அஸ்திவாரம்

Sunday, November 08, 2009

எழிலாய் பழமைபேசி

"சூரியன் அஸ்தமனம் இல்லாத நாடு"  எங்களுடையது என்று இறுமாந்து இருந்தவர்களின் ஆளுமையில் இந்தியாவும் இருந்தது.  தொடக்கத்தில் உள்ளே வந்தவர்கள் நாடு பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வரவில்லை.  அவர்கள் வணிக நோக்கத்திற்காகவே மட்டும் வந்து இறங்கினார்கள்.  கைமாறி வரும் பொருளுக்கும், நேரிடையான கொள்முதல் என்பதன் சூட்சுமம் உணர்ந்தவர்கள் அவர்கள்.
அதனால் தான் சூறாவழியும் சுறாமீன்களும் அவர்களின் எண்ணத்தை தடை போட முடியவில்லை.

அந்த நிமிடம் வரையிலும் இந்தியாவில் மத மாற்றத்தை வலுக்கட்டாயமாக உள்ளே புகுத்தி உண்டு இல்லை என்று படுத்திக்கொண்டுருந்த,   கொள்ளை லாபத்தால் உண்டு வாழ்ந்து கொண்டுருந்த அத்தனை டச்சு,பிரெஞ்சு போன்ற பல கெட்டவர்களின் கொட்டமும் அடங்கியது.
நோக்கம் தெளிவாக இருந்தது.

வணிகம். லாபம்.

அதைவிட இருப்பு முக்கியம்.

அவர்கள் பார்வையில் இல்லாதவர்கள், இருப்பவர்கள் என்ற பாகுபாடு எதுவும் தொடக்கத்தில் இல்லை.

ஆனால் "நாங்கள் இப்படித்தான்" என்று வெட்டவெளிச்சம் போட்டுக் காட்டியவர்கள் நம்முடைய முன்னோர்கள்.

உங்கள் வீட்டுக்கு அருகே உள்ள பக்கத்து நிலம் பல ஆண்டுகள் கவனிப்பு இல்லாமல் இருந்தால் என்ன செய்வீர்கள்?  கவனிப்பு இருந்தும் தீர்கக முடியாத பங்காளிச் சண்டை காலம் முழுக்க முடிவே இல்லாமல் போய்க்கொண்டுருந்தால்?

நீங்கள் நியாயம் தர்மம் பார்த்துக்கொண்டு ஆசையை உள்ளே அடக்கிக்கொண்டு இருப்பீர்கள்.  ஆனால் இன்றைய தங்கத் தலைவர்கள் அவ்வாறு இருக்க முடியுமா?  அவர்களின் கடமை கண்ணியம் கட்டுப்பாடு சும்மா இருக்க விடுமா?

உள்ளே வந்தவர்களை " நீங்க தான் சாமி? " என்று கும்பிட கும்பிட குனிய வைத்து "கும்மாங்குத்து" குத்த தொடங்கினார்கள்.  முழுமையாக மூன்று தலைமுறைகள் , ஊருக்கு அனுப்பி, உள்ளே ஆண்டு வந்தவர்கள் அவர்களின் உல்லாச எண்ணத்தில் என்ன உருவாகி இருக்கும்?

" நீங்கள் ஆண்டை சாமி?  நாங்கள் உங்கள் கீழ் அடங்கிப் போக வேண்டியவர்கள்" .

நேரிடையாக சொல்லவில்லை.  ஒருவருக்கொருவர் அடித்து செத்துக்கொண்டு நிரூபித்தார்கள்.

மூன்றாவது தலைமுறையில் தான் பிரிட்டன் அரசாங்கத்தின் கைக்கு இந்தியா போனது.  கிழக்கிந்திய கம்பெனியும் ஓலமோ, ஒப்பாறி மூலமே ஊரைக்கூட்ட வில்லை.  அவர்களின் ஒரே நோக்கம் வணிகம்.  உள்ளே புகைந்து கொண்டுருந்த கலவரம் ஒரு பக்கம்.

சிந்தனைகள் சிதறினால் வணிகமும் சில்லறை கடை போல் ஆகிவிடாதா?

வாழ்க்கையில் சிறந்து விளங்குபவர்களின் சிந்தனைகளை ஊன்றி கவனித்துப் பாருங்கள்? நெருக்கடியான சூழ்நிலையில் அவர்கள் எடுக்கும் முடிவு தான் அவர்கள் சிறப்பானவர்களா? இல்லை சில்லறைத்தனமானவர்களா? என்பதை நமக்கு உணர்த்தும்.

இன்றைய ஓலம் ஊரெங்கும் ஒலித்தாலும் நமக்கு நம்முடைய தலைவர்களை அடையாளம் காட்டவில்லையா?

கிழக்கிந்திய கம்பெனியும், பிரிட்டன் ஆட்சியாளர்களும் தெளிவாக புரிந்து கொண்ட காரணத்தால், உருவாக்கிய சிறப்பான திட்டமிடுதல் காரணமாகத்தான்  இங்குள்ள அத்தனை செல்வமும் சிந்தாமல் சிதறாமல் அங்கே போய்ச் சேர்ந்தது.

கிழக்கிந்திய கம்பெனி அன்று விட்டுக்கொடுத்ததால் கெட்டுப்போய்விடவில்லை. அவர்களின் ஒற்றுமை அன்று தொடங்கியது.

இன்று வரைக்கும் அவர்களை ஐ.நா மேஸ்திரி வேலை வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.  நாம் எப்போதும் சித்தாள் வேலையே போதுமென்று இன்று வரையிலும் ஊடகம் பார்த்து சிரித்துக்கொண்டு இருக்கிறோம்.

உணர்ந்தவர்கள், உள்வாங்கியவர்கள்

இன்றுவரையிலும் உலகை ஆண்டு கொண்டுருக்கிறார்கள்.

நாம் உலக வங்கி பார்வையில் ஆட்சி நடத்திக்கொண்டுருக்கிறோம்.

நம்முடைய தமிழினம் ஏறக்குறைய ஆறு கண்டங்களில் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.  ஆனால் ஒற்றுமையாக உணர்வுடன் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோமா?  இருந்து வாழ ஒரு இடம்.  படுத்துக்கொண்டு பார்க்க ஒரு தொலைக்காட்சி. பரவசமாய் படிக்க ஒரு புத்தகம்.  படுக்கும் போது முடிந்தால் அருகில் மனைவி இல்லையேல் ஒரு பானம்.  போதும்.

சுருக்கமாய் வேண்டும். எல்லாமே சுகமாய் இருக்க வேண்டும்.  சுத்தம் என்பது அடுத்தவர் பின்பற்றுவது.  அடிக்க வருகிறான் என்று ஐயோ சாமி, பேஸில் மட்டும் அடிக்காதே என்று தன் கவுரதயைக் காப்பாற்றிக்கொள்வது.

சிறப்பாக சிந்திக்க கற்றுக்கொண்ட அத்தனை தமிழர்களும் வேறு ஒரு தளத்தில் போய் வாழத் தொடங்கி விடுவார்கள்.  காரணம் ஒரு துளி விசம் என்பது மொத்த பாலையும் கெடுத்து விடக்கூடியது என்பதை உணர்ந்தவர்கள் அவர்கள்.

தன்னை, தன்னுடைய ஒற்றுமையை இனத்தால் உணர்வால் ஒன்றினைந்து வாழ்வதை விட மதத்தால், ஜாதியால் வெளிக்காட்ட விரும்புவன் தமிழன் என்றால் எந்த சந்தேகமும் இல்லை.  அக்கறை இல்லாமல் அக்கரையில் இருந்தால் என்ன?  எனக்கென்ன என்று இங்கே இருந்தால் என்ன?  உள்ளுக்குள்ளே குழி பறிப்பதாகட்டும்?  உன் யோக்கியதை எனக்கு தெரியாதா  என்பதாகட்டும்?
தலைவிதியே என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொள்ளும் போதே தன்னுடன் தன்னுடைய வழித்தோன்றல்களையும் வாழ வழி இல்லாமல் செய்பவன் என்பதை உணர்வதே இல்லை.  அத்தனை தமிழனும் மூன்றே மூன்று கிளை நதிகளில் தான் பயணத்தை தொடங்குகிறான்.

இந்து, முஸ்லீம், கிறிஸ்த்துவன்.

ஆனால் மூன்று நதிகளாக பிரிந்து பயணத்தை தொடங்கினாலும் ஒரே இடத்தில் சேர்ந்து "தலைவிதியே இதற்கு காரணம்" என்பதை கெட்டியாக பிடித்துக்கொண்ட உழைப்பு என்ற ஓடத்தை விட்டு ஓலத்துடன் பயணம் முழுக்க பரிதவிக்கின்றான்.

" இப்படி இருப்பதற்கு காரணம் நீ தான் காரணம் இது பௌத்தம் சொல்லும் தத்துவம்.   ஆனால் தமிழனின் மொத்த வாழ்வியலிலும் கடைபிடித்துக்கொண்டு வரும் இறைபக்தி கூட சற்று ஆச்சரியமாக இருக்கிறது.

ஆமாம்.  தன்னுடைய கர்மத்தை செய்து இறைவனை அடைவது "கர்ம மார்க்கம்".

அறிவைப் பயன்படுத்தி இறைவனை அடைவதற்கு பெயர் "ஞான மார்க்கம்".

ஆனால் இந்த இரண்டையும் விட எளிய பாமரத்தனமாக "பக்தி மார்க்கத்தை" தான் மத வேறுபாடுகள் இல்லாமல் அத்தனை தமிழர்களும் விரும்புகிறார்கள்.

அன்றும் இன்றும் என்றும் இந்த "பக்தி மார்க்கத்தை" கெட்டியாக பிடித்துக்கொண்டு பயணிக்கிறார்கள்.  ஆலயத்திற்குள் சென்று போய் கொட்டி விட்டால் போது.  உடனடி தீர்வு கைக்கு வந்து விடும்.  ஆத்ம திருப்தி.  பூரண மகிழ்ச்சி.

இந்த மார்க்கம் கடைபிடிக்கத் தொடங்கிய தமிழர்களைப் பார்த்து தான் அத்தனை மூட நம்பிக்கைகளும் வரிசை கட்டி வந்து நெருங்கி வந்தது.  அவன் எலும்புகளையும் நொறுக்கிவிட்டது.

நம்பிக்கை என்பது போய் மூடநம்பிக்கைகள் அவனை ஆட்சி புரிய ஆரம்பித்தது.  அத்தனை நல்ல மனிதர்களும் போய் நாற மனிதர்கள் உள்ளே வரத் தொடங்கினார்கள்.  பின்பற்றுபவன் விடமுடியாமல்.  பின்பற்ற நினைப்பவன் வினாக்குறியோடு?

மதமும் வளரவில்லை.  மார்க்கமும் புரிபடவில்லை.  மூலமும் போய்விட்டது.  முகவரியும் மாறிவிட்டது.

வலிக்காத சிந்தனைகளில் இருந்து எங்கே வழி பிறந்து இருக்கிறது.

ஒவ்வொரு துன்பமான காலகட்டத்திலும் மேலை நாடுகளில் கவிஞர்கள், தத்துவ அறிஞர்கள், புரட்சிகள், மேன்மையான சிந்தனைகள் உருவானது. மக்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல உதவியாய் இருந்தது.

ஆனால் இங்கு ஞானிகளும், ரிசிகளும்,வேதங்களும், விற்பனர்களும், வியாக்கியானங்களும், வினோத நம்பிக்கைகளும் தோன்றின.

இந்த வினோத நம்பிக்கைகள் அத்தனையும் உள்ளே உண்மையாக இருந்த சிந்தனைகளையும் மழுங்கடிக்கப்பட்டதாக மாற்றிவிட்டது.

மகாத்மா காந்தியை கொலை செய்தவர்கள் சொன்ன முதன்மையான காரணம் என்ன தெரியுமா?  அத்தனை மக்களையும் கோழையாக மாற்றி விட்டார்.  தன்னை தானே காப்பாற்றிக்கொள்ள முடியாத மக்கள் சகிப்புத்தன்மையுடன் வாழ்ந்தால் என்ன?  வாழாமல் போனால் தான் என்ன?

மேலும் மேலும் உங்கள் பணி என்பது சமூகத்தின் பிணி.  போதும் ஐயா என்று சொல்லாமல் குண்டு மூலம் பதில் உரைத்தார்கள்.

எது எளிதோ, எது கடினம் இல்லையோ? அது தான் தமிழனின் முதல் தேர்வாக இருக்கும்.  விழிப்புணர்ச்சி என்பது அத்தனை சீக்கிரம் உள்ளே நுழைந்து விடாது.  அது எத்தனை விடியாத இரவுகளை அறிமுகப்படுத்தினாலும் கூட.

அறிவை கூர்மையாக்கினால் அது ஆத்மாவை சுத்தப்படுத்திவிடும்.  சுகம் இல்லாத, சுகாதாரம் இல்லாத எந்த விசயங்களையும் உள்ளே அனுமதித்து விடாது,  இதனால் தான் இந்த தமிழனின் உணர்ச்சிகளை நன்றாக உணர்ந்த இன்றைய தலைவர்கள் உணர்ச்சியை தூண்டி தூண்டி தூண்டிலில் சிக்கிய புழு போல் மாற்றி வைத்து இருக்கிறார்கள்.

அடுத்த தேர்தலுக்கு நாட்கள் இருக்கிறது.  மறக்க வைக்க மனப்பாடம் செய்துள்ள வரிகள் அன்று நம்மிடம் வந்து சேரும்.  அது வரையில் பழைய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டு அவர்களை தொடர்வோம்?

தமிழனின் வாழ்க்கையை மூவாயிரம் ஆண்டு வாழ்வியலை முயன்ற வரை முட்டி நின்று பார்க்கும் சிந்தனையோட்டம் இது.

22 comments:

  1. உலகத்தில் பரவியுள்ள தமிழர்களின் பிரச்சனைகள், மொத்த வாழ்வியலின் அவலநிலை.

    இன்று நடந்து கொண்டுருக்கும் இலங்கை தமிழர்களின் சிதைக்கப்பட்ட கோர வாழ்க்கைச் சுவடுகளை ஆராய்ந்து தொட்டு தொடர்வது.

    தமிழனின் தமிழ்மொழியும் தடுமாற்றமான வாழ்க்கை மொழியும் என்பதன் தொடர் ஓட்டம் இது.

    மூலத்தில் இருந்து இன்று முகவரி இழந்து முள்கம்பிகளுடன் வாழ்வது வரையிலும்.

    ReplyDelete
  2. \\இதனால் தான் இந்த தமிழனின் உணர்ச்சிகளை நன்றாக உணர்ந்த இன்றைய தலைவர்கள் உணர்ச்சியை தூண்டி தூண்டி தூண்டிலில் சிக்கிய புழு போல் மாற்றி வைத்து இருக்கிறார்கள்.\\

    ஒன்று சொன்னாலும் நன்று சொன்னீர்கள் நண்பரே

    இதை தமிழன் உணர்ந்தால் அவனுக்கு உயர்வு நிச்சயம்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அருமை ஜோதிஜி,

    //அடுத்த தேர்தலுக்கு நாட்கள் இருக்கிறது. மறக்க வைக்க மனப்பாடம் செய்துள்ள வரிகள் அன்று நம்மிடம் வந்து சேரும். அது வரையில் பழைய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டு அவர்களை தொடர்வோம்?//

    அய்யோ எவ்வளவு உண்மை?
    அடுத்த ஓட்டு லிஸ்டிலாவது என் பெயர் இருக்குமா?
    சென்றமுறை ஓட்டு போடவென்றே மே மாதம் ஊருக்கு லீவு வாங்கி சென்றேன், பார்த்தால் என் வீட்டில் என் மனைவிக்கு மட்டுமே ஓட்டு லிஸ்டில் பெயர் இருந்தது.

    படங்களும் அதன் தாக்கத்தை தர தவ்றவில்லை.
    மிக நல்ல பதிவு, தொந்தரவிற்கு மன்னிக்கவும்.
    உங்களை தொடர்பதிவுக்கு அழைத்திருந்தேனே?
    நம் நாகாவை நீங்களே அழைத்தால் நன்று. சுந்தர் சாரையும் அழைத்துள்ளேன் . உங்கள் எல்லோரின் பிடித்தவை பிடிக்கதவை அறிய நானும் ஆவல்.

    ஓட்டுக்கள் போட்டாச்சு.

    ReplyDelete
  4. அடுத்த ஓட்டு லிஸ்டிலாவது என் பெயர் இருக்குமா?

    கார்த்திகேயன் இந்த வரிகள் மொத்த தமிழன் பிரச்சனையையும் மறக்க வைத்துவிட்டு படித்து படித்து சிரிக்க வைத்து விட்டது.

    கமல்ஹாசன் குடிமகனையே உண்டு ரெண்டு ஆக்கிய வக்குசீட்டீக்ள் (ஆமாம் வாக்குசீட்டு).

    18 வருடமாய் போராடி, ஆறு வருடமாய் அலைந்து கடந்த தேர்தலில் என்னை வாக்கு அளிக்கும் குடிமகனாக மிதித்து ஓ மதித்து உள்ளார்கள்.

    தொடர்பதிவுக்கான விசயத்தை பின்னூட்டத்தில் போட்டு இருந்தேனே?

    ReplyDelete
  5. நன்றி சிவா. தமிழ்நாட்டில் உள்ள தமிழன் உணர்கின்றான் உணர்வு கொள்வான் என்பதே தவறு. காரணம் அத்தனை ஓட்டுகளும் கிராமத்தில் இருந்து தொழிற்சாலை போல் "உற்பத்தி" ஆகின்றது.

    இலங்கையின் சரித்திரமும் தெரியாது. பூகோளமும் தெரியாது. சுற்றிக்கொண்டு போனதால் ஒரு முறை சென்ற பயணத்தில் அந்த வாய்ப்பையும் தவற விட்டு விட்டேன். ஆனால் இது குறித்து படிக்க படிக்க அத்தனை விபரீதமாய் இருக்கிறது.

    ஆனால் இந்த இடுகை அங்கு உள்ளவர்களின் வாழ்ந்தவர்களின், போராடியவர்களின் இதயத்தில் போய்ச் சேரும் அளவிற்கு நம்முடைய எழுத்து இருக்குமா என்று தினந்தோறும் அச்சப்பட்டுக்கொண்டு இருந்தது நேற்று ஸ்விஸ் ல் இருந்து வந்த கடிதம், காத்துருக்கும் உரையாடல் கவலையை போக்கியது.

    ReplyDelete
  6. சிறப்பான பதிவு.
    பணி தொடரட்டும்.
    எண்ணமும் செயலும் வளரட்டும்
    ரா.ராதா

    ReplyDelete
  7. மிக நல்ல, தேவையான பதிவு. நன்றி.

    ReplyDelete
  8. நன்றி ராரா

    நன்றி சுடுதண்ணி

    ReplyDelete
  9. ஜி. ஒவ்வொரு இடுகைக்குப் பின்னும் உங்கள் உழைப்பும், நியாயமான வரலாற்றுப் பின்புலத்துடனான அலசலும் நிறைய விடயங்களைத் தருகின்றன. இன்றைய உங்கள் இடுகை எனக்கு மிக மிகப் பிடித்தது. நன்றியும் பாராட்டுகளும்.

    ReplyDelete
  10. நன்றி

    வானம்பாடிகள்

    ப்ரியா

    ReplyDelete
  11. நல்ல உழைப்பு ஜோதி கணேசன்

    ReplyDelete
  12. நம் தமிழர்களின் வேதனைகளை உலகுக்கு எடுத்துச் செல்கின்றீர்கள். நன்றிகள், வாழ்த்துக்கள். ஒவ்வொரு தமிழனாலும் பேசப்படவேண்டிய விடயங்களை பதிவிட்டிருக்கின்றீர்கள்.

    உங்கள் பதிவை அறியத் தந்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  13. நன்றி கதிர். என்னுடைய 500 வார்த்தைகளை 5 வரிகளில் எளிதாக நீங்கள் படைத்து விடுகிறீர்கள்.

    உண்மை சந்ரு. சில இடங்களுக்கு சில நபர்களிடம் நாம் தான் தேடிப் போகவேண்டும். அது உண்மையான அக்கறையும் கூட.

    ReplyDelete
  14. // எது எளிதோ, எது கடினம் இல்லையோ? அது தான் தமிழனின் முதல் தேர்வாக இருக்கும். //

    எளிது என்று நினைத்து சங்கடத்தில் போய் மாட்டிக் கொள்பவனும் தமிழன் மட்டும்தாங்க.

    இன்று எளிதாய் தோன்றுவது நாளை பெரிதாக தோன்றுகின்றதுங்க.

    ReplyDelete
  15. உழைப்புடன் கூடிய இடுகை...நன்றி, தொடருங்கள்!

    ReplyDelete
  16. அழகிக்கு சக அழகி? சககளத்தி! பதிவனுக்கு சக பதிவன்??

    செல்வந்தனுக்கு சக செல்வந்தன்?
    மோசடிக்காரன்!

    இளைஞனுக்கு சக இளைஞன்?
    போட்டியாளன்!

    யுவதிக்கு சக யுவதி?
    மூளி!

    அழகிக்கு சக அழகி?
    சககளத்தி!

    வாலிபனுக்கு சக வாலிபன்?
    மூத்தவன்!

    அழகனுக்கு சக அழகன்?
    விகாரன்!

    வித்தைக்காரனுக்கு சக வித்தைக்காரன்?
    ஏமாற்றுக்காரன்!

    அரசியல்வாதிக்கு சக அரசியல்வாதி?
    ஒரு ஊழல்வாதி!

    நடிகனுக்கு சக நடிகன்?
    அகங்காரம் புடிச்சவன்!

    பத்திரிகைகாரனுக்கு சக பத்திரிகைகாரன்?
    யாவாரி!

    எழுத்தாளனுக்கு சக எழுத்தாளன்?
    குப்பை!

    வணிகனுக்கு சக வணிகன்?
    கொள்ளைக்காரன்!

    வழக்கறிஞனுக்கு சக வழக்கறிஞன்?
    எதிரி!

    நண்பனுக்கு சக நண்பன்?
    நண்பனேதான்!

    பதிவனுக்கு?
    பதிவனுக்கு சகபதிவன், அதே நண்பந்தான்டா!

    ஆம், நண்பனுக்கு மட்டுமே அந்தப் பெருமை இருக்க முடியும். நட்பு பாராட்டும் நண்பர்களே பதிவர்கள். காழ்ப்பு ஒழிய வேண்டும்; பதிவுலகம் வளர வேண்டும்; படைப்பாற்றல் பெருக வேண்டும்; தமிழ் ஓங்க வேண்டும்!

    பங்கப் பழனத் துழும் உழவர்
    பலவின் கனியைப் பறித்ததென்ற
    சங்குஇட் டெறியக் குரங்கிளநீர்
    தனைக்கொண் டெறியும் தமிழ்நாடா?!
    --புகழேந்திப் புலவர்

    பலா மரத்தில் ஒரு குரங்கு, மரத்தில் இருக்கும் பலாப் பழத்தைப் பறிக்கிறது. அதைப் பார்த்த உழவர்களில் ஒருவர் படைச்சாலில் இருந்த சங்கு ஒன்றை அதன்மீது எறிய, அது அருகில் இருந்த தென்னைக்குத் தாவி அதிலிருந்த இளநீர் கொண்ட குரும்பையைக் கொண்டு திருப்பி எறியும் தமிழ்நாடா நம் நாடு? பல்லுக்குப் பல், கண்ணுக்கு கண் என இராமல் நட்பு பாராட்டுவோமாக!!

    இருவருக்கும் அறிமுகம் இல்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் எழுத்துக்களை படித்துவிட்டு பரவசமாய் வந்து விடுவதுண்டு. நேற்று நிகழ்காலத்தில் சிவா அவர்களின் இடுகையில் பழைய மற்றவர்கள் படாவதியான ஒரு உடல் நாற்றம் குறித்து சிவா வின் எழுத்துக்கு கோவி கண்ணன் அவர்களின் பின் ஊட்டமும், மேலே உள்ள எழுத்துக்கு சொந்தக்காரன பழமைபேசியின் பின்னூட்டத்தையும் படித்துப் பார்ப்பவர் ஒவ்வொரு தமிழனின் பல நூறு ஜென்ப சங்கல்பத்தையும் பூர்த்தி செய்தது போல் தோன்றும்.

    எனக்கு சற்று வெட்கம். தமிழனை அதிகம் தள்ளி வைத்து விட்டேனோ?

    ReplyDelete
  17. எளிது என்று நினைத்து சங்கடத்தில் போய் மாட்டிக் கொள்பவனும் தமிழன் மட்டும்தாங்க.

    இன்று எளிதாய் தோன்றுவது நாளை பெரிதாக தோன்றுகின்றதுங்க............//

    ராகவன் ஐயா நீங்கள் ஜோக்குக்கு அல்லது இந்த பின்னூட்ட சாக்குக்கு எழுதிய இந்த விசயம் பத்து இடுகை தேவையான் உழைப்பை கொடுக்கும் சிந்தனை எழுத்து இது.

    பின்னி பெடல் மட்டும் எடுக்கல. வீலின் கோட்டத்தின் ஆட்டத்தையும் பாத்துட்டுடிங்க

    ReplyDelete
  18. தங்கள் எழுத்தில் உங்கள் உழைப்பு தெரிகிறது..பாராட்டுக்கள்..

    இவண்..
    டமிலன்

    ReplyDelete
  19. காலையில் இவர் இடுகையின் மூலம் டமிலன் சற்று நேரம் சிரிக்க வைத்து விட்டார் . நன்றி வசந்த.

    கோவி கண்ணன் அவர்களும் என்னுடைய இணைப்பில் இருப்பது நிகழ்காலத்தில் சிவாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். விமர்சனம் இல்லாமல் ஓட்டு மூலம் உலகத்திற்கு நகர்த்திய அவருக்கு நன்றி.

    ReplyDelete
  20. ஆங்கிலேயர்கள் உள்ளே வந்ததிலிருந்து இந்த போராட்டம். இன்றும் அதே போராட்டம் என்பது என்ன நியாயம் என்று தெரியவில்லை.

    கட்டுரையின் மெருகு அதிகமாகிறது, அதன் செய்திகளும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. பின்னோக்கி + மெருகு + வாழ்த்து = நியாயம்

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.