அஸ்திவாரம்

Monday, October 05, 2009

இருட்டில் தொடங்கிய அசிங்கங்கள்

இருட்டில் தொடங்கிய அசிங்கங்கள்

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (41)

குழந்தைகளுக்கு வாழும் காலத்திலும் சரி, வாழ்ந்த காலத்திற்குப் பிறகு மாமா என்றழைக்கப்பட்ட நேருவின் சொந்த பூமி காஷ்மீர். ஆனால் குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பக்கூடிய பூமி காஷ்மீர். அல்ல சொர்க்க பூமி. குறிப்பாக அன்று வாழ்ந்த அத்தனை வௌ்ளையர்களும் சிம்லாவைப் போல காஷ்மீர் மேல் அத்தனை அலாதிப் பிரியம். இங்கு வர்ணனைகள் தேவையில்லை. காரணம் இப்போது நாம் பள்ளத்தாக்கில் பயணத்தை தொடங்கப் போகிறோம்.

எப்படி இருந்தாலும் பெரும்பான்மை முஸ்லீம் மக்களின் அடிப்படையில் காஷ்மீர் என்பது பாகிஸ்தான் உடன் இணைந்து விடும் என்று கனவில் வைத்து இருந்த ஜின்னாவுக்கு அன்று ஆண்டு கொண்டுருந்த இந்து மன்னர் ஹரிசிங் "உள்ளே நுழைய அனுமதி இல்லை " என்றதும் முகம் ஜிவுஜிவு என்று ஆகிப்போனது.

அதிக சுய கௌரவம் பார்க்கும் ஜின்னாவைப்பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால் அவரைவிட அவருடைய அடிப்பொடிகள் துள்ளிக்கொண்டு இருந்தார்கள். மானம் போச்சு, மரியாதையெல்லாம் போச்சு என்று மைக் செட் போட்டு கத்தி தீர்க்காத குறைதான். செப்டம்பர் மாத இறுதியில் (லாகூர்) லியாகத் அலிகான் முக்கிய நபர்களைக் கொண்டு ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் அலசப்பட்ட ஒரே விஷயம். மன்னர் ஹரிசிங்கை கவிழ்த்து விட்டு உடனடியாக பாகிஸ்தான் உடன் காஷ்மீரை இணைத்துவிட வேண்டும்.

உள்நாட்டுப் போரை தூண்டுதல், இராணுவ கலவரம், மக்களை தூண்டுதல் என்று ஏராளமான விஷயங்களை யோசித்து கடைசியில் சரியென பட்டது தான் உள்ளே மலைவாசிகளாக (பத்தான்கள்) வாழ்ந்து கொண்டுருப்பவர்களை தூண்டி விட்டு உள்ளே அனுப்புவது. காரணம் இது தான் எளிதில் சாத்யமாகக்கூடியதும் கூட. அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கத் தேவையில்லை. பணம் மட்டும் போதும். முரட்டுப் புத்தியில் முழுக்க முழுக்க மூர்க்கத்தனம். படிப்பறிவு என்பதே இல்லாத அவர்களின் மொத்த நோக்கமும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு இன்னும் பல.

ஏற்கனவே பேசி வைத்த மாதிரி இது "புனிதப் போர் " என்று அவர்களிடம் பரப்பியாகிவிட்டது. தேவையான ஆயுதங்கள் ஒரே இடத்தில் குவித்து வைத்தாகி விட்டது. ஆனால் அன்றைய வடமேற்கு எல்லைப்புற கவர்னர்க்கு (சர்.ஜார்ஜ் கன்னிங்காம்) சில நாட்களாக ஒரே குழப்பம். " ஏன் இந்த மலை ஜாதி மக்கள் அல்லாஹு அக்பர் என்று கத்திக்கொண்டு அதிகமாக நடமாடிக்கொண்டு இருக்கிறார்களே " என்று.

காரணம் அங்கு இருந்த அன்றைய வௌ்ளை அதிகாரிகளுக்கு தெரிந்து விடக்கூடாது என்று மேலிட உத்தரவு. அதற்கும் காரணம் இருக்கிறது. அன்றைய பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரியும், இந்திய ராணுவ உயர் அதிகாரியும் ஒரே வகுப்புத் தோழர்கள். ராணுவ கோட்பாடுகள் என்னதான் சொல்லிக் கொடுத்து இருந்தாலும் வௌியே வந்து விட்டால் சிக்கல் தான். எனவே தான் கவனமாக காய் நகர்த்தப்பட்டது.

அன்றைய பாகிஸ்தான் ராணுவ தளபதி (ஜெனரல் பிராங்க் மெஸர்விக்) அவசரமாக இங்கிலாந்து கிளம்பிக்கொண்டு இருந்தார். காரணம் முதல் முறையாக வாங்கப்பட்ட ஆயுத கொள்முதல் இன்னமும் வந்து சேராத காரணத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு. அவர் அன்றைய பாகிஸ்தான் பிரதமர் லியகாத் அலிகானிடம் வந்த தகவலின் அடிப்படையில் கேட்ட போது ஒரேடியாக மறுத்தார் லியகாத் அலிகான்.

1947 அக்டோபர் மாதம் எப்போதும் போல கொண்டாடப்படும் துர்கா பூஜையை தன்னுடைய தர்பாரில் இருந்து மன்னர் ஹரிசிங் உற்சாகப் பெருக்குடன் ரசித்துக்கொண்டுருந்தார். நன்றாக கவனிக்க பயபக்தியுடன் அல்ல. காரணம் 1847 ஆம் ஆண்டு அன்றைய பணத்தின் மதிப்பின்படி (அறுபது லட்சம் ரூபாய்) வௌ்ளையர்களிடம் இருந்து மன்னர் ஹரிசிங்கின் முப்பாட்டனார் வாங்கியிருந்தார். அன்று முதல் வம்ச பராம்பரியமாக ஜெகஜோதியாக இந்த துர்கா பூஜை நடந்து கொண்டுருக்கிறது.

மற்றொரு வகையில் மன்னருக்கு மட்டில்லா மகிழ்ச்சி. படேல், மவுண்ட் பேட்டன் பிரபு, ஜின்னா எல்லோருக்கும் தண்ணி காட்டியாகிவிட்டது. இனிமேல் எவரும் நம்மிடம் வந்து இணைத்து விடு என்று சொல்லப் போவது இல்லை. எப்போதும் போல நாம் தனியான ராஜ்ஜியம் தான் என்று சந்தோஷமாக இருந்தார்.

இங்கு பூஜை நடந்து கொண்டுருக்கும் போது 70 கிலோ மீட்டர் தொலைவில் மலை ஜாதி பத்தான் கூட்டம் ஆர்ப்பாட்டத்தோடு உள்ளே நுழைந்து கொண்டுருந்தது.

அவர்கள் முதலில் நுழைந்தது ஜீலம் நதிக்கரையின் அருகே பல விதமாக எந்திரங்கள் இருந்த கட்டிடத்திற்குள். அந்த எந்திரங்கள் எதற்காக பயன்படுத்துப்படுகிறது என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. உள்ளே நுழைந்து சில நிமிடங்களில் அத்தனை பேர்களையும் அடித்து துவைத்துப் போட்டார்கள். வேறென்ன? அத்தனை எந்திரங்களும் அடித்து உடைக்கப்பட்டன. இறுதியில் மொத்த கட்டிடத்தையும் வெடிகுண்டு வைத்து தூளாக்கினார்கள்.

இதை உடைக்க வேண்டும், அடிக்க வேண்டும் என்று எந்த உத்திரவும் அவர்களுக்கு கொடுக்க வேண்டியது இல்லை. ஏன்அப்படி ஒரு தேவையே இல்லை. காரணம் அவர்களின் தனிப்பட்ட குணாதிசியங்கள் அப்படிப்பட்டது. பின்னால் வரப்போகும் அத்தியாயங்களில் அவர்களின் குணாதிசியங்கள் புரிந்தால் உங்களுக்கு வேறு சில வௌிச்ச சிந்தனைகளும், அவர்களின் வெறிச் சிந்தனைகளும் புரிபடும். ஆமாம் சுதந்திரம் வாங்கி இன்று 63 ம் ஆண்டில் நாம் வாழ்ந்து கொண்டுருந்தாலும் எத்தனையோ பிரச்சனைகள் என்ற போதிலும் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களும் தங்களுக்கு பிடித்த விரும்பி அத்தனை விஷயங்களையும் ஓரளவிற்கேனும் அனுபவித்து சந்தோஷமாய்த் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அதில் எந்த எள்ளவும் சந்தேகம் இல்லை. ஆனால் அன்று (1947) முதல் நேற்று வரையிலும் அந்த காஷ்மீர் மக்களின் துயரம் என்பது நீண்டு கொண்டேதான் போய்க்கொண்டேயிருக்கிறது.

அரசாங்கம் மாறும். அதிகாரிகள் மாறுவார்கள். ஆனால் உயிர் இழப்பவர்களும், உறுப்புக்கள் இழப்பவர்களும், அனாதை ஆக்கப்படும் குழந்தைகளும் இன்று வரையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே தான் போய்க்கொண்டே இருக்கிறது. இந்த காஷ்மீர் பிரச்சனை தொடக்க நிலை குறித்து தெரிந்தால் தான் இன்றைய பிரச்சனையில் ஆணிவேர் மொத்தமும் புரியும்.

ஈகோவில் ஆரம்பித்தது. வெறியில் தொடர்ந்தது. விரல் அசைவில் நடந்தது. ஆனால் வீணாய் போனது அத்தனையும் அப்பாவி சராசரி சம்மந்தம் இல்லாம மக்களின் மொத்த வாழ்க்கை தான்.

இன்று வரையிலும்?

அவர்கள் அடித்து நொறுக்கப்பட்ட, குண்டு வைத்து தகர்க்கப்பட்ட எந்திரங்கள் ஒரு முடிவுக்கு வந்த போது மன்னர் அரண்மணை வௌிச்சம் மறைந்து இருளில் மூழ்கியது. ஆமாம் காரணம் மொத்த மின்சார உற்பத்தியும் வழங்கிக்கொண்டுருந்த மஹீரா மின் உற்பத்தி நிலையம் அது.

வெறிக்கு தெரியாது பாதை. மொத்த முதலீடும் அது மட்டுமே. ஆனால் இரத்தம் வடிந்த கொழுத்த லாபம்.

தேன் கூடு thamizmanam.com/bloglist.php?id=5625

10 comments:

  1. சுவராஸ்யமாகவும், பல தகவல்கள் புதிதாகவும் இருக்கிறது, ஆர்வமாய் பத்தி வருகிறேன்...

    பிரபாகர்.

    ReplyDelete
  2. அக்கறைக்கும் ஆர்வத்திற்கும் தொடர்ந்து அளிக்கும் விமர்சனத்திற்கும் நன்றி பிராபாகர்.

    ReplyDelete
  3. அருமையான தொடர் ஜோதிஜி.

    மற்ற இடுகைகளையும் படிக்க வேண்டும்.

    நாகாவிற்கு நன்றி! உங்கள் தளத்தின் முகவரியைக் கொடுத்ததற்கு :)

    ReplyDelete
  4. அருமையான வரலாற்று பதிவு. மிகவும் உபயோகமான யாரும் எழுதாதது.

    ReplyDelete
  5. //ச.செந்தில்வேலன் said, அருமையான தொடர் ஜோதிஜி//

    Totally Agree, keep going..

    ReplyDelete
  6. தாயுமானவனும் தந்தையானவரும் அங்கு தான் இருக்கிறார்கள். நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். காரணம் அவர்கள் இருவரிடம் நான் எதிர்பார்த்த அத்தனை விஷயங்களும் உங்கள் இடுகையில் உள்ளது. சுந்தர் கூட வெறும் படமாக இணைப்பு அனுப்பி இருந்தார். இன்று நல்ல வேட்டை. செந்தில் ஒரு சின்ன சந்தேகம். ஏற்கனவே உண்மைதமிழன் இதே போல் பெரிய எண் பட்டியல் வைத்துருக்கிறார். அவரிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டுருநதேன். இப்போது உங்களிடமும். என்ன ஏதாவது ஸ்விஸ் வங்கி குறீயீட்டு எண்ணா? ச்சும்மா.............வருகைக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  7. வணக்கம் திரு. முருகன். வயது 25 தானா? இடுகையில் உள்ளே உள்ள விஷயங்கள் அத்தனையும் பொறியல் கல்லூரி பாடம் போல இருக்கிறதே? மொத்தமாய் ஒத்துக்கொண்டது முத்தம் பெற்றதற்கு சமமாக இருந்தாலும் உங்கள் இடுகையின் உள்ளே விஷயங்கள் என்னைப் போன்றவர்களுக்கு பயபக்தியை உருவாக்குகிறது. காரணம் இது போன்ற விஷயங்களின் நுழையும் வாயப்பும் அமையவில்லை.

    ReplyDelete
  8. பின்னோக்கி //

    மன்னிக்கவும். பெருந்தன்மையாக எடுத்துக்கொள்கிறேன். ஆனால் அவசர உலகில் நிறைய விஷயங்கள் உள்ளது. அத்தனையும் நாம் தேர்ந்தெடுக்காத இடங்களில் மறைந்து இருக்கிறது. காரணம் இதற்கான பல உறுதிபடுத்தப்பட வேண்டிய கோப்பு விஷயங்கள் பல சமயம் பழைய புத்தகக்கடையில் போய் துழாவியது.

    ReplyDelete
  9. //இப்போது உங்களிடமும். என்ன ஏதாவது ஸ்விஸ் வங்கி குறீயீட்டு எண்ணா? ச்சும்மா.............//

    இல்லீங்க ஜோதிஜி. அது பிளாக்கர் ஐடி. நம் பெயரில் யாரும் பின்னூட்டமிடமால் தடுக்க ஒரு சின்ன ஏற்பாடு அவ்வளவு தான். உங்கள் பிளாக்கர் ஐடி - 06999234303854771078. எந்த விதமான வம்பிற்கும் போகாத, நம்ம பெயர்ல யாரும் பின்னூட்டமிடமார்கள் என்றாலும் ஒரு பாதுகாப்பிற்காக :)

    ReplyDelete
  10. நாகா உருவாக்கிய அவரைச்சுற்றிய அறிவுக்கூட்டங்கள் உள்ளே வந்த உங்களைப் போன்றவர்களால் ச்சும்மா கேட்ட எனக்கு உருப்படியான தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் வந்து இருக்கிறது. இன்னும் எத்தனை சமாச்சாரங்கள் இந்த வலை பதிவில் இருக்கிறதோ? முடியப்போகும் தருவாயில் உள்ள வந்த திரு செந்தில் வாய்ப்பு இருந்தால் அத்தனை தலைப்புகளையும் ஒரு அலசி விட்டு ஹே ராம் என்று கடைசியாக முடியும் தருவாயில் நீங்களும் உங்கள் நண்பர்களும் ஒரு நல்ல விமர்சனம் தந்த்தால் எப்பொழுதோ வந்து படிக்கப்போகும் அந்த நல்ல சிந்தனை படைத்த நண்பருக்கும் விமர்சனம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பது புரிந்து கொள்ள கூடியதாக இருக்கும். நன்றி நண்பரே. உங்கள் அறிவுக்கும் அக்கறைக்கும்.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.