இதுவரை நடந்த நிகழ்வுகளை கோர்த்து பார்க்கலாம். மாலையா இல்லை மண்டை ஓடா என்பது புரியும்?
தமிழர்களுக்கு இனி உரிமை என்பது சிங்கள ஆட்சியில் கிடைக்காது. "தனி நாடு தான் இனி தீர்வு" என்று தொடக்கப்புள்ளியை உருவாக்கியவர் பிரபாகரன் அல்ல. அஹிம்சை வழியில் போராடிக்கொண்டுருந்த தந்தை செல்வா புகழ்பெற்ற " வட்டுக்கோட்டை தீர்மானம்" மூலம் முன்மொழிந்தார்.
இதற்காக, தான் கூட்டணி மூலம் பெற்ற பாராளுமன்ற பதவியை உதறித் தள்ளி தமிழர்கள் ஆதரவோடு மீண்டும் வெற்றி பெற்ற போது அவரே இதை முழுமையாக உணர்ந்து வெளியே சொன்ன உன்னதமான லட்சியம் அது.
இவரை பின்பற்றி வந்த அமிர்தலிங்கம் தந்தை செல்வா அளவிற்கு முழுமையான அர்பணிப்பு உணர்வோடு இல்லாவிட்டாலும் கூட தன்னால் ஆன, தனக்கும் சாதகமான வழிமுறைகளோடு முடிந்தவரைக்கும் ஆட்சியாளர்களோடு போரிட்டுக்கொண்டுருந்தார்.
வாதம், பிரதிவாதம் நீண்டு கொண்டுருந்ததே தவிர அரக்க சிந்தனையாளர்களை அமைதி வழிப் போராட்டம் தீர்வுக்குண்டான பாதையை நோக்கி நகர்த்துவதாக தெரியவில்லை.
அமைதி வழியில் போராடிக்கொண்டுருந்தவர்களை எந்த அளவிற்கு சிங்கள ஆட்சியாளர்கள் அவமானப்படுத்தினார்கள் என்பதையெல்லாம் ஊன்றி கவனித்துப் பார்த்தால் எவருமே பிரபாகரனின் பாதை தவறு என்று எவரும் சொல்ல மனம் துணியாது.
மாவட்ட அபிவிருத்தி (1981) தேர்தலும், ஜெயவர்த்னே திட்டமிட்டு உருவாக்கிய கலவரங்களும் என கொளுந்து விட்டு எறிந்து கொண்டுருந்த தருணத்தில் பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் பதவியை நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் கொண்டு வந்து அவமானப்படுத்திய போதும் கூட அமிர்தலிங்கம் அமைதியைத் தான் விரும்பினார்.
தேர்தல் என்பது ஒரு வகையில் ஜெயவர்த்னேவுக்கு கண்துடைப்பு. வேலை தொடங்குவதற்கு முன்பே தன்னுடைய படைபட்டாளங்களை கொண்டு போய் இறக்கி இருந்தார். கண் அசைவு கிடைத்ததும் காரியங்களும் நடைபெற மொத்த தமிழர்களின் வாழ்க்கையும் கண்ணீரில் மூழ்கியது.
வாத பிரதிவாதங்களுக்கிடையே தீர்மானத்தை கொண்டு வந்த நெவில் பெர்ணாண்டோ என்பவர் சொன்ன வாசகம் இங்கு குறிப்பிடத்தக்கது.
"காலிமுகத் திடலில் கமுக மரத்தில் கட்டி இரண்டாக கிழிக்கும் மரண தண்டனையை அமிர்தலிங்கத்திற்கு வழங்க வேண்டும்"
சொன்னது மட்டுமல்லாமல் அவருடன் மற்ற உறுப்பினர்கள் அடிக்க கையை ஓங்கிக்கொண்டு பாய்ந்து வந்தார்கள். தொண்டைமான் கத்திய கத்தல் எவர் காதிலும் விழுவதாக தெரியவில்லை. இது தான் அமைதி வழியின் உச்சமும் சொச்சமும். காரணம் அவர்கள் சிங்கத்தை புணர்ந்து வந்த சிங்களர்கள். அன்றும் இன்றும் என்றும் இப்படித்தான் இருப்பார்கள்.
சிவகுமரன் தொடங்கி வைத்த ஆயுதப் பாதையும் அமைதியாக கூட்டப்பட்ட தமிழ் மொழி மாநாட்டில் சிங்களர்கள், காவல்துறையினர் வேண்டுமென்றே உருவாக்கிய கலவரத்தின் விளைவாகத்தான் தொடக்கம் பெற்றது. மேலும் சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு என்றதும் ஆயுதப்பாதையின் தீவிரம் அதிகரித்தது. ஆனால் சிவகுமரன் அதிர்ஷ்டம் என்பதற்கு சற்று கூட சம்மந்தம் இல்லாமல் பிறந்தவர். அவருடைய முயற்சிக்கு ஆயுதமும் ஒத்துழைக்கவில்லை. உடன் இருந்தவர்களின் காட்டிக்கொடுப்பும் ஒரு காரணமாக இருந்து அவர் வாழ்க்கையும் முடிவு பெற்றது.
தொடர்ந்து வந்த குட்டிமணி ஜெகன், தங்கதுரை தொடங்கிய TELO அமைப்பும் கடைசியில் காட்டுக்கொடுப்பு மூலம் தான் ஒரு முடிவுக்கு வந்தது. இதில் சம்மந்தப்பட்ட இருவர்.
சீறீ சபாரெத்தினம், பிரபாகரன். ஆனால் இன்று வரையிலும் இதற்கு பின்னால் உள்ள விசயங்களையும் எந்த சரித்திரப்பக்கங்களும் பதிவு செய்யவில்லை.
ஜெயவர்த்னே, சாகடிக்கப்பட்ட சிங்கள இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி என்ற போர்வையில் மொத்த சவ ஊர்வலத்தை வெறியேற்றும் ஊர்வலமாக மாற்றி வெலிக்கடை சிறை முதல் மொத்த தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத கருப்பு ஜுலையை அறிமுகப்படுத்தினார்.
பிரபாகரன் தாக்கிய இராணுவ வாகனங்களும், சாகடிக்கப்பட்ட வீரர்கள் என்றாலும் இதற்குப்பின்னால் நடந்த நிகழ்வுகள் மொத்தத்திலும் கொடுமையானது. அதுவே ஜெயவர்த்னே எப்படிப்பட்டவர் என்பதையும், தருணத்தை எதிர்பார்த்து காத்து கொண்டுருந்ததையும் நமக்கு புரியவைக்கும்.
இறந்த ராணுவ வீரர்களை சவப்பெட்டியில் வைத்து கொண்டு வராமல், சாக்கு மூட்டை போல இது தான் சிதைந்த கோரமான நம்முடைய வீரர்கள் என்று ஊர்வலமாக நடத்தி வெறியேற்றி தான் நினைத்ததை சாதித்து தமிழ் மக்களுக்கு மறக்க முடியாத அந்த கருப்பு ஜுலையை அறிமுகப்படுத்தினார்.
ஆனால் கருப்பு ஜுலை மூலம் ஜெயவர்த்னே தன்னை அறியாமல் போராளிகளுக்கு மறைமுக உதவியை செய்தார் என்றால் அது மிகையில்லை. காரணம் இந்த ஜுலை கொடூரத்திற்குப் பிறகு தான் உலகம் முழுக்க பரவியிருந்த மொத்த புலம் பெயர்ந்த தமிழிர்களின் ஆர்வமும், ஆத்திரமும் ஒன்றாக கலந்து போராளிக்குழுக்களுக்கு தங்களால் முடிந்த பண உதவியை செய்யத் தொடங்கினார்கள். இதன் தொடர்ச்சியாக ஆன்டன் பாலசிங்கம் பிரபாகரன் சார்பாக முன் எடுத்துச் சென்ற அத்தனை முயற்சிகளும் சாதமாகத் தொடங்கியது. பணவரவு அதிகரிக்க, தனிப்பத்திரிக்கை,வானொலி,பிரசுரங்கள், புத்தகங்கள் என்று தொடங்கி அதுவே நேரிடையான ஆயுத கொள்முதல் என்று வரைக்கும் பல்கிப் பெருகியது. கடைசியில் ஆயுதங்களைக் கொண்டு வருவதற்கு என்று கப்பல் வணிகத்தையும், சொந்த கப்பல்கள் என்று வரைக்கும் நீண்டது.
தொடக்ககால விடுதலைப்புலிகளின் தோற்றமும் வளர்ச்சியும் எத்தனை தான் சர்வாதிகாரம் என்ற நோக்கில் பார்த்தாலும் அந்த சூழ்நிலையை அவருக்கு மறைமுக உணர்த்த காரணமாக இருந்தவர்கள் உள்ளே இருந்தவர்கள்.
கொள்கை என்பதை வைத்துக்கொண்டு கொலை கொள்ளையில் ஈடுபட்டவர்களும், கொள்கையாளர்கள் தன்னுடைய இருப்பை முதலில் உறுதிபடுத்திக்கொள்ளும் முக்கியவத்தை பிரபாகரன் உணர்த்திய போதெல்லாம் எள்ளி நகையாடினார்கள். அப்போது உணர்ந்தவர்கள் யாருமில்லை. உணராதவர்கள் கூட அவரும் சேர்ந்து போக தயாராகவும் இல்லை. வெட்டிப்பேச்சு, அரட்டை, விவாதம், ஒழுக்கக்கேடு போன்றவற்றில் மிக உறுதியாக இருந்ததும், அதுவே பலருக்கும் வெறுப்பாக தோன்ற பிரபாகரன் ஆளுமையும் தோற்றமும் மெதுமெதுவாக வளரத் தொடங்கியது.
தொடக்கத்தில் இயக்கத்தில் தோன்றிய பிரிவினையின் போதும், கருத்து வேறுபாட்டின் போதும் இலங்கையில் இருந்த கிறிஸ்துவ பாதிரிமார்களின் பங்கு அளவிடற்கரியது. முடிந்தவரைக்கும் இயக்க ஒற்றுமையை உணர்த்த முற்பட்டார்கள். பிரபாகரன் வாழ்வில் கடைசி வரையிலும் அவர்களால் முடிந்த அத்தனை உதவிகளையும் நேரிடையாக மறைமுகமாக செய்தார்கள்.
பிரபாகரன் சர்வாதிகாரி என்று தொடக்கத்தில் அவருடன் ஒன்றாக சேர முடியாதவர்களும், பிரிந்தவர்களும் தொடங்கிய தொடக்க கால அவர்களின் மொத்த இயக்கமும் ஜனநாயகப் பாதையில் என்று சொல்லிக்கொண்டாலும் அங்கும் ஆயிரெத்தெட்டு புழுத்துப்போன குற்றச்சாட்டுக்கள். இதுவே உமா மகேஸ்வரனை அவருடன் இருந்த ஓட்டுநர் ஒருவரே கொல்லும் அளவிற்கு கரை கடந்து போனது. பிரபாகரனும், உமா மகஸ்வரனும் சென்னையில் வைத்து ஆன்டன் பாலசிங்கம் முன்னால் வைத்து பிரிந்து கொண்ட தருணம் தொடங்கி கடைசி வரையிலும் பிரபாகரன் எதிலும் குறிக்கிடவில்லை. அவருக்கு நன்றாக தெரியும். இவர்கள் விரும்பும் ஜனநாயகமே இவர்களுக்கு பாடம் கற்பிக்கும் என்று.
அவரவருக்கு தன்னுடைய இருப்பும், தான் என்ற நோக்கமும் இருந்தாலும் இவர்கள் மொத்தமாக குற்றம் சாட்டிய பிரபாகரன் "ஆமாம். நான் சர்வாதிகாரி தான்" என்று தைரியமாக சொல்லிக்கொண்டு வெளியே சென்றும் தன்னை சார்ந்து வந்தவர்களை வைத்து தனியாக ஒரு இராணுவ ராஜ்ஜியமே அமைக்கும் அளவிற்கு வளர முடிந்தது.
தொடங்கியது முதல் ஒரே நோக்கம். கொள்கை. தீர்மானம். மாறவே இல்லை.
தன்னுடைய ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கைகள் போலவே தன்னுடைய இருப்பவர்களையும் அந்த அளவிற்கு கவனமாக பாதுகாத்து பயணித்தார். கொள்கைகளுக்கு தனி மனித ஒழுக்கம் மிக முக்கியமானது என்பதை நடந்து நிகழ்வுகள் மூலம் கற்றுக் கொண்டார். கற்றுக் கொடுத்துக் கொண்டே வந்தார். முரண்பட்டவர்கள் கதையும் முடிக்கப்பட்டது.
மொத்தமாக பல பாதைகளில் பயணித்து வந்த போராளிகளின் கொந்தளிப்பு வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்ட குட்டிமணி தங்கதுரை போல, உச்சகட்டமாய் மாற (1983) அதே காலகட்டத்தில் மட்டக்களப்பு சிறையிலிருந்து தப்பித்தலும் நடந்தது.
ஆட்சியாளர்களுக்கு நாங்கள் யார்? என்பதை உணர வைத்த தருணம் அது.
இதை நாங்கள் தான் செய்தோம். இந்த வெற்றிக்கு நாங்கள் தான் காரணம் என்று உள்ளுக்குள் இருந்த ஒவ்வொரு இயக்கத்திடமும் குடுமிபிடி சண்டை. அப்போதும் இதில் சம்மந்தப்படாமல் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்தவர் பிரபாகரன். ஜனநாயகத்தையும் சர்வ அதிகாரத்தையும் நன்றாக புரிந்தவர்.
\\அவர்கள் சிங்கத்தை புணர்ந்து வந்த சிங்களர்கள். அன்றும் இன்றும் என்றும் இப்படித்தான் இருப்பார்கள்.....//
ReplyDeleteஇந்த சொற்களுக்கு உண்டான பின்னணி என்ன என்பதையும் அப்படி ஏதும் வரலாறுகள் இருந்தால் சமயம் கிடைக்கும் போது மறக்காமல் விளக்கவும்..!
இலங்கையின் வரலாறு என்பது இந்தியாவில் உள்ள வங்காளத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டு மரக்கலத்தில் இலங்கைக்குச் சென்ற விஜயன் என்ற மன்னன் மூலம் தொடங்குவதாக சிங்களர்களின் புனித நூலான மகாவம்சம் குறுகிறது.
ReplyDeleteஇந்த விஜயன் யார் என்று அவர்கள் சொல்லும் நூல் கூறுவது?
வங்க மன்னரின் மகள் சுபதேவி. இவளை வனராஜாவான சிங்கம் கடத்திச்சென்று குகையில் அடைத்து அவளுடன் உறவு கொண்டு பிறந்த..
ஆண் குழந்தைக்குப் பெயர் சின்ஹபாஹு. இந்த சின்றபாஹுக்கு சிங்கம் போல தோற்றமும் மனிதன் போல் உருவமும். இவருடன் பிறந்த சகோதரியான சின்ஹவலியையை திருமணமும் செய்து, வங்கத்தில் சின்ஹபுரம் என்று ஊரில் அரசு அமைத்து, பிறந்த இரண்டு குழந்தைகளில் வந்தவர் தான் விஜயன்.
இது கதை அல்ல. சிங்களர்களின் மகாவம்சம் இப்படித்தான் பதவி செய்கின்றது.
தோற்றம் சிங்கத்தின் மூலம்.
உருவாக்கம் சகோதரின் மூலம்.
தேர்ந்து எடுத்தது புத்தம்.
மாறியது கிறிஸ்துவம்.
தமிழ்கலப்பினர்களின் மூலம் பண்டாராநாயகா முதல் ஜெயவர்த்னே தொடர்ந்து இன்று ராஜபக்சே வரைக்கும். யஸ்வின் குணரத்னே என்பவரும் ஒரு வருடம் மட்டும் ஆண்டு சென்ற பழைய சிங்கள பிரதமர் வரைக்கும் இதை ஆதரமாய் தெளிவுபடுத்தினர். ஹிண்டு ராம் உட்பட.
எந்த இடத்தில் எவரை நீங்கள் குறை சொல்ல முடியும்? குணம். மணம். திடம். சேர்ந்த கலவை.
ஆழ்ந்த வாசிப்புக்கு நன்றி லெமூரியன்.
மிக நல்ல முயற்சி. எனக்கு முன்னரே தெரிந்த சரித்திரம் என்றாலும் மறுபடி படிக்க பாதுகாக்க தங்களின் இத்தளம் எனக்கு மிகவும் உதவியாக உள்ளது .மிக்க நன்றி.தாங்கள் யார் எனப்து எனக்கு தெரியவில்லை. எனது முகவரி vetrivel@nsc-ksa.com and my blog is http://avetrivel.blogspot.com. தாங்கள் என்னுடன் தொடர்பு கொண்டால் நலம். அன்புடன் அ.வெற்றிவேல்
ReplyDeleteநன்றி வெற்றிவேல். தங்கள் எழுத்துக்களைப் பார்த்தபிறகு உங்களின் வாசிப்பு எத்தனை தூரம் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை உணர வைத்தது. நன்றி. உண்மை. இந்த இடுகை இன்னும் பல ஆண்டுகள் கழித்தும் பலருக்கும் பயன்படக்கூடியதாக இருக்கும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது.
ReplyDeleteமுழுமையான வரலாறு தெரியாத என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ள மற்றும் பாதுகாக்க வேண்டிய பதிவு.
ReplyDeleteஉங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.... தொடர்ந்து எழுதுங்கள்...
நன்றி சுடுதண்ணி
ReplyDeleteவலைதளத்தில் உங்களைப் போன்றவர்களின் தொழில் நுட்பம் சார்ந்த எளிமையான நகைச்சுவை கலந்த எழுத்து என்பது என்னைப் போன்றவர்களுக்கு என்றும் மனதில் நிற்கும் பொக்கிஷம். வருகைக்கு நன்றி.