புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி 38
மவுண்ட் பேட்டன் பிரபு இந்தியாவிற்கு வைரஸ்ராய் பதவி ஏற்க உள்ளே வந்த (1947 மார்ச் டெல்லி) தினத்தில் இருந்து பெற்ற மன உளைச்சலால் புதிய நிர்வாகத்திடம் எல்லாப்பொறுப்புகளையும் கொடுத்த திருப்தியில் சிம்லாவில் பழைய வைஸ்ராய் மாளிகையில் ஓய்வு எடுத்துக்கொண்டுருந்தார்.
அழைத்த தொலைபேசியில் வி.பி.மேனனின் பதட்டமான குரல். "நீங்கள் இங்கு உடனே வராவிட்டால் இந்தியா இந்தியாவாக இருக்காது ". . வரவிருப்பமில்லை என்றவர் மறுபேச்சு இல்லாமல் சூழ்நிலை புரிந்து வந்து இறங்கினார்.
காந்தியை எந்த அளவிற்கு மவுண்ட் பேட்டன் பிரபு நேசித்தாரோ அதே அளவுக்கு குறையாத அளவிற்கு நேருவை விரும்பினார். அத்தனை எதிர்ப்புகளையும் மீறி சிறைக்கைதி, ஆங்கிலேயர்களை எதிர்ப்பதில் முன்னிலை வகிப்பவர் என்ற மேலதிகாரிகளின் வார்த்தைகளை பொருட்படுத்தாமல் நேரு இருந்த இடத்திற்கு நேரில் போய் சந்தித்து உரையாடியவர்.
வைஸ்ராய் ஆவதற்கு முன்பே நல்ல அன்னியோன்யம். பல வருடங்கள் நெருக்கமாக பழகிய நண்பர்கள் போல.
குறிப்பாக நேரு எப்போதும் எதற்கும் பெரிதாக அலட்டிக் கொள்வதே இல்லை. அதேபோல் எந்த விசயங்களிலும் அதிக பற்றும் இருப்பதில்லை. தனித்து நின்று செயலற்றவதில் அதிக அக்கறை கொண்டவர். ஆனால் அவரோ " சிறைவாழ்க்கையைத் தவிர எங்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது. குறிப்பாக ஆட்சி அதிகாரம் என்பதெல்லாம் இனி தான் கற்றுக்கொள்ள வேண்டும்.. நீங்கள் மறுபடியும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் " என்ற போது அதிர்ந்து விட்டார் மவுண்ட் பேட்டன் பிரபு. வௌிவராத உண்மை இது.
காரணம் நடந்து கொண்டுருந்த டெல்லி கலவரத்தின் ஆழித்தீயின் கோரத்தாண்டவம். நேருவுக்கு வரக்கூடிய கடிதங்கள் கூட அவருடைய அந்தரங்க காரியதரிசியும் அன்றைய விமானப் போக்குவரத்து இயக்குநருமான எச்.வி.ஆர். அய்யங்கார் தான் நேரிடையாக எடுத்து வந்து கொடுக்க வேண்டிய சூழ்நிலை.
ஆமாம்.
மொத்த நிர்வாகமும் ஸ்தம்பித்து விட்டது. இல்லை, இல்லை. நிர்மூலமாகிவிட்டது. பாகிஸ்தானில் பெற்ற அத்தனைக்கும் சேர்த்து சீக்கியர்களும் உடன் சேர்ந்து கொண்டு இந்து மத தீவிரவாத எண்ணம் கொண்ட அத்தனை நபர்களும் சேர்ந்து, பார்த்து பார்த்து அழித்தனர். காலையில் தொடங்கிய அழிப்பு மதியம் வருவதற்குள் அத்தனை பக்கமும் பரவி சாலை முழுக்க இரத்த ஆறு.
"முஸ்லீம்களுக்கு புகலிடமாக்கும் எந்த வீடுகளும் தரைமட்டமாக்கப்படும் " என்று இறுதியில் விடுத்த சீக்கியர் குழுவினால் சில மணி நேரத்தில் மத வேறுபாடுகள் இல்லாமல் பணிபுரிந்து கொண்டுருந்த அத்தனை வீடுகளிலும் இருந்து பணிபுரிந்த அத்தனை முஸ்லீம்களும் சில மணித்துளிகளில் வீதிக்கு வந்தனர். தங்க இடம் இல்லை. ஒத்துழைக்க யாருமில்லை.
பயம்.
க்ரீன் மார்க்கெட், கன்னாட் ப்ளேஸ் அத்தனை இடங்களும், வாழ்ந்தவர்களும் தும்சம்.
இருட்டுச் சந்தில் ஓரத்தில் இருந்து சீக்கிய குழுவினர் அல்லாஹு அக்பர் என்று குரல் கொடுக்க, உதவும் நண்பர்கள் வந்து விட்டார்கள் என்று வௌியே வந்தவர்கள் அத்தனை பேரும் நிமிடத்தில் பரலோகம்.
கலவரம் பரவாத இடமே இல்லை.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த (மாக்ஸ் ஆலிவர்) பத்திரிக்கையாளர் கன்னாட் ப்ளேஸ் கலவரத்திற்கு அருகே வரும் போது காந்தி குல்லா போட்டு ஒருவர் அத்தனை பேரையும் கம்பால் அடித்து விரட்டிக்கொண்டுருந்தார். அருகில் சென்று பார்த்தால் அவர் இந்தியப் பிரதமர் நேரு. அதிர்ச்சியாகி விட்டார்.
பாகிஸ்தானில் பெற்ற அத்தனைக்கும் சேர்த்து மொத்தமாய் ஒரே நாளில் வழங்கிய அத்தனை கொடூரத்தின் விசயங்களிலும் உச்சமாய் இருந்தவர்கள் சீக்கியர்கள். அரசாங்கப் பணிகளில் இருந்த அத்தனை முஸ்லீம்களும் ஓடி மறைந்தனர். பலர் அகதி முகாம்களில் தஞ்சமடைந்தனர். ஒரு கும்பல் நேருவின் வீட்டில் போய் அடைக்கலம் புகுந்தது.
எதார்த்தமான நேருவும், தன்னலமற்ற படேலும் பலவாறு வற்புறுத்தியதற்குப் பிறகு வேறுவழி இல்லாமல் மவுண்ட் பேட்டன் பிரபு பொறுப்பை எடுத்துக்கொண்டு சாட்டையை விளாச ஆரம்பித்தார்.
மற்றொரு கொடுமை. தெருவில் கிடந்த எந்த பிணத்தையும் தூக்க யாரும் முன்வரவில்லை. நம்பமுடியாத ஆச்சரியம். சில இடங்களில் நேரிடையாக மவுண்ட் பேட்டன் பிரபும், அவர் மனைவி எட்வினாவும் களத்தில் இறங்கி பணியாற்றினார்கள். எட்வினா ஓட்டுநர் சம்மதிக்காத காரணத்தால் அவரே தூக்கி உள்ளே வைத்தார். நான் கார் ஓட்டுகிறேன். நான் அவனை தூக்க மாட்டேன். இது போன்று எல்லா இடங்களிலும்.
அத்தனை வன்மம்.
எப்போதும் இளமையாக துடிதுடிப்போடு இருக்கும் நேரு அந்த சில வாரங்களில் கறுத்து சோர்ந்து விட்டார். ஒரு முறை நாற்காலியில் அமர்ந்தபடி ஐந்து நிமிடம் தூங்கிவிட அங்கு வந்த காரியதரிசி எச்.வீ.ஆர். அய்யங்கார் ஆச்சரியப்பட்டார்.
"நீங்கள் இரவில் தூங்குவது இல்லையா"
"எனக்கு நேரம் கிடைக்கவில்லை. தினமும் ஐந்து மணி நேரம் தான் தூங்குகிறேன். நீங்கள்? " என்றார் பிரதமர் நேரு.
அய்யங்கார் ஏழு அல்லது எட்டு மணி நேரம் என்றதும் தான் தாமதம் " மிகக் கொடுமையாக இருக்கிறது. ஆறு மணி நேரம் பராவயில்லை. எட்டு மணி நேரம் இந்த மாதிரி சமயத்தில் தூங்குவதா? " என்று ஆச்சரியப்பட்டார் பிரதமர் நேரு.
தேன் கூடு thamizmanam.com/bloglist.php?id=5625
வீணர்கள் என்றபோதிலும் வீரனாக வந்தார். விடுகதையாய் தொடர்ந்த அனைவரும் விட்டுவிட்டு ஓடினர்.
கடந்த இடுகையின் Font அளவு Justification எல்லாம் சரியாக இருந்தது. Italicized Fonts தமிழுக்கு நன்றாக இருக்காது..
ReplyDelete//கலவரத்திற்கு அருகே வரும் போது காந்தி குல்லா போட்டு ஒருவர் அத்தனை பேரையும் கம்பால் அடித்து விரட்டிக்கொண்டுருந்தார். அருகில் சென்று பார்த்தால் அவர் இந்தியப் பிரதமர் நேரு.//
ReplyDelete//சில இடங்களில் நேரிடையாக மவுண்ட் பேட்டன் பிரபும், அவர் மனைவி எட்வினாவும் களத்தில் இறங்கி பணியாற்றினார்கள். எட்வினா ஓட்டுநர் சம்மதிக்காத காரணத்தால் அவரே தூக்கி உள்ளே வைத்தார். நான் கார் ஓட்டுகிறேன். நான் அவனை தூக்க மாட்டேன். இது போன்று எல்லா இடங்களிலும்.//
வியப்பாக இருக்கிறது.. இந்த உண்மைகள் ஏன் சராசரி இந்தியனிடமிருந்து மறைக்கப்படுகின்றன..?
இல்லை நாகா. நீங்கள் கமல் மாதிரி எனக்கு கற்றுத் தந்து கொண்டுருக்கிறீர்கள். ஆனால் ரஜினி மாதிரி நிகழ்காலத்தில் சிவா மாதிரி இடுகையை எதை எதை தட்ட வேண்டும் தட்டக்கூடாது என்று மாடலாகவே அனுப்பி இருந்தார். திகைத்து விட்டேன் அந்த உள்ளன்பு + ஆத்மார்த்தமான அன்புக்கு. இன்னும் சில மாதங்களில் இவை புரிந்து விடும். நன்றி நாகா.
ReplyDeleteஉண்மை. நான் மதிக்கக்கூடியவர்கள்? வார்த்தைகளில் இது போன்ற விஷயங்கள் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதற்கு சமமாக அவர்கள் கருதுவதால் சற்று வருத்தம். இந்த உண்மைகளுக்கே அச்சப்படுகிறீர்கள்? தமிழர் இனம் சார்ந்த விஷயங்களை என்பது இன்று வரையிலும் இலங்கை பிரச்சனை வரையிலும் பின்னால் சோகங்களை உணரும் போது நீங்கள் சொல்லும் வார்த்தைகள் இதை விட வேறு விதமாக இருக்கும்.
ReplyDeleteஉங்கள் இடுகையின் பெயர்களை நண்பர்கள் பகுதியில்? Thanks My dear.