" சிங்களர்களை கோபப்படுத்தாமல் தமிழர்கள் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்"
"இந்திய இறையாண்மையை வேரறுக்கும் எந்த ஒரு தீவிரவாதத்தையும் உள்ளே புக அனுமதிக்க மாட்டோம்"
" எங்களை விட இலங்கை தமிழர்களின் மேல் அக்கறை கொண்டவர்களை நீங்கள் காட்டுங்கள் பார்க்கலாம்"
"இங்கு கூடியிருக்கும் மொத்த நிருபர்களும் ஒரே சமயத்தில் வெளியேறி விட முடியுமா? அதைப்போலத்தான் மெதுவாக முள்கம்பிகளுக்கு பின்னால் உள்ளவர்கள் மீள் குடியேற்றம் மெதுவாக நடக்கும்"
"பிரபாகரனை ஆதரிப்பு என்ற போர்வையில் எங்களுடன் இருந்து கொண்டு எங்களை வசைபாடிக்கொண்டுருப்பவர்களை நாங்கள் பார்த்துக்கொண்டுருக்க மாட்டோம்"
"சட்டம் தன் கடமையைச் செய்யும்"
மேலே உள்ள அறிக்கைப் போர் என்ற அத்தனை அக்கப்போர்களுக்குள் உள்ளே இப்போது நாம் போகப் போவது இல்லை. அரசியல் கணக்கு, ஆளுமை கணக்கு, தந்திர கணக்கு, எந்திரமாய் வாழ்வர்களின் வார்த்தை ஜாலங்கள் என்று எல்லாம் சேர்த்து இன்று ஒரு இனத்தை சாபக் கணக்கில் வரவு வைத்து விட்டது. இங்கு வெட்கப்பட யாருமில்லை. அங்கு விடியல் தோன்றும் என்று நம்பிக்கையும் தோன்றவில்லை.
ஆனால் மொத்தத்தில் அடிமை என்ற ஒரு வார்த்தை இயலாமை என்ற கொடுமை, ஏற்றுக்கொள்ளுதல் என்ற ஏமாற்ற வாழ்வியல் நம்முடைய தமிழர்களின் வரலாற்றில் எத்தனை அற்புதமான காலங்களை தொலைத்து துவைத்து நம்மை புடம் போட்டு வந்து இருக்கிறது தெரியுமா?
இன்றைய தத்துவ முத்துக்கள் உதிர்க்கும் அத்தனை தலைவர்களும் இந்த மரபு வழியில் வந்தவர்கள் தானே? அத்தனையும் வெறும் செய்தியாக பார்த்துக்கொண்டு படித்துக்கொண்டு வரும் நாமும் அவர்களின் விசுவாகிகள் தானே? பின்னோக்கி கொஞ்சம் பாருங்களேன்.
காரணம் தன்மானம் என்பதை விலை மதிக்க முடியாத பொருளாக கருதி வாழ்ந்தவன் நம் தமிழன்.
புறநானூறு என்பது பெறும் படைப்பல்ல. நம்மவரின் வீர வாழ்வின் சுவடுகள். இதில் ஆண் பெண் என்ற வேறுபாடுகள் இல்லை.
"நடந்த போரில் புறமுதுகிட்டு இறந்து விட்டான் என்ற செய்தியைக் கேட்ட தாய் தன்னுடைய பால் கொடுத்த மார்பை அறுக்கத் துணிந்த தாய்"
"நேற்றைய போரில் தந்தை இறந்தார். இன்றைய போரில் யானையை நேருக்கு நேர் நின்று வென்றிட முயற்சிக்கும் போது கணவன் இறந்தான். நாளை நடக்கும் போருக்காக மகனை அலங்கரிக்கும் தாய்"
"பெரிய நகரத்தை பரிசாக கொடுக்க முன்வருபவர் மன்னராக இருந்தாலும் அவர் தன்னம்பிக்கை இல்லாத ஆணாக இருந்தால் தம் பெண்ணுகு மனம் செய்விக்க தந்தை மறுப்பார்"
வீரம் சொரிந்த வாழ்வியல் பெற்ற தமிழினம் இன்று வீரம் என்ற வார்த்தையை சொறிந்து கொள்ள உதவுவதாக மாற்றிக்கொண்டதை என்னவென்று சொல்வீர்கள்?
ஆமாம். கடமையுடன் கூடிய தன்னம்பிக்கை, போர்க்குணம் என்பது அழிப்பதற்கு அல்ல. ஆளுமையை நிலைநாட்ட. காதல், வாழ்க்கை என்ற பாகுபாடு இல்லாமல் என்றும் நீக்கமற நிறைந்திருந்த வீரஞ்செறிந்த வாழ்க்கையிது
ஒவ்வொரு கால மாற்றத்திலும் தமிழர்களிடமிருந்த போர்க்குணம், வீரம் மெதுவாக மறையத் தொடங்கியது. போர்க்குணமின்றி கோழை சமூகமாக வாழ்ந்து வந்த காரணத்தால் வந்த படையெடுப்பாளர்கள் அத்தனை பேரும் மிக எளிதில் நம்மை அவர்களின் ஆளுமைக்குள் கொண்டு வந்தனர். பின்னால் வந்த ஆங்கிலேயர்கள் கூட தொடக்கத்தில் சீக்கியர்கள் வாழ்ந்த பகுதிகளில் அதிகமாக போராட்டம், உயிர் இழப்புக்கு பின்னால் தான் அந்தந்த பகுதிகளை கைப்பற்ற முடிந்தது. ஆனால் தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் எந்த பெரிதான சிரமும் இல்லை(?)
பின்வரும் கணக்குகளை வைத்து பார்க்கும் போது உலக இனத்திலேயே இத்தனை ஆண்டு காலம் இத்தனை பேர்களுக்கு அடிமையாய் வேறு எவரும் வாழ்ந்து இருக்க முடியுமா? என்று ஆச்சரியமாய் அச்சப்பட வைக்கும் தமிழினத்தின் வாழ்வியல் அவலத்தை பாருங்கள்?
களப்பிரர் (கிபி 200 முதல் 500), பல்லவர் (கிபி 500 முதல் 800), வட இந்தியர், மராட்டியர், தெலுங்கு நாயக்கர் (கிபி 1200 முதல் 1600) போர்ச்சுகீசியர், பிரஞ்சுகாரர்கள், ஆங்கிலேயர்கள் போன்றவர்களின் கீழ் 1947 வரைக்கும்.
2000 ஆண்டுகள் அடிமை தமிழனாகவே வாழ்ந்த வாழ்வியலின் எச்சமும் சொச்சமும் இன்று உங்களையும் என்னையும் பயமுறுத்திக்கொண்டு இருக்கிறது.
மூவேந்தர் ஆண்ட சங்க காலத்திலும், கிபி 800 முதல் 1200 வரை ஆண்டு சோழப் பேரரசு வாழ்ந்த தமிழர்களின் காலம் பொற்காலம். எல்லாவிதங்களிலும்.
இன்று வரையிலும் தமிழனுக்கு மற்றவர்களுக்கு அடிமையாய் இருப்பதில் ஒரு சுகம். விரும்பாதவர்களையும் மாற்றி விடுவதில் நம்மவர்கள் மிகுந்த அக்கறை உள்ளவர்கள். காரணம் அதற்கு "சமூக பாதுகாப்பு" என்ற வசதியான குறீயீட்டுப் பெயரும் உண்டு.
கிழக்கிந்திய கம்பெனி நிறுவனத்தில் கேயன் (1650.1700)என்பவர் கவர்னராக இருந்தார். இவரே முதன் முதலாக தமிழக வரலாற்றில் முதன் முறையாக கிழக்கிந்திய தீவுகளில் கரும்பு, ரப்பர், இலவங்கத் தோட்டம் அமைக்க தமிழர்களை கொண்டு சென்றவர். ஆமாம் அழைத்துச் செல்லவில்லை.
ஆடு, மாடுகளைப் போல கொண்டு சென்றார். வெள்ளையர்களுக்கு செல்வங்களை வாரி வழங்கிய பீஜீத்தீவின் கரும்புத் தோட்டங்களிலும், தென் ஆப்ரிக்காவின் வைரச் சுரங்களிலும், இலங்கையின் தேயிலை தோட்டங்களிலும், மலேசியாவின் ரப்பர் தோட்டங்களிலும் கூலியாக கொண்டு போய் நிரப்பினார்.
ஆடு, மாடுகளைப் போல கொண்டு சென்றார். வெள்ளையர்களுக்கு செல்வங்களை வாரி வழங்கிய பீஜீத்தீவின் கரும்புத் தோட்டங்களிலும், தென் ஆப்ரிக்காவின் வைரச் சுரங்களிலும், இலங்கையின் தேயிலை தோட்டங்களிலும், மலேசியாவின் ரப்பர் தோட்டங்களிலும் கூலியாக கொண்டு போய் நிரப்பினார்.
ஆனால் தமிழனின் தொடக்க வரலாற்று வாழ்வியலில் தமிழன் என்பவன் கூலி என்ற இழி நிலையில் வாழ்ந்ததாக சான்று ஏதும் இல்லை. ஆளுமைப்பண்புடன் கூடிய வீரம். அத்தனனயிலும் சிறப்பு. இது தான் தொடக்க தமிழன். ஆனால் இன்று?
2500 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த தமிழனத்தின் பண்புகள் என்பது அறிவு, ஒழுக்கம், அஞ்சாமை, உதவும் மனப்பான்மை இவற்றுடன் தன்னம்பிக்கை தம்முடையதாக ஆக்க முடியும் என்று நம்பி வாழ்ந்த கூட்டத்திற்கான பல சான்றுகள் உள்ளது.
தமிழன் அடிமைப்படாத மூவேந்தர் அரசாண்ட காலத்தில் போராட்டக்குணம் அதிகமாக இருந்தது. எந்த நிலையிலும் கீழ்நிலையில் வாழ வேண்டிய அவஸ்யம் இல்லாமல் தான் வாழ்ந்தார்கள்.
வடநாட்டில் ஆட்சி புரிந்து கொண்டுருந்த மன்னர்களான கனக, விசயர் என்பவர்கள், இங்குள்ள தமிழ் மன்னர்களான மூவேந்தர்களை நடந்த ஒரு விழாவில் மிக இழிவாக பேசிய செய்தி மூவேந்தர்களை வந்தடைந்தது. மூவேந்தர்களின் சார்பாக சேரன் செங்குட்டுவன் படைபெயடுத்துச் சென்ற வென்று, இமயத்தில் கல்லெடுத்து, கங்கையில் குளிப்பாட்டி, அதில் கண்ணகிக்கு சிலை எடுக்க அந்த மன்னர்களின் தலையில் சுமக்க வைத்து அழைத்து வந்தான்.
ஆனால் காலம் மாற மாற வானம் பொய்யா நிலம் போல தமிழர்களின் வாழ்க்கையும் நிர்கதிக்கு உள்ளானார்கள். தொடர்ந்து வந்த படையெடுப்புகளும், கலப்பினமும், மாறிய கொள்கைகளும், கொண்டு சென்ற முன்னேற்பாடுகளும்,அந்த கொள்கைகளை கொண்டு சென்ற குலக்கொழுந்துகளும், குழப்பான சூழ்நிலையையும், வாழ்நிலையையும் உருவாக்கி வழி தடுமாற வைத்தது.
உருவான வறுமையும், உருவாக்கி வறுமையும் தமிழனை தன்னம்பிக்கை இழக்க வைத்தது. அக்கரைக்கு எந்த அக்கறையும் இல்லாமல் வந்து அழைத்தவர்கள் பின்னால் பயணப்படவைத்தது.
உருவான வறுமையும், உருவாக்கி வறுமையும் தமிழனை தன்னம்பிக்கை இழக்க வைத்தது. அக்கரைக்கு எந்த அக்கறையும் இல்லாமல் வந்து அழைத்தவர்கள் பின்னால் பயணப்படவைத்தது.
கட்டுரை.. ரொம்ப நல்லா இருக்குங்க..
ReplyDeleteசிந்தனைக்குரிய இடுகை.
ReplyDelete// "நடந்த போரில் புறமுதுகிட்டு இறந்து விட்டான் என்ற செய்தியைக் கேட்ட தாய் தன்னுடைய பால் கொடுத்த மார்பை அறுக்கத் துணிந்த தாய்"
ReplyDelete"நேற்றைய போரில் தந்தை இறந்தார். இன்றைய போரில் யானையை நேருக்கு நேர் நின்று வென்றிட முயற்சிக்கும் போது கணவன் இறந்தான். நாளை நடக்கும் போருக்காக மகனை அலங்கரிக்கும் தாய்"
"பெரிய நகரத்தை பரிசாக கொடுக்க முன்வருபவர் மன்னராக இருந்தாலும் அவர் தன்னம்பிக்கை இல்லாத ஆணாக இருந்தால் தம் பெண்ணுகு மனம் செய்விக்க தந்தை மறுப்பார்"//
அண்ணே, காலி பெருங்காய டப்பா மாதிரி பழய பெருமைகளை மட்டும் பேசிகிட்டு இருக்கோமுங்க. இன்றைய தமிழனுக்கு ஒரு பேரு உண்டுங்க... இளிச்சவாயன்...
// ஆனால் தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் எந்த பெரிதான சிரமும் இல்லை(?) //
ReplyDeleteஒன்றுப் பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிள் அனைவருக்கும் தாழ்வு... இது படிக்க மட்டும்தாங்க... வாழ்க்கையில் பின் பற்ற அல்ல... ஏட்டு சுரைக்காய் !!??
தமிழனுக்கு ஒரு பேரு... இளிச்சவாயன்...
ReplyDeleteஇது படிக்க மட்டும்தாங்க...
சிந்தனை
நல்லா இருக்குங்க
கட்டி எழுப்புவோம் தமிழ் தேசியத்தை.
ReplyDeleteமீட்டெடுப்போம் தமிழ் இறையாண்மையை.
நல்ல கட்டுரை..
ReplyDeleteதமிழர்களை பண்டைய பெருமையையும், இன்றைய சிறுமையையும் இதை விட எப்படி சொல்ல முடியும்? தொடருங்கள்..
ReplyDeleteதெளிவான கட்டுரை,அனைவரும் படிக்கச் வேண்டிய கட்டுரை.
ReplyDeleteKarunnanithi irukkum varrai tamil ellavithathilum aallium
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஎனக்கு தெரிந்து தமிழரின் ஒவ்வொரு குடும்ப வாழ்நிலையிலும் அடங்கிப்போவதையே ஊட்டப்படுகின்றொம்
மேலும் நம் அரசியல் மேதாவிகளால் நம் முதுகுத்தண்டு நன்றாக வளைக்கப்படுவதற்கே பயிற்றுவிக்கப்பட்டுள்ளது.
இராஜராஜன்
சேலத்து மாம்பழம் போல் வந்து பெயர் இல்லாமல் பெரிய காரியத்தை செய்து விட்டு சென்று உள்ளீர்கள்.பெயர் மட்டும் தராமல்?
ReplyDeleteஇலங்கை பிரச்சனையில் இனி திட்ட வேண்டியது யார் தான் பாக்கி இருக்கிறார்கள். இங்கு மட்டும் அல்ல. இலங்கையில் உள்ளே உள்ள அத்தனை தமிழ் தலைவர்களையும் கணக்கில் கொண்டு வந்து பாருங்கள்?
சூரசம்ஹாரம் பூஜை செய்து அக்கா புருசன் நலமாக இருக்க வேண்டும் என்ற தமிழ் கடவுளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
அத்தனையும் யோசிக்க வேண்டிய விசயங்கள். இந்த நிகழ்வுகள் வெறும் பரபரப்பு அல்ல. பரிதாபத்தில் கொண்டுவந்த கதையின் முகவரி இது. முடிந்தால் தொடருங்கள்.
அடுத்த முறையாவது பெயருடன் வாருங்கள். எந்த வெள்ளைச்சட்டையும் நம்மை ஒன்று செய்ய மாட்டார்கள். காரணம் அவர்களுக்கு இதைவிட ஆயிரம் சிறப்பான வேலைகள் அவர்கள் மூத்த அதிகாரிகள் கொடுத்து இருப்பார்கள்.
காரணம் அதிகாரம் இல்லாத அதிகார வர்க்கத்தை தான் நாம் பார்த்துக்கொண்டு பயணிக்கின்றோம்.
நம் எதிர்காலத்தை அச்சப்பட வைக்கப்போகும் எச்சமும் மிச்சமும் விரைவில் நம்முடைய வழித்தோன்றல்களுக்கு புரிய வைக்கும்? தெரியும்?
மிக அருமையான இடுகை. நேர்த்தியான முறையில் அவசியமான சரித்திரத் தகவல்கள் தந்தமைக்கு நன்றி. இதற்கெல்லாம் நாம் பதில் சொல்லத்தான் வேண்டும் எதிர்வரும் சந்ததிக்கு.நன்றி
ReplyDeleteதேவையான சிந்தனையுடன் கூடிய உங்களின் பதிவு மிக அவசியமான ஒன்று.
ReplyDeleteநல்ல இடுகை...மற்றும் எழுத்துநடை..
ஜோதிஜி. இந்த பதிவை படித்தவுடன் தமிழ் பேசுபவர்கள் எல்லாம் தமிழர்களில்லை என புரிகிறது. ஒரே குழப்பம், நான் தமிழன் என்பதை எப்படி கண்டறிவது ??
ReplyDelete