PLOTE..EROS .   டெலோ இயக்கத்தை அழித்துக்கொண்டுருந்த போதே பிரபாகரன் விடுத்த எச்சரிக்கை "  வேறு எவரும் இந்த விசயத்தில் தலையிடக்கூடாது".  காரணம் EPRLF  பத்பநாபா தமிழ்நாட்டில் Corporate  அலுவலகம் போல் அமைத்து பக்காவாக செயல்பட்டுக் கொண்டுருந்தார்.  சிறீ சபாரெத்தினம் பத்பநாபாவை மனதரா நம்பிக்கொண்டுருந்தார்? எப்படியும் தன்னைக் காப்பாற்றி தமிழ்நாட்டுக்கு அழைத்துச் சென்று விடுவார் என்று கொண்டுருந்த இறுதி நம்பிக்கையும் பொய்த்துப் போனது. மற்ற இயக்கங்கள் வேறு வழி இல்லாமல் எதிர்க்க முடியாமல் ஒதுங்கிக்கொண்டது. மொத்த பொதுமக்களுக்கும் விடுதலைப்புலிகளின் எச்சரிக்கையை மீறி டெலோ இயக்கதினர் எவருக்கும் புகலிடம் கொடுக்க முடியாத சூழ்நிலை.  தேடித் தேடி ஒவ்வொருவரையும் அழித்த விடுதலைப்புலிகள் இறுதியில் புகையிலை காட்டுக்குள் ஒளிந்து இருந்த சிறீ சபாரெத்தினத்தை கண்டனர்.  புகையிலை கட்டுடன் ஒன்றாக மறைந்து தமிழ்நாட்டுக்கு தப்பிப் போய்விடும் எண்ணத்தில் இருந்தவர் யாழ் தளபதியாக இருந்த கிட்டு என்ற சதாசிவ பிள்ளையின் துப்பாக்கி 28 குண்டுகளை தொடர்ச்சியாக துப்பி வெறி தீர்ந்த போது தான் கிட்டு வுக்கு சுய நினைவு வந்துருக்க முடியும்?  அந்த அளவிற்கு சிறி சபாரெத்தினம் விடுதலைப்புலிகளுக்கு உறுத்தலாக இருந்தார்?

டெலோவின் தொடக்கம் போல் EPRLF உடன் பிரச்சனை வேறுவிதமாக தொடக்கம் பெற்றது.   EPRLF இயக்கத்தினர் தாங்களே உருவாக்கிய அஞ்சல் அட்டையை யாழ்ப்பாணத்தில் விநியோகம் செய்து இனி அணைவரும் இதையே பயன்படுத்த வேண்டும் என்று சொல்ல கிட்டு இனி EPRLF தன்னுடைய இயக்க நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கட்டளையை பிறப்பித்தார்.  அப்போதே தொடங்கி விட்டது.  துப்பாக்கி ரவைகள் தங்களுடைய பசியின் வேகத்தைத் தேடி அலைய ஆரம்பித்தது.

PLOTE  இயக்க செயல்பாடுகள் ஏற்கனவே வலுவிழந்து முடங்கியிருந்த வேலையில் காலப்போக்கில் அதுவும் காணாமல் போய்விட்டது. விடுதலைப்புலிகளின் அச்சத்தின் காரணமாக பாலகுமார், பிரபாகரன் கூட சமாதானமாகி ஒன்று சேர்ந்து பின்னாளில் ஒதுங்கிவிட்டார்.
EPRLF   பத்பநாபா
ஆனால் பிரபாகரன் பார்வையில் எதிரியாக ஒருவர் மாற்றம் பெற்றுவிட்டால், அவர்களின் துரோகம் அளவு கடந்து போயிருந்தால் அவர்களின் கதை முடிவு பெற்றதாக இருக்க வேண்டும். சமமாக அல்லது இணையாக களத்தில் இருந்தவர்களின் வலுவை குறைத்து வைத்திருந்த பிரபாகரனால் அவர்களை முழுமையாக துடைத்தாரா? என்பது இங்கு ஒரு பெரிய கேள்விக்குறி?  ஆனால் பத்பநாபாவை தமிழ்நாட்டில் வைத்து கொன்றது பின்னாளில் இராஜிவ் காந்தி மரண புலனாய்வின் போது தான் கண்டுபிடிக்கப்பட்டது.  இப்போது ராஜபக்ஷே விசுவாசியாக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா (EPRLF) தங்களுடைய அலுவலகமான சூளை மேட்டுக்கு ஆட்டோ மூலம் வந்து கொண்டுருந்த போது, ஆட்டோ ஓட்டுநரிடம் உருவான சண்டையில் தானியங்கி துப்பாக்கி மூலம் சுட,அப்பாவிகள் கொல்லப்பட ஆண்டு கொண்டுருந்த எம்.ஜி.ஆருக்கு மொத்தத்திலும் தர்மசங்கடம்.

எம்.ஜி.ஆர் போட்ட ஒரே உத்தரவு. காவல் துறை அதிகாரி மோகன்தாஸ் மொத்த போராளிகளின் ஆயுதங்களையும் பறிமுதல் செய்து தடுப்புக்காவலில் வைத்தார். காரணம் பெங்களூர் சார்க் மாநாடு.  ஜெயவர்த்னே வருகை.  ராஜீவ் காந்தியின் தனிப்பட்ட இலங்கை குறித்த அக்கறை.  மொத்த இந்திய அதிகார வர்க்கமும் இந்த துப்பாக்கி சூட்டின் மேல் கவனம் செலுத்த தமிழ்நாட்டில் இருந்த மொத்த போராளி குழுக்களையும் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை. அப்போது தமிழ்நாட்டில் இருந்த பிரபாரனுக்கு இது போன்ற சூழ்நிலை இலங்கையில் நடந்து இருந்தால் துப்பாக்கி ரவை பேசி இருக்கும். மேலும் இது எம்.ஜி.ஆரின் உத்தரவு. இது தமிழ்நாடு.  தம்மை வளர்ப்பவர், தம் மீது அளவில்லா அக்கறை செலுத்துவர்.  எதிர்க்க முடியாது.  காரணம் எவரோ செய்த தவற்றின் விளைவாக தன்னுடைய வயர்லெஸ் முதல் அத்தனையும் காவல் துறை வசம் போய்விட்டது.  எம்.ஜி.ஆரை நேரிடைடையாக எப்போது வேண்டுமானாலும் சந்திக்கும் நிலைமை மாறி பிரபாகரன் சந்திக்கு வந்த பரிதாப நிலைமை.

காந்திய வழியில் அறப்போராட்டத்தை தங்கியிருந்த இடத்தில் பிரபாகரன் தொடங்கினார். தங்களுடைய ஆயுதங்களை ஒப்படைக்கும் வரைக்கும் உண்ணாவிரத போராட்டம்.  மொத்த ஊடகமும் ஊதிப் பெரிதாக்க மொத்த கவனமும் பிரபாகரன் மேல்.  இதற்கிடையே டெல்லியில் இருந்த ப.சிதம்பரம் இதற்கும் மத்திய அரசாங்கத்திற்கும் சம்மந்தம் இல்லை என்று கொளுத்திப்போட இறுதியில் ஆயுதங்களை பிரபாகரனிடம் ஒப்படைத்த  எம்.ஜி.ஆர் பிறகு தனியே அழைத்து ஆசுவாசப்படுத்தியது தனிக்கதை. இந்த இடத்தில் மற்றொரு உண்மையும் உண்டு.  ஆயுதங்கள் திரும்ப ஒப்படைத்த போது மற்ற போராளிகுழுக்களிடம் இருந்து பறிமுதல் செய்த அத்தனை ஆயுதங்களும் பிரபாகரன் வசமே ஒப்படைக்கப்பட்டது, அது தான் எம்.ஜி.ஆர்.  இவர் தான் பிரபாகரன்?

இந்திய இறையாண்மை என்ற பெயரில் ராஜிவ் அழுத்தம் ஒரு பக்கம்.  பிரபாகரன் கொண்டுள்ள தனி ஈழத்தின் உண்மை நிலைமையை அறிந்த எம்.ஜி.ஆர் தன்னால் ஒரு அளவிற்கு மேல் இதில் தலையை நீட்ட முடியாது என்பதாக ஒதுங்க ஆரம்பித்தார்.  பெங்களுரில் வைத்து பிரபாகரனை மொத்த அதிகார வர்க்கத்தினரும் சமாதனப்படுத்தி முடிவுக்கு கொண்டு வர முயற்சித்து தோல்வி கண்ட போதிலும், இறுதியாக ராஜிவ் உத்தரவின் பேரில் பெங்களூருக்கு எம்.ஜி.ஆர் வரவழைக்கப்பட்டு பிரபாகரன் கூட பேசவைத்தனர்.  அன்று ஜெயவர்த்னே உருவாக்கி இருக்கும் இலங்கை என்பது தமிழர், சிங்களர், மற்றும் முஸ்லீம் என்று மூன்று பகுதிகளாக பிரித்த நரித்தந்திரத்தை எம்.ஜி.ஆர் உணர்ந்து கொண்டாலும் அந்த சூழ்நிலையில் அவர் எடுத்துப் பேசினாலும் கேட்பவர்கள் எவரும் இல்லை.  பிரபாகரன் பக்கம் உண்மைகள் அதிகம் இருந்தாலும், ஆதரவு கொடுக்கும் சூழ்நிலையில் அவரும் இல்லை.  எம்.ஜி.ஆர் செல்லும் அறிவுரைகளைக் கேட்கும் மனோநிலையிலும் எந்த டெல்லி அதிகாரிகளும் இல்லை.  மொத்தமாக சார்க் மாநாடு மூலம் ஜெயவர்த்னே உருவாக்கிய முன் வரைவு ஒப்பந்தத்தை முன் மொழிய வேண்டும்.  கையெழுத்துப் போட வேண்டும்.  மற்றவை எல்லாம் பின்னால் பார்த்துக்கொள்ளலாம்.

ஒதுங்கியவர், ஓரமாக தள்ளப்பட்டதும் பின்னாளில் ராஜிவ் ஜெயவர்த்னே ஒப்பந்தம் வரைக்கும் வெறும் பொம்மையாகத் தான் நடத்தப்பட்டார். மொத்தமும் கை மீறி விட்டது என்பதை உணர்ந்தவர் எம்.ஜி.ஆர்.   மொத்தமாக தங்களின் உரிமைகளை கை கழுவி விட்டது இந்தியா என்பதை உணர்ந்தவர் பிரபாகரன்.  அன்றைய சூழ்நிலையில் ஆதாயம் ஒருவருக்கும் மட்டுமே.  அது தான் அரசியல் ஞானி ஜெயவர்த்னே.  அவருடைய பிரித்தாளும் சூழ்ச்சியும், விடுதலைப்புலிகளுக்கும் இந்தியாவிற்கும் இடையே உருவாக்க வேண்டிய தீராத பகைமை நாளொரு பொழுதும், பொழுதொரு வண்ணமும் வெகு ஜோராக வளர்ந்து கொண்டுருந்தது.  கற்றுக்கொள்ள வேண்டிய இந்திய தலைவர்கள் இன்று வரைக்கும் கற்றுக் கொள்ளவும் இல்லை.  இலங்கை ஆட்சியாளர்கள் உருவாக்கிய நரித்தந்திரங்களை உணர்ந்து கொள்ளவும் தயாராய் இல்லை.
இலங்கையை பொறுத்தவரையில் தமிழர் எதிர்ப்பு என்பது ஓட்டுக்கான அரசியல்.  தமிழ்நாட்டில் இலங்கைப் பிரச்சனை என்பது அனுதாப அரசியல்.  போராளிகளைப் பொறுத்தவரையிலும் யார் பெரியவன்?  ஆனால் மொத்த இலங்கை வாழ் அப்பாவி பொதுமக்களுக்கும் தினந்தோறும் சுடுகாடு?

ராஜிவ் காந்தி சார்க் மாநாடு மூலம் பெற வேண்டிய புகழ் தள்ளிப்போய்விடுமோ என்ற அச்சம்.  எம்.ஜி.ஆருக்கு வளர்த்த கிடா மார்பில் குத்துகிறதே? என்ற ஆயாசம்.  பிரபாகரனை எப்படி வழிக்கு கொண்டு வரலாம் என்ற இந்திய அதிகாரிகளின் ஆத்திரம். பிரபாகரனுக்கே மொத்த தமிழர்களின் பிரச்சனைகள் என்னவென்று தெரியாமல் ஜெயவர்த்னேவை அநியாயத்திற்கு நல்ல பௌத்தர் என்று நம்பிக்கொண்டு இவர்கள் அத்தனைபேர்களும் ஒப்பந்தத்திற்கு உழைத்துக்கொண்டுருக்கிறார்களே என்ற ஆத்திரம்.

வல்லரசு ரா உளவுத்துறை பேயரசு ஆனது தான் மிச்சம்.  பிரபாகரன் தன்னை வளர்த்துக் கொண்ட ஆதிக்கம் என்பது அவர்களின் மொத்த திட்டங்களையும் தவிடு பொடியாக்கி தனியான LTTE யின் ராஜ்யமும் ராஜபாட்டையும் தொடக்கம் பெற்றது.  மிச்சம் இருந்த போராளிக்குழுக்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று ஒட்டமும் நடையுமாக பாதிப்பேர்கள் தமிழ்நாட்டில், மீதிப்பேர்கள் வெளிநாட்டில்.  அது போகவும், மிஞ்சி இருந்தவர்கள் பிரபாகரனிடம் கெஞ்சல் பார்வை பட்டு தன்னைக் காத்துக்கொள்ளும் சூழ்நிலை.

இலங்கை பிரச்சனை என்ற பூட்டப்பட்ட இரண்டு(இந்தியா இலங்கை) மாடுகளும் வெவ்வேறு திசையில் பயணித்தாலே பிரச்சனை.  இங்கே நான்கு மாடுகள்.  நான்கு திசைகள்?  ஜெயவர்த்னே, ராஜிவ் காந்தி, பிரபாகரன், இந்திய அதிகாரிகள்.  இன்றுவரையிலும் தீர்வும் கண்டபாடில்லை.  தீர்க்கதரிசனத்தை உணர்த்துபவர்கள் யாருமில்லை?

12 comments:

  1. in your point except Praba everyone was bad :)
    doesn't that tell you something?

    ReplyDelete
  2. விடுதலப்புலிகளைப்பற்றி நீங்கள் எழுதும் அனைத்தையும் படித்து வருகிறேன் ஜோதிஜி

    நல்ல நேர்மையான பகிர்வு

    அருமை தொடருங்கள்

    ReplyDelete
  3. //தமிழர்களுக்கென்று இருக்கும் தனித்துவமான ஒற்றுமையின்மை காரணமாக//

    தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு :(

    //பிரபாகரனுக்கே மொத்த தமிழர்களின் பிரச்சனைகள் என்னவென்று தெரியாமல் ஜெயவர்த்னேவை அநியாயத்திற்கு நல்ல பௌத்தர் என்று நம்பிக்கொண்டு இவர்கள் அத்தனைபேர்களும் ஒப்பந்தத்திற்கு உழைத்துக்கொண்டுருக்கிறார்களே என்ற ஆத்திரம்.//

    "பிரபாகரனுக்கோ" ??

    ReplyDelete
  4. வெத்து வேட்டு அவர்களே

    உங்கள் விமர்சனத்திற்கு பதில் அளிப்பதை விட உங்கள் இடுகையும், நீங்கள் உருவாக்கி வைத்த விதமும், உங்களைப் பற்றிய சுயவிபரங்கள், வந்தவர்கள் கொடுத்துள்ள விமர்சனமும் கோபத்தை விட அதிக நேரம் சிரிப்பைத் தந்தது தான் உண்மை.

    உங்கள் கூற்று சரியா தவறா என்பதை விட தொடர்ச்சியாக படிக்கும் போது சில புரிதல்கள் உங்களுக்கு கிடைக்கலாம்.

    உங்கள் பெயர் கூட மறைபொருள் போல் உணர்த்துகிறது

    ReplyDelete
  5. சுடுதண்ணி போல் கொதிக்க வைத்து விடுவீர்கள் போல?

    ReplyDelete
  6. எப்போதும் வெற்றியை மட்டும் பாருங்கள். வெற்றி வந்த வழியை பார்க்காதீர்கள். இலங்கை ராணுவத்தின் வெற்றியை சொல்லுகிறேன். புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமெனில், அதை விட கொடூரமானது இலங்கை ராணுவம். அதை வெல்ல அதிகப் படியான பயங்கரவாததை புலிகள் நடத்தி இருக்க வேண்டும். யுத்தம் என்று வந்த பிறகு என்ன நேர்மை. பல மாதங்களாக தங்கள் வசம் இருந்த சிங்கள சிப்பாய்களை முள்ளிவாயக்காலில் ஒப்படைத்தார்களே. அந்த நேர்மையை எவன் உணர்ந்தது. புலிகள் தரப்பு, ஈழ மக்கள் தரப்பு நியாயத்தை யாரும் கடைசி வரை பார்க்கவில்லையே. அது தான் சர்வதேசம். தன் வெற்றி, லட்சியம் உறுதிப்படுத்த படும் வரை பயங்கரவாதியாகவே வாழ்ந்து இருக்க வேண்டும். அப்படி வாழாததன் விளைவே இந்த அழிவு. தன்னை நம்பிய வரை பெறாத வீழ்ச்சியை, சர்வதேசத்தை நம்பி வீழ்ந்தார். வேறொன்றும் சொல்வதற்கில்லை.

    ReplyDelete
  7. மொத்த பிரபாகரன் குறித்த புரிதல் உங்கள் விமர்சனம் மூலம் முடிந்து விட்டது. போரில் பாவம், பரிதாபம், பச்சாதாபம், கொள்கை, கோட்பாடு, என்று பார்க்காமல் நீங்கள் சொல்வது அவர் கொண்டுருந்த கொள்கை ஒன்றே இறுதி என்பதாக பாதையில் போய் இருந்தால்? இன்று பிரபாகரன் நல்லவரா கெட்டவரா என்று எவரும் ஆராய்ந்து பார்த்து இருக்கமாட்டார்கள்???? இது போன்ற தொடர்தல் அவஸ்யம் இல்லாததாகியிருக்கும்.

    ReplyDelete
  8. ஜின்னாவுக்கு இருந்த தீர்க்க தரிசனம் ஈழத்தலைவர்
    களுக்கு இல்லாததால் இன்றைய ஈழ்த்தமிழர் இத்தனை
    கொடுமைகளையும் அனுபவிக்கிறார்கள்.1948ல் ஈழம்
    கேட்டிருந்தால் அல்லது சமஷ்டி கேட்டிருந்தால்
    நிச்சயமாகச்சாத்தியப்பட்டிடுக்கும்.பிரபாகன் ஒருவரா
    லேயே பெற்றிருக்கூடியதைக் காந்திதேசம் தன் நலனுக்
    காக சமாதிகட்டிவிட்டது. இதுதான் ஜ்தார்த்தம்.

    ReplyDelete
  9. இந்த ஜின்னா என்ற வார்த்தை பின்னால் வரப் போகும் ராஜீவ் காந்தி படுகொலையின் போது நீண்ட ஒரு அத்யாயமாக நினைத்து வைத்து இருப்பதை அவசரமாக கொண்டு வந்து கொட்டி விட்டீர்களே?

    காந்தி சேதம் என்பது ஏற்கனவே பிரபாகரன் பார்த்தது தான். கருணா சேதம் தான் இங்க முக்கியமானது.

    ReplyDelete
  10. EROS பாலகுமார் என்ன ஆனார் அவ்வாற பின்னால் ப்ளிகளுடன் என் இணைந்தார் இப்போது என்ன ஆனார்.அதை அறிய ஆவலாக உள்ளேன்.

    ReplyDelete
  11. கேள்விக்கும் உங்கள் இடுகையின் பெயருக்கும் உள்ள வித்யாசம் வியப்பாய் இருக்கிறது?

    பாலகுமார் நண்பனாக மாறி பிரபாகரனே விரும்பும் அளவிற்கு ஆலோசகராகவும் மாறியது முதல் ஆச்சரியம். அந்த நட்பை பாதுகாத்த பிரபாகரன் அடுத்த ஆச்சரியம்.

    இந்திய அமைதிப்படை என்று தொடரப்போகும் தனியான அத்தியாயத்தில் மொத்த போராளிக்குழுக்களின் சாதக பாதக அம்சங்களையும், வீழ்ச்சி,எழுச்சி, அழிப்பு, மிஞ்சுதல், திரைமறைவு பேரங்கள், காரணங்கள் என்று ஒவ்வொன்றாக படிக்கும் போது உங்களுக்கு சில புரிதல்கள் உருவாகும்.

    நன்றி

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.